எகிப்து முதல் இலங்கை வரை இஸ்லாமியர்களின் இசை ஞானம்
(ஆய்வுநூல்)
கலாஜோதி, மெளலவி. காத்தான்குடி பெளஸ் (ஷர்கி)
Page 1
Page 2
Page 3 எகிப்து முதல் இலங்கை வரை SaÖaJmduh856flgi Senaf GöTarih மெளலவி. காத்தான்குடி பெளஸ் (ஷர்கி) முதற்பதிப்பு 201106.06 வெளியீட்டுரிமை டு நூலாசிரியருக்கே வெளியீடு ஸைனி பதிப்பகம் பக்கங்கள்:250 விலை:ருபா 400.00 இஸ்லாமிய ஷரீஆ வரையறைக்குள் இசையமைத்துப் பாடிய பாடுகிற, பாடவுள்ள அனைவருக்கும். இசை மீறலை உணர்ந்து இறைவனிடம் பிரார்த்தித்த நநூல N சமர்ப்பணம்
Page 4 உள்ளே. இஹற்யா உலூமுத்தீன் - மொழிபெயர்ப்புடன் குறிப்புகள் இசை பற்றி இஸ்லாமிய அறிஞர்கள் தீர்ப்பு இஸ்லாமியர் எழுதிய இசைநூல்கள் அல்ஜிப்ரா கணிதநூலில் இசைப் பதிவேடு எட்டாம் நூற்றாண்டில் இஸ்லாமியர்களின் வாத்தியங்கள் இஸ்லாத்தில் இசை கேட்கலாமா? அஜ்மீர்ஹாஜாஜியின் தர்பார் ஒன்பதாம் நூற்றாணர்டில் களிதா பத்தாம் நூற்றாணர்டில் கஸ்தா இசைக் கலைஞர்களை உருவாக்கிய அரபு உலகம் இசையின் விளைவுகளும் இனிய ஒழுக்க விதிகளும் இசையை ஆராய்ந்த இஸ்லாமியர்கள் பத்தாயிரம் மாணவர்களை மகிழ்விக்கும் ரப்பான் இசை ஈராக்கில் ரப்பானுடன் களிதா மக்காவில் ரப்பானுடன் களிதா இறைமறை இசையில் உயிர்விடும் இஸ்லாமியர்கள் இசை ஆய்வுக் கட்டுரை எழுதிய இஸ்லாமியர்கள் மக்காவில் களிதாவும்-நளிதாவும் அல்குர்ஆன் பாடல் அல்ல மதீனாவில் இரவில் மனாகிப்பாடல மழை 13ம் நூற்றாண்டில் மெளலானா ஜலாலுத்தீன் 13ம் நூற்றாண்டில் முஸ்லிம்களின் கரவரிசைத்திட்டம் உல்லாளம்தர்பாரில் ரப்பான் பலராநாட்டுப்பாடகியின் முடிவு இஸ்லாமியர்களின் இசைக்கணர்டுபிடிப்புக்கள் இந்திய இசைத்தோற்றுவாயும் இஸ்லாமியக் கலைஞர்களும் முஸ்லிம்களின் இசைக் களஞ்சியம் இசைத்துறையில் பாடிய இஸ்லாமியர்கள் இந்திய இசை - அமெரிக்க இசை இலங்கை இசைத்துறையில் இஸ்லாமியக்கலைஞர்கள் இசை ரசனைத்தாகத்தில் இலங்கை முஸ்லிம்கள் 1100ஆண்டுகளின் முன் இசைஞானி அபூநஸ்ரு இசைப் பரீட்சையில் இஸ்லாமியர் முணர்டியடிப்பு கலாசார நிகழ்வுகளில்களிகம்பு முடிவுரை வில்லுப்பாட்டுநிகழ்ச்சியில் முஸ்லிம்கள் கையடக்கத்தொலைபேசிக்கு காத்திரமான இசை நயவுரை இதயக்கமலத்திலிருந்து. பெளஸ் மெளலவி, இசை தொடர்பான நூல் ஒன்றை எழுதிக் கொண்டிருப்பதாக ஓர் எழுத்தாள நண்பரிடம் தொலை பேசியில் கூறினேன். அவர் உடனடியாக கேட்டார்: "இசை ஹராம்தானே?" "என்ன..?" என்று நிரூபிக்கக் கேட்டேன் சற்று அதட்டலாக. ஹராம் என்றுதானே உலமாக்கள் கூறுகிறார்கள்? இது அவரது பதில். 'உலமாக்களிடத்தில் கருத்து வேற்றுமை இருக்கிறது. ஆனால். பெளஸ் மெளலவியும் ஒரு உலமாதான்." இது எனர் குறுக்கீடு. "இசை பற்றி பத்திரிகையில் வந்த கட்டுரைகளையா நூலாக்குகிறார்?' - அவர். அதுமட்டுமல்ல, நிறைய கட்டுரை களையும் தகவல்களையும் சேர்த்திருக்கிறார். ஆகையால் அவரது நூலைப் பழத்து விட்டுத் தீர்ப்புக் கூறுங்கள்." என்றேன் நான். எங்கள் தொலைபேசி உரையாடல்களை அப்பழயே வைத்து விட்டு விடயத்துக்கு வருவோம். கவின் கலைகளை அழகியற் கலைகளை, நுண்கலைகளை இஸ்லாம் வெறுக்கிறது என்ற ஒரு "மாயை' உருவாக்கப்பட்டு, அது இலங்கை போன்ற முஸ்லிம்களைச் சிறுபாணர்மையாகக் கொண்ட நாடுகளில் Uரபலப்படுத்தப்படுகிறது.உலகில் வேறு எந்த முஸ்லிம் நாடுகளி லும் இல்லாத வகையில் இலங்கையில் இப்பிரச்சினை
Page 5 பூதாகரமாக உருவாக்கப்பட்டு, பாமர முஸ்லிம்களை மட்டுமல்ல பழத்தவர்களையும் கூட குழப்பத்திலாழ்த்தியுள்ளது. இசையினர் ஆட்சிக்குட்பட்டே நாம் வாழ்ந்து வருகின் றோம். இதை எவராலும் மறுத்து விட முடியாது என்பது எனது ஆணித்தரமான வாதம். தாலாட்டில் குழந்தை உறங்குகிறது. மனக் கவலை யுற்றிருக்கும் ஒரு மனிதன் இசையைக் கேட்டு ஆறுதலடை கின்றான். இஸ்லாமிய கீதங்களைக் கேட்டு அறிவும், பயனர் பாடும் அடைகின்றான். ஞானிகளும், ரிஷிகளும் மெளனமான 'ஹம்மிங்" இசையில் தங்களது நிஜக் கண்ணை மூடி ஞானக் கண்ணைத் திறந்து கொள்கின்றார்கள். இஸ்லாம் இசையை வெறுக்கிறதா? அப்படியானால் எத்தகைய இசையை வெறுக்கிறது? இந்தக் கருத்தில் தானி எமது சிந்தனையின் அழத்தளம் இருக்க வேண்டும். ஒரு சிறு உதாரணத்தினர் மூலம் இதை விளக்க நினைக்கினர்றேனர். கழுதையினர் கத்தல் வெறுப்பைத் தரலாம். குயிலின் ஓசையை வெறுக்கலாமா? இனிமையான குரல் வளமுள்ள பாடகிகளை "செளத்துல் அந்தலிப்' என்று அழைக்கின்றோமே. எனவே, எமது வாழ்வோடு இரண்டறக் கலந்துவிட்ட இசை ஆக்கரமிப்பிலிருந்து விடுபட முடிகிறதா? அதற்கென்று வழி இருக்கின்றது. 'நல்ல இசையை நேசிப்போம்; நபுஞ்சக இசையைத் தூவிழிப்போம். அதாவது, "ஒதுக்கி ஒரம் கட்டுவோம்." அதைத்தானர் இஸ்லாம் கூறுகின்றது என்பது எனது ஆணித் தரமான கருத்து இதைத்தான் அறிஞரும், கவிஞரும், ஏனர் மார்க்க மேதை யுமான மெளலவி காத்தான்குழு பெளஸ் (ஷர்கி) அவர்கள் கூறியுள்ளார்கள்; நிறுவியுள்ளார்கள்; நிரூபித்துள்ளார்கள். பல தடவைகள் மக்காப் பயணம் சென்று வழிகாட்டிய அன்னார், தக்க சான்றுடன் கூறியுள்ள இந்நூல், பாட நூலாக்கப்பட வேண்டும். இசையை இஸ்லாம் ஏற்றுக் கொண்டுள்ளது என்ற தனது கருத்துக்கு ஆதாரமாக இமாம் கஸ்ஸாலியினர் 'இஹற்யா உலூமுத்தீன் - பாபுஸ்ஸிமா'வை மேற்கோள் இட்டுள்ளார். ரபாணி ஓசை அமைதியானது. நல்ல பாடல்களுக்கு நபிகளாரினர் அனுமதி இருந்தது என்றும் வாதாடுகின்றார். பாங்கு, ஓதல், கிறாஅத் - இவையெல்லாம் இராக மயமானது எனர்கினர்றார். இவற்றால் நாம் நெகிழிந்து போனோம். எகிப்து முதல் - இலங்கை வரையிலுள்ள இசை பற்றியும், உருவான வாத்தியக் கருவிகள் பற்றியும் விரிவாகக் கூறியுள்ளார். ஷரீஅத்துக்கு அங்கீகாரம் பெற்ற இசை பற்றிக் குறிப் Uடும் மெளலவி, இசைக்கு எதிரான நபிகளாரினர் கருத்துக் களையும் சேர்த்துள்ளார். இமாம் கஸ்ஸாலியினர் இஹற்யா உலூமுத்தீனிலிருந்தும் . அல் இஸ்பஹானியினர் ‘கிதாபுல் அகானியிலிருந்தும் நிறைய ஆதாரங்களை எடுத்துள்ளார் நூலா ժ?tքած, 'உள்ளம் ஒரு சுரங்கம்; அதன் அந்தரங்கமான வழி செவி, முறையான சங்கீதம் மனதில் புத்துக்கத்தைக் கொடுக்கும். இங்கிதமான இசையின் மூலம் இதயத்தில் நல்ல மாறுதல்கள் ஏற்படும்." என்று இமாம் கஸ்ஸாலி (ரஹற்) கூறியுள்ளார்கள். அரேபிய, பாரசீக, ஈராக்கிய, ரஷ்ய, இஸ்லாமிய இசை வடிவங்களை ஒரு புறம் ஒதுக்கி வைத்துவிட்டு ஆசிய நாடுகளை எடுத்துக் கொண்டால் - அங்கு பூதாகரமாக எழுந்து நிற்பது இந்திய, பாகிஸ்தானிய இசை வடிவங்களே. இசையைன்று
Page 6 வரும்போது முஸ்லிம்கள் முதலிடம் வகிக்கின்றார்கள் எனத் துணிந்து கூறமுடியும். இலங்கையைப் பொறுத்தளவில் இசை உலகின் ஜாம்பவான்களான கெளஸ் மாஸ்டர், டி.எல். லெத்தீப் மாஸ்டர், ஸ்வாஹிர் மாஸ்டர், முகைதீன் பேக், லெத்திப் பாய் (கதீஜா உம்மா) "இசைக்கோ' எனி.எம். நூர்தினர், Uஎம். நியாஸ்தீன், டோனி ஹஸன்,நூர்ஜஹான்மர்சூக்,Uர்முஹம்மத் (இன்னும் பவர் உளர்) போன்றோர் இங்குள்ள தமிழ், சிங்கள இசைக் கலைஞர் களுக்கு சரிநிகர் சமமானோரல்லவா! (அல்லது. அதனையும் வஞ்சி செயல்பட்டவர்களல்லவா!) இவர்களையெல்லாம் புறம் தள்ளிவிட்டு, இசை ஆசிரி யர்களையும், பாடசாலையில் இஸ்லாமிய கீதம் பாடும் மானாக் கரையும் ஒதுக்கிவிட்டு, எப்படி இஸ்லாமிய அறிவியல் உலகை உயர்த்தப் போகினர்றோம்? இவற்றுக்கெல்லாம் தீர்வு காணும் வகையில், தக்க சான்றுகளுடன் பெளஸ் மெளலவி, இந்த நூலை ஆக்கியிருக் கின்றார். இஸ்லாமிய இசை பற்றி தமிழ் கூறும் நல்லுலகில் மிகத் தெளிவான விளக்கங்களுடன் வந்த முதல் நூல் இதுவாகத்தான் இருக்க வேண்டும். மெளலவி நண்பர் பெளஸ் அவர்களின் அரும் பணிக்கு என் உளப்பூக்கள்! அல்ஹாஜ் கலைவாதி கலீல் - முன்னைநாள் உப பீடாதிபதி தர்கா நகர் தேசிய கல்வியியற் கல்லூரி - ஆசிரியர் பீடம். நவமணி அணிந்துரை / NS இசைக்கு இணையாக எதனை இவ்வுலகில் தேடலாம் என்று தேடிப் பார்த்தால் எதுவும் கிடைக்காது என்பது என் கருத்து. அப்படியொரு தன்மை இசைக்கு இருக்கிறது. எளிதில் செவிவழிநுழைந்து, கவலைகள் களையும் சக்திமிக்கது இசை. ஒவ்வொருவர் பார்வையிலும் இசை பல்வேறு வழவங்களைப் பெறலாம். இதனை மத ரீதியாகவும் வேறுபடுத்திப் பார்க் 66lbstb. என்னுடைய பள்ளிப் பருவத்தில் இஸ்லாத்தினை ஒரு பாடகமாக கற்று வந்த காலங்களில் என் சந்தேகங்களை - குறிப்பாக இஸ்லாம் தொடர்பான பல சந்தேகங்களை தீர்த்து வைத்தவர் . ஓர் இஸ்லாமி யனாக இருக்கின்ற பொழுது அந்த மதத்தின் மீது வருகின்ற சந்தேகங்களைவிட மாற்று மதத்தினைச் சார்ந்த எனக்கு இஸ்லாம் தொடர்பாக சந்தேகங்கள் பல எழுவதுணர்டு. இது சகஜமானதும் கூட. ஆனால், இந்த சந்தேகங்களை யாரிடம் கேட்பது? விடைகளை யாரிடம் தெரிந்து கொள்வது என்று நான் தேடிய நாட்களில் என் கண்முனர் தோன்றிய ஆசான்தான் காத்தார்ைகுடி பெளஸ் மெளலவி. எந்த விதமான சந்தேகமாக இருந்தாலும் அதற்கு ஆதாரபூர்வமான பதிலை வழங்குவதில் எனக்கு திருப்தியான வராக அவர் திகழ்ந்தார். இன்றும் அந்த நட்பு நமக்கிடையே தொடர்கிறது.
Page 7 வீரகேசரி நிறுவனத்தில் பணிபுரிந்த காலத்தில் 'இசை உலகம்" என்னும் சஞ்சிகைக்கு பொறுப்பாக நான் இருந்தேன். இந்த சஞ்சிகை முற்று முழுதாக இசையுடனர் தொடர்புபட்ட விடயங்களை தாங்கி வெளிவந்தது. எல்லா விதமான இசை களையும் அது தொடர்பான செய்திகளையும் தேடியெடுத்து இந்த சஞ்சிகையிலே பிரசுரித்துவந்தோம். அப்பொழுதுதானர் "இஸ்லாமிய இசை பற்றி எனக்கு கட்டுரை எழுத முடியுமா மெளலவி?” எனர்று கேட்டேனர். எப்பொழுதும் மறுப்புச் சொல்லாத பெளஸ் மெளலவி இந்த விடயத்தில் சற்றுப் பினர்வாங்குவது போல் எனக்குத் தோன்றியது. இருப்பினும் எனக்கு மறுப்புச் சொல்லவில்லை. இரண் டொரு நாள் கழித்து எனர்ணுடனர் தொடர்பு கொண்ட பெளஸ் மெளலவி, இஸ்லாமிய இசை பற்றிய ஆய்வுக் கட்டுரையைத் தொடர்ந்து எழுதுவதாக எண்ணிடம் கூறினார். நான் எதிர்பார்த்தது போலவே அவரது கட்டுரைகளும் காட்ட மாக அமையத் தொடங்கின. எணர்னுடைய நண்பர்களில் பலர் இஸ்லாமியர்கள். அவர்களில் சிறந்த எழுத்தாளர்கள், வானொலி அறிவிப் பாளர்கள், கவிஞர்கள் என பலர் அடங்குவர். எண் நண்பர் களில் பலர் ஏதோ ஒரு வகையில் இசையோடு தொடர்புபட்ட வர்களாகவே இருந்திருக்கினர்றார்கள். ஆகையினால் இசை பற்றிய தேடல், இசை பற்றிய கேள்விகள் அடிக்கடி எனர் மனதினைக் குடைவதுண்டு. குர்ஆனி வசனங்களை ஒதுகின்ற போது - மொழி புரியாவிட்டாலும் - அதன் ஒசை, மனதுக்குள் ஓர் அதிர்வை ஏற்படுத்துவதுண்டு. 'அதாணி ஓசை கேட்கின்ற போது அசையாத மனமும் இசைந்து போவதுண்டு. இவை மதமென்று கட்டுக்கோப்புக்கு அப்பாற்பட்டு இசை அல்லது அதிர்வு என்ற செம்மையை அடைந்து விடுகின்றமை சிறப்பானதாகும். வாழ்க்கையினர் அனைத்துப் படிகளையும் புட்டு வைக்கின்ற இஸ்லாம் - இசையைனர்ற ஒன்றை மட்டும் எப்பழ விட்டு வைத்திருக்கும் என்ற சந்தேகம் எனக்கு நீண்ட நாளாக இருந்ததுணர்டு. சில இஸ்லாமியர்கள் குறிப்பிடுவது போல் இஸ்லாத்தில் இசை தவிர்க்கப்பட்ட ஒன்றாக இருக்க முடியாது எனர்பதை நான் உளமார நம்பினேனர். ஏனெனில் இசையினர் மகத்துவம் இன்பமானது. அது இஸ்லாமியர்களுக்கும் இன்பம் ՍԱյ&«ՖԱ5. இப்பழயான பல சந்தேகங்களுக்கு விடை கூறும் பெளஸ் மெளலவியினர் கட்டுரைகளைத்தான் "இசை உலகம்" சஞ்சிகை தொடர்ந்து தாங்கி வரத் தொடங்கியது. இந்த கட்டுரைகள் வெளிவந்த சமயங்களில் பலரிடமிருந்து வரவேற்பும் சர்ச்சைகளும் சேர்ந்தே வரத் தொடங்கின. "ஓர் இஸ்லாமிய ஆன்மீகத் தலைவர் எப்படி இசை பற்றி பேச முடியும்?" என என்னிடம் நேரடியாகவே கேட்கத் தொடங் கினர். ஆனால், இதற்கு பதிலினை தனது கட்டுரைகளினூடாக தொடர்ந்து வழங்கி வந்தார் பெளஸ் மெளலவி. இந்த ஆக்க பூர்வமான கருத்துக்கள் இசை பற்றி ஆய்வு செய்கின்றவர் களினர் தேடுதலுக்கு தீனி போடுவதாய் அமைந்திருந்தன. சர்ச்சைக்குரிய 62ცნ தலைப்பரில் தனது ஆளுமையை நிரூபித்திருக்கும் காத்தான்குழ பெளஸ் மெளலவி அவர்களை
Page 8 நிச்சயமாகப் பாராட்டியாக வேண்டும். இந்த நூலில் இடம் பெற்றுள்ள கட்டுரைகள் அனைத்தும் காலத்தால் அழியாத Uொக்கிஷங்களாகத் திகழும் என்ற நம்பிக்கை எனக்கிருக் கிறது. இவரது பணி தொடர எல்லாம் வல்ல இறைவனிடம் மன்றாழ நிற்கினர்றேனர். நன்றி! திரு.ஏ.பி. மதன் - முன்னாள் பிரதம ஆசிரியர், "இசையுலகம்” - ஆசிரியர், "தமிழ் மிரர்” www.tamilmirror.lk கவுரை ༡༡༡ དང་། ཨ༧ཆོབ་བ༠༠༡ ༡༧ ང་།། “பிஸ்மில்லாஹிர் ரஹற்மானிர் ரஹீம்.” இசை, இந்த பிரபஞ்சத்தினர் ஆதிமூலம். 'ஆகுக' என்ற இறைவனின் சப்தம்தான் இசைகளின் தோற்றுவாய். இசைதானி மொழிகளின் வர்ண ஆடை. இத்தனை பெருமையும் கொண்ட இசை, இஸ்லாத்துடன் முரண்படலாகுமா? கலை களோடு கலகம் கொள்ளலாகுமா? என்ற மெளலவி காத்தான் குழு பெளஸ் எனும் கலாஜோதியினர் கேள்விச் சுடர் எம்மை யெல்லாம் சுட்டெரிக்கும் ஆதங்கத்துடன் அதட்டிக் கேட்கின்றது. "எகிப்து முதல் இலங்கை வரை ' ஆய்வு நூல், 'கலாஜோதி" மெளலவரி காத்தான்குடி பெளஸ் (ஷர்கி) அவர்கள் காலத்தின் தேவை கருதி எமக் களிக்கும் அரிய பொக்கிஷம். இயந்திரங்களினர் இரைச்சல் நாணயங்களைச் சொரிவதால் சடவாத வாழ்க்கை முறையினைச் சாடுவதற்கில்லாத அக்கறை, உயிருக்கு உய்வளிக்கும் மைனர் மையான இசையினை இம்சிப்பதற்கு மாத்திரம் ஏனர் தழயெடுத்துக் கொண்டு வருகின்றது? சில விடயங்களை அல்லது நபர்களைப் புரிந்து விடுவதால் கோபம் வெளிப்படும். அனேக மானவை புரியாமலிருப்பதாலேயே கோபம் கொப்பளித்துக் கொண்டு வந்து விடும். இசை மீது வசை பாடும் சிலர் இதில் இரண்டாம் வகை. 'அறிவற்ற சமூகத்திடம் இருக்கும் ஆன்மீகம் ஆபத்தானது" என்கிறார் ஒரு பாரசீகத் தத்துவஞானி. இசை பற்றிய தவறான புரிதல் ஒரு அறிவற்ற Uன்னணியில் ஆன்மீகத்தை ஜடமாகப் பார்ப்பவர்களால்
Page 9 தோற்றுவிக்கப்பட்டிருக்கின்றது. இந்த பூமியில் . ஏன் முழு பேரண்டத்திலும் நிகழ்வுறும் நாளாந்த மாறுதல்கள், ‘பரிணாம வாதம்" என்ற கருத்தியலைத் தோற்றுவித்தது. இஸ்லாம் இறைவனினர் மார்க்கம். இப்பிரபஞ்சம் தோன்றும் போதே உடனிருந்த மார்க்கம். பல நாகரிகங்களின் பின்னணியில் இறை தூதர்கள் பலர் இருந்திருக்கின்றார்கள் என்பதே நிஜம். அபிஸ்ரீனியர்களின் இசையினை இறைதூதர் முகம்மத் (ஸல்) அவர்கள் அங்கீகரித்தார்கள் என்றால் ஒரு செழுமையான நாகரிகத்தின் அழகான பக்கம் ஒன்றை அண்றை நாட்களில் ஆசீர்வதித்திருக்கிறார்கள் என்பதே முறையான தர்க்கம். மதீனாவை இறை தூதர் வந்தடையும் போது இசை மீட்டி மதீனத்துச் சிறுமிகள், அணினலாரை சந்திரனுக்கு உவமித்துப் பாடல் இசைத்தார்கள் என்கிறது வரலாறு. இதை மறுப்பதுதான் அவதூறு. புல்லாங்குழல் இசையால் ஞானம் அடைந்தவர்களை யும் நதியினர் சிரிப்பொலியால் மோட்சம் பெற்றவர்களையும் தாவூதின் குரலிசையால் மைய்மறந்த ஜீவராசிகளையும் நாம் எப்பெயர் கொண்டு அழைப்போம்? மழையின் சந்தம், சருகின் சரசம், கிடுகோலையின் முனகல், சிட்டுக் குருவியினர் சிங்காரச் சிணுங்கல் இவையெல்லாம் எமது வாழ்வியலின் அடையாளச் சின்னங்கள். அந்த சின்னச் சின்ன சத்தங்களில்தானி எத்தனை கோடி சந்தோஷங்கள்! இசை கட்புலனாகாதது. அது கண்களோடு பேசுவ தில்லை. அது செவியின் வழியே சென்று ஆத்மாவுடனேயே சஞ்சரிக்கிறது. எனவேதானி முறையான ஒரு இசை, ஆத்மீகத்துடன் உடன்பாடு காணர்கிறது. அழகான இசை அணி கோத்த ஸ்வரங்களுடனர் பவனிவரும் வெள்ளை உள்ளம் பேரானந்தம் அடைகின்றது. விஞ்ஞானமோ மெய்ஞானமோ இஸ்லாமியர்களினர் இசை ஞானத்தை குறைத்து மதிப்Uட்டு விடக் கூடாது என்ற அதீத அக்கறை நூலாசிரியரின் பக்கங்கள் அனைத்திலும் புலனாகின்றது. நூலாசிரியர் ஒரு மார்க்க அறிஞராக உள்ளமை இந்த ஆய்வுநூலுக்கு அணிசேர்க்கின்றது. ஒரு மார்க்க அறிஞனர் ஆய்வாளனாக இருக்க வேண்டும் என்பதனையும் இந்நூல் பறைசாற்றுகின்றது. இஸ்லாம் கலைகளுக்கெதிரானது என்ற அபத்தமான பிரசாரம் சர்வதேச அரசியல் உள்நோக்கம் கொண்டதே. கலை கள்தான் கருத்தியல்களைச் சிதையாமல் காலப் பெட்டகத்துள் சுமந்து வரும் வாகனங்கள் ! அவை பயணிக்கும் வழித் தடங்கள்தான் வரலாற்றுப் பக்கங்கள். நூலாசிரியர் குறிப் பிடுவதுபோல"வதாமலையிலிருந்து உதிக்கும் சந்திரனே வருக!" என இறை தூதரை வர்ணித்தும் வரவேற்றும் பாடிய பாடல் ஒரு கலை வழவம். அதுதான் இசையை இஸ்லாம் விரும்பரியது எனச் சொல்லும் வரலாற்றுத் திடயம். "இத்தகைய தடயங்களை உருவாக்கும் கலை வழவமான இசையை இஸ்லாத்திற்கு எதிரானது எனப் பிரசாரம் செய்தால் சமகால பலநூறு படைப் பாளிகள் பல தடயங்களைப் பதிவு செய்யாமலே மரித்து விடுவார்கள்; அப்படி நேர்ந்தால் முஸ்லிம்களின் வரலாற்றுக் கலை வழவங்கள், வாழ்வியலின் கோலங்கள் அத்தனையும் காணாமல் போய்விடும்; அடையாளங்களைத் தொலைத்த வரண்ட சமூகமாக முஸ்லிம்கள் மாறிடுவர்" என்ற எதிர்ப் பார்ப்பு இஸ்லாத்தினர் விரோதிகளிடம் இருக்கினர்றது. மெஸ்ப்பத்தேமிய நாகரிகச் சுவழகள் கொண்ட நூதனசாலை கொள்ளையிடப்பட்டு அழித்தொழிக்கப்பட்ட வரலாறு எமது காலத்திலேயே நடந்தேறியது.
Page 10 எனவேதான்,இசை பிறந்தால் பாடல் வளரும்; கவிதை கள் பூப்பூக்கும்; ஆன்மா மகிழ்ச்சியுறும்; இஸ்லாமிய வரலாறு களும் சமகால இஸ்லாமியரின் அவல வாழ்வியலும், கலை மயப்படுத்தப்பட்டு எமது இலக்கியங்கள் செழுமை பெறும்; ஆவணப்படுத்தப்படும். அடுத்த சந்ததிக்கு காவியக்கரு வழங்கும் என்பதை அறிந்தே இசையினை இஸ்லாத்துடன் மோதவிட முயற்சிக்கின்றனர். இஸ்லாமிய சட்ட மூலாதாரங் களுடன் வரலாற்றுப் பாரம்பரியங்களுடன் இணைத்து ஷரீஆ வுடனும் மெய்ஞ்ஞானத்துடனும் ஒப்பிட்டு பல கோணங்களில், "இசை இஸ்லாத்துடனர் இணைந்ததுதானர்" எனர்பதை நிரூபித் துள்ளமை நூலாசிரியரின் பன்முகத் தனிமையினை வெளிச்சம் போட்டுக் காட்டுகின்றது. அது மட்டுமன்றி எகிப்து முதல் இலங்கை வரை பல இசையமைப்பாளர்கள், பாடகர்கள், வாத்தியக்கருவிகள் போன்ற விடயங்களை ஆவணப்படுத்தி யுள்ளாமை ஒரு நல்ல கலைஞனுக்குள்ள அரிய பண்பும் கவிஞனுக்கே உரிய வாண்மையுமாகும். இலங்கை இசைக் கலைஞர்களை ஆவணப்படுத்தியமை இந்நூலினர் தனிச் சிறப்பாகும். மேலும் இசை பற்றிய வடிவங்களின் மட்டுப் பாடுகளை அல்லது எல்லைகளை கோடிட்டுக் காட்டியிருப்பது ஒரு மார்க்க அறிஞருக்குரிய சமூகப் பொறுப்புணர்ச்சியையும் காட்டுகின்றது. மத்திய கிழக்கு அரபு நாடுகள், பலஸ்தீனச் சிறுவர் களின் முறைப்பாட்டுப் பாடல்களை - அவர்களது உணர்வு களை - வெளிப்படுத்தும் பாடல்களை இசையுடனே கேட்டுப் பார்த்தால் அரபுலகமே விழித்துக்கொள்ளும். அரபுலகினர் எண்ணெய் வளம் அமெரிக்க Uப்பாய்களில் அடைக்கப்படும் வேளையில் இஸ்லாம் இசையை வெறுக்கிறது எனர்ற வெற்றுக் கோஷத்தை சில அகீதா Uத்தர்களின் செவிவழியே தூவி விட்டு, அவர்கள் கப்பலேறி விடுகின்றனர். இவர்களோ அரபு பல்கலைக்கழக ஆய்வு மையத்தில் மாநாடு கூட்டி ஆராய்ந்து உலகின் பல்வேறு மூலை களுக்கும் முடுக்கி விடுவதும் எம்மவர்கள் முட்டி மோதி அழ படுவதும் இந்த நூற்றாண்டின் சாபக்கேடாக மாறிவிட்டது. ஒவ்வொரு அகிதாவின் பேரைச் சொல்லி பள்ளிவாசல்கள் அதிகரித்துவிட்டன. சாந்தி மட்டும் கிடைக்கவில்லை. கலை வளர்த்தால், கலகம் செய்து ஒடுக்க முனைகிறார்கள். இதுதான் இவர்கள் வளர்க்கும் ஆன்மீகம். இந்த ஆய்வு நூல் அனேகருடைய ஐயங்களைத் தீர்க்கும் என்பதில் எனக்கேதும் ஐயமில்லை என்று கூறி, "இவரது முயற்சிகள் காலத்தை வெல்க!" எனப் பிரார்த்தித்து, வாழ்த்தும் இசைத்துவிடைபெறுகின்றேனர். வஸ்ஸலாம்! சட்டத்தரணி. எஸ்.எம்.என். மர்தும் மெளலானா
Page 11 என்னுரை UTR フ ܓܠ محسس ح எல்லாம் வல்ல இறைவனின் திருநாமத்தால் ஆரம்பிக்கின்றேன். எனது பதினோராவது வயதில் காத்தான்குடி பொது நூலகத்தில் நீண்ட நேரம் வாசிக்கும் ஒரு வாசகனாக இருந்தேன். அப்போதே வில்லியம் தாஸின் அமெரிக்க ஜாஸ் இசையைப் பற்றி ஆய்வு செய்தேன். இக்கால கட்டத்தில் என் மனதில் இசை பற்றிய கற்பனை பலமாக இருந்தது. 'இஸ்லாத்தில் இசைக்கு ஒரு கருவிருக்குமா?’ என்று சிந்தித்தேன். ஆதம் நபி, மனிதரில் முதன்மையானவர். அவரின் பெயர்கூட ஆ.தம் என்று இசையும், தாளமுமாக இருக்கின்றது. இறைவன் உலகைப் படைக்கின்ற போது ‘குன்’(ஆகுக) என்றதுமே இவ்வுலகம் உண்டானது. அந்த குன் என்ற சப்தம் ஒரு இசை வடிவம்; வலிமையானது. உலகமே உருவெடுக்கின்ற அளவுக்கு அதிலே ஒரு அமைதியான அதட்டல் இருப்பதைக் கண்டேன். அல்குர்ஆனில் அலிப் லாம். மீம் - காப். ஹா. யா, ஐன். ஸாத் - தாலீம் மீம் - நூன் - ஹாமீம் போன்ற வாக்கியங்களை வாசிக்கும் போது அதில் ஒரு இசை இழுப்பு இருப்பதை உணர்ந்தேன். அந்த வாக்கியங்களுக்குப் பொருள் வழங்கப்படவில்லை. எங்கு பார்த்தாலும் அதன் பொருளை அல்லாஹ் அறிந்தவன் என எழுதப்பட்டிருந்தது. அப்போதெல்லாம் இது வார்த்தைக்கு மட்டும் விடப்பட்டு பொருள் சுருதிகள் அனைத்தையும் மூடிக் கொண்ட இசைக் கருவின் பெட்டகமென சிந்தித்தேன். இதற்கும் மேலால். இறுதி நாள் ஏற்படும் போது இஸ்ராபிள் என்ற மலக், எக்காளத்தில் ஊதுவார்; அந்த இசை கேட்டு முழு உலகுமே அழியும் என்பதையெல்லாம் படிக்கும் போதும். அல்குர்ஆன் ஓதும் போது உன்னா என்ற இராகம் சொட்டும் சொற்களான ஸத்து செய்யப்பட்ட நூன் (3) , ஸத்து செய்யப்பட்ட மீம் (3) ஆகிய இடங்களில் மூக்கினால் இனிய ராகம் மீட்டப் படும். இது இசையின் இனிய வடிவம் என எண்ணினேன். உலகில் அறிமுகம் செய்யப்பட்ட "ஸப்ஆகிறாஅத்' (ஏழு வகையான ஒதல்) அறிமுகத்தை உற்று நோக்கிய போது அங்கும் பல ராகங்கள் எனது எண்ணத்தைப் பலப்படுத்தின. காலப் போக்கில் என் சிந்தனையில் சிறிய மாற்றம் ஏற்பட்டது. அல்குர்ஆன், பாட வந்த கீதமல்ல; ஒத வந்ததுதான் என்ற முடிவுதான் அது கற்பனையில், கல்புக்குள் - மறைக்குள் இசை ஞானம் மறைந்திருக்கலாம் என்று எண்ணினாலும், மார்க்கம் மலிவு விற்பனையல்லவே! மறை விடயத்தில் மெளனியானேன். அது ஒதல் மறையே தவிர கீத மறையல்ல என்பதில் இறுக்கமாக இருந்து கொண்டேன். இன்றும் அப்படித்தான். கிழக்கிலங்கை அரபுக்கல்லூரி அட்டாளைச்சேனை அல் குல்லியதுஸ் ஸர்கிய்யாவில் 1079ம் ஆண்டு நான் கல்வி பயில்கின்ற காலம். இமாம் கஸ்ஸாலி (ரஹ்) அவர்களின் இஹ்யா உலூமுத்தீன் எனும் கிரந்தத்தை படித்துக் கொண்டிருந்தேன். அதனை எமக்கு படிப்பித்த மர்ஹூம் அல்ஹாஜ் எம்.எஸ்.எம். பாருக் (பலாஹி, நஹ்வியப்பா) அவர்கள் சிறந்த ஆற்றல் படைத்தவர். ஒரு நாள் திடீரெனக் கூறினார். “பெளஸ்! நீங்கள் கவிதைத் துறையில் ஆற்றல் கொண்டுள்ளீர்கள். இஹ்யாவில்கிரபுஸ்ஸிமா? என்று இசை பற்றிய ஆய்வு இருக்கின்றது. உங்களுக்கு நான் அதனை நன்கு விளக்கப்படுத்துகின்றேன்!” என்று சொல்லித் தந்தார்கள். அப்போதைய தமிழில் அக்கருத்துக்கள் அனைத்தையும் உள்வாங்கிக் கொண்டேன். காலம் கடந்தது. இஸ்லாமியக் கட்டுரைகளையும், இலக்கியக் கட்டுரைகளையும் எழுதிக் கொண்டிருக்கும் போது எனது அருமை நண்பர் திரு. மதன் அவர்கள் 2008ம் ஆண்டு வீரகேசரி பத்திரிகையின் அனுசரணையுடன் வெளியிடப் பட்ட இசை உலகம்’ பத்திரிகையின் பிரதம ஆசிரியராகப் பதவி ஏற்றார். அப்பத்திரிகையின் ஆரம்ப நாள் முதலே என்னை இஸ்லாமியர்களின் இசை பற்றி எழுதச் சொன்னார். சற்று தயங்கினாலும், சம்மதித்தேன்.
Page 12 இசை உலகத்தில், பல்வேறு தலைப்புக்களில் 2008 முதல் 2009 வரை எழுதினேன். இமாம் கஸ்ஸாலி (ரஹ்) அவர்களின் இஹ்யா உலூமித்தீன் எனும் நூலின் இசைப்பகுதியை இன்றைய தமிழுக்கு மொழி பெயர்த்தேன். தற்போது சில திருத்தங்களுடன் நூல் வடிவாக்கியுள்ளேன். எனது கட்டுரைகளைப் படித்து யாழ் பல்கலைக்கழகத்தில் பயிலும் தேத்தாத்தீவைச் சேர்ந்த திரு. டீ. வஹீஸன் என்பவரும் - மட்டக்களப்பு சுவாமி விபுலானந்தா அழகியற் கற்கைகள் நிறுவகத்தாரும் கிழக்கு பல்கலைக்கழக மாணவன் திரு. கே.எஸ்.வேணு ஆகியோரும் தங்களது பட்டப் படிப்புக்கான ஒப்படை நூலுக்கு இஸ்லாமியர்களின் இசை பற்றிய ஆய்வுகளை - எனது ஆக்கங்களை அடிப்படையாக வைத்து - ஆராய்ந்து என்னிடம் தொடர்பு கொண்டு மேலதிக குறிப்புக்களையும் சேகரித்துக் கொண்டனர். அன்று முஸ்லிம்கள் இஸ்லாமிய கீதங்களைக் கேட்டார்கள். சினிமாப் பாடல்களையும் பழைய பாடல்களையும் விரும்பிக் கேட்டார்கள். அதில் 'இஸ்லாம் என்ன சொல்கின்றது?’ என்பதைப் பார்க்க நேரமிருக்காது. ஆர்வமுடன் பாட்டைத்தான் கேட்டார்கள். சிலர் சினிமாப் பாடல்களைத் தவிர்ந்து கொண்டார்கள். இஸ்லாமிய கீதங்களைக் கேட்டார்கள். சிலர் இசை கூடாது ‘ஹராம்’ என்ற ஒரே பிடிவாதத்துடன் இருந்தார்கள். ஹிந்திப்பாடல் என்றால் சிலர் அவர்களையே மறந்து விடுகின்றார்கள். அது ஒரு ரசனை மோகம். இன்னும் சொல்லப் போனால் இன்றைய சமூகம் இசையுடன் மிகவும் பிணைந்து இருக்கின்றது. இசைக்கும் இஸ்லாத்துக்கும் சம்மதம் இருக்கிறதா? அரேபிய அகராதிகளைப் பார்த்தேன். சங்கீதம், இசை என்ற சொற்கள் எங்கும் இருப்பதாகத் தெரியவில்லை. ஆனால். ஆங்கிலச் சொல் அகராதியில் ‘அமியூஸ் மென்ட்” (களிப்பூட்டுதல்) என்ற சொல் பிரயோகிக்கப் பட்டிருக்கின்றது. இந்தச் சொல்லுக்குள்தான் "மியூசிக்” என்ற சொல்லே கட்டடம் அமைத்திருக்கின்றது. இதனை மையமாக வைத்தே அரபிகள் மூஸிகிய்யா அல்லது ‘ஹபலாதுல் மூஸிகிய்யா' (இசை அரங்கு விழா) எனப் பகர்கின்றனர். இமாம் கஸ்ஸாலி (ரஹ்) போன்றவர்கள் ‘ஸிமா' என்ற சொல்லாட்சி மூலம் "செவி நாதம்' என்ற தலைப்பில் இசை விடயத்தை உள் வாங்குகின்றார்கள்; கருத்துக்களை வெளியிடுகின்றார்கள். இஸ்லாத்துக்கும் இசைக்கும் சம்பந்தமே இல்லை என்று பலர் எழுதுகின்றார்கள். அவர்கள் 'இஸ்லாத்தில் எத்தகைய இசை அனுமதிக்கப் பட்டுள்ளது?’, “எது அனுமதி பெறவில்லை?" என்பதை இன்றைய சமுதாயத்தின் முன்னர் தெளிவுபடுத்த வேண்டும். இது சங்கைக்குரிய உலமாக்களின் கடமையாகும். உலகப் பொப் பாடகராக இருந்த கட்ஸ்டீவன், இஸ்லாத்தை ஏற்று 1980ம் ஆண்டு லண்டன் பத்திரிகைக்குப் பேட்டியளித்தார். அப்போது பத்திரிகையாளர் அப்துல்லாஹ் என்பவர், "நீங்கள் பாடுவதை நிறுத்தி விட்டீர்களா” என யூசுப் இஸ்லாத்திடம் கேட்டார். ‘வாழ்க்கையின் உண்மையான வழிக்கு இட்டுச் செல்வதை இசைத்துறை திசை திருப்பி விடும் என்பதை நினைந்து ‘சத்தியமாக ஈடுபடமாட்டேன்!” என்று உறுதியாகக் கூறமுடியாது. “இன்ஷா அல்லாஹ்! என்று கூறாமல் எதையும் கூற முடியாது” என்றார். இவர் பாடல் துறையை இன்னும் விடவில்லை. மேற்கத்தேய இசைக்கருவிகளால் வழங்கப்படும் இசையையும், தீமைக்கு வழிகோலும் பாடல்களையும் சாடினார்; விலகினார்; விட்டுவிட்டார். இஸ்லாத்தில் பாடல்துறை இருப்பதனால், அவர் சரிகண்டதனால் இன்றும் இஸ்லாமிய கருத்துள்ள பாடல்களை தன் அழகிய குரலினால் பாடுகின்றார். யூசுப் இஸ்லாமிடம் இஸ்லாமிய இசை ஞானம் போதாது. இங்கு நான் சொல்ல வருவது இஸ்லாத்தில் அனுமதிக்கப்பட்ட ரப்பான் போன்ற பல வடிவ இசையுண்டு; நல்ல பாடல்கள் பாட நபிகளாரின் அனுமதியும் கிடைத் திருக்கின்றது. அதனை வைத்துத்தான் உலகம் பூராக பாடகர்கள் நபிகளாரைப் பற்றி, ரமழானைப் பற்றி இன்னும் ஹஜ், உம்ரா, ஸ்க்காத், ஸதகா, கல்வி. பற்றியெல்லாம் பாடிக் கொண்டிருக்கின்றார்கள்.
Page 13 பாடுவதைக் கூடாது என்று எடுத்த எடுப்பில் சொல்லிவிடாது பாடகன், பாடகனின் தன்மை, பாவித்திருக்கும் வாத்தியங்கள் என்பவற்றை வைத்து ஆராய்ந்தே முடிவுக்கு வரவேண்டும். இன்று இசை உலகப் பயணத்தில் ஒஸ்கார் விருதையே வென்ற இசை மேதை ரஹற்மான் போன்ற பலர் இருக்கின்றனர். அவர்களின் பாடலை ஆய்ந்து ஆறுதலாக அவர்களுக்கு இஸ்லாமிய போதனைகளை எடுத்துச் சொல்வது நல்லதாகும். அண்மையில் குவைத்தில் இருந்து வெளிவரும் வசந்தம் 2009 ஏப்ரல் மாத இதழில் அதன் ஆசிரியர் தலையங்கத்தில் ஒஸ்கார் விருது பெற்ற இந்திய இசைஞானி ஏ.ஆர்.ரஹ்மான் அவர்கள் மிகவும் விசனமாக சாடப்பட்டிருந்தார். அப்படியெல்லாம் தாக்கும் போது அவர்களை இசை உலகில் இருந்து இஸ்லாம் சொல்லும் இசையைப் புரிய வைப்பது கடினமென நினைக்கின்றேன். ஏ.ஆர்.ரஹ்மான் அவர்களது இசையும், பாடல்களும் சீர்திருத்தப்பட வேண்டிய ஆயிரம் படிக்கட்டுக்கள் இருக்கின்றன. இது உண்மை! இதனை நான் மறந்துவிடவில்லை! இன்று S.M.S விளையாட்டில் - கைபோனில் - விரல் மீட்டும் பிள்ளைகள், எத்தனையோ டியூன்களை போன் வழியாகப் போட்டுக் கொள்கின்றார்கள். தங்களுக்குத் தேவையான டியூன்களைப் பரிமாறிக் கொள்கின்றார்கள். சிறிய பிள்ளை வாசிக்கின்ற குழலிலும் கூட இசை உண்டு. விளையாடுகின்ற பொம்மை முதல், கற்பனை கையடக்க ஃபோன் வரை டியூன் உண்டு. கிராமத்து வயல்களில் நடை பயிலும் மாடுகளின் கழுத்தில் இருந்தும் மணி ஓசை கேட்கும். பள்ளியில் அதான் சொல்லும் முஅத்தினும் கூட, இளுத்துராகமாகவே சொல்கின்றார். இன்னும் எத்தனை வகையான இசைகள் உண்டென எனது உரையான கட்டுரைத் தொடரில் படித்துக் கொள்ளலாம். கலை விழா ஒன்று நடைபெற்றால் இடையிடையே பாட்டுப் பாடுவதும், ஹதீஸ் மஜ்லிஸ் நடைபெறும் இடத்தில் இடையிடையே கஸ்தா பாடுவதும் சோம்பல் இல்லாமல் நிகழ்வுகள் சுறுசுறுப்படைவதற்காகவே. உரை நடக்கும் போது உறங்கிக் கொண்டிருந்த பலர் பாட்டு என்றால் பதறி எழுந்து சிரித்து, ரசித்து மகிழ்வார்கள். அப்படி ஒரு ஈர்ப்பு, பாடலுக்கு p asiir06. இந்தியாவில் நடைபெற்ற ஒரு மாபெரும் மாநாட்டில் “இஸ்லாத்தில் இசையிருக்கிறதா?” என டாக்டர் ஸாக்கிர் நாயக் அவர்களிடம் கேட்ட போது தப் தகரா ஒரு பக்கம் திறந்த வாத்தியம் மூலம் எழுப்பப்படும் ஒலி இஸ்லாத்தில் அங்கீகரிக்கப்பட்டிருக்கின்றது. ஏனைய வாத்தியங்கள் மனிதனை இறை சிந்தனையிலிருந்து திருப்பி விடுகின்றது” எனப் பதில் அளித்தார். ஆனாலும் அவர் ரி.வி பாடுகின்றது. இஸ்லாத்தில் இசை இருக்கிறது; பாடல் இருக்கின்றது. எல்லாம் வரையறையுடன் கூடியது. பாடசாலையால் சுற்றுலா மேற்கொள்ளும் மாணவர்கள் ஒருவன் தகராவில் தட்ட, மற்றவன் டிரைவரின் பக்கத்தில் இருக்கும் பெட்டியில் தட்ட, மூன்றாம் ஆள் கண்ணாடியில் திறப்பினால் தட்ட, இன்னுமொருவன் சீட்டின் மேலேயுள்ள கம்பியில் சில்லறை நாணயத்தால் தட்ட, இரண்டு மூன்று பேர் கை தட்ட, பாடசாலைக் கீதம் இசைக்க வண்டி புறப்பட்டால் இதையும் தடுக்க முடியுமா? பாடலைப் பொறுத்த வரை நல்ல கருத்துள்ள பாடல்கள் வரவேற்புப் பெறுகின்றன. பெருநாள் தினங்கள், திருமண நிகழ்வுகள், திருமண விருந்துகள், பிறந்த தின ஞாபக நிகழ்வுகள் குறிப்பாக அகீகாவுடைய சந்தர்ப்பங்கள், மற்றும் குர்பானிய நிகழ்வுகள், பிரயாணத்திலிருந்து களைப்படையும் சந்தர்ப்பங்கள் ஆகிய வேளைகள் அனைத்திலும் பாடுவதற்கு இஸ்லாம் அனுமதி தந்திருக்கின்றது. இப்னு அப்பாஸ் (ரலி) அறிவிக்கின்றார்கள். ஆயிஷா (ரலி) தன்னுடைய குடும்ப உறவினருள் ஒரு பெண்மணியை அன்ஸாரி ஸஹாபி ஒருவருக்கு திருமணம் முடிக்க அனுப்பி வைத்தார்கள். நபிகளார் (ஸல்) அவர்கள் வருகை தந்து வினவினார்கள், "அப்பெண்மணியுடன் ஒரு பாடகரை அனுப்பவில்லையா?” என. “இல்லை” என ஆயிஷா நாயகி பதில்
Page 14 சொன்னார்கள். “பாடக்கூடிய ஒருவரை நீர் அவர்களுடன் அனுப்பி யிருக்கலாமே. நான்கூட இங்கே வந்தது உம்மையும், அவர்களையும் வரவேற்பதற்காக!” என்றார்கள். இஸ்லாத்தில் அர்த்தமுள்ள பாடல்களை எழுதலாம்; பாடலாம். விபசாரம், குடிபோதை , மற்றவர்களைத் தாக்குதல் போன்ற பாடல்களுக்கே தடை விதிக்கப்பட்டுள்ளது. அபிஸினியர்கள் பாடல்களைப் பாடிய வண்ணம் பள்ளிவாயலில் ஈட்டிப் பயிற்சியில் ஈடுபட்டார்கள். நபியவர்கள் அவர்களைத் தூண்டும் வண்ணம் “ஓ! பனி அப்ரிதாக கோத்திரத்தார்களே! தொடருங்கள்” என்றார்கள். பின்னர் நபியவர்கள் தம்முடைய மனைவி ஆயிஷா (ரலி) அவர்களிடம் “அவற்றைப் பார்க்க விரும்புகின்றீரா?” என்று கேட்டார்கள். பின்னர் ஆயிஷா (ரலி) களைப்படையும் வரை பார்த்துவிட்டு, வீடு சென்றார்கள். இந்த ஹதீஸ் இரண்டு ஸஹீஹான கிரந்தங்களில் பதிவு செய்யப்பட்டுள்ளது. இதன் பிரதிபலிப்புக்களை ஆய்வோம். 1. அபிஸினியர்கள் தம்முடைய பொழுது போக்காக இசை வாத்தியங்களையும் நடனக் கலையையும் கொண்டிருந்தனர். 2. இதனைப் பள்ளியின் உள்ளே செய்தனர். 3. நபியவர்கள் இதற்கு ஆர்வமூட்டி “தொடருங்கள்” என்றனர். இதனால் இது வேண்டுதலாகவும், கட்டாயமாகவும் காணப்படுகின்றது. மாத்திரமல்ல, ஹராம் என்றால் இதனை எப்படி செய்திருப்பார்கள்? 4. பெருநாள் தினம் வாத்தியம் வாசித்தவர்களை அபூபக்கர் சித்திக் (ரலி) விரட்டிய போது “வேண்டாம்” என நபிகள் தடுத்தனர். 5. ஆயிஷா நாயகி இதன் மூலம் மகிழ்ச்சியடைந்தார்கள். 6. தகரா என்ற வாத்தியம் அனுமதிக்கப்பட்டமை போன்றவற்றைக் குறிப்பிடலாம். எனவே அனுமதிக்கப்பட்ட வாத்தியங்களைப் பாவித்து இஸ்லாமிய கீதம்,உர்து, கவாலி, கஸல், போன்ற நல்ல பாடல்களை தகராவின் மூலமாகப் uாடலாம். இந்நூலை எழுதும் போது பலர் கேள்விப்பட்டு “கை வைக்காதீர்கள்!” என்று கூட என்னைப் பயம் காட்டினார்கள். இஸ்லாமியர்கள் என்றால் அவர்களுக்கு கலை, கலாசார விழுமியங்கள், உணர்வுகள், ரசனைகள் அனைத்தும் இருக்கின்றன. இது போன்று முஸ்லிம்களுக்கு இசையும் சில சந்தர்ப்பங்களில் ஆகுமாக்கப் பட்டிருக்கின்றது. இஸ்லாமியனுக்கு இசை ஹராம்! ஹராம்! என்று கூறும் நாம் மக்க ளுக்கு, வளரும் சமுதாயத்துக்கு இசை பற்றிய தெளிவைக் கொடுக்க வேண்டும். "எந்த இசையைக் கேட்கலாம்?", "எந்த இசையைக் கேட்கக் கூடாது?’ என்ற தெளிவை நாம் ஏற்படுத்தவேண்டும். "கள்ளுக்கடைக்கு காசுமாற்றப் போகாதே! உன்னையும் குடிகாரன் என்று சொல்லுவார்கள்." எனப் பயமுறுத்துகின்றோம். அதே வேளை 24மணி நேரமும் இசையை ஒலிபரப்பும் வானொலியிலும், ஒளிபரப்பும் தொலைக்காட்சி யிலும் இன்று உலமாக்கள் தங்கள் பங்களிப்பைச் செய்கின்றார்கள். ஒரு காலத்தில் புகைப்படம் பிடிக்கக் கூடாது. அது ஹராம் என்று வாதாடிய மர்ஹூம் அப்துஸ்ஸமத் ஆலிம் (பஹற்ஜி) அதற்காக புனித மக்கா வுக்கே போகாமல் இருந்து விட்டார். இன்று வானொலி நிலையத்தையும், தொலைக்காட்சி நிலையங்களையும் நாடிச் செல்லும் சங்கைக்குரிய உலமாக்கள் இசையை 'இஸ9' பண்ணுகின்ற இந்த இடத்துக்கு போகாமல் இருக்கின்றார்களா? நாங்கள் முஸ்லிம் நிகழ்ச்சியில்தான். பங்கு பற்றுகின்றோம் என்று மட்டும் சொல்லிக் கொண்டால். முஸ்லிம் நிகழ்ச்சி என்றால் சும்மாவா? அதில் ஒவ்வொரு நிகழ்ச்சியையும் பிரித்துக்காட்ட அல்லது புதிய நிகழ்ச்சியை தொடங்க இசைதானே மீட்டப்படுகின்றது. தொலைக்காட்சியிலும் உலமாக்கள் பயான் பண்ணிக்கொண்டிருக்கும் போது இடையே ஒரு 'கெட்' அறிமுகம் செய்யப்படுகின்றது. அதில் முழுக்க முழுக்க மியூஸிக் உள்வாங்கப்பட்டிருக்கின்றது. அப்படியென்றால் தக்வாவின் எல்லையிலே
Page 15 நிற்கின்ற உலமாப் பெருமக்கள் அந்த நிகழ்ச்சிகளில் இருந்து தவிர்ந்து கொள்ளலாம்தானே? பாடசாலையில், மதரஸாவில் படிக்கின்ற பிள்ளைகளைப் பிடித்து "இசை ஹராம். பாட்டுப் படிக்கப் போகாதே கஸ்தாப் பாடப் போகாதே!” என்றெல்லாம் பிள்ளைகளைத் திசை திருப்பி சின்ன வயதிலேயே ஆக்கம், ஊக்கம், உணர்வு என்பனவற்றிக்குத் தடை விதிக்கின்றோம். அப்படி யல்லாமல் "உண்மையான பாடும் இசை எது?’, ‘எதனை முஸ்லிம்கள் பயன்படுத்தலாம்?’ என சமுதாயத்துக்குச் சொல்லிக் கொடுப்பது கட்டாயக் கடமையாகும் கலையுணர்வே அற்ற சமுதாயமாக, மரக்கட்டைகளாக, கற்பாறை களாக முஸ்லிம்களை மாற்றி விடாது உணர்வுகளைப் புரிந்து செயல்பட வேண்டும். அன்று பாட பல அடிமைப் பெண்கள். இன்று பல இஸ்லாமிய யுவதிகள். இதற்குள் சில உடன்பாடுகளும் உண்டு. இந்த நூலில் எகிப்து முதல் இலங்கை வரை முஸ்லிம்களில் இசை சம்பந்தப்பட்ட ஆய்வை முன்வைத்திருக்கின்றேன். இங்கே பாடகர்களையும், வாத்தியக்காரர்களையும் அவர்கள் பாவித்த வாத்தியங்கள், அவர்களின் வாழ்க்கை வரலாற்றுக்களை என்னால் முடிந்தவரை இணைத்துள்ளேன். இதன் மூலம் பாடகர்களும், இசையமைப்பாளர்களும் பெற்ற பட்டங்கள் அவர்கள் கண்டுபிடித்த வாத்தியங்கள் அனைத்தும் உள்ளடங்கும். இவற்றை நான் சும்மா விணுக்காகச் சேர்க்கவில்லை! இதற்காக நான் எடுத்த பிரயத்தனங்கள் கொஞ்சமல்ல! பாடகர்களும், இசையமைப்பாளர்களும் எங்கு வரை சென்றுள் ளார்கள்? எத்தனை சினிமாப் படங்களுக்கு முஸ்லிம்கள் வாத்தியம் வாசித்துள்ளார்கள்? இன்று சிரச, சக்தி, நேத்திரா போன்ற அலை வரிசைகளில் தொலைக்காட்சியில் தோன்றும் முஸ்லிம்கள் எத்தனை? ஒஸ்கார் விருது வரை பிரயாணம் செய்த ஏ.ஆர். ரஹ்மானின் பின்னணியில் ஆயிரம் பேர் முயற்சி எடுக்கின்றனர். பெண் பிள்ளைகள்கூட வீட்டில் வாத்தியம் வாங்கி பயிற்சி பெறுகின்றனர். இவர்களையெல்லாம் இஸ்லாம் ஏன் தூரப் பார்க்கின்றது? இசைக் கலைஞர்களை ஒதுக்கிவிட வேண்டாம். அவர்களின் வாசிப்பின் பிழையான பக்கத்தைச் சொல்லிக் கொடுப்போம். நல்லதைப் பாட இஸ்லாம் சரி கண்ட வாத்தியத்தை இயக்க உதவுவோம். இல்லையென்றால் அவர்களும் பாவி வானொலி, தொலைக் காட்சியில் அவர்களைப் பாட வைத்தவர்களும் பாவி பட்டம் வழங்கி கெளரவித்த அரசியல், தலைவர்களும் பாவியாகி விடுவர், சந்தேகமேயில்லை! மதரஸாக்களில் இமாம் கஸ்ஸாலி (ரஹ்) அவர்களின் இஹற்யா உலூமுத்தீன் கிரந்தத்தை ஒதிக் கொடுக்க முடியுமா? அது இசையை ஆதரிக்கிறதே? விரிவை அஞ்சி சுருக்கிக் கொள்கின்றேன். இந்நூலுக்கு முன்னர் பலஸ்தீன விடுதலைக் கவிதைகளை மொழிபெயர்த்தேன். அது அல்வகிலு அலியுல் பைபி எழுதியது. தற்போது இஃயா உலூமுத்தீன் நன்றாக ஆய்ந்து அரபு வசனங்களுடன் தந்துள்ளேன். எனக்கு இஃயா உலூமுத்தினை படிப்பித்துத் தந்தவர் பக்க உலமாவும், நஃவின் நந்தவனுமாவார். அதனால் இதன் மொழி பெயர்ப்பை சிறப்பாகச் செய்ய முடிந்தது. தஸவ்வுப் சூபித்துவம் ஆத்மஞானம் விளங்குபவர்களுக்கு இதில் நல்ல படிப்பினை உண்டு. இஸ்லாமிய கீதங்களைப் பாடியவர்களுக்கு, இசை அமைத்த வர்களும் உண்மையில் சமுதாயத்தை சீரழிக்கவில்லை. எவரும் கெட்டுப் போக வேண்டுமென அவர்கள் நினைக்கவில்லை. அவர்களும் நல்ல நோக்கத் தில்தான் நல்ல தினங்களில் பாடியுள்ளார்கள். இஸ்லாமிய வரையறைக்குள் அவர்கள் பாடியிருந்தால் அவர்களின் பாடல்கள் பலன்பெறும்; பெறுமதியாகும். பாடக் கூடாதவற்றைப் பாடியும், வாசிக்கக் கூடாத வாத்தியங்களை வாசித்ததுமிருந்தால், அவர்கள் மார்க்க அணுகுமுறையைப் படித்து திருந்த வேண்டும். அனைவரின் பாவத்தையும் அல்லாஹ் மன்னிப்பான். பொறுப்பான்.
Page 16 பாடியவர்கள், இசைமேதைகள் மரணித்து இருந்தால். அல்லாஹற் அவர்களின் பாவத்தைப் பொறுத்தருள்வானாக! நல்ல பாடல்களாக மக்களுக்குத் தந்த அனைவரையும் அல்லாஹற் பொருந்திக் கொள்வானாக. ஒவ்வொரு கலைஞனும் அல்லாஹ்வின் அருளின் நின்றுமே தன்னைத் தயார்படுத்துகின்றான். இது உண்மை! அவனின் முன்னேற்றம் அல்லாஹ்வின் நிஃமதாகும். கேவலமான பாடல்கள், சீரழியும் சினிமாப் பாடல்கள் இச்சையைத் தூண்டும் இசைக் கச்சேரிகள் நமக்கு தடுக்கப்பட்டுள்ளன; ஹராமாக்கப்பட்டுள்ளன. குடியையும் மாதுவையும், விலை மாதுகளையும் அலங்கரித்த பாடல்கள் என்றும் நமக்குத் தடுக்கப் பட்டுள்ளன. இஸ்லாமியர்கள் இசைத்துறையில் பின் நின்றமைக்கான காரணத்தை ஆராய்ந்து பார்க்க வேண்டும். அக்காரணங்கள் அண்ணல் நபி (ஸல்) அவர்கள் வழங்கிய போதனையின் அடிப்படையில் ஈர்க்கப்பட்ட உணர்வுகளாகும். நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள் இசைக் கருவிகளின் இராகங்களையும், சங்கீதங்களையும் கேட்பது குறித்து உங்களை வன்மையாக எச்சரிக்கின்றேன். நிச்சயமாக அவ்விரண்டும் தண்ணீர்த் தாவரங்களை விளைவிப்பது போல நயவஞ்சகத்தை விளையவைத்து விடுகின்றன’ -9ğalîütıHağ : இப்னும6ஸ்ஊத் (ரலி) ஆதாரம் : இப்னு ஸஹர் மேலும் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: நிச்சயமாக அல்லாஹ் என்னை வழிகாட்டியாகவும் இறை நம்பிக்கை உள்ளவர்களுக்கும் அருளாகவே அனுப்பியுள்ளான் இசைக் கருவிகள், இசைக்குழல், கம்பிகள் ஓடிய இசைக்கருவிகள், சிறிய வீணைகள் அறியாமைப் பண்புகள் ஆகியவற்றை அழித்து விட வேண்டுமென்று எனக்கு அவன் ஏவியிருக்கின்றான். அறிவிப்பாளர்: S911I_IDIUII (JSö) (ஆதாரம் : அபூதாவுத் ) இசை பற்றி இறைத்தூதர் (ஸல்) கூறும் போது இசை ஓசைகள் இரு உலகிலும் சபிக்கப்பட்டு விட்டன; மகிழ்வடையும் போது இசைக்குழல் வாசிப்பதும், துன்புற்ற இடத்தில் ராக மெடுத்து ஊளையிடுவதுமாகும் என உத்தம நபி(ஸல்) உரைத்தார்கள். 9ifs.jius): ஆயிஷா (ரலி) ஆதாரம் : (இப்னு மர்தவி பைஹகீ) இசை பற்றி இஸ்லாத்தில் ஏகோபித்த அபிப்பிராயம், என்ன கூறப்பட்டுள்ளது என்பதை இன்னும் படிப்போம். அப்போதுதான் தெளிவு என்ன என்பதைத் தெரிந்த கொள்ள முடியும். அல்லாமா முகைதீன் அப்துல் காதர் ஜிலானி (ரஹ்) தனது குன்யா என்ற நூலில் முதலாம் பாகம் 15வது பக்கத்தில் இப்படி எழுதுகின்றார். மார்க்க முரணான தபேலா, இசைக்குழல், புல்லாங்குழல், ஒரு வகை சிறிய வீணை, ஒற்றைக்குழல், தம்புரா போன்றவற்றின் ராகம் நடைபெறுமாயின் அங்கு அமரலாகாது என்பது அவர்களின் பத்வாத் தெளிவாகும். இசை இசைப்பதற்கும் ரசிப்பதற்கும் பத்வாத் தேடி அலைவதை விட தக்வா என்ற இறையச்சமே ஏற்புடையது. அது மாத்திரமின்றி அல்லாமா இப்னு ஹஜர் (ரஹ்) கர்புர் றிஆ என்ற நூலில் இசைக் கருவிகள் பற்றி 13வது பாகத்தில் கம்பி ஒடிய இசைக்கருவிகள் உதாரணமாக தம்புரா, ஒரு வகை சிறிய வீணை, சலங்கையுள்ள சிங்கி, பெரிய வீணை, சிங்கி, கம்பி வைத்து இசைக்கும் வினை, செம்புக்கம்பி இழையோடிய இசைக்கம்பி முதலான கருவிகள் தீயவர்கள் உபயோகின்ற பிரபல்யமான இசைக் கருவிகளாகும். இவை
Page 17 அனைத்தும் ஹராமானவையே; இதில் அபிப்பிராய பேதம் என்று எவரேனும் கூறினால் நிச்சயமாக அவர் தவறு செய்துவிட்டார் என்றனர். இமாம் அபுல் அப்பாஸில் குர்தபி அவர்கள் இவை அனைத்திலும் ஹராம் என்பதில் ஒத்த கருத்து இருக்கின்றது எனக் கூறியிருக்கின்றனர். இசைக்கருவிகள் உபயோகிப்பதில் ஹராம் என்று ஏகோபித்த அபிப்பிராயம் இருப்பதாக தக்ரீப்" என்ற நூலில் மகான் ஸலிம் அபுல் பதன் இப்னு அய்யூப் புஹாரி என்பவர் கூறுகின்றார். இந்தக் கூற்றுக்களை அப்படியே பாரமெடுத்தவர்கள் இசைத் துறையிலிருந்து முற்றாக ஒதுங்கினார்கள். அதே வேளை திருமண வீடுகளை பறை தட்டி பகிரங்கப்படுத்தும் படி நபிகளார் (ஸல்) கூறினார்கள். இன்றும் திருமண வீடுகளில் பெண்கள் சேர்ந்து மேளம் தட்டும் வழக்கம் இருக்கின்றது. இமாம் கஸ்ஸாலி (ரஹ்) போன்றோர் இறைவனுடைய அன்பை ஈர்க்கும் இசைகளை அனுமதித்தார்கள். அதன் மூலம் கஸிதாக்களும், இஸ்லாமிய கீதங்களும் வெளிவர ஆரம்பித்தன. இமாம் அஹ்மத் கபீர் றிபாயி (ரஹ்) போன்றோர் தஹராக்களைத் தட்டி திக்ர் செய்யும் அறிமுகங்களை ஏற்படுத்தினார்கள். காலப்போக்கில் தஹரா றாத்திப் என்ற வடிவம் தோன்றலாயிற்று. சாதுலியா தர்க்காவில் கஸிதாக்களை அழகாகப் பாடுவதுடன் திக்ருக்கு ஏற்ப தங்களை ஆடவும் வளைக்கவும் பயிற்றப்பட்டார்கள். இன்றும் இந்த அமைப்பு இருந்து கொண்டேயிருக்கின்றது. மாத்திரமன்றி யுகமுடியும் நாளுக்காக இறைவன் சூர் என்ற எக்காளத்தைக் கொடுத்து இஸ்ராபில் என்ற ஒரு அமரரை தயார் செய்து வைத்திருக்கின்றான். அந்த இசை வருகின்ற போது பூமி அசைந்தாடும் என்பது வரலாறு. இத்தகைய நோக்கில் சிந்தித்து, மெல்ல மெல்ல காலெடுத்து வைத்த இஸ்லாமியர்கள், இன்று இசைத் துறையில் முன்னேற்றம் கண்டு இருக்கின்றார்கள். கஸிதா, மெளலித் என்றெல்லாம் வளர்ச்சி கண்டது. முகம்மது நபி (ஸல்) மக்காவை விட்டு மதீனா சென்ற போது 1429 வருடங்களுக்கு முன்னர் மதீனா பெண்கள் தகரா தட்டி ‘தலஅல் பத்று அலைனா என்ற பாடலை பாடி முகம்மது நபியை வரவேற்றார்கள். இந்நிகழ்வு நல்ல உதாரணமாகும். இப்படியே மெதுவாக, மெதுவாக ஷரஅத்துக்கு அங்கீகாரம் பெற்ற இசைகளை வாசித்து முன்னேறிய முஸ்லிம் சமுதாயம், இன்று இசைத் துறையில் இஸ்லாமிய வரையறையை விட்டு, உலகையை ஈர்க்க முனைவது கவலை தருவதாகும். இந்தப் பின்னணியில் நபிகளார் (ஸல்) அவர்கள் எதனை எதிர்பார்த்து சில இசை அமைப்புகளைத் தடுத்தார்களோ அத்தகைய இசைக் கருவிகளையும், அதையும் தாண்டி கணினி ரீதியான இசை ஆய்வுகளையும் செய்து பெருமுன்னேற்றத்தின் உச்சிக்கே போய்விட்டமை துரதிர்ஷ்டமாகும். நபிகளார் (ஸல்) சரி கண்ட, ஷரீஅத்துக்கு ஆகுமான இசை வடிவங்களைத் தோற்றுவிப்பது பிரச்சினையில்லை. வேண்டாம் என்ற நாதங்களை வாத்தியங்களாக வாசிப்பது பாவத்தை ஈட்டித் தரும் என்பதில் கடுகளவும் சந்தேகமில்லை. உலகம் முன்னேறுகின்ற வேகத்தில் எல்லாத் துறைகளிலும், முஸ்லிம்களும் முன்னேற வேண்டுமெனத் துடிக்கின்றார்கள். அதில் தவறில்லை! ஆனால். எந்த முன்னேற்றமாயினும் நபிகளார் (ஸல்) வேண்டாம் என்றதை நாம் செய்ய முற்படுவது தடுக்கப்பட்டுள்ளது. அன்றைய காலத்தில் ஒட்டகம், குதிரை, கழுதையில் பயணம். இன்று விமானம் முதல், ஜெட் அதிவேக விமானம் வரை முன்னேறி விட்டதாக கூறி “இப்படி இசையிலும் முன்னேறலாம் தானே?” என்று கேள்விகள் அடுக்கப்படுகின்றன. அது மாத்திரமன்றி “அன்றைய காலத்தில் யுத்தத்திற்கு பாவித்த ஆயுதங்களை விட இன்று நவீன ரக ஆயுதங்கள் முதல், மனித வெடி குண்டு வரையில் முஸ்லிம்கள் முன்னேற்றம் கண்டிருக்கின்றார்கள். அப்படியாயின் ஏன் இசைத்துறையில் முன்னேறக் கூடாது?” என்று கேள்விக் கணை தொடர் கின்றார்கள். நபிகளார் (ஸல்) இந்த வாகனங்களில் மட்டும்தான் பயணம் செய்ய வேண்டும்; வேறு வாகனங்களில் பயணம் செய்யக் கூடாது என்று சொல்லவில்லை. அதே போல்
Page 18 இந்த ஆயுதத்தால் மாத்திரம்தான் போர் செய்ய வேண்டும்; வேறு ஆயுதத்தால் போர் செய்யக் கூடாது என்று தடுக்கவில்லை. ஆகையால் இசையைப் பொறுத்தவரை ஆகுமாக்கப்பட்ட வாத்தியங்களைத் தவிர மற்ற அமைப்புடைய வாத்தியங்களைத் தடுத்திருக்கின்றார்கள். அவர்கள் தடுத்த அமைப்புடைய வாத்தியங்கள் நமக்கு எப்படி ஆகுமானதெனக் கொள்ள முடியும்? எந்த அரபு நாடுகளாக இருப்பினும் சரியே, எந்த மகான்களாக இருப்பினும் சரியே கோமான் நபிகள் கூடாது என்று தடுத்திருந்தால் அது கூடாதுதான். அதில் இன்னுமொரு கருத்துக்கு இடமில்லை. இன்று இசையைப் பொறுத்த மட்டில் பல லட்சம் ரூபாய் பரிசு முதல், இலவச விமானப் பயணம் வரை இசை ரசிகர்களுக்கும், இசைக் கலைஞர்களுக்கும் ஊக்குவிப்பு வழங்கப்படுகின்றது. இளைஞர்களும், யுவதிகளும் இதற்கு முழு மூச்சாகப் பாடுபட்டு இசைக் கச்சேரிகளில் சரி நிகராக நின்று அசத்துகின்றார்கள். இசை ஊக்குவிப்புப் பயணத்தில் தொலைக்காட்சிகள் கடுமையான பங்களிப்பைச் செய்கின்றன. இன்று 'ஒஸ்கார்’ விருது வரை சென்ற முஸ்லிம்கள், கணினி இசையின் மூலமாக உலகத்தை ஒரு ஆட்டமே போட வைத்துள்ளார்கள். கையால் வாசிக்காமல் கணினி பட்டன் மூலம் முழு இசையையும் பெறுகின்றார்கள். இசை அமைப்பாளர்களின் இசையில் ஆடுகின்ற பெண்களும், ஆண்களும் லட்சம் லட்சம் அவற்றில் அறை குறை ஆடைகள், ஆடைகளே இல்லாமல் பேயாட்டம் போடுதல் போன்ற காட்சிகள், கட்டங்கள் உருவாகின்ற போது அவர்கள் இழைக்கின்ற இஸ்லாமிய ஷரீயா மீறல்களுக்கு நிச்சயமாக இசை வாசிப்பாளர்கள் பதில் சொல்லியே ஆக வேண்டும். இன்று இசையிலே பலர்கள் கட்டுண்ட நாகமாக தமது காலத்தையும், நேரத்தையும் கழிப்பதுடன் போதை வஸ்துக்களுக்கு அடிமையாவதையும், சேர்ந்து ஆடுபவர்களுடன் விபசாரச் சேர்க்கையில் ஈடுபடுவதையும் பார்க்குகின்ற போது இசையை நினைத்தாலும் சமுதாயம் பயப்படுகின்றது. இரவு நேரங்களில் தொலைக்காட்சிகளில் போடப்படும் இசை நிகழ்ச்சிகளில் பற்பல பெயர்களில், விபசாரத்தைத் தூண்டும் படங்களுக்குத் துணை போகும் இசையையே ஒளிபரப்புச் செய்கின்றனர். “இவையெல்லாம் நமது சமுதாயத்தை வாழவைக்குமா?” என்பதுதான் எனது கேள்வி. இன்று முஸ்லிம் இளைஞர்களும் யுவதிகளும் வானொலி, தொலைக்காட்சி, சினிமா, நாடகங்களுக்கு முண்டியடித்துக் கொண்டாலும் அதன் யதார்த்தங்களையும், கட்டுக்கோப்பு மீறிய தன்மைகளையும் பார்க்க வேண்டும்; சிந்தித்துச் செயற்பட வேண்டும். பாடசாலையொன்றில் "பேண்ட் வாத்தியம்’ எதிர்பாராத ஓர் நிலையில் வாசிக்க ஏற்பட்டாலும், அதில் பங்கெடுக்க நேர்ந்தாலும் மற்றைய இசை அமைப்புக்கள் அப்படியல்லவே. (பாடசாலையில் கட்டாய நிலை எனினும் தடுத்தல் - தவிர்தல் தக்வா.) முன்னை நாள் கல்வி அமைச்சர் மர்ஹூம் அல்ஹாஜ் பதியுத்தீன் மஹ்மூத் அவர்கள் பேண்ட் வாத்திய இசை யையும் நடனதத்தையும் முஸ்லிம் பாடசாலைகளில் திணித்த போது. முஸ்லிம் சமூகம் கொதித்தெழுந்தது. ‘அமைச்சரின் நடனமும் ஆலிம்களின் தாளமும்’ என்ற தலைப்பில் பிரசுரங்கள் வெளியிட்டு வைக்கப்பட்டன. ஜும்ஆ மேடைகள் அனைத்தும் இசைக்கு எதிரான கருத்தைக் கொப்பளித்தன. இசையை எந்த அளவுக்கு பயன்படுத்தலாம் என்பதை இமாம் கஸ்ஸாலி (ரஹ்) அவர்கள் தமது இஹ்யா உலூமுத்தீன் என்ற கிரந்தத்தில் எழுதிய இசை பற்றிய கருத்துக்களை இங்கே தமிழில் மொழிபெயர்த்துத் தந்துள்ளேன். இந்தக் கட்டுரைகளை, இலங்கை வீரகேசரி பத்திரிகையின் வெளியீடான"இசை உலகம்’ எனும் இதழில் 2008 முதல் 2009 கடைசிவரை எழுதினேன். அத்துடன் இசை சம்பந்தமான கட்டுரைகளையும் எழுதினேன். என்னால் எடுதப்பட்ட கட்டுரைகள் அனைத்தையும் ஒன்றிணைத்து உங்கள் கைவசம் நூலாகத் தந்துள்ளேன். இது எனது 15வது நூலாகும்.
Page 19 இந்நூலுக்கான ஆய்வின் போது உலகளாவிய கலைஞர்களையும் இந்திய இலங்கை இஸ்லாமிய இலக்கிய ரசிகர்களையும், இயக்குநர்களையும் வாழ்க்கை வரலாற்றுடன் குறிப்பிட்டு இருக்கின்றேன். இதன் மூலம் இசை உலகில் ஈடுபட்ட முஸ்லிம்கள் பற்றிப் புரிந்து கொள்ளலாம். (இஸ்லாத் தினதும், உலமாக்களினதும் கட்டுப்பாடுகளை மீற தடுக்கப்பட்ட வாத்தியங் களையும், இசைக் கருவிகளையும் ஏராளமானோர் பயன்படுத்தியுள்ளமையை இங்கே காணக்கூடியதாக இருக்கின்றது) இஸ்லாத்தைப் பொறுத்த வரை இசை, ரசனை என்பது கூடாது என்பதல்ல - ஆகுமான இசையும், ஆகுமான ரசனையும் தடுக்கப்படவில்லை. இதற்கு இமாம் கஸ்ஸாலி (ரஹ்) ஆதாரம் போதுமானது. இன்று இசை, இஸ்லாமிய கீதம், கஸிதா என்றால் அந்த இடத்தில் இருந்து எழும்பிச் செல்பவர்களும், அந்த இடத்துக்கே வராதவர்களும் நிறையப் பேர் இருக்கின்றார்கள். இவர்களுக்கு இசை பற்றிய இஸ்லாமியத் தெளிவு இல்லாமல் போனது ஒரு காரணமாகும். இரண்டாவது, இசைக் கலைஞர்கள் பாவிக்கும் பல்வகை வாத்தியங்கள், அவர்கள் அணியும் உடை, அவர்களின் தலை அலங்காரங்கள், கழுத்து, கைகளில் அணிந்திருக்கும் தங்கச் சங்கிலிகள், கிலுகிலுப்பூட்டும் வளையல்கள், நகங்களின் நீளங்கள், நடைகளின் நாகரிகப் போக்குகள், ஆட்டங்கள், பெண்களோடு சேர்ந்தாடும் அசைவுகள் அனைத்தும் இஸ்லாத்தின் பார்வையில் பிழையானது என்ற கருதுகோலும் அவர்களின் இசை எதிர்ப்புக்குக் காரணமாக அமைந்திருக் கின்றது. இரண்டாவது சொன்ன காரணம் முற்றிலும் சரியானதே ஒரு பழமொழி சொல்வார்கள் “ஊசி போற இடமிருந்தால் ஒட்டகத்தையே கொண்டு போக முயற்சிப்பார்கள்’ என இசையின் பக்கத்தில் ஷைத்தானுக்கு - Rest House - தங்குமிடமே இருக்கின்றது. ஒரத்தில் ஒருவன் நின்றாலும் ஷைத்தான் உள்ளே அழைத்துச் சென்று உட்கார வைப்பான். ஆகையால்தான் இசைப் பயணத்தில் உலகில் அதிகமான முஸ்லிம்கள் ஆர்வம் கட்டாமல் இருக்கின்றனர். உலகளாவிய ரீதியில் ஆயிரக்கணக்கான இசைக் கலைஞர்கள் வாத்தியங்கள் வாசித்து, சினிமாவில் தலை நிமிர்ந்து பெயரும், புகழும் வாங்கி மரணித்து விட்டனர். பல்லாயிரம் இசைக் கலைஞர்கள் இன்றும் உயிர்வாழ்கின்றார்கள். இஸ்லாமிய மார்க்க விவகார உலகம், முற்றிலும் இசைக் கலைஞர்களை தள்ளிவிடாமல் அவர்களை நோக்கிதஃவாப் பணியை நகர்த்த வேண்டும். இசைக் கலைஞர்களின் பக்கம் திரும்பிப் பார்க்காமல், “அவர்கள் எப்படியாவதுபோகட்டும்!” என விட்டு விட முடியாது. இஸ்லாமிய வரையறைக்குள் அவர்களை நிற்க வைத்து அவர் களுக்கு கெளரவம் வழங்குவதோடு- இசைப் பயணத்தில் மார்க்கத்தை மீறிச் சென்றவர்களை அழைத்து, இருந்து ஆறுதலாக தீமையின் உச்ச வரம்பையும், அதற்காக மறுமையில் அனுபவிக்கும் நிலைப்பாட்டையும், விளங்கப்படுத்தி இஸ்லாமிய தஃவா செய்தால் லட்சக்கணக்கான பாடகர்களும், வாத்தியக் காரர்களும் தக்வாவின் எல்லைக்குள் உள்வாங்கப்படுவார்கள் என்பதில் ஐயமில்லை. ஒரு முஸ்லிமுக்கு மார்க்கத்தை எத்திவைப்பது மிகவும் கடமையான ஒன்றாகும். நபிகள் நாயகம் (ஸல்) “என்னைப் பற்றி ஒரு செய்தியாயினும் அதனை மற்றவர்களுக்கு எத்தி வையுங்கள்” என்றனர். கண்ணியத்துக்குரிய உலமாக்கள் எந்த இசை கூடும், இசைப்பயணத்தை எதுவரை தொடரலாம் என்பது பற்றி தெளிவுபடுத்தவேண்டும். வானொலி முஸ்லிம் சேவையிலும், தொலைக்காட்சியிலும் கச்சேரிகளிலும் பங்கேற்கும் கலைஞர்களெல்லாம் சிறந்த பட்டங்கள் வழங்கி அரச தகுதி காணும் அரங்குகளில் கெளரவிக்கப்படுகின்றார்கள். மார்க்க அனுமதியற்ற வாத்தியப் பாவனையாளர்களுக்கும் பல்வேறு விதமான பட்டங்கள் வழங்கி கெளரவிக்கப்படுகின்றது. நல்லவை பாராட்டப்பட வேண்டியதுதான்; அதற்காக தீமையின் விளைநிலங்களுக்கு தீனி போடாமல் தீனை (மார்க்கத்தை)ச் சொல்லிக் கொடுப்பது கடமையாகும்.
Page 20 இமாம் கஸ்ஸாலி (ரஹ்) அவர்களின் இஹ்யா உலூமித்தீன் எனும் நூலில்கிரபுஸ்ஸிமாஃ எனும் பகுதி, இசை பற்றிய யதார்த்த நிலைகளைக் கூறி நிற்கின்றது. இன்றைய இஸ்லாமிய அறிஞர்களில் ஒருவராகக் கருதப்படுகின்ற அஸ்ஷேஹற் யூசுப் அல்கர்ழாவி அவர்கள் “THE LAWFULAND THE PROHIBITED IN ISLAM Gigip TGSci) 360& Ubi pub G56flasco, விளக்கத்தை - இமாம் கஸ்ஸாலி (ரஹ்) அவர்களின் கருத்துக்களை ஆதாரம் காட்டி - முன்வைத்துள்ளார். இப்படியாக இசை பற்றிய வரலாறுகள் அதிகமாக ஆய்வுக்கு வந்துள்ளன. உலகிலேயே மிக விலை கூடிய வாத்தியக் கருவிகளை இசைத்து பாடல் இசைத்த கெஸ்டீவன் (யூசுப் இஸ்லாம்) புனித இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டு அத்தனை இசை முயற்சிகளையும், பண எதிர்பார்ப்புக்களையும், நட்சத்திர ஹோட்டல்களையும் துறந்து இன்று சிறந்த இஸ்லாமிய தாயியாக லண்டனில் திகழ்கிறார். எனவே இஸ்லாத்தில் ஆகுமாக்கப்பட்ட இசையை கேட்பதில், ரசிப்பதில், வாசிப்பதில் தவறில்லை. இன்று உலகில் இசையினால் பயிரினங்கள் வளர்வதாகவும், பசுக்கள் பால் கறப்பதாகவும் நிரூபித்திருக்கின்றனர். அண்மையில் அமெரிக்க தெற்கு கரோலினா நகரைச் சேர்ந்த ஒரு நிறுவனம் "பெல்ட்" வடிவில் இசையை பரப்ப முடிவு செய்தது. கர்ப்பிணித் தாய்மார்களுக்கு இடுப்பில் பெல்ட்டை அணிய வைத்து, வயிற்றில் வளரும் குழந்தை அந்த இசையை கேட்கச் செய்து, குழந்தை வளர்ச்சியை சிறப்பாக்குவதோடு, மந்த புத்தியை களையவும், அறிவியலை ஊட்டவும் கூடிய ஆரோக்கிய நிலை ஏற்படுவதாக அந்த நிறுவனம் கூறுகின்றது. 2010 வரை கருவிலே அதுவும் 17 வார வளர்ச்சியுள்ள பிள்ளைக்கு அந்த நிறுவனம் நவீன கருவி மூலம் இசையூட்டத் தீர்மானித்துள்ளது. அதே வேளை ஈரானில் பிறந்த சிறிது காலத்தில் அல்குர்ஆனை மனனமாக ஒதிய சிறுவனின் தாயார் கருத்துத் தெரிவிக்கையில். எனது பிள்ளை கருவுற்ற நாள் முதல் நான் சப்தமாக அல்குர்ஆனை மடக்கி மடக்கி ஒதினேன். அந்தக் குழந்தை கருவிலேயே 6666 அருள் மறை வசனங்களையும் பாடமாக்கிக் கொண்டது என்றார். எந்த இசை வரவேற்புப் பெறுகின்றது? ஆங்கில இசையா? அல்குர்ஆன் இசையா? கடிகாரத்தில் இசை, கையடக்க தொலைபேசியில் இசை, வீட்டின் முன் Caling Belஅழைப்பொலி இசை, வாகனம் பின்னால் எடுப்பதற்கு இசை, செய்திகளுக்கு முன்னர் இசை, பயான்களை, நிகழ்ச்சிகளை பிரித்துக்காட்ட இசை. இப்படியாக, இசை தொடர்கின்றது. நாம் இசையிலிருந்து ஒதுங்கினாலும் இசை நம்மை விடாது போன்றுள்ளது. காலம் நமக்குள் இசையை கட்டாயப்படுத்தி இருக்கின்றது. அறிவும் விஞ்ஞானமும் முதிர்ச்சியான இக்கால கட்டத்தில் இஸ்லாத்தில் எந்த இசையைக் கேட்கலாம், எந்த இசையைக் கேட்கக் கூடாது என்பதைத் தெரிந்து, அறிந்து, தெளிந்து இந்நூலை வாசித்து எந்த இஸ்லாமிய இக்வானுடனும் அன்பு கூர்ந்து தஃவாப் பணி செய்து, இசை அமைப்பாளனை அல்லாஹ்வின் அரங்கில் அன்புள்ள அடியானாக ஆஜர் செய்ய தெண்டிப்போம். இசைக் கலைஞன் என்று சமுதாயத்திலே பலரைத் தள்ளிவிட்டு, அவர்களும், தொழுகை, நோன்பு, கடமைகள் எதுவும் இல்லாமல் மதுவுக்கும், மாதுவுக்கும் துணை போய் விடாமல் - மார்க்கத்தின் விளிம்பிலிருந்து விடுபடாமல் - ஒன்றிணைந்த இஸ்லாத்தின் கலைத்துவத்துக்குள் ஒன்றி வாழ பிரார்த்திப்போம்! உறுதுணை வழங்குவோம்! இன்ஷா அல்லாஹற்! இந்நூலுக்கு நயவுரை விங்கிய அல்ஹாஜ் கலைவாதி கலில் அவர்களுக்கும் அணிந்துரை வழங்கிய திரு. ஏ. பி. மதன் அவர்களுக்கும் முகவுரை வழங்கியமர்சூம் மெளலானா அவர்களுக்கும் இந்நூலை அச்சிட்டுத் தந்த மொஹிடீன் ரஜா அவர்களுக்கும், இந்நூல் விடயத்தில் இரவு பகலாக உழைத்த என் துணைவியார் ஹாஜியானிறிபாயா அவர்களுக்கும், எனது மகன் முஹம்மது ஸைனி அவர்களுக்கும் என்றும் என் நன்றிகள். இந்நூலைப் படித்து எனக்காகப் பிரார்த்திக்கும்படி பணிவாக வேண்டுகின்றேன். இவ்வணிணம், 'கலாஜோதி" (ஷர்கி) 23/6 வத்தல்பொல வீதி, ஹேனமுல்லை. பாணந்துறை.
Page 21 'ஹுஜ்ஜதுல் இஸ்லாம் இமாம் கஸ்ஸாலி (ரஹ்) அவர்கள் எழுதிய 'இஹற்யா உலூமுத்தீன் கிரந்தத்தின் இசை பற்றிய ஆய்வின் தமிழ் மொழிபெயர்ப்பு செவி வழி இசையும் சிறப்பெய்தலும் அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடை யோனுமாகிய அல்லாஹற்வின் திரு நாமத்தைக் கொணர்டு ஆரம்பிக்கின்றேன். அனைத்துப் புகழும் அல்லாஹற்வுக்கே அல்ஹம்து லில்லாஹற்! அன்பின் மூலம் அடியார்களின் அகத்தை அல்லாஹற்தன் பக்கம் ஈர்த்துக் கொள்கின்றான். அன்புள்ள மானுடனின் எணர்ண அலைகளில் தன்னை எணர்ணுகின்ற, முன்னோக்குகின்ற ஒரு எணர்ணப்பாட்டை வைத்துள்ளான். இறைந்ேசர்களின் சிந்தனையிலும், சீரிய பார்வை யிலும், அனைத்திலுமாக அல்லாஹற்வின் சக்தியுணர்டு என்பதை அறிகின்ற ஆற்றலை ஏற்படுத்தியுள்ளான். அல்லாஹற்வின் அளவு கடந்த ஆற்றலை அறிந்து அவர்கள் புகழ்கின்றனர். கணிணுக்குத் தோற்றம் தருகின்ற, இன்னும் தோன்றாத அனைத்தினிலும் இறைவனுடைய ஏகாந்த - யதார்த்த நோக்கைப் பார்க்கின்றனர். மணர்ணுல கிற்கும், விணர்ணுலகிற்கும் இறைவன் ஒருவனே என நினைந்து வேறு எதிலுமேநாட்டம் கொள்வதில்லை. எந்தப் பொருள் இறை நேசர்களின் கணிகளில் தோன்றிய போதும் அவர்களின் உள்ளார்ந்த யூகம், படைத்த வல லவனை நோக்கியே வட்டமிடுகினர்றது. இறை நேசர்களின் காதுகளில் இசை உள்வாங்கப்பட்டதும், அவர்களின் எணர்ணங்கள் எல்லாம் வல்ல இறைவனையே சென்றடைகின்றது. திடுக்கிடும் குரல் கேட்டாலும், தித்திப்பான நற்குரல் கேட்டாலும் இறைவனுக்காக ஏற்றுக் கொள்கின்றனர். இறைவனுக்காக மகிழ்கின்றனர்; துன்பத்தையும் துணிவுடன் தாங்கிக் கொள்கின்றனர். அவர்களின் சுகம், துக்கம் அனைத்தும் ஆண்டவனுக்கென்றே அர்ப்பணம்! அவர்களின் ஏக்கமும், இன்னும் ஏக்கத்திற்கான துணர்டுதல் களும் இறைவனுக்கே என்பர். கணிகளுக்கும், காதுகளுக்கும் மெய்யன்றிப் புலப் படுவதில்லை; இவர்கள்தானி இறைஞானிகள்! மானுடனின் மனமும் - அவ்வுள்ளத்தின் பள்ளத்தில் பதிந்து கிடக்கின்ற எணர்ணங்களும் மாணிக்கச் சுரங்கத் திற்கும், அதில் ஒளி வீசும் வைரங்களுக்கும் ஒன்று பட்டதாகும். இருப்பினும், கற்பாறைக்குள்ளும் தீ மறைந்து கிடக்கின்றது. இது போன்றே புழுதி தோய்ந்த பூமியின் அடிப்பகுதியில் நீர் ஊற்று தேங்கிக் கிடக்கின்றது. இது
Page 22 போன்றே உயர் மனிதனின் உள்ளத்திலும் ஒளி வீசும் மாணிக்கத்துக்குச் சமமான கருத்துக்கள் உறங்கிக் கிடக் கின்றன. மாணிக்கம் தோணிடும் சுரங்கத்தினுள்ளே கருவிகளைக் கையாணி டு கவர்ச்சியான கற்களைத் தோண்டி எடுக்கின்றோம். ஆயினும் உறங்கிக் கிடக்கின்ற உள்ளத்தில் உணர்ச்சி அலைகளை தட்டி எழுப்ப வேணர்டு மானால். இசை கேட்பதனால், பாட்டை ரசிப்பதனால் (ւՔւգսյւն, மனித உள்ளம் ஒரு சுரங்கம். அதன் அந்தரங்கமான வழிசெவி முறையான சங்கீதம், மனதில் புத்துக்கத்தைக் கொடுக்கும். இங்கிதமான இசையின் மூலம் இதயத்தில் நல்ல மாறுதல்கள் ஏற்படும். உள்ளத்தில் உள்வாங்கப்பட்டிருக்கும் நல்லதும், தீயதுமான உணர்வுகள் செவியினர் வழியே சென்று பாடலாக வெளிவருகின்றது. மனம் செவிப்புலனுக்குப் பணிந்து செயற்படு கின்றது. எனவே, ‘இசையைக் கேட்க, ரசிக்க இஸ்லாம் நமக்கு எந்த அளவு முதன்மை தந்துள்ளது?’, ‘மார்க்க அறிஞர்களின் மனமொத்த கருத்துக்கள் எப்படி?” என்பதை ஆராய்வோம். இசை பற்றி இஸ்லாமிய அறிஞர்களின் தீர்ப்பு பாடல் ஒன்றைக் கேட்கும் போது ரசனை ஏற்படு கின்றது. அதன் எதிரொலியாக மனம் சந்தோஷத்தில் மூழ்கிப் போகின்றது. அந்த உணர்ச்சியினால் முழு உடம்பும் சந்தோஷத்தில் மூழ்கிவிடுகிறது. அடுத்த கட்டம் தலையை அசைக்க வேணர்டுமா?கைதட்ட வேண்டுமா? அத்தனையும் நடைபெறும். அதையும் தாண்டி ஆட்டத்துக்கே வந்து விடுகின்றோம். இது உணர்ச்சியினர் பூரணத் தன்மை! பாடலைக் கேட்டதின் பரபரப்பு இதுவாகும். இசையை கேட்கக் கடாது என்பவர்களின் கருத்து பெரியார் அல்ஹாஜ் அபூதையிப் தபரி என்பவர் சில அறிஞர்களின் கருத்தை முன்வைக்கின்றார். அவர்களில் இமாம் ஷாபி (ரஹ), இமாம் மாலிக் (ரஹற்), இமாம் அபூஹனீபா (ரஹ்) சுப்யானுத் தவ்ரி ஆகியோர் எடுத்த முடிவு இசையைக் கேட்கக் கூடாது என்பதாகும்.பாடலுக்கே இவர்கள் விருப்பமில்லாதவர்கள், பாடலானது பொய்யும், விளையாட்டும், வீணர் பொழுதுபோக்குமாகும். அதற்கு அடிமையாகுபவனி கல்வியினர் கரிசனையை இழந்து விடுவான். அவனது சாட்சி கூடநம்பிக்கையற்றது என சட்ட மேதை இமாம் ஷாபி (ரஹற்) கூறுகின்றார். (ஆதாரம் :- ஆதாபுல் கழா) திருமணத்திற்கு தகுதி பெறுகின்ற ஒரு பெண்ணின் குரலை நேர்முகமாகவோ, மறைவாகவோ கேட்பது கூடாது.
Page 23 இது ஷாபி மத்ஹபின் சட்ட விதியாகும். சட்ட மேதை இமாம் ஷாபி (ரஹற்) கூறும் போது. அடிமைப் பெண் ஒன்றை அமர்த்தி, அவளைப் பாட வைத்து மக்களிடம் காண்பிப்பவன் யூகிக்கும் தன்மை குறைந்தவன்; அவனது சாட்சி தள்ளுபடி செய்யப்பட வேணர்டும். முரசு கொட்டுவது கணிடிப்பாகத் தடை செய்யப்பட வேணர்டும். அது அருள்மறையின் சப்தத்தை செவி மடுக்காமல் இருக்க வந்த ஒன்றாகும். சதுரங்கம் ஆடுவதை நான் வெறுக்கின்றேனர். ஆணர்களின் எல்லா விளையாட்டுக்களும் எனக்குப் பிடிக் காது. ஏனெனில் அதில் ஆத்மீகம் கொஞ்சமும் இல்லை. “வள்ளல் நபி, வாத்தியங்களைச் சாடுவதை பார்க் கிலும் சதுரங்கத்தைச் சாடி நின்றார்கள்” என இமாம் ஷாபி (ரஹற்) கூறினார்கள். அடிமைப் பெண்ணை வாங்கிய பின்னர்தானி அறி கிண்றான். அவள் ஒரு பாடகி என்று. அடுத்த கணமே அவளை விடுவிப்பது கடமையாகிவிடுகின்றது. இமாம் மாலிக் (ரஹற்) கூறினார்கள், இக்கருத்துக்கு மதீனாவாசிகள் உடன்பட்டனர். ஆனால் இப்ராஹீம் இப்னு ஸஅத் என்பவர் உடன்படவில்லை. பாடலையும், பாடல் கேட்பதையும் பாவம் என்றார் கள் இமாம் அபூஹனீபா (ரஹற்) அவர்கள். இக்கருத்துக்கு கூபா வாசிகளான சுப்யானுத் தவ்ரி, ஹம்மாத் இப்றாஹீம், ஸஅபீ ஆகிய அறிஞர்களும் உடன்பட்டனர். அனைவரும் இசையை எதிர்ப்பவர்கள் ஆவார்கள். நபிகளார் (ஸல்) அவர்களின் நற்கருத்துக்களை ஏற்ற, அபூதாலிப்மக்கிஎனப்படும் தோழர், இசை கூடும் என ஸஹாபாக்களின் சங்கதிகளைச் சரித்திரமாகப் பட்டிய லிட்டுக் காட்டுகின்றார். அப்துல்லாஹற் இப்னு ஜஃபர் (ரலி), அப்துல்லாஹற் இப்னு ஸ்பைர் (ரலி), அல்முகிரா இப்னு ஷஅஃபா (ரலி), முஆவியா (ரலி) ஆகியோர் இசை கேட்டார்கள்; இண்புற்றார்கள். மாநபித் தோழர்கள் மார்க்க விடயங் களுடன் இசையையும் கேட்டிருக்கின்றனர். இது எங்கள் காலம் வரை இருந்தது என்கின்றார். அபூமர்வான் அல்காழி என்பவர் ஒரு இசைப் பிரியர். இவர் ஞானிகளுக்கு பாட்டு இசைத்துக் காட்ட அடிமைப் பெண்களை அமர்த்தியிருந்தார். அதா’ என்று ஒரு இசைப் பிரியர். இவரிடம் இரு அடிமைப் பெண்கள். பாடுவதற்கென்றே பணித்திருந்தார். இவரின் சகோதரர்கள் இப்பாடல்களைக் காது கொடுத்துக் கேட்டனர். ஜ"னையித் (ரஹற்) விர்ரியுஸ்ஸிக்தி, துன்னுரண் போன்றவர்கள் இசையை இரசித்தனர். இசையை எதிர்க்கின்றீர்களா? என அபுல் ஹஸனிப்னு ஸ்லாமிடம் கேட்கப்பட்ட போது “இல்லை” என்றதைவிட "இசையைக் கேட்க, அனுமதியும் அளித்துள்ளனர்” என்றார்.
Page 24 "அப்துல்லாஹற் இப்னு ஜப்பார்”, “அத்தையார்” போன்ற அறிஞர்கள் இசையைக் கேட்டனர். ஆயினும். இசையைக் கேட்கும் போது வீணர் வேடிக்கை, விளையாட்டு எதுவும் வேணர்டாம் என்றனர். பல புத்தகங்களைப் புரட்டினேன். அதில் அல் ஹாரிதுல் முஹாஸிபி என்பவர் பாடுவதையும், கேட்பதையும் கூடுமெனக் கூறியுள்ளார். இத்தனைக்கும் இவர் ஓர் சிறந்த மார்க்கப் பற்றுள்ளவரும், இறை நேசருமாவார். இப்னு முஜாஹித் என்பவர் இசையில்லாத விருந்துகளில் வீற்றிருக்கமாட்டார். இஸ்லாமியர்கள் எழுதிய இசை நூல்கள் சில அல்கின்தீ இஸ்ஹாக்குள் மெளஸிலி இப்னு பர்னாஸ், இப்னு அப்த ரப்Uஹரி அல்பாராU அல் மஜ்ரீத் அல் கர்மானி குன்யா கர்புர்றிஆ. றிலோவாக்கள். வடிம்சத்தீன் அல் அஜமியின் இசை நூலும் பிரபலமானது. இவற்றுள் கிதாபுல் அகானி, இசைக் களஞ்சியமாகும். குலாம் காதறு நாவலர் எழுதிய இசை நுண்கலை நூல். 'இஸ்லாமும் இன்னிசையும்' 7ே இன்னும் பல நூல்களும் உண்டு. மிம்ஷாதுத் தீனவரி பற்றிய ஒரு சம்பவம் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களைக் கனவில் கணிடேன். அவர்களிடம், “அல்லாஹற்வின் துாதரே! இசை கேட்பதை பாடல் பாடுவதை தடை செய்கின்றீர்களா?” எனக் கேட்டேன். அணர்ணல் நபி (ஸல்) அவர்கள் சொண் னார்கள். "அதில் தவறில்லை. ஆனால். அருள் மறையை ஓதி ஆரம்பிக்கட்டும். அம்மறையை ஒதி முடிக்கட்டும்.” என்றனர். ஜூரைஜ் என்ற பெரியார் பற்றி கூறப்படுகின்றது. இவர் ஓர் இசைப்பிரியர். இவரிடம் ஒரு கேள்வி " மறுமை நாளில் உங்கள் இசை ரசனை நற்கருமங்களில் சேருமா? அல்லது தீய செயலை சாருமா? அவரின் பதில். "இரண்டிலும் சாராது. ஏனெனில் அது இரண்டுமற்ற ஒரு செயல்பாடாகும்.” அருள் மறையில் அல்லாஹ தஆலா கூறுகின்றான். ‘உங்கள் வீணான சத்தியங்களைக் கொணர்டு அல்லாஹற் உங்களைக் குற்றம் பிடிப்பதில்லை (2.225/5.89) என்பதாக இசையை சரி காணுபவர்கள் இஸ்லாம் இசைபற்றித் தருகின்ற அனுமதியை மேற்கூறப்பட்ட விடயங்கள் மூலம் நிறுவுகின்றனர். ييان الدليل على إياحة السياع இஸ்லாம் இசையைத் தடைசெய்யவில்லையா? அந்த இசை எந்த இசை? இஸ்லாம் இசையைத் தடைசெய்துள்ளதா? எவ்வா றான இசையைத் தடைசெய்தது? பகுத்தறிவைப்
Page 25 பயன்படுத்தி இதற்கு முடிவு எடுக்கலாமா? வரலாற்றுச் சான்றுகளை வைத்து முடிவு எடுக்கலாமா? இவை பற்றி ஆய்வு செய்வோம். சப்தம், குரல், சங்கநாதம் பற்றிய ஆய்வு மார்க்க சட்டம் என்பது மாநபி (ஸல்) அவர்களின் சொல், செயல், அங்கீகாரம் என்பவற்றைக் கொணர்டது. இந்த அடிப்படையில் அமையாத எதனையும் ரத்துச் செய்யலாம். ஆனால். இசைப்பிரச்சினையில் ஈடுபாடு கொள்வது கடுமையான பாவமாகக் கவனம் செலுத்தப் படுவதில்லை. ஆதரிப்பவர்களின் ஆதாரங்களும், எதிர்ப் பவர்களின் ஆதாரமும் வலுவடைகின்ற போது இசையை ஆதரிக்க முடியும் என்று கூட முடிவு எடுக்கலாம். இஸ்லாமிய சட்டவிதியின் மூலமும், அதனைப் புரிந்து கொள்கின்ற விதத்திலும் இஸ்லாத்தில் இசை விலக் கப்படவில்லை. இதற்கு சட்டங்கள்கூட சாதகமாகவே இருக் கின்றன. இசை ஆய்வு என்பது பல்வேறு அம்சங்களின் பதிவாகும். அதனை தனிமையாகவும், மொத்தமாகவும் ஆய்ந்தே முடிவுக்கு வரவேண்டும். ஒலி. எந்த நாளும் ஒலி காதில ஒலித்துக் கொணர்டே இருக்கின்றது. அதில் மகிழ்ச்சி தரும் ஒலி மனதிற்கு இன்பமூட்டும். அது இரண்டு வகைப்படும். l. வரம்பிற்கு உட்பட்ட ஒலி 2. வரம்பிற்கு உட்படாத ஒலி இந்த ஒலி இரணர்டு கூறுகளைக் கொணர்டது. ஒன்று:- பொருள் உள்ளது. உதாரணம் கவிதை, கீதம். இரண்டு:- பொருள் அற்றது. உதாரணம் (மிருகங்கள், உயிரற்ற பொருட்களால் வெளிவரும் ஒலி. குயிலினி கூவலும், புறாவின் புதுமையான சப்தமும் உள்ளத்திற்கு உற்சாகம் தரும். ஒலி, இஸ்லாத்தில் தடுக்கப்படவில்லை. சட்டங்கள் கூட அதற்குச் சாதகம்தான். புலன்கள் ஐந்திலும் முக்கிய புலன் செவிப்புலன். அதன் செயல்பாடு இண்பத்தை பக்கத்துக்குக் கொணர்டு வருகின்றது. புலன்களில் ஆறாவது புலன் மனிதனுக்கு அருளாக வழங்கப்பட்டுள்ளது. புலனுக்கு உணர்வுகளும், இயல்புகளும் உணர்டு. அதன் வெளிப்பாடாக இன்பம், இனிமை என்பவற்றைக் கொள்ளலாம். இயற்கைக்கு எழில் உணர்டு. அதில் இன்பம், குளிர், சாந்தம், எழில், சிந்தை, நீரோட்டம், வர்ணங்கள் அனைத் தையும் பார்வை பட்டென்று படம் பிடிக்கிறது. உணர்ணும் போது உருசி உணரும் ஆற்றல். வறுவல் ஒரு ருசி வாந்தி போடுதல் இன்னுமொரு ருசி! நறுமணம் வேறு நாற்றம் வேறு உடலுக்கும் ஆற்றல் உணர்டு. மிருது இது; சொரசொரப்பு இது. உடனே உணரும்! செவிப்புலனின் செயல்பாடுகளால் அனுபவிக்கும் இன்ப மேம்பாட்டுக்கும் இன்னுமுள்ள புலனர்களால் தோன்றுகின்ற இன்பத்துக்கும் எத்தனை தொடர்புகள்? இப்போது இனிமையான குரலைக் கேட்க இஸ்லாத்தில் இடமுணர்டா? மார்க்க ரீதியாக நோக்குமிடத்தில் படைப்பு
Page 26 களுக்கு உணரும் திறன் உணர்டு என்பது அல்குர்ஆனின் வசனமாகும். “அவன் விரும்பியதை (தண்) படைப்பில் (பின்னும்) அதிகரிப்பானி” (351) இவ்வசனம் நமது ஆய்வின் கருவூலம் என்றால் மிகையாகாது. குரலின் இனிமையைக் கூற முற்படும் கூற்றாக விரிவுரை களில் வியந்துரைப்பது வள்ளல் நபியின் வாக்காகும். “இறைவனி இனிய குரலின்றி இறைத் தூதரை அனுப்பியதில்லை” என்றும், ஓர் எஜமானன் தனி அடிமைப் பெண்ணின் பாட்டைக் கேட்கும் ஆர்வத்தைவிட பன்மடங்கு ஆர்வத்துடன்-அல்லாஹர்த்தஅபூலா, அல்குர்ஆனை இனிய குரலில் ஒதுவதைக் கேட்கின்றான்.” குரலொலி முற்காலத்தின் தீர்க்க தரிசியில் ஒருவர் நபி தாவூத் (அலை) அவர்கள். நல்ல குரல் வளம் உடையவர். அவர் வேதத்தை ஒதும் போது மனிதர்கள், ஜினர்கள், விலங்குகள், பறவைகள் ஒன்று கூடியதாக வரலாறு சான்று பகர்கின்றது. அணர்ணல் நபியின் அன்புத் தோழர் அபூமூஸல் அஸ்அரி என்பவர். நல்ல குரல் வளம். அவர் அல்குர்ஆனை ஓதியபோது "தாவூத் நபி அவர்களின் பரம்பரையில் இன்னிசை எழுப்பும் குரலை வழங்கப்பட்டவர் அபூமூஸா”, என நாயகம் (ஸல்) நயம்பட உரைத்தார்கள். அல்குர்ஆனின் வசனம் அதற்கு அழுத்தம் கொடுப்பதாக அமைந்திருக்கின்றது. “நிச்சயமாக குரல்களிலெல்லாம் மிக்க வெறுக்கத் தக்கது கழுதையின் உரத்த குரலே” (அல்குர்ஆன் 31.09) இவ்வத்தியாயத்திலிருந்து இனிய குரல் விரும்பப்படுகின் றது; பாராட்டப்படுகின்றது என்பதை உணரலாம். இறை மறையை இனிய குரலில் ஒதினால் மட்டுமே கேட்க முடியும் என வாதிட்டால். குயிலின் குரல் இனிமை யாக இருந்தாலும் கேட்க முடியாது என்று ஆகிவிடும். குயில், குர்ஆனி ஒதவில்லை! அப்படி விளக்கங்களு மில்லை. குயிலின் குரலை ரசிக்க இஸ்லாம் தடை விதிக்க வில்லை. குயிலின் குரல் கேட்டு மனிதன், இன்பம் காணும் போது பொருள், சுவை கூடிய கவிதை ஓசையை ஏன் கேட்க முடியாது? குரலோசையின் அழகை ஆய்ந்த நாம் - அக்குரல் எழுப்புகின்ற இனிய நாதத்தையும் ஆராய வேண்டும். அழகுக்கும் அளவு இருக்கிறது. அதுபோல். நாதத்திற்கும் நடைமுறையிருக்கின்றது. நாதம் ஒன்றாயினும் அதனை அளவுடையது, அளவு கடந்தது என்று இரு வகையாக நோக்கலாம். நடைமுறையுள்ள நாதத்தை மூன்று வகையாக முன்னெடுக்கலாம். 1. குழல், யாழ், மத்தளம் போன்ற ஜடப் பொருட்களில் வெளிவரும் ஓசை 2. உயிரினங்களின் ஓசை (மனிதனுடையது அல்ல) 3. மனிதன் ஏற்படுத்தும் ஓசை இம்மூன்றும் தொடங்கிய இடத்தில் முடியும். இதில்
Page 27 ரசனையுணர்டு. ஆனால். இதற்கு வரையறையுண்டு. உயிருள்ள பொருட்களில்தான் இசையே உருவாகின்றது. இந்தக் குரலோசைகளை வைத்துத்தான் கலைஞர்களின் கைவரிசையில் வாத்தியமே வரவானது. அல்லாஹற்,உயிருள்ள பொருட்களைப் படைத்தான். உயர்ந்த குரலோசையை அமைத்தான். ஆனால். கலை ஞர்கள், உயிரற்ற வாத்தியக் கருவிகளைத் தயாரித்துக் கொணர்டனர். தொகையான இசைக்கருவிகள் தோன்றின. ஓசை, இனிமை தரும். அதை எப்படி கேட்க வேணர்டாம் என்பது? குயிலின் ஓசையை, பறவைகளின் ஓசையை, கேட்கக் கூடாது என்று சொல்ல இன்னும் இந்த வையத்தில் எவரும் வரவில்லை! ஒலித்து ஓய்ந்தது குயிலின் குரலோசை. இப்போது மனிதனின் ஒசைக்கு வருவோம். வாத்தியங்களின் ஒலி, ஓசைக்கும் இதற்கும் தெளிவொன்றைத் தேடுவோம். கம்பி வாத்தியங்களையும், குரல் வாத்தியங் களையும் நான் ஓரம் கட்டினேன். அதற்கு உருப்படியான சட்டம் கூட இருக்கின்றது. ஆனால். வாத்தியங்கள் செவிக்கு இனிமை தருகின்றது. இதனை எப்படி விலக்க முடியும்? அப்படியானால் மனிதனுக்கு இன்பம் தருகின்ற எல்லாவற்றையும் விலக்க வேணர்டும். மார்க்கம் மதுவைத் தடை செய்தது. கோப்பையுடன் குடியிருப்பாக இருந்த குடிகாரர்களது (கம்பி, குழல்வாத்தியங்கள்) தடுக்கப்பட்டன. மதுவை விலக்கி விடலாம். ஆனால், அந்தக் குடிகாரர்களுக்கு வாத்தியத்தைக் காணும் போது மதுவும் நினைவு வரும். இதற்காகத்தான் மதுவுடன் சேர்ந்த இசைக் கருவிகள், கம்பி வாத்தியங்கள், ஊது வாத்தியங்கள் அனைத்தும் ஒதுக்கப்பட்டன; ஓரங்கட்டப்பட்டன. குடி - கொஞ்சமேனும், அது - தடுக்கப்பட்டது. காரணம் நாள் செல்லச் செல்ல அதிக குடிப்பழக்கம் வந்துவிடும். குடியுடன் வாழ்பவனுக்கு வாத்தியத்தைக் கணிடதும் மீணடும் குடியுணர்வு உணர்டாகும் என்ப தாற்றாண் இத்தகைய வாத்தியங்கள் தடை செய்யப்பட்டன. குடிகாரர்களுக்கு வாத்தியத்தையும் பாடுவதையும், பாட்டுக் கேட்பதையும் தடுக்க வேண்டும். வேறு விடயங்களைக் கேட்பதில் இவர்களுக்கு இஸ்லாம் தடைக்கல் அல்ல! வாத்தியம் உணர்டு அதில் இனிமை இல்லை. அத்தகைய வாத்தியங்கள் தேவையே இல்லை! அப்படி அதில் இனிமையான இசை மீட்டப்படுமெனில் அதைக் கேட்கத் தடை ஏதுமில்லை! மது, விபசாரம், இவற்றிற்காக அழைக்கும் இசைக் கருவிகள் ஆகியவை இஸ்லாமியர்களுக்கு தடுக்கப்பட வேணர்டியவையே! ஏனைய கருவிகளுக்கு அனுமதியுணர்டு. இசையைக் கேட்கவும் முடியும். இது குறித்து அல்குர்ஆனி வசனத்தை நோக்குவோம். நபியே! அல்லாஹற்! தன் அடியார்களுக்காக அளித்திருக்கும் சிறப்புக்களையும் பரிசுத்தமான (மேலான) ஆகாரத்தையும் (ஆகாதவையென்று ) தடுப்பவர் யார்? (அல்குர்ஆன் 7:32) நல்ல கருத்து இனிமை, சாந்தம், அமைதி, ராகம் உள்ள பாடல்கள் மனிதனின் கேட்கும் புலனுக்கு நன்மையளிப்பின் அவற்றைக் கேட்பதில் தவறில்லை.
Page 28 இசை கேட்கலாம். ஆனால், கீழ்த்தரமான, கேலிக் கூத்துக்கள் நிறைந்த இசையைக் கேட்கக் கூடாது. அல்ஜீப்ரா கணித நூலில் அராபிய இசை பதிவேடு ஹிஜ்ரி மூன்றாம் நூற்றாண்டு 'அல்ஜீப்ரா நூல் ஹிஜ்ரிமூன்றாம் நூற்றாண்டில் வாழ்ந்த முகம்மது இப்னு மூலா அல் - குவாரிஸ்மி என்ற உலக கணித மேதையால் எழுதப்பட்டது. இந்நூலை பூரணப்படுத்த ஷாஜா இப்னு அஸ்லம் என்பவர் பாடுபட்டார். இக்கணித நூலில் இசை ஞானம் பற்றிய பெரிய குறிப்பே அடங்கியிருக்கின்றது. அரபு இசையை லத்தீன் மொழியில் - மொழிபெயர்த்து உலகுக்கு முதன் முதலில் இசை அறிமுகம் செய்தது அல்ஜீப்ரா நூல் என்றால் மிகையாகாது. அறிஞர் குவாரிஸ்மியின் 'ஹரிஸாப் அல் ஜபர் வல் முகாபலாஹற்’ எனும் கணித நூல் 16ம் நூற்றாண்டு வரை ( ஐரோப்பிய பல்கலைக்கழகங்களை ஒரு கலக்கு கலக்கியது. பூகோளப் படத்தை வரைந்த இவர் 'சூரத் அல் அர்ள்’ என்ற பெயரில் பூகோள நூலையும் வரைந்தார். எட்டாம் நூற்றாண்டில் கண்டுபிடிக்கப்பட்ட இஸ்லாமியர்களின் வாத்தியங்கள் ஒலி எழுப்பும் வாத்தியங்கள் மூலமாகவும். நரம்Uசைக் கருவிகள் மூலமாகவும் பெறப்பட்டது. இந்த வாத்தியங்களுள் முதல் வகை கஞ்சிரா ரகத்தைச் சேர்ந்த சிறு முரசங்கள் ஆகும். "தப்" என்பதும் இவ்வகையைச் சேர்ந்ததே! பக்தாத்தில் பயன்படுத்தப்பட்ட கருவிகளின் மூல அமைப்பு அரேபியாவிலும், குராஸானில் பயன்படுத் தப்பட்ட கருவிகளின் மூல அமைப்பு பாரசீகத்திலும் தொடர்புடையவையாக இருந்தன. அவ்வாத்தியக் கருவிகளின் உருவம் இப்படித்தான் இருந்தது. குறுகிய உடல், நீண்ட கழுத்து, ஒரே விதமான தோற்றம். ஆனால். தொனியில் வேறுபாடு இருந்தது. நான்கு நரம்புகள், அகலமான உடல், குறுகிய கழுத்து உடைய 'உத்' என்ற யாழ்களும் உபயோகிக்கப்பட்டுள்ளன. எட்டாம் நூற்றாண்டின் கடைசிப் பகுதியில் முன்னர் இருந்த இசைக் கருவிகள் எல்லாவற்றின் ஒலரி நயத்தையும் உள்ளடக்கிய கருவியை இசை ஞானி மன்சூர் ஸல்லல் ஏன்பவர் கண்டுபிடித்தார்.
Page 29 இஸ்லாத்தில் இசை கேட்கலாமா? முறைமையான மூன்றாவது ஆய்வு கவிதையும் காத்திரமான பாடலும் இசை ஆய்வில் மூன்றாம் கட்டம் அடுக்குமொழி யும், அற்புதமான கருத்துக்கள் நிறைந்த கவிதைகளும். கவிதைக்கு மனிதன் குரல் கொடுக்கின்றான். எம்மொழிக் கவிதையாயினும் அவற்றில் அம்மொழியின் கருத்துக்கள் தொக்கி நிற்கும். கருத்து நிறைந்த பேச்சுக்கள் கனிவு தரும். கணிடிக்க அவசியமில்லை. கருத்தை தாங்கும் இசையும் கணிடிக்கப்பட வேணி டியவை அலல. ஒவ்வொரு பகுதிகளும் தனித்தனியாகத் தடுக்கப்படுவதில்லை! அது ஒட்டு மொத்தமாகும் போது தடுக்கப்படப் போவதே யில்லை! கவிதை என்றால் கருத்திருக்கும்; இலக்கிய நயமி ருக்கும். சொற்களின் ஆதிக்கம் இப்படித் தொடருவது தனியாகத் தடுக்கப்படுவதில்லை. இவை ஒன்றுபட்ட கவி வடிவில் கவிதையாகும் போது, பாடலாக மாறும் போது, தடுக்கப்படுவதில்லை. இதனால் ஓசை நயத்துடன் பேசும் கவிதைகளைத் தடுக்கக் கூடாது. அந்த ஒசைக்கு கேள்வித் தடை இல்லை! ஓசை தரும் அப்பாடலில் இஸ்லாத்திற்கு விரோத மான கருத்து இருப்பின் அப்பாடல் உடனேயே தடுக்கப்பட வேண்டும். பேச்சிலும் கூட அப்படித்தான். மார்க்கத்திற்கு முரணான கருத்திருப்பின் அதற்குத்தடையே தகுதி! பேச்சு, கவிதை சுவைபடும். அல்லது சோர்வுறும். அதில் பொருள் பிழையென்றால் கட்டாயம் அது தடுக்கப்பட வேணர்டியிருக்கும். இ து விடயமாக இமாம் ஷாபி (ரஹர்) நல ல கருத்தொண்றை முன்வைக்கின்றார்கள். "கவிதை, பேச்சு போன்றதாகும். அதில் அழகாய் அமைந்தவை நல்லதாகும். தவறாய் உள்ளது தீயதாகும்” என்றனர். கருத்துகளில் நல்ல கருவூலம், நயன் பயக்கும் சொல் நடை கட்டுப்பாட்டில் பிறக்கும் ஓசை இப்பாடல் களுக்கு சுருதி கூட்டி இசை அமைக்கப்படும். இதனை ஏற்கலாமா? என எணர்ணுவதுணர்டு. குரல், கவிதைகளை ஏற்ற நாம் இதற்கு ஏன் குறுக்கே நிற்க வேண்டும்? அனுமதி கிடைத்த இரணர்டு விடயங்கள் கணி சிமிட்டும் போது கூட்டு விடயமே அனுமதி பெறும். சட்டமும் கூட அதற்கு சமிக்ஞை தரும். கூட்டாக இடம்பெறும் விடயத்தில் வேறு வேறாக புதிய கருத்துக்களைப் புகுத்தும் போது மொத்தமாக முழு விடயமுமேதடுக்கப்பட்டு விடும். பாடல் கட்டுப்பாட்டுக்கு உட்பட்டதாக இசை வடிவம் பெற்று கருத்துக்கள் கனதி சேர்த்து இனிய குரலில் இசை மீட்டப்படும் போது விலக்கப்பட நியாயமில்லை! இனிய கவிதைகள் எப்போதும் மதிக்கப்படும் என்பது உணர்மை! தனி விடயங்கள் ஒன்றுடன் ஒன்று கலந்த நிலை! அது ஏற்றுக்கொள்ள ஏற்புடையதாக இருந்தால் அவ் விடயம் அனைத்துக்குமே அனுமதியுணர்டு! இதனை விளக்க முற்பட்டால் இப்படிப்பார்க்கலாம்:- இனிமையான பாடல்கள் இனிமையானவைதான்! இனிமையை வேறாகவும், பாடலை வேறாகவும் கூறு போட முடியாது! இது போலவே இராகத்துடன் அமைந்த அர்த்தமுள்ள பாடல்கள் அனுமதி பெறும். இதற்கான இஸ்லாத்தின் பார்வை என்ன என்பதை நோக்குவோம்.
Page 30 நபிகள் நாயகம் (ஸல்) கூறினார்கள்: "நல்ல கவிதை களில் நல்ல ஞானம் இருக்கின்றது” ஒரு நாள் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மதீனாவுக்கு வருகை தந்தார்கள். அப்போது. அபூபக்கர் (ரலி) பிலால் (ரலி) ஆகியோர் நோய்வாய்ப்பட்டிருந்தனர். அப்போது. மதீனாவில் தொற்று நோய் பரவிக் கொணர்டி ருந்தது. ஆயிஷா நாயகி அவர்கள் தந்தையையும் மற்றவர்களையும் உடல் நலம் விசாரித்த போது அபூபக்கர் (ரலி) அவர்கள் பாட்டிலேயே பதில் சொன்னார்கள். இது போல் நபிகளார் (ஸல்) முனர்னிலையில் ஸஹாபித் தோழர்கள் கவிதையில் உரையாடி இருக்கினர் றனர். இதனையும் ஆயிஷா (ரலி) அவர்களே அறிவிக்கின் றார்கள். நல்ல பாடல்களுக்கு நபிகளார் (ஸல்) வாழ்த்தி னார்கள். வரவேற்புக் கொடுத்தார்கள். நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஹஸ்ஸாண் எனும் கவிஞருக்கு பள்ளிவாயலில் ஒரு மேடை அமைத்துக் கொடுத்தனர். அதில் கவிஞர் ஏறி அணினல் நபி (ஸல்) அவர்களின் புகழ்பாடுவார். அல்லது எதிரிகள் ஏற்படுத்தும் ஆட்சேபங்களுக்கு மறுப்புச் சொல்வார். "ஹஸ்ஸான் எண் சார்பாக மறுப்புக் கொடுத்துக் கொணர்டிருக்கும் வரை அல்லாஹற் அவருக்கு பரிசுத்த ஆவி கொணர்டு பக்க பலம் அளிக்கின்றான்” என்றனர். ஷரீது (ரலி) அறிவிக்கின் றார்கள். “ஒரு தடவை நான் நாயகம் (ஸல்) அவர்களுடன் பின்னால் அமர்ந்து சவாரி செய்தேன். நபிகளாருக்கு உமய்யா இப்னு அபீஸலத்து எனும் கவிஞனின் பாடல்களில் நூறு பாடல்களைப் பாடிக் காட்டினேன். நான் ஒரு பாடலைப் பாடிய உடனே “மேலும் பாடுக” என்பார்கள். இவ்வாறு நூறு பாடல்களைப் பாடிக் காட்டிய போது அக்கவிஞன் இஸ்லாத்தை மிக நெருங்கி இருந்தான் என்றனர்.” இசை ஆய்வில் நான்காவது கட்டம் பாடலாகும் - இப்பாடல் மனிதனை வெகுவாக எப்படிக் கவருகிறது, உறங்கிக் கிடக்கின்ற உள்ளத்தை எவ்வாறு உசுப்பிவிடுகின்றது என்பதை ஆய்வதாகும். காற்று ஆத்மாவினால் உள்மூச்சு எடுப்பதும், காற்று வெளியே விடப்படுவதுமான அபூர்வ தொடர்பை அல்லாஹற் மிக அறிந்தவன். வெளியே காற்றுணர்டு. அதில் கலந்து வரும் இசை நம்மை மகிழ வைக்கின்றது. சில துக்கத்தில் தோய வைக்கின்றன. இன்னும் சில சிரிக்க வைக்கின்றன. இன்னும் சில இசையால் ஆத்திரப்படுகின்றோம். இன்னும் சில இசையால் ஆவேசமும் கொள்கின்றோம். இசை மழை பொழியும் போது இசைக்கேற்ப நமது கைதட்டல். தலை ஆட்டுதல், கால் ஆட்டுதல், கற்பனை யில் மூழ்குதல் போன்றவை இடம்பெறுகின்றன. பாடலின் கரு, சொல்லடுக்கு, இலக்கிய அமைப்பு - இவைகளை அனுபவித்தே மனிதன் தனது உற்சாகத்தை வெளிப்படுத்துகின்றான் என்று கூறமுடியாது. அன்புக் குழந்தை தொட்டிலில் அழுகிறது. அதனைத் தாலாட்டுகின்றோம். அழும் நிலை மாறி அமைதி நிலவுகிறது. இசை - அக்குழந்தையை ஈர்த்து விட்டது. அதற்குக் கருவும் புரியாது. இலக்கியமும் ஏறாது. பாலைவனத்தில் பாரம் சுமக்கும் வாகனம் ஒட்டகம் . அது இடையனின் பாட்டைக் கேட்டு, பாரத்தின் சுமை விளங்காது பாதம் பதித்து பயணத்தைத் தொடர்கிறது.
Page 31 களைப்புறுகின்ற ஒட்டகம், பாலைவனத்தில் பாட்டொன்று கேட்டு பட்டென்று எழுகிறது. பாடல் வரும் பகுதியில் காலை உயர்த்திகடமைக்கு தயாராகின்றது. பாரம் துரக்க முடியாமல் பாலைவன வாழ்வுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் ஒட்டகங்களும் உண்டு. பாட்டைக் கேட்டு பாரம் விளங்காது பயணம் செய்யும் ஒட்டகங்களும் இருக்கவே செய்கின்றன. தாவூத் நபி முற்காலத் தூதுவர். அவரின் குரலோ தனி அழகிய தொனி அக்குரலைக் கேட்க, தலையின் மீது தங்கிநிற்கும் பறவைகள். இது வரலாற்றுச் சான்று! பறவைகள். கால்நடைகளுக்கு இசை கேட்பதில் அலாதி பிரியம் உள்ளது. பாட்டை ரசிக்காத மனிதனிடம் ஏதோ ஒரு குறையுணர்டு! இரசனையில்லாதவனிடம் அவனின் யதார்த்தக் குறைபாட்டைக் காணலாம். இவன் பறவைகளையும். மிருகங்களையும் விட ரசிப்பில் பின்தள்ளப்பட்டுள்ளான். இசை விடயத்தில் "இசை கேட்கலாம்” என எடுத்த எடுப்பில் தீர்ப்புச் சொல்ல முடியாது. பாடல், பாடகர்ை. அவனது எணர்ணக் கிடக்கை இவைகளையெல்லாம் கருத்தில் கொணர்டுதான இசை பற்றிய முடிவுக்கு வரவேண்டும். திடீரென ஒரு முடிவும் கூடாது. பாடலுக்கான பல்துறை அங்கீகாரம் அபூசுலைமான் என்பவர் கூறுகின்றார்: “வாத்தியங் களும், பாடல்களும் மனதில் புதிய திருப்பத்தைத் தரா. உணர்வுகளில் இறைவனது நிலைப்பாட்டுக்கு உயிரோட்டம் தருகின்றன.” இசை அமைக்கப்பட்ட பாடல்கள் தாளம், ராகம் மாறாது பாடப்பட்டாலும் நோக்கத்தின் புரிந்துணர்வை வைத்தே அவை - இனங்காணப்படுகின்றன. மனிதனுக்கு மகிழ்ச்சிதந்து ஆறத் தழுவுகின்றன. இசையும் மனிதனும் ஏழு சந்தர்ப்பங்களும் சந்தர்ப்பம் ஒன்று:- பாதை யாத்திரிகளின் பாடல்கள்! ஹஜ் பயணம் செய்பவர்கள் வழிப்பயணத்தில் தபல், ஷாஹினி போன்ற இசைக் கருவிகளை இசைக்கின்றனர். மார்க்கம் இதனை அனுமதித்து இருக்கின்றது. இப்படிப்பாடக் காரணம் அந்தப் பாடல்களில் கஃபா, மகாமு இப்றாஹீம், ஹதீம், ஸம்ஸம், பாலைவனப் பிரதேசம் போன்ற கருத்துக்கள் அக்கானங்களில் கருக்கட்டி இருந்தன. இப்பாடலின் மூலம் மக்கள் துரணிடப்பட் டார்கள். முக்கிய இடங்களைக் குறிக்கும் இப்பாடலும் முக்கிய இடத்தைப் பிடித்திருந்தது. இலக்கியநயம் பாட்டில் வரும்; மனித மனதை அது கவரும். அப்படியே வாத்தியங்களான தபலும், ஷாஹினும் மக்கள் மனதில் இடம்பிடித்தன. குடிகாரனின் பாடல், கம்பியிட்ட வாத்தியம், ஊது குழல் இல்லாதபோது, வாத்தியங்களுக்கு தடை தோண்டுவ தில்லை. எந்த வசதியுமில்லாத ஒருவனுக்கு ஹஜ்ஜைப் பற்றி ஆசைக்காட்டி தூண்டக் கூடாது. அதற்கு வாத்தி யங்கள் வாசிக்கவும் கூடாது. பாதைகள் பயங்கரமாக இருக்குமெனில் இசை அமைத்து ஆசையைத் தூண்டுவது ஆபத்தானதே!
Page 32 இசையை இஸ்லாம் எவ்வாறு விரும்புகிறது? அனுமதிக்கப்பட்ட கீதங்கள் (இரண்டாவது சந்தர்ப்பம்) இது யுத்த முனைப் பாடல்கள்! யுத்த வீரர்களை போராட்ட முனையில் ஊக்குவிக்கும் இசை முயற்சி! இப் பாடல்களில் சொல் நயம், பொருள் நயம், இசையமைப்பு எல்லாம் இருக்கும். ஆனால் . ஹஜ் பாடல்கள் போன்று இருக்காது. வேகமும், விறுவிறுப்பும் கலந்து இருக்கும். போராட்ட முனையில் தளராத தைரியத்தை வரவழைக்கும் வருணனையுணர்டு. இப்பாடல்களுக்கு வீர இசையும், துள்ளுகின்ற தாளமும், தட்டலும் மெருகூட்ட வேண்டும். பாடலைக் கேட்பவனுக்கு யுத்த முனையில் வீர மரணம் அடைய வேண்டுமென வேட்கை எழ வேண்டும். துனியாவின் ஆசை துச்சமாகத் தோன்ற வேணடும். “முதனப்பி” பாடுகிறார்:- *கூரிய வாளால் போரில் மடியாதவண் குவலயத்தில் இழிவுள்ள மரணத்தை எதிர்கொள்வாண்” இக்கவி வரி போல் 2Ꭷ -- ᎶᏂᏍᏯᏏ எணர்ணம் ஒடுக்கப்பட வேணடும். இராகத்தைப் பொறுத்த மட்டில் வீர ராகத்திற்கும், ஆவலைத் தூண்டும் ராகத்துக்குமிடையே வித்தியாசம் உணர்டு. வேறு வேறு உணர்வுகளையே இரணர்டும் வெளிப்படுத்தும். போராடும் வீரனுக்கு யுத்த முனையில் பாடவும், பாடலைக் கேட்கவும் அனுமதி இருக்கவே இருக்கின்றது. மூன்றாவது சந்தர்ப்பம் "ரஜஸ்” பாடல்கள்! இவ்விசை சூடேற்றும்! வீரர்கள் எதிரிகளின் மேல் வீரமாக மோதும் போது இப்பாடல் இசை மீட்டப்படும். இப்பாடலைப் பாடும் பாடகனுக்கும் கேட்கும் ரசிகனுக்கும் உறுதியான உள்ளத்துக்கு உரமிடும் அக தைரியம், அஞ்சா நெஞ்சம் கொள்ள பாடல் புகழ் துரக்கும். வீரமான குரலில் "ரஜஸ்” பாடல்கள் ஒலிக்கும் போது ஆத்ம சுகத்தைக் காண முடியும். யுத்த முனைகளில் இப்பாடல்கள் தேவை என்பதில் வேறு கருத்து இல்லை. முஸ்லிம்களுடன் போராடும் போதும், ஒப்பந்தம் செய்த மானுடருடன் போராடும் தருணத்திலும் மனிதம் முக்கியம்; “ரஜஸ்” பாடல் முக்கியமில்லை. இப்பாடலை இசைக்கும் பாரம்பரியம் அணினல் நபி (ஸல்) அவர்களின் அன்புத் தோழர்கள் வீர வேங்கை அலி (ரலி), கடுமையாகப் போராடும் காலித் (ரலி) மூலம் தோன்றியது. துக்கத்துக்கு துணை போகும் வாத்தியம்தான் "ஷாஹினி”! அதை யுத்தத்துக்குப் பயன்படுத்துவது தடை. காரணம் வீர வேங்கைகளை விவேகம் குன்ற வழிவகுக்கும். துக்கத்துக்கு துரது செல்லும். "ஷாஹினை”க் கேட்கின்ற வீரனும் அசந்து போய் ஆத்மபலத்தை ஆறப்போட்டு விடுவான். இல்லத்தில் விட்டு வந்த மனைவியை எணர்ணுவான். ஏங்குவான். உஷாரற்று ஒரம் ஒன்றில் உட்கார்ந்து விடுவான். இதனாற்றான். மனதை தளர்த்தும் "ஷாஹினி” யுத்தமுனையில் தடை செய்யப்பட்டது. தடை செய்யப்பட்ட யுத்தங்களில், தலை கொடுத்து நிற்பவர்களை தளரச் செய்ய இப்பாடல்களை இசைத்தால். இறை கடப்பாட்டிற்கு இறுக்கமான பணிசெய்த பலன் கிடைக்கும்.
Page 33 நான்காம் சந்தர்ப்பம் துக்கத்துக்கு துணை போகும், துயரமான புலம்பி அழும் கீதங்கள். இதைப் பாடினாலே போதும். கணிகளில் கணிணிர். சோகத்தில் நம்மை சோர வைப்பர். துக்கம் இரணர்டு வகைப்படும். ஒன்று புகழ் சார்ந்த துக்கம். மற்றது இகழ்ச்சிக்குரிய துக்கம். நடந்ததை எணர்ணிக் கவலைப்படும் கலக்கம். அருள்மறையில் அல்லாஹஅதஆலா கூறுகையில், “உங்களை விட்டுத் தவறிப் போனதை பற்றி நீங்கள் கவலை கொள்ளாதிருக்கவும்.” (அல்குர்ஆன் 37-23) மரணித்தவர்களை நினைத்து மனம் நொந்து ஒப்பாரி வைத்து அழுதல். இது கணிடிக்கப்பட வேண்டியது. நாம் விடும் கட்டளையல்ல. இதுவெல்லாம்நாயனின் கட்டளை! புகழுக்கான துக்கம் நீணர்ட காலமாக மார்க்கப்படி நடக்காத மானுடனர் தனி குற்றத்தை நினைத்து துக்கப்படுதல் அழுவது, சலிப்பது, வருந்துவது, வருத்தபட முயல்வது போன்றதாகும். முதல் மனிதர் ஆதம் (அலை), பாவம் ஏற்பட்டதால் அழுதார்கள். அவர்களின் அழுகை இதற்கு நல்லதொரு சான்றாகும். அழுது துக்கத்தை மனசு அனுபவிக்கும் போதெல்லாம் பாவத்தில் மீளாதிருக்க ஒரு யூகம் எழுகிறது. இவ்வாறே. தாவூத் நபியுடைய புலம்பலும் புகழப்பட வேண்டியதாக இருக்கின்றது. சிறிய குற்றத்திற்காக தாவூத் நபிபலநாள் அழுதார்கள். புகழுக்குரிய எல்லாச் செயலும் நல்லவைதான். பேச்சாளன் மேடையில் ஏறி, துக்கத்தைத் துாணர்டும் பாடல் களையும் கணிணிரை வரவழைக்கும் பாடல்களையும் பாடுவது ஆகாது என்றுஅர்த்தம் வகுக்க முடியாது. ஐந்தாவது சந்தர்ப்பம். சந்தோஷத்தில் ஏற்படும் போதும் நெஞ்சினிக்கும் நிகழ்ச்சிகளின் போதும், மங்களகரமான சூழலிலும் பாடல் இசைப்பதாகும். குதுாகலமாக பொழுதுகளைக் கழிக்க மார்க்கத்தில் முடியுமாக இருந்தால். இன்னிசை ஏன் அங்கீகாரம் பெறாது? பெருநாள், திருமணம், வெளியிலிருந்து வீடு திரும்பும் போதும், முதல் குழந்தை பிறந்த உடனும், ஆணி குழந்தைகளுக்கு கத்னா நிகழும் போதும், அல்குர்ஆனை ஓதி முடித்த சந்தர்ப்பத்திலும் குதூகலித்து, வாழ்த்தி பாடுவது அனுமதிக்கப்பட்டுள்ளது. இசை விருந்து, வாத்திய வாசிப்பு மகிழ்ச்சியின் வெளிப்பாடுதான். சில ராகங்களைப் பார்க்கிறோம். உச்சகட்டமான உணர்வுகளை உள்ளத்தில் தூணர்டுகிறது. நல்ல குதுாகலங்களுக்கு இஸ்லாத்தில் நல்ல வரவேற்பு உணர்டு. நபிகளார் (ஸல்) காலத்தில் நடைபெற்ற ஓர் சம்பவத்தை நடைமுறைக்கு நல்ல நமோனாவாகக் கொள்வோம். நபிகளார் (ஸல்) அவர்கள் மதீனாவுக்கு வந்த போது மதீனத்துப் பெணிகள் வீட்டுக் கூரைகளில் நின்றுகொணர்டு இப்படிப்பாடி வரவேற்றார்கள். பூரணச் சந்திரணி விதாமலையிலிருந்து நம்மீது உதயமாச்சு! புகழ்மிகு இறையிடம் கேட்பவர் கேட்டார்! நன்றியும் கடமையாக்க இந்த மகிழ்ச்சியை பாடல், இசை, அசைவு என்பவற்றால் வெளிக்கொணருவது நல்லதே!
Page 34 புஹாரி, முஸ்லிமீ இரு கிரநீதததலுமி எடுத்தாளப்படும் ஹதீஸ் ஆயிஷா நாயகி மூலம் சொல்லப் படுகின்றது. அது ஒரு ஆடுகளம்! அபிஸினியர்கள் சிலம்பாடுகின்றனர். அது பள்ளிவாயலில் நடந்தது. நான் பார்த்துக் கொணடிருந்தேனர். நானர் அந்நிகழ்வில களைப்புறும் வரை மாநபி (ஸல்) அவர்கள் - தங்கள் ஆடைகளால் என்னை மறைத்துக் கொணர்டு என்னுட னேயே இருந்தார்கள். இன்னுமொரு சம்பவம் இங்கே எடுத்தாளப் படுகின்றது. இதுகூட ஆயிஷா நாயகி அவர்களுக்கு நடைபெற்ற சம்பவந்தான். ஹஜ்ஜூடைய காலம். மினாவுடைய நாள். எண் வீட்டுக்கு எனது தந்தை அபூபக்கர் சித்திக் (ரலி) வரு கின்றார். அப்போது. எண் பக்கத்தில் இரணர்டு பெணர்கள் கொட்டு "தப்” தட்டிக் கொணர்டிருந்தனர். அவ்வேளை அணர்ணல் நபி (ஸல்) அவர்கள் தங்கள் ஆடையால் தங்களைப் போர்த்திக் கொணர்டிருந்தனர். எண் தந்தை கொட்டு "தப்” தட்டுபவர்களை விரட்டினார்கள். உடனே நாயகம் (ஸல்) அவர்கள் என் தந்தையைத் தடுத்து "அபூபக்கரே!” அவர்களை விட்டு விடுங்கள். இது பெருநாள் காலம் என்றனர். இதே போன்று இனினுமொரு சம்பவத்தை வரலாற்றுப் பதிவாகக் காணர்கின்றோம். அதனையும் ஆயிஷாநாயகியே சொல்கின்றார்கள். ஒரு நாள் பள்ளிவாயலில் அபீஸினியர்களின் விளையாட்டைப் பார்த்துக் கொணர்டிருந்தேன். நபிகளார் அவர்களும் நான் பார்ப்பதற்காக தங்கள் ஆடைகளால் என்னை மறைத்தவாறு நின்று கொணர்டிருந்தார்கள். அவ்வேளை திடீரென பள்ளிக்குள் நுழைந்த உமர் (ரலி) அவர்கள் ஆட்டக்காரர்களை கணிடிக்க முற்பட்டார்கள். உடனே நாயகம் (ஸல்) அவர்கள் ஆட்டக்காரர்களைப் பார்த்து “ஏ பனு அர்பிதா (ஹபஸி மக்களே!) சரிதான். குற்றமில்லை. என்றார்கள்.” ஆயிஷா நாயகி அறிவிக்கும் இனினுமொரு நாயகம் (ஸல்) அவர்களின் அருகில் எண் பொம்மை களை வைத்து விளையாடிக் கொணர்டிருந்தேன். அதில் - எனக்கு அனுமதியிருந்தது. என்னுடன் வந்து சேர்ந்து விளையாட மற்ற தோழிகளுக்கும் அனுமதி இருந்தது. அந்தத் தோழிகள் நபிகளார் முன்னிலையில் தங்களை மறைத்துக்கொள்வார்கள். ஒருதடவை நபிஅவர்கள் இவைகளெல்லாம் என்ன எனக் கேட்டார்கள். நாண் விளையாடுகின்ற பொம்மைகள் என்றேன். இதன் நடுவே இருப்பது என்ன என்றனர். குதிரை என்றேன். அதற்கு மேல் எண்ன இருக்கிறது என்றார்கள். சிறகுகள் என்றேன் - குதிரைக்கு சிறகுணர்டா? என்றனர்.
Page 35 சுலைமானி நபியின் குதிரைக்கு சிறகு இருந்தது என்றேன். அப்போது நபியவர்கள் தங்கள் கடைவாய்ப் பற்கள் தெரிகின்ற அளவு சிரித்தார்கள். இனினுமொரு சம்பவத்தை ஆயிஷா நாயகி அறிவிக்கின்றார்கள். " ஒரு தடவை "புஆத்” யுத்தத்தின் நினைவு தினத்தை யொட்டி ஒரு பாட்டை இரு பெண்மணிகள் எண்ணிடம் பாடிக் கொணர்டிருந்தனர். அப்போது. நாயகம் (ஸல்) அவர்கள் வீட்டிற்கு வந்தார்கள். படுக்கைக்குச் சென்று முகத்தை வேறு பக்கம் திருப்பிக் கொணர்டார்கள். இவ்வேளை எண் தந்தை அபூபக்கர் சித்தீக் (ரலி)யும் வந்துவிட்டனர். ஆனால். பாடிக் கொண்டிருந்த பெண்கள் மீது கோபப்பட்டார்கள். என்னைப் பார்த்து, "இறைத்துாதரின் முன்னிலையில் ஷைத்தானின் பாடலும் குரலோசையுமா?” என்றனர். குரலில் கணிடிப்பு இருந்தது. அப்போது நபிய வர்கள் “அவர்களைப் பாட விடுங்கள்” என்றார்கள். பின்னர் பெருமானார் (ஸல்) பாடலில் கவனம் பதிக்கவில்லை என தெரிந்ததும் அப்பெணிகளை அப்படியே அனுப்பிவிட்டேன். மேல் காணும் ஹதீஸில் பாடுவது, விளையாடுவது, தாஹா நபியவர்களால் தடுக்கப்படவில்லை. இஸ்லாமிய வரையறையுடன் நல்ல நாட்களில் பாடல், ஆடல் "தப்" தட்டுதல் தடை செய்யப்படவில்லை. விரசம் நிறைந்த பாடல்கள் வீணான இசையமைப்பு என்றும் தடையானது தான் உணர்மை! இஸ்லாம் விரும்பும் இசை பாடல் ரசனையில் ஆறாவது சந்தர்ப்பம்! கணவன் மனைவி காதல் புனிதமானது. மனைவி யைப் பிரிகின்ற கணவன் அவளைச் சந்திக்க அடே அப்பா எத்துணை பாடுபடுவான். காதலர்களுக்கு பாடல் என்றால் கேட்கவும் வேண்டுமா? அதிலும் காதல் பாடல் என்றால் தன்னையே மறந்து விடுவார்கள். ஒரு பாட்டை காதலியின் முன்னால் கேட்பதில் காதலனுக்கு மட்டற்ற விருப்பம்! அஜ்மீர் ஹாஜாஜியின் தர்பாரில் அற்புதமோங்கும் பாடல்கள் இந்தியத் திருநாட்டில் அஜ்மீரில் நல்லடக்கம் செய்யப்பட்டிருக்கும் அஜ்மீர் அரசர் ஹாஜா முயினுத்தீன் ஜிப்தி (ரஹற்) அவர்களின் தர்பாரில் தினம், தினம் கவாலி உர்துனாபோன்ற பாடல்கள் மேடையேற்றப்படுகின்றது. பல இசைக் குழுக்களாக வந்து அவர்களது சிறப்பைப் பாடுகின்றனர். தகராதட்டுதாளங்கள் மூலமாகவும் வாத்தியக் கருவிகள் வாசித்தும் பாடல்களை இசை மீட்டுகின்றார்கள். இங்கு ஆண்களைப் போன்று பெண்களும் பாடுகின்றார்கள். ஹாஜாஜி ஒரு இசை ரசனையாளராக இருந்தார்கள். குறிப்பு : இங்கு நடைபெறும் இசை நிகழ்வில்/ ஷரியத் பேணப்படுவது அவசியமாகும்.
Page 36 அதன் மூலம் அவள் மேல் அதிகமான பற்று; பாசம்! கொஞ்சம் பிரிந்திருந்தால் போதும், "எப்போது சந்திக்கலாம்?” என்ற ஏக்கம்! இணைந்து விட வேணர்டு மென இருவரின் உள்ளத்திலும் ஒரு வகையான உதிப்பு! ஏக்கம் ஏற்படும் போதெல்லாம் அதில் ஒரு கவலையும் காத்து நிற்கும். அந்தத் துன்பத்தை அனுப விப்பதில் ஒரு வகை இன்பம் இருக்கும். சேர்ந்து கொள்ள வேணர்டுமென மனம் அழுத்தம் கொடுக்கும். நம்பிக்கை தான் முக்கியம். அதனால் பிரிவின் கவலை கலைந்து இன்பம் இனியநலம்தரும் ஏங்கித் தவிக்கும் பெணர், மார்க்க அனுமதி பெற்ற வளாக இருப்பின் இஸ்லாத்தில் தடைகூட வராது. மனைவி யில் காதல் கொள்ளும் போது இண்பகரமான பாட்டில் இசைவாக்கம் ஏற்பட்டால் பன்மடங்கு காதல், மனைவியை நோக்கிப்பல்கிப் பெருகும். சந்திக்க மனசு சிந்திக்கும்! கணர்களில் ஏற்படுகின்ற கவர்ச்சி காதுகளில் தவழும் அவளின் பேச்சு! இன்பத்தைத் தர அதன் யதார்த்தத்தை பருகிகளிப்புறுகின்றான். ரம்மியமான ரசனைகள் உலகின் கணிணே உருவாகிக் கொணர்டே இருக்கின்றன. அதை அனுபவிக்க சாதனங்களும் நமக்குக் கிடைக்கின்றன. இங்கு நமக்கு அனுமதிதான்!அருள்மறை அல்குர்ஆன் கூறுகின்றது. இவ்வுலக வாழ்க்கை வீணர் விளையாட்டும் வேடிக் கையும் தவிர வேறொன்றுமில்லை” (29-44) உலகின் இன்பங்களை அனுபவிக்க சாதனங்கள் இல்லாமல் முடிவ தில்லை! சற்று சரிபார்த்துக் கொள்வோம். கணவனர், மனைவி இருவரிடையே தகராறு! இணக்கம் கிடையாது. பிணக்கம் தான். இவ்வேளை கணவன் காதல் பாடல்களை பாடி அவள் மனதை ஈர்ப்பது, இசை மீட்டுவது, உடலுறவில் ஒன்றுசேர அவள் இன்பத்தை தூணர்டிவிடுவது சிறப்பாகும். மனைவியே வேணர்டாம் என விட்டுவிட்டால் அவளுக்காக பாடவும் தேவையில்லை; இசை மீட்டவும் தேவையில்லை. பார்ப்பதற்கு அனுமதியில்லாத பெணி ணைப் பார்க்காதே! வீணாக அவளைப் பற்றி அர்த்தமற்ற கற்பனைகளை ஏந்தாதே! இசை கேட்கும் போது அவளை எணர்ணாதே! ஏக்கத்தையும் வளர்த்துக் கொள்ளாதே! இது சட்டத்துள் வந்தவை! வேணி டப்படாத செயலில தூணர்டப்படுவது தப்பாகும். எந்தக் காரியம் பணிணுவது தப்பாகுமோ அந்தக் காரியம் தப்பானதுதான்; தடுக்கப்பட்டதுதான். இந்தக் காரியங்களைச் செய்வதால் இச்சை உச்ச கட்டத்தை அடையும். இன்றைய இளைஞர்கள் காதல் வயப்பட்டிருக் கின்றார்கள். அறிவீனத்தால் தடுக்கப்பட்டதை செய்கின் றார்கள். காமம் அதிகரித்து கவலைப்பட்டு சிந்திக்கின் றார்கள். இவர்களின் சிந்தனையில் கொடிய நோய் குடி கொணர்டுள்ளது. இதனைத் தடுப்பது கடமை! இவர்களின் தப்புக்காக இசைக் கருவிகள் மீது பாரத்தையும். பழியையும் போட்டு விட முடியாது.
Page 37 ஏழாவது சந்தர்ப்பம் இறை காதல் கொணர்டவன் ஞானி ஒரு மெய்ஞ் ஞானி, தன் பாட்டில் இறைவனைக் காணுவதை முக்கிய மாகக் கொள்வான். அவன் வேறு எதையும் நாடுவது மில்லை. மற்றவர்களிடம் எதையும் காணத் துடிப்பது மில்லை! எல்லாவற்றையும் இறைவனிடமே கணிடு கொள்வான். சின்ன சப்தமே போதும், அதுவும் கூட ஆண்டவனிடம் இருந்து வருவதாக எண்ணம். இது என்றும் ஞானிகளின் போக்குத்தான்! மெய்ஞ்ஞானப் பாட்டா? பக்திப் பாட்டா? ஞானி ஒருவரின் காதில் கேட்டால் போதும் இறைவனை அடையவே எத்தனிப்பாண். இதன் எதிரொலி இறைக் காதல் ஸ்தோத்திரம்தான். பஞ்சில் தீப்பிழம்புபட்டது போல பாட்டைக் கேட்கும் போது காதல் தீயும் பரந்து கொள்கின்றது. அவர் புலனில் மெய்நிலை தோற்றமெடுக்கும். இந்த இன்பம் கணிடவன் யதார்த்தத்தை புரிவான். தேடுவதிலும், காணிபதிலும் ஞானிகளின் கவனம் மிகக் கெட்டியாகும். ஒரு ஞானிக்கு பக்திப்பாடல்களைக் கேட்டால் மெய்ஞ்ஞானம் பிறக்கிறது. மெய் நிலையின் தோற்றம். வரும் செயல்கள் அனைத்துக்கும் ஒரு வரமாகும். ஞானியினர் உள்ளக்கிடக்கை புடம் போட்ட பொணி போலாகும். இறை காதல் கொணர்ட தீ ஏனைய அழுக்கைப் போக்கி அகத்தை தூய்மை அடையச் செய்யும். பரிசுத்த மான எண்ணம் தான் காட்சிகளுக்கும், அந்தரங்களுக்கும் காலாக அமையும். ஞானிகளின் எதிர்பார்ப்பும் முக்தி நிலைதான் என்றால் நிகரில்லை. இசை மூலம் மெய்ஞ்ஞான நிலை தோன்றும். அதற்கான யதார்த்தம் இறை இரகசியம்தான். வழிமுறை யோடு வாசிக்கப்படும் இசைக்கும், ஆத்மாவுக்கும் இறுக்கமான தொடர்புணர்டு. இன்பம், துன்பம், ஏக்கம் என்பதெல்லாம் ஆத்மா வின் உணர்ச்சி நிலைகள்! ஆத்மாவில் இசை தாக்கத்தை ஏற்படுத்தும். இது அறிவுபூர்வமான செயல். இறைவனின் வெளிப்பாட்டில் அபூர்வமான தத்துவமும் உணர்டு. தத்துவம் என்றால் அதற்கு ஞானிகள்தான் வல்லவர்கள் . இசையை எல்லோரும் ரசிப்பதில்லை! சிலரின் மனசு மரக்கட்டை! ஞானிகளின் இசை ரசிப்பைக் கண்டு ஆச்சரியப்படும் அற்புதம்! இசையால் மெய்ஞ்ஞானம் பிறக்குமா? என்ற கேள்விக் கணை! இன்பம் சுகிக்கக் கூடியது. அதனை முதலில் அறிய வேண்டும். பின்னர் அதனை முற்று முழுசாக அனுபவிக்க வேணர்டும். அறிதல் மட்டும் போதாது. அதற்கு அறியப்படும் பொருள் வேண்டும். அந்த அறிவுக்கு அபார சக்தியும் வேண்டும். கொஞ்சமான சக்தியை வைத்துக் கொணர்டு, கூடிய சக்தியை குறி பார்க்கலாமா? மரத்துப் போன நாக்குடை யோன் உணவின் உருசியை அறிவானா? காற்று இசையை சுமந்து வருகின்றது. காதில்லாதவனுக்கு காது தாழ்த்த முடியுமா? ஆயத்தெரியாதவன் ஆராய்ச்சிபண்ணலாமா? செவியில் விழும் இசை இதயத்துக்கு இனிமை தருகின்றது.
Page 38 இனிய உணர்வில் மிதக்கச் செய்கின்றது. உணர்ச்சி அற்ற மானுடனுக்கு இசையில் இன்பம் கிட்டுவதில்லை. இறை ஞானம், இசை ஞானம் இறை அன்புக்கு இட்டுச் செல்லுமா என்பது கேள்வி இறைவனை உணர்ந் தவன் இறைவனை நேசிப்பாண். இறை ஞானம் அதிகரித்தால் இறை நேசம் அதிகரிக்கும். இது ஒரு இறைக்காதல்-ஹக்கின் காதலுக்கு கட்டியம் கட்டுவது நேசம்தான் - அரபிகள் சொன்னார்கள். நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஹிறா மலையில் தவம் இருக்கப் புறப்பட்ட போது, அவருக்கு இறைக் காதல் ஏற்பட்டு விட்டது என்றனர். அல்லாஹ அழகன்; அவன் அழகை விரும்பு கின்றான். அழகு ரசிக்கப்பட வேண்டும். அதனை அறிந்து அனுபவமாகின்ற போதுதான் அழகில் ரசனை ஏற்படு கின்றது. தன்னை நேசிப்பவர்களை இறைவன் நேசிக் கின்றான். இறைவன் நேசிக்கப்படுபவன். அழகான உருவம், அழகான வணிணம் நம் கணிணுக்கு கவர்ச்சி உணர்ந்து கொள்வதில் மகிழ்ச்சி! அழகு முழு மனித உணர்விலும் பிரதிபலிக்க வேண்டும். உணர்வில், உறுதியான மன நிலையில், நன்னடத்தையில், பணியில், பழக்க வழக்கங்களில் இருக்குமானால், உள்ளார்ந்த உணர்வில் அதனை காணமுடியும். ஒரு பொருளுடன் தான் அழகு என்ற சொல்லை அருத்தப்படுத்த (ւՔւգսյւb. வெளித் தோற்றத்தை வைத்து ஒரு மனிதனை நல்லவன் என்று கூறிவிட முடியாது. நல்ல குணம் அவனிடம் காணும் போது மட்டுமே அவன் நல்லவனா கின்றான். கணி காணாது விட்டாலும் உள்ளம் உணர் கின்றது. அவன் நல்லவனாக இருக்க முடியும் என்று அவனது குணம் அதற்கு வழிவகுக்கின்றது. அதனால் அவன் நல்லவன். வெளி அழகைப் பாராட்டும் நாம் உள் அழகையும் பாராட்ட வேணர்டும். உள் அழகின் உச்சத்தைக் கண்டு மெச்சுகின்ற போது பாசம் படரும். பல்கிப் பெருகும். கடைசியில் இதற்கு காதல் என்றுதான் கருத்து. மத்ஹபுகளின் ஸ்தாபகர்களான இமாம் ஷாபி (ரஹற்), இமாம் மாலிக் (ரஹற்), அபூஹனீபா (ரஹற்) போன்றோரில் மக்களுக்கு அலாதியான விருப்பம். அவர்களின் சேவை யைப் பாராட்ட மக்கள் தவறவில்லை. மாத்திரமல்ல அவர் களது சேவைக்காக மக்கள் வாரி வழங்கினார்கள். உயிரைக் கூட அவர்களின் சேவைக்காக தியாகஞ் செய்ய உடன்பட்டு விடுகின்றனர். அவர்களின் மேல் வைத்தி ருக்கும் உயர்ந்த காதல் இன்றைய காதலர்களையும் மிஞ்சி விடும். அவர்களது முகத்தைக் காணாவிட்டாலும், குணத்தைக் காணுகின்ற இக்கால மக்களின் விருப்பு, நூற்றாணர்டைக் கடந்தும் மக்களின் நேசிப்பு! நல்ல படிப்பினை அல்லாஹற்வின் மீது நாம் வைக்கும் நேசம் அளவு கடந்தது; ஆச்சரியமில்லை. நமது புலன்களால் அறியும் அழகும் பகுத்தறிவு காணும் உள்ளார்ந்த அழகும் அவனது வல்லமையின் சிறப்பு இறை வல்லமையின் முன்னே ஒரு தூசி இறை ஒளியின் ஒரு கதிர்.
Page 39 ஒன்பதாம் நூற்றாண்டில் அப்பாலிய கலிபாக்களின் உயர்தர்பாரில் இசை ஒன்பதாம் நூற்றாண்டில் அப்பாஸிய கலிபாக் களின் அரசவையிலே இஸ்லாமியர்களின் பண்டைய இசை அரங்கேறியது. அக்காலம் முதல் இசையில் முன்னேற்றம் ஏற்பட ஆரம்பித்தது. பதினான்காவது நூற்றாண்டு முதல், பத்தொன் பதாவது நூற்றாண்டு வரை அரபு, பாரசீக, உஸ்மானிய, துருக்கிஇசையின் வளர்ச்சிக்கு அத்திவாரமாக அமைந்தது. இதன்மூலம் இசைச் சொல்லாக்கம் உருப்பெற்றது. ஒன்பதாம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் அரேபிய இசை தோன்றி நூற்றைம்பது வருடங்கள் கடந்திருந்தது. நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் காலத்திற்கு முந்திய இசைகள் பலமூலங்களில் இருந்து பெறப்பட்டன. சந்தத்தோடும், சந்தமில்லாமலும் இருந்த இசை வடிவம் ஐந்து சப்தங்கள் அல்லது ஏழு சப்தங்கள் இருக்கும் 'உச்சஸ்தாயி பற்றிய நிர்ணயம், சுர வரிசை இல்லாமல் இஸ்லாமிய இசைக்கு எல்லையுண்டு இஸ்லாம் இசை கேட்பதை எத்தகைய சூழலில் தடுக் கின்றது என ஆய்வோம். 1. பாடல் இசைக்கும் வாத்தியகாரனைப் பொறுத்தது. 2. எந்த வாத்தியத்தைப்பாவிக்கலாம் என்பது. 3. பாடலின் கருத்தைப் பொறுத்தது. 4. பாடலின் ரசனையாளனைப் பொறுத்தது. 5. இறை படைப்பில் எந்த வர்க்கம் என்பதைப் பொறுத்தது. (அத்தகையதழ்நிலை ஐந்து வகைப்படும்.) தருக்கப்பட்ட முதல் சூழ்நிலை பாடல் இசைக்கும் வாத்தியக்காரனை பொறுத்தது. பார்க்கக் கூடாது என்று மார்க்கம் தடுக்கும் பெண்ணும் அவள் பேச்சைக் கேட்டாளே இச்சை தோன்றும் என்ற பெனினும் இங்கே தடுக்கப்படுகின்றார்கள். அவர்களது இசையைக் கேட்க மார்க்கத்தில் முற்றிலும் தடை! இசைக்காக மட்டுமல்ல இச்சைக்காக என்பது ஏற்புடையது. இச்சையை வெளிக்கொணரும் பெணர்கள் அல்குர்ஆனை ஓதினாலும் அதனைக் கேட்கக் கூடாது. சட்டென்று பதில் கொடுத்து இசைத் துறைக்கு முற்றுப் புள்ளி வைக்காமல் சந்தர்ப்பம் துழலை நோக்கி மிருக இச்சையை தூணர்டும் இசைக்கல்லவா முற்றுப்புள்ளி வைக்க வேண்டுமென கேள்வி எழலாம். இது விடயத்தில் இரு நியாயத் தரவுகள் உணர்டு. காமம் கொப்பளிக்கும் பெணர்ணானவள் கட்டுப்பாட்டில்
Page 40 இருக்க, அவளுடன் தனிமையில் இருப்பதும் தடைதான். அவளது புயல் முகத்தைப் பார்ப்பதும் தடை! இச்சையைத் துணிடும் பெணர்னோ இசைத்துறைப் பெணர்னோ - எவர்காயினினும் இஸ்லாம் சரியான தடையை விதித்துள்ளது. பெண்ணினி குரல் கேட்பதில் இரு வகை பிரகடனம் உணர்டு. பார்ப்பதை மட்டும் நோக்கினால் முடியாது என்று பிரச்சினைதீர்வாகும். அவளது பார்வையில் காமம் களை கட்டுமாயின் அவளது குரலைக் கேட்பதைவிட அவள் முகத்தைப் பார்க்க ஆசைப்படுகின்றான். அவளும் பார்க்க, அவனும் பார்ப்பாண். காமம் தலைக் கடிக்கும். அவளைத் தொட்டு விட எத்தனிப்பாண். கேட்பதால் உருவாகும் காமத்தைவிட பார்வையால் ஏற்படும் காமம் கொடியதென கட்டியம் கூறும். பெணிகளின் குரலைப் பொறுத்தளவில் அதனை வெளியாக்கவும் இடமுணர்டு. ஸஹாபாக்களின் காலத்தில் பெண்கள், ஆண்க ளுடன் பேசியிருக்கின்றனர். ஒருவருக்கொருவர் ஆலோ சனைகளையும் முன்வைத்தார்கள். காமம் என்பது ஆணிகளைவிட பெணர்களிடம் அதிகமாகவே காணப்படும். குரலில்கூட காமம் தொனிக்கும். இதனாற்றாண் பெணர்களின் குரல் பிரச்சினை வலுவடைந்து இருக்கிறது. ஆணர்கள் மூடித்தான் இருக்க வேண்டுமென அறிவுரையைக் காணோம். பெணிகள் குரலை மறைக்க வேணர்டுமென கூறப்படவில்லை. காமத்தைத் துாணர்டும் குரலா எனப் பார்த்தே அனுமதியும் தடையும் வரும். காமக் குரல் தடுக்கப்பட்டதேதான்! தருக்கப்பட்ட இரண்டாவது சூழ்நிலை! எந்த வாத்தியத்தைப் பாவிக்கலாம் என்பதாகும். இசை நிகழ்வுகளில் இசை மீட்டுவோர் குடிகார மட்டிகளா? குதுர கலித்துக் கூத்தாடும் ரவுடிகளா எனப் பார்த்து அவர்களின் வாத்தியங்கள் குழல், கம்பி போட்டவை, "கூபா" முரசு வாத்தியங்கள் வாசிப்புக்கு தடுக்கப்பட்டவையாகும். அதைப் பயன்படுத்தக்கூடாது. சிறிய வாத்தியங்களான "தப்” கொட்டு தாளம், தகரா, ஷாவதின் வாத்தியங்கள் வாசிப்புக்கு அனுமதியுணர்டு; தடையில்லை. தருக்கப்பட்ட மூன்றாவது சூழ்நிலை பாடலின் கருத்தைப் பொறுத்தது. பாடலின் கருத்தில் அல்லாஹற்வையும், அவனது துரதரையும், ஸஹா பாக்களையும் கேலி செய்து அவமானப்படுத்தி இனிய ராகமெடுத்து பாடினாலும் மார்க்கத்தில் அதைக் கேட்க தடுக்கப்பட்டுள்ளது. பாடலையும் தடைசெய்ய வேணர்டும். பாடலைக் கேட்பவன் இயற்றிய கவிஞனின் குற்றத்தையே பெறுவான். ஒரு பெண்ணின் அழகை வார்த்தைகளால் வர்ணனை செய்வதுமார்க்கத்திற்கு முரணாகும். ஹஸ்ஸானி இப்னு தாபித் எனும் கவிஞர் அணிணல் நபி (ஸல்) அவர்களைப் பாராட்டியும் விசுவாசிக்காத வர்களை சாடியும் பாடினார். அப்போது. தாராளமாக தாஹா நபி முன் பாட அனுமதி பெற்றார். பெணிகளின் உடல் வருணனைகளைக் காதல் பாடல்களாக எழுதுவதும், இசை அமைப்பதும், பாடுவதும், காது தாழ்த்திக் கேட்பதும் தடுக்கப்பட்டுள்ளது.
Page 41 பெண்களின் அழகுக் கற்பனை தனக்கு விலக்கப் பட்ட பெணர்களை நினைக்கச் செய்கின்றது. தெரியாமல் இப்பாடல் செவிகளுக்குள் வரும் போது சிந்தனை ஒடத் தொடங்குகிறது. பெண்களின் கற்பனையில் மூழ்கிப் போகும் பிரியர்கள் இசை கேட்பதை விட்டும் விலகிக் கொள்வதே நல்லது. காமக் கணிணனுக்கு காதில் பாட்டு விழும்; அதில் கருத்தும் இருக்கும்; கருத்து இல்லாமலும் இருக்கும். ஆனாலும். அப்பாட்டிற்கு அவன் அடிமை பாட்டில் மீறப்படும் வார்த்தைகளை தனதாக்கி சொந்தக் கருத்துடன் அப்பாடலை சுழல விடுகின்றான். தருக்கப்பட்ட நான்காவது சூழ்நிலை (பாடலின் ரசனையாளனைப் பொறுத்தது) ரசனையாளன் காமப்பித்துப் பிடித்தவனா என்பதை நோக்க வேணர்டும். அக்காலத்தில் காமத்தில் கட்டுணர்டு முறுக்கேறிக் காணப்படுகின்றான். பெண்ணைப் பற்றிப் பாடும் போது நெற்றியின் நேர்த்தியான அழகையும், கன்னங்களின் கனிந்த தன்மையையும், கணி புருவங்களின் கறுப்பு நிறக் கீறல்களையும், இரு உடல்களும் ஒன்றிக்கும் இன்ப சுகம்களையும் வருணிக்கும் பாடல்கள் இளைஞர் களின் காம உணர்வைத் தூணர்டிவிடும். காம உணர்வுக் கற்பனைக்குள்ளே எணர்ணுகின்ற பெண்ணை வைத்து எண்னென்னமோ எணர்ணிக் கொள்வான். மனதில் எதை யெதையோ பணிணிக்கொள்வான். மகிழ்ச்சி வெள்ளத்தில் மனசு நிரம்பும் சந்தர்ப் பத்தை வைஷத்தான் சாதகமாகப் பயன்படுத்துவான். அவன் மனசை அப்படியே ஒரு ரவுணர்டப் பணிணுவான். அவ்வளவுதான். காமம் தலைக்கடித்து தீயாக எரிகின்றது. கெட்ட வழிகளில் ஒட்டிக் கொள்கின்றான். ஷைத்தானின் சகபாடிகளுக்கு சாதகமாகி விடுகின்றது. கோழைத்தனம் கூடவே குடிகொணர்டு விடுகின்றது. குறுக்கு வழிப்பாதைகளால் இறை வழியிலிருந்து பிரிந்து செல்கின்றான். அவனது மனக்குமுறல் அதிகரிக் கின்றது. நற்குணத்துக்கும் தீய குணத்துக்குமிடையே ஒரு நடைமுறைப் போராட்டமே தொடர்கின்றது. இத்தகைய ஷைத்தான்களை வேரோடு பிடிங்கிவிட வேண்டும். யார் அதனை எதிர்க்கின்றார்களோ அவர் களையும் எதிர்க்க வேண்டும். இசையும், பாடலும் இவ்வெதிர்ப்பு முனையில் நிதானமாக நிற்க வேணர்டும். இவ்விளைஞன் இசைக் குழுக்களிலிருந்து விலகி நிற்க வேணடும். கெட்ட எணர்ணங்களை உருவாக்கும் ஷைத்தானின் G)45/TL'LLö அடங்க வேண்டும். ஷைத்தானின் ஊதுகுழல்களுக்கு முற்றுப்புள்ளிவைக்க வேண்டும். தருக்கப்பட்ட ஐந்தாவது சூழ்நிலை (இசை ரசிகன் "அவாம்' (பாமரன்) ஆக இருத்தல்) ஒரு பாமரன் இசையை கேட்கமாட்டான். ஆயினும் இறை அணியில் தன்னை அர்ப்பணித்துள்ளான். ஆசையிலும் கட்டுணர்னாதவன். இவன் இசையை கேட்பது
Page 42 விலக்கப்பட்டுள்ளது. சிறு பாவமொன்றை செய்து வரவர அது பெரிய பாவமாகிவிடும். விலக்கப்படாத ஒரு காரியம். அதற்காக அதனை அதிகமாகவே செய்கின்றான். இங்கு ஒரு சிறிய பாவம் உருவாகின்றது. இது போல் விளையாட்டு, கேலிசுத்துக்கள் கூட தொடர் ஈடுபாட்டால் பாவமாகலாம். ஹபஸிகள் ஆடல் பாடலில் வலு கெட்டி! அணர்ணல் நபி (ஸல்) அவர்களும் அனுமதித்தார்கள். அதற்காக முழுக் கவனத்தையும் கொட்டி வேடிக்கையாகப் பார்த்துநிற்பது வேண்டப்படாத ஒன்று பாவமும் கூட. சதுரங்க விளையாட்டைப் பொழுதுபோக்குக்கு எடுத்துக் கொள்வது சரியானதே இல்லை. பாடல் தொகுப்பே வெளியீடு பத்தாம் நூற்றாண்டில் கலீதாப் பாடல்களின் செல்வாக்கு ஓங்கிக் காணப்பட்டது. இக்கால கட்டத்தில் பாடல்களைத் தொகுத்து பாஜில் இஸ்பஹாணி வெளியிட்ட பாடல் தொகுப்பே 'கிதாபுல் அகாணி’ என்பதாகும். சுதந்திர ஆய்வின் சூழ்நிலையை இந்நூல் நமக்குப் படம் பிடித்துக் காட்டுகின்றது. குறிப்பு : கலிதா பற்றிய விபரக் கட்டுரை இந்நூலின் கடைசியில் உண்டு. நல்ல காரியத்துக்காக பாடுபடும் மனசு அதற்கு ஒரு வித்தியாசமான மாற்றம் தேவை! இவர்களுக்கு விளையாட்டு வேணிடப்படுகின்றது. முகத்தில் வெளிவரும் கறுப்பு மச்சம் முகத்துக்கு அழகு தரும். முகம் முழுவதும் கறுப்பு புள்ளியானால். முகத்துக்கே அசிங்கம் (அளவுக்கு மிஞ்சினால் அமிர்த மும் நஞ்சு!) இசையில் இஸ்லாமியரின் ஆர்வம்! இசையில் இப்படியொரு பிரச்சினை! இஸ்லாத்தில் பாட்டுக்கு இடமுணர்டு! இசைக்கும் இடமிருக்கின்றது. சில நேரங்களில் தடையுணர்டு! இது விடயத்தில் விவாதமும் நடக்கின்றது. இதுவெல்லாம் எதற்கு? தவறு! விளக்கமாக யோசிப்போம். “தேனி சாப்பிடுவது முடியுமா?” என ஒரு முஸ்லிம் வினவினால். “முடியும்” என்பதுதான் பதில். ஆனால் அது ஒரு நோயாளிக்கு ஒத்து வராமலும் போகலாம். அவருக்குப் பருகதடைசெய்யவும் படலாம். கள்ளுக்கூட குடிப்பதற்கு ஹராம்தான்! குடிப்பதற்கு ஒன்றுமேயில்லை என்று தாகத்தால் தடுமாறுகின்ற போது அதுகூட முடியும். கள்ளுக் கலந்த ஒரு சாப்பாடுக் கவளம் இக்கட்டின் போது எடுக்கலாம். ஜூம்ஆ தொழுகை நேரத்தில் வியாபாரம் தடுக்கப்பட்டுள்ளது. ஒரு வேளை தடுக்கப்பட்டதை வைத்து வியாபாரம் செய்வதை முற்றாகத் தடுக்க முடியுமா? இது போல் ஒருவருக்கு தேனி குடிக்க முடியாமல் போனதால் - எல்லோருக்கும் அது தடை என்பதல்ல.
Page 43 எந்த விடயமாயினும் ஒன்று கட்டாய விதி மற்றது அதற்கான தடை! இசையை இஸ்லாம் ஒரு சந்தர்ப்பத்தில் சரி காணுகிறது. இன்னுமொரு துழலில் தடைசெய்கின்றது. சிலருக்கு இசை என்றால் போதும். காட்டவே முடியாது. தடுத்துக் கொணர்டேயிருப்பார்கள். அதற்கு அல்குர்ஆன் வசனத்தையும், அணர்ணல் நபியின் சொல்லையும் ஆதார மாகக் காட்டுகின்றார்கள். மனிதர்களில் சிலர் இருக்கின்றனர். அறிவின்றி அல்லாஹற்வின் வழியிலிருந்து (மனிதர்களை) வழி கெடுப்ப தற்காக வீணான செய்திகளை விலைக்கு வாங்குபவர் களும் இருக்கின்றனர். (அல்லாஹற்வின் வசனங்களாகிய) அதனைப் பரிகாசமாகவும் எடுத்துக் கொள்கின்றனர். இத்தகையோர், அவர்களுக்கு இழிவு தரும் வேதனை உணர்டு (அல்குர்ஆன் 31-6) இப்னு மஸ்ஊத் (ரலி), ஹஸனுல் பஸ்ரி (ரலி) ஆகியோர் கதையாம் கதையாம் விளையாட்டு என்பதை பாட்டுப்பாடுவதாகவே சொல்கின்றனர். ஆயிஷாநாயகி(ரலி) சொன்னார்கள் நாயகம்(ஸல்) அவர்கள் கூறியதாக, “நிச்சயமாக அடிமை பாடகியையும் அவளுக்கு இசை பயிற்சி அளிப்பதும் அல்லாஹவினால் தடுக்கப்பட்டுள்ளது என்றனர். இசைத் துறையில் விருப்பமில்லாதவர்களின் விபரத்தைக் கேட்போம். நபிகளார் (ஸல்) சுட்டிக் காட்டும் பாடகி வேறு யாருமல்ல - மது அருந்தும் இடங்களில் பாடும் அடிமைப் பெணணேதான்! சில ஆணர்களிடம் ஒழுக்கம் ஒரம் கட்டப்பட்டு விட்டது. இவர்களுக்கு பெணர்கள் பாடினால் போதும். காமத்தைத் துரணர்டும். அதனால்தானி அப் பெண்களின் பாடலைக் கேட்கத்தடையானது. மது அருந்தி மாதுவை அடைவதை மார்க்கம் தடை செய்கிறது. குடிப்பவனுக்கு பெண்ணைக் கணர்டால் காமம் கொப்பளிக்கின்றது. இதனாற்றான். எஜமானுக்கு அடிமைப் பெணி பாட்டிசைத்து உற்சாகமூட்டலாமா? எனக் கேட்கலாம். அதற்கு இப்படியொரு விளக்கம் தரலாம்:- ஆயிஷா நாயகியினி வீட்டில இரு அடிமைப் பெணிகள் பாடினார்கள். இது முன்னர் தந்த செய்தி! இச்சை தூணிடப்படாத இடத்தில் பெணிகள் பாடுவது, கேட்பது ஆகுமாக்கப்பட்டதே! ஆயினும். சயம ஷரீஆவைக் கைவிட்டு காமதத்திர களியாட்டங்களில் ஈடுபடுவது தடை செய்யப்பட்டுள்ளது. கணிடிப்பாகத் தடையை அமுல்படுத்தவே வேண்டும். பாட்டைக் கேட்கலாம்; பாடலாம்; இசை மீட்டலாம். கூத்திலும் கும்மாளத்திலும் கொணர்டு போய்விட்டு விடக் சுடாது. அல்குர்ஆன் - இது ஆத்ம வேதம்! இது இறை சிந்தனை! இதனை இறைபாதையிலிருந்து திசைமாற்ற ஒதுவானேயானால், அதுகூட உடன் நிறுத்தப்பட வேண்டும். உதாரணத்திற்கு ஒரு விடயம்! அல்குர்ஆனின் 0ேஆவது அத்தியாயம் "அபஸ”! கணி தெரியாத உம்மு மக்துராம் என்ற ஸஹாபி வந்த போது முகம்மது நபி கடுகடுத்தார், புறக்கணித்தார் என நபிகளாரைக் கணிடித்து கூறப்பட்டுள்ளது.
Page 44 இந்த சம்பவம் ஒரு நயவஞ்சகனுக்கு ரொம்ப “டேஸ்ட்” ஆனது. அவன் இமாமைப் போல நடித்தான்; தொழுவித்தான்; இந்த அத்தியாயத்தை அடிக்கடி ஒதினான்; மக்களைத் திசை திரும்பும் திட்டம் வகுத்தான். கடைசியில். இந்த நயவஞ்சகனுக்கு மரணதண்டனை வழங்க கலீபா உமர் (ரலி) கடும்நடவடிக்கை எடுத்தார். பாட்டை எழுதுவது, பாடுவது, கேட்பது எல்லாம் மேல் சொன்ன நயவஞ்சகனின் நடத்தை போன்ற ஐடியா வாக இருந்தால். பாடல், கேட்டல், இசை எல்லாம் உடனடியாகத் தடைசெய்யப்பட வேணர்டும். அல்குர்ஆன் இப்படிக் கூறுகிறது: "நீங்கள் குரலை உயர்த்துகின்றீர்களே” என்ற வசனத்தில் இப்னு அப்பாஸ் (ரலி) “ஸாமிதுரன்” என்பதற்கு குரலை உயர்த்துகின்றீர்களே எனும் அர்த்தத்தைக் கொடுத்து இசையை கூடாது என்று வாதாடுகின்றார். அப்படியென்றால். முந்திய வசனத்தின் சொற் களான “வதள்ஹகூன” - “வலா தப் கூன” நீங்கள் சிரிக்கின்றீர்களே! அழவில்லையே! என்ற அருத்தத்தைப் பார்த்தால். சிரிப்பதும், அழாமல் இருப்பதும் மார்க் கத்திற்கு விரோதம் என்றல்லவா மதிப்பிட நேரிடும்? ,இஸ்லாத்திற்கு வந்தவர்களைக் கேலி செய்தல் ܖ சிரித்தல் என்ற அடிப்படையில் அர்த்தப்படுத்தினால் இழிவு படுத்துவதற்கென்றே எழுதப்பட்ட பாடலாக வலுப்பெறும். "மனிதனின் இரு தோளிலும் இரு ஷைத்தான்களை நிறுவி அவை - அவனது நெஞ்சை மிதிக்கின்ற வரை பாட்டை நிறுத்துவதில்லை” - இது நபி (ஸல்) மணிமொழி. இந்தக் கூற்றை அபூஉமாமா (ரலி) அறிவிக்கின்றார். இதனை மையமாக வைத்து சிலர் இசையைத் தடுக்கின்றார்கள். இதன் விளக்கமெல்லாம் முன்னரே வழங்கிவிட்டோம். காமம் கலந்த பாடல்கள் ஷைத்தானின் நாட்டங்களாகும். அத்தகைய பாடல்கள் தடை செய்யப் பட்டுள்ளன. அதைத்தான் அண்ணலாரின் இந்த ஹதீஸ்கும் அர்த்தம் தருகின்றது. ஹஜ் பயணத்தில் இறை நினைவு! பெருநாளில் மனமகிழ்வு, பிள்ளை கிடைத்ததும் இன்ப நிகழ்வு! இவற்றை ஷைத்தானின் எணர்ணமென்று சிலாகித் துப் பேச முடியுமா? ஒரு செயலின் விதி அது அனுமதி பெறுவது! அதற்கு விளக்கம் துலக்கம் பெறும்போது. அது விலக்கப் படவும் கூடும். ஆயிரம் சந்தர்ப்பங்களில் ஒன்று அப்படியும் ஆகிவிடலாம் தானே! ஆயிரம் தடவை விலக்குகள் ஏற்படுவதால் விதியை வென்றுவிட முடியுமா? உலகமே வீனர் விளையாட்டில்தான் கவனம் செலுத்துகின்றது. உழைப்பில் கவனம் செலுத்தும் உள்ளங்களுக்கு ஓய்வு வழங்கினால் மீண்டும் உழைக்கத் தூண்டப்படுகின்றன. வெள்ளிக்கிழமை ஓய்வு, படிக்கும் மாணவனுக்கு மற்ற நாட்களில் படிக்க வாய்ப்பளிக்கின்றது. தொடர்ந்து பிரார்த்திப்பவர்கள் சிறிதுநாள் ஓய்வு நல்லது. பிரார்த்தனை கூட சில நேரங்களில் தடுக்கப்படுகின்றது. உழைப்பாளியின் ஓய்வு இன்னுமொரு தடவை உழைக்க உதவுகிறது. விளையாட்டு சமூகப்பணிக்கு உதவும். எந்த நேரமும் உழைப்பது எல்லோராலும், ஈடுகொடுக்க முடியாது. நபிமார்களுக்கு தொடர் செயல்களின் செயல்பாட்டை தாங்க முடியும். நல்ல விளையாட்டுக்கள், நல்ல பயனைத் தரும்.
Page 45 மருந்து, மருந்து என்று பாவிக்கும் போது ஏதாவது தாக்கம் ஏற்படும். எந்த நேரமும் விளையாடுதல் கெடுத லாகும். நோக்கு நல்லதான விளையாட்டுக்கள் காத்திர LOT6060D6). இசைக் கலைஞர்களை உருவாக்கிய அரபுலகம்! அரபு நாடு இசைக்கலைஞர்களை மூன்று விதத்தில் உருவாக்கியது. ஆரம்பமாக இப்ராஹீமுல் மவ்ஸரிவி (கி.ப 745 806வரை) புகழ்பெற்றார். இரண்டாவதாக பிறப்பு அரேபிய நாடு, அல்லது அதனைத் தாயகமாக ஏற்றுக் கொண்டவர்கள், இவர்களுக்கு அப்பாஸிய கலீபாக்கள் பண உதவி செய்தனர். பிற நாட்டிலிருந்து கொண்டு வரப்பட்ட அடிமைப் பெண்கள் பாடலில் ஆர்வம் காட்டினார்கள். கலீபா மாமுன் அவர்கள் பக்தாதில் ஞான இல்லம் பைதுல் ஹரிக்மத் ஒன்றைக் கட்டினார். அங்கு கிரேக்க, சிரிய ஏனைய பிற மொழிகள் அரபியில் மொழி பெயர்க்கப்பட்டது. அங்கு அரிஸ் டோக்ஸ்னஸ், நரிகோமக் எப். டாலரிமி ஆகியோரின் இசைக் கோட்பாடுகளை எடுத்தோதும் இடமாக இருந்தது. இது (786-833) வரை. இது போன்று பாடுதல் - பாட்டைக் கேட்குதல் மனதுக்கு ஆறுதலை அளிக்கும். இது அனுமதிக்கப்பட் டுள்ளது. கூடிய விளையாட்டு, கும்மாளம், ஆடல், பாடலில் மனிதனி உயர்நிலையிலிருந்து இறங்கிவிடுகின்றான். பூரணமான மனிதத்தை நோக்கிய மாமனிதனுக்கு தொடர் செயல்பாடே ஓய்வைத் தருகின்றது. அமைதிக்காக அவன் எங்கும் அலையத் தேவையில்லை. அவன் ஆத்மா வினர் அமைதி, செயல்பாடும் செயல்திறனுமாகும். உணர்மையின் பக்கம் மனதை வழி நடாத்த யோசிக்கும் ஒருவனர் ஓய்வைப் பிரதானமாகப் பெற வேணர்டும். இதுவே உளவியலாளர்களின் உணர்மையாகும். الباب الثاني – في آثار السبع وآدابه المقام الأول في الفهم இசையின் விளைவுகளும் இனிய ஒழுக்க விதிகளும் இசையை விளங்குவதன் முதல் நிலை இசைக்கான அனுமதி, தடை, இதய மாற்றம் என்பவற்றைப் பார்த்தோம். இப்போது இசையைக் கேட்பதினர் எதிர்விளைவுகள் - உள, உடல் ரீதியான மாற்றங்கள்-பற்றியும் சட்டங்கள் பற்றியும் ஆராய்வோம். ஒன்றை கேட்பதின் முதலாவது பயன்பாடு- செவி மடுத்ததை விளங்கிக் கொள்ளல். அதன் பின்னர் கேட்டதை சரிபார்த்தல். இவை இன்பரசனைக்கு வழிவகுக்கும். இதனோடு கூடியவைதானி கேட்டல், ரசித்தல், இன்பம் காணல் என்பவையாகும். இவை கேட்டலின் ஆய்வுக் கட்டமாகும்.
Page 46 ரசனை மனிதனை உச்ச நிலைக்குக் கொண்டு செல்லும் இன்பம் காணும் முன் ரசிக்க வேண்டும். இப்போது ரசித்தலைப் பற்றிப் பார்ப்போம். ஒன்றைக் கேட்கும் போது அறிவு, உள நிலைக்கு ஏற்றவாறு விளக்கம் கிடைக்கும், இசையை கேட்கின்ற போது அதனி மெட்டும், நாதமும் மனதிற்கு இதம் தரும். இது எல்லோருக்கும் ஏற்படும். ஒட்டகம் முதல் மிருகங்கள் பறவைகளுக்கும் உணர்ச்சி உர்ைடு! இசையை ரசிக்க உயிர் முக்கியம். உயிருள்ள எல்லாப் பிராணிகளும் இசையை ரசிக்கின்றன. இது இசை ரசிப்பின் முதல்நிலை. இரண்டாவது நிலை! முதலில் இசையைக் கேட்குதல், அப்பால் விளங்கிக் கொள்ளல், அடுத்து கிரகித்து கற்பனைக் குதிரையைத் தட்டிக் கொடுத்தல், பின்னர் வடிவமைப்பைத் தோற்றுவித்து, ஒருத்தருடன், அல்லது ஒரு பொருளுடன் ஒத்துப் பார்க்குதல்! காதல் நிறைந்த காமுகர்கள் இசையை இப்படித் தான் ரசிக்கின்றனர். மன ஓட்டம் ஒரு புறம் காம ஓட்டம் மறுபுறம். இதனை வைத்தே மனதினில் மகிழ்ச்சிகொள்கின் றனர். இது ஒரு அடிமட்ட ரசனை! இதை எதற்கு விவாதிக்க வேணடும்? விலக்கப்பட்டதாயிற்றே! மற்ற ஆய்வுக்கு மாறுவோம். மூன்றாம் நிலை! பாடலை கேட்கின்ற போது உள்ளார்ந்த கருப்பொருளை யூகிக்க வேணர்டும். தனி இறை தொடர்புடன் வைத்து அனுபவத்தை நெறிப்படுத்துதல்! இந்நிலையில் மாற்றம் வரும் வராமலும் போகும். ஆத்மநிலையும் இப்படித்தான். சில வேளை பொருள் ஒன்றுபடும். இல்லையேல் வேறு படும். குரு - சிஷயர்களாக பக்தி கொணர்டவர்கள் பொருளை ஏற்பர்! அப்பொருளே அவர்களின் நேசிப்பு! உணர்மையான நேசிப்பே அவர்களின் உள்மனதின் வாசிப்பு! அதுவே இறைவனை சந்திக்க முற்படுவதாகும். இரகசி யங்கள் வெளியாகும்; அனுபவங்கள் அடுக்கும்; திரை நீங்கும்; பாதை தோன்றும்; இறை அறிவு விசாலமாகும். இப்போதுதான். மனநிலையில் மாற்றம் தோன்றும்! புத்தி புகட்டுதல் - மனமார ஏற்றுக் கொள்ளுதல் - தள்ளுபடி செய்தல் - நடந்தவற்றுக்காகத் துக்கப்படுதல் - எதிர்பார்த்த ஒன்றை எத்தனித்தல் - அவசரப்பட்டு ஆவல் கொள்ளுதல் - ஆசை, மன விரக்தி ஒதுங்குகின்ற தன்மை, மக்கள் தொடர்பு, வாக்குறுதியை செய்யும் அவசரம், பழக்க தோஷங்களை விடல் - பிரிவதற்குப் பயம் - இணைந்த பின் மகிழ்வு - விரும்புவதில் உகப்பு - மற்றதில் வெறுப்பு - கணிணிர் மல்குதல் - அழுதல் - ஒருமைப்பாடு. இப்படி யான மனோநிலை! இதில் பாட்டு கேட்கும் போது. பக்தி பிறக்கும்; சொன்னவற்றில் ஒன்று பொருந்தும். இப்போது இறைக்காதல் தீ போன்று பரவும், தீயின் உச்சம்தான் இறை மெய்ந்நிலை உச்சம். முன்னர் காணாத மனோநிலை உதயம். அதுவே தீ தாக்கிவிட்டதற்கான தடயம். பாடலின் ஆக்கத்திறன் முக்கியமல்ல. அவனது திறமையே அதை விளங்கிக் கொள்ளும் தகைமையாகும்.
Page 47 விளங்கிக் கொள்ளல் ஒப்பீடு செய்வது இதன் விபரமாகும். உதாரணமாக பாடலில் கணி, வாய், கண்னம், நெற்றி என்றெல்லாம் வரும். இப்போது இறை நேசன் வெளிக்கருத்தை விளங்கு கின்றானி என படிக்காதவர்கள் எண்ணுவதுணர்டு. பாடலுக்கு பொருள் எப்படியும் வரும். அது பற்றி சொல்லத் தேவையில்லை. இறை நேசர்களின் வாழ்க்கை இதற்குநல்ல எடுத்துக்காட்டாகும். நாயகம் (ஸல்)நவின்றார்கள். “நாளை அவன் வருவான் என்று நீர் கூறியதன் பொருள் உமக்குப் புரியுமா?” என்றேன் நான். இது போன்ற பாடல் ஒன்றை இறைநேசர் ஒருவர் செவியேற்றார். அப்பாடலின் கருப்பொருளில் கவனம் செலுத்தி அகமியம் அறிந்து மெய்ந்நிலை அடைந்தார். பாடலில் “அவன்” என்ற இடத்தில் "நாம்” என அமைத்து "நாம் நாளை வருவோம்” “நாம் நாளை வருவோம்” என்று பகர்ந்தார். ரசிப்பின் உச்சநிலை! தரையில் வீழ்ந்தார். சிறு மயக்கம்! பின்னர் தெளிந்தார். கருத்துக் குறைந்த பாடலுக்கு ஏன் மயக்க முற்றீர்? எனக் கேட்டனர். அவர் சொன்னார். இந்தப் பாட்டைக் கேட்டதும் இறை துாதரினர் இன்னுமொரு சிந்தனை என னை நினைவூட்டியது அதுதான். “வெள்ளிக்கிழமை நாட்களில் சுவனவாதிகள் இறைவனைச் சந்திக்க வருவார்கள்” என்பது! நான் என்னையே நம்ப முடியாமல் ஆகிவிட்டேன்; நினைவையே இழந்து விட்டேன் என்றார். இப்னு தர்ராஜ் கூறியதாக அர்ரக்கி கூறுகின்றார். "நானும் இப்னு - புவாதியும் - பஸ்றா நகருக்கும் உபுல்லா என்ற இடத்துக்குமிடையே டைக்ரிஸ் நதி ஓரமாக சென்று கொண்டிருந்தோம். முன்னால் ஒரு அழகிய மாளிகை! அந்தத் திணர்ணையிலே ஒரு அடிமைப் பெணி பாடுகிறாள். ஒருவர் அமர்ந்து கேட்டுக் கொணர்டிருக்கின்றார். அவள் இந்த அர்த்தமுடைய பாடலைப் பாடினாள். என் காதல் உனக்கு அர்ப்பணம் இறைவா! எந்நாளும் மாறுகிறாய் இதுவே உனக்கழகு! இப்பாடலைப் பாடிய போது அந்தத் திணர்ணையில் ஒரு அழகிய வாலிபன். அவன் கையில் ஒரு தோல்பை அவனுக்கு அவளது பாடல் மிகக் கவர்ந்தது. அப்போது “சகோதரியே! அல்லாஹ9க்காக அப்பாடலை இன்னு மொரு முறைபாடு!" என்றான். அடிமைப் பெணர் மீண்டும் பாடலைத் தொடர்ந்தாள். அப்போது அவன் “யா அல்லாஹற்! எண் மன நிலை மாறுகிறது!” என அழ ஆரம்பித்தான். சிறிது நேரத்தில் நிலத்தில் சாய்ந்தான். மரணித்தேவிட்டான். பயணம் செய்த நாங்கள் பயப்பட்டோம். அவ்வேளை வீட்டு எஜமான் பாடகியைப் பார்த்தான். அம்மா! அல்லாஹ9க்காக உன்னை விடுதலை செய்கின்றேன் என்றான்.
Page 48 எங்களுக்கு இது புதுமை தரும் நிகழ்வாக இருந்தது. பஸ்ரா நகர மக்கள் ஒன்று சேர்ந்தனர். மரணித்த இளைஞனை நல்லடக்கம் செய்தனர். எஜமானன் வந்தான். முன்னால் இருந்தவர்களைப் பார்த்துக் கூறினான். "இம் மாளிகை, இதில் உள்ள சொத்துக்கள், எண்னிடம் இருக்கும் அடிமைகள் அனைவரையும் விடுதலை செய்கின்றேனர். இதற்கு நீங்கள் அனைவரும் சாட்சியாக இருக்க வேணர்டும்” என்றான். அடுத்த கணம் அவனது அலங்கார ஆடை களைக் களைந்தான். சாதாரண உடை அணிந்து மேல் அங்கியைப் போட்ட வணர்ணம் எங்கேயோ ஒடி ஒளிந்தான். எங்களுக்கு ஒன்றுமே புரியவில்லை. "அர்ரக்கி”யே சொல்கின்றார். "ஆத்மாவை இறைவனுடன் இணைக்கின்றானி அம் மனிதனர். அவனின் சிந்தனையில் ஆழ்கடலில் மூழ்கு வதைப் போல் ஓர் எணர்ணம்! அடிக்கடி மாறுகின்றது. அவனது மனநிலை இந்நிலையில் இறைவனின் தொடர்பை தக்கவைக்க முடியுமா? எண்பது அவனது கேள்வி துக்கம் அவனைத் தாக்கியது. இவ்வேளையில் தானி அவன் கேட்ட பாடல் அவனது மனநிலைக்கு ஒன்றுபட்டிருந்தது. இச்சொற்கள் இறைவனிடமிருந்து வந்தவையோ என்று எண்ணினான். அந்தப் பாடல் என்ன? "அடிக் கடி மனநிலை மாறுவதால இறைத் தொடர்பை தொடரமுடியுமா?” என்று யோசித்த அம் மனிதனுக்கு இப் பாடல இப்படி உணர்த்தியது :- “இறைவன் எண்னைப் பார்த்து நாளொரு வணர்ணம் மாறுகின்றவனாக இருக்கிறாயே! இல்லையே உனக்கு நிறைய சிறப்புணர்டு என்பதாக சொல்வது போன்று இருந்தது. ஆத்மஞானம், இறை அறிவு குடி கொணர்ட வர்களுக்கு ஞானப்பாடல் கேட்டதும் இத்தகைய நிலை வருவதுணர்டு. இத்தகைய மெய்ந்நிலை பக்குவத்தைப் பெறாத வர்கள் (இறைவனைப் பார்த்து அடிக்கடி மாறுகின்றாய்) இசையை ஆராய்ந்த இஸ்லாமியர்கள் இசை இணிய ராகங்களைப் படைக்கும் அறிவியல் என்பதையும். தொன்மையான குரலிசையையும், வாத்திய இசையையும் ஆராய்ந்த கிரேக்கர்களின் இந்தத்துவத்தை முதலில் ஏற்றவர் இஸ்ஹாகுல் மவ்ஸிலின்பவராவார். ஒன்பதாம் நூற்றாண்டில் கலைஞர்கள். எழுத்தா ளர்கள். தத்துவஞானிகள் இசைபற்றி ஆராய்ந்தார்கள். இந்த இயக்கம் 13ம் நூற்றாண்டுவரை நீடித்தது. ஆரம்ப ஆய்வாளர் அல் கந்தரி என்பவர். இவர் 874ல் இறப்பெய்தினார். இந்த கணிதஅறிஞர் இக்வானுஸ் ஸ்ஃபா இயக்கத்தினர். இவருடன் இணைந்தவர்களும் பத்தாம் நூற்றாண்டின் இறுதியில் மருத்துவ தத்துவ ஞானி இப்னு லீனா (அவிலென்னா ஆகியோர் ஈரானிலும், ஈராக்கிலும் இந்த இயக்கத்தை வளர்த்தனர். அப்போது காலம்980-987 வரையாகும்)
Page 49 என்று வினவுவது போல் யூகித்தால். நம்பிக்கையை சீர்குலைத்து விடும். (குப்ர்!) ஷைகுமார்கள், முரீதுகள் இத்தகைய விபரீதங்களிலிருந்து தங்களைக் காத்துக் கொள்ள வேணர்டும். ஈமானி முக்கியம். இவர்கள் கேட்கும் பாடல்களை தங்கள் மனசு மட்டில் வைத்தே மதிப்பீடு செய்ய வேண்டும். இறைவனுடைய பணிபுகளுடன் ஒப்பீட்டுப் பார்க்கக் கூடாது. மேற்கண்ட பாடலை இதற்கு ஆதாரமாகக் கொள்ளலாம். இப்பாடலினி வாக்கியங்களை இறைவனிடம் முறையிடுவது போல் "நித்தமும் நீ மாறுகிறாய்” என உபயோகிப்பது குப்ரில் கொணர்டு போய் சேர்க்கும். மதம் மாறவும் கூடும். சில வேளைகளில் உணர்மை புரியாது மடத்தனமாகவும் நிகழும். சில சந்தர்ப்பங்களில் அறை குறை அறிவினால் இப்படி ஆகிப் போவதுமுண்டு! உளரீதியான மாற்றம் - யுகப் பொருட்களில் ஏற்படும் மாற்றம் எல்லாம் அல்லாஹற்வினால் நிகழ்வதை அவன் கணர்டு கொள்வான். உணர்மையும் அதுதானே! இஸ்லாமியப் பாடல்களில் இரசனையின் பிரதிபலிப்புகள் மனதினர் "ரிமோட்” அல்லாஹற்விடம் உணர்டு. அதனை விரிவுபடுத்துகின்றான்; சுருக்குகின்றான். உன்னைத்தானி ஒளிவாக்குவான். ஒரு பொழுது இப்படி இன்னுமொரு பொழுது இதயத்தை இருளாக்குவான். இதயத்தை இரும்பைப் போல் இறுக்கமாக்குவதும், பஞ்சைப் போல் மிருதுவாக்குவதும் இறைவனே. வுணங்கு வதற்காக வழிகாட்டுபவனி வல்லநாயன். சில நேரங்களில் பிற மதத்தவரை ஷைத்தானைப் பயன்படுத்தி 095 வழி தவறவும் வழிவகுக்கின்றான். எல்லாம் இறைவன் செயல். ஒரே கவிதை ரசிகர் பலர் மன ஓட்டத்திற்கேற்ப பாடலை விளங்கிக் கொள்கின்றனர்; ரசிக்கினர்றனர். இப்போது பாடலை யாத்த நோக்கம் பற்றி தெளிவுறுவோம். தன்னையே ஏற்றுக்கொள்ளாத மனோநிலை மனதில் தள்ளாட்டம். மன அருகிலும், தூரத்திலும் மாறி மாறி ஓடும் தன்மை. உலகக் காதலுக்காக, அதன் யதார்த்தத்துக்காகப் பாடியிருப்பானி. இறைவனுக்கு இத் தனிமைகளைப் பொருத்தி, ரசித்தால் - குப்ரை அரவணைப்பார். படைப்பில் மாற்றம் நிகழ்த்துவது படைத்தவனுக்கே உரியது. இறைவன் மாறுவதில்லை. “அல்லாஹற் அடியார் களுக்கு மாறுபட்டவன்; ஒப்புவமை அற்றவன்.” என உணர்ந்து கொள்வது கட்டாயக் கல்வியாகும். இறை வழியில் தங்களை ஈடுபடுத்தும் சீடர்கள்-உயர்ஞானத்தைத் தேடும் இறைநேசர்கள் - இவர்களுக்கு இறை உணர்வு, நல்ல அனுபவம் தோன்றும். அவர்களே அதை ரசிப் UITij4567. எல்லாம் மாறலாம்; இறைவன் மாறாதவன். இது ஓர் அதிசயம். வேறு ஏதாயினும் தான் மாறாமல் - பிறரை மாற்றுவதில்லை. மெய்நிலை என்பது இறைவனைக் காணும் அறிவு. குடித்தவனுக்கு சுய அறிவு தொலைவது போன்று தனது நிலையும் மாறும். அவ்வளவுதான்! ஆனந்தம் பொங்கி வழியும்; வாய், வந்ததையெல்லாம் உலறும்; இறைவனை ஏசவும் நினைப்பார்கள்; உள்ளத்தை சுருக்கி இறைவனது மெய்ந்நிலை - நிலைகொள்வதையும் தவறு என கூறுவார்கள். ஆனால கடைசியில உணர்மையான இறைநேசத்தைத் தேர்வு செய்பவனும் அவனிதான்.
Page 50 அல்லாஹற் அருள் செய்வதை எவராலும் தடுக்க முடியாது. அல்லாஹற் அருள் செய்யவில்லையென வேறு எவருக்கும் அருள்பாலிக்கும் அமைப்பும் கிடையாது. தவறு செய்பவர்கள், இறைவனை மறுப்பவர்கள் எவருக்கும், இறைவனி உதவிசெய்யாமல் இருப்பதில்லை. இறை தூதர்கள் நல்ல காரியம் பல பணிணியிருக் கின்றனர். இதற்காக அல்லாஹற் ஒளியாலும், உதவியாலும் வழிகாட்டவில்லை. அல்லாஹகுதஆலா அல்குர்ஆனில், "நம்முடைய தூதர்களாகிய நம் அடியார்களுக்கு முன்னரே நம்முடைய வாக்குநிச்சயமாக ஏற்பட்டு விட்டது.” (அல்குர்ஆன் 37 :171) என்கிறான். வல்லமை வாய்ந்த வல்லவனி வானிர்மறையில் மேலும் கூறும் போது, "நாம் விரும்பி இருந்தால் (இவர் களில்) ஒவ்வொரு மனிதனுக்கும். அவன் நேரான வழியில் செல்லக்கூடிய அறிவைக் கொடுத்திருப்போம். எனினும் ஜினர்களையும், மனிதர்(களில் உள்ள பாவி)கள் யாவரையும் கொணர்டு நிச்சயமாக நரகத்தை நிரப்புவேனர் என்ற எனினுடைய வாக்கு (இதற்கு முன்னரே) ஏற்பட்டு விட்டது.” (அல்குர்ஆன் 32:13) என்கிறான். மேலும் குர்ஆனில். "ஏற்கனவே நம்மால் எவர்களுக்கு நிச்சயமாக நன்மைகள் எழுதப்பட்டனவோ அவர்கள் (அந்நர கத்திலிருந்து வெகுதூரமாக இருப்பார்கள்." (அல்குர்ஆன் 2I-I01) பல்வேறு மாற்றங்கள் மனிதனுக்கு, இறைவனால் நடைபெறுகின்றன. ஒரே விதியாக இருந்திருக்கலாமே? என கேள்வி எழுவதுணர்டு. நான் வேதனையை அனுபவிக் கின்றேனே என நினைவை மீட்டக் கூடும். அனைத்து மனிதனுக்கும் புற நடத்தையிலும், நாவிலும் அதிகாரம் உண்டு. பக்கத்தில் பலரை அமர்த்தும் பாக்கியம், பலரை ஓரங்கட்டி ஒதுக்குதல், சந்தோஷத்தில் மகிழ்பவர்களையும், துக்கத்தில் துயருறுபவர்களையும் ஆதிக்கம் கொள்ளும் இறை நிகழ்வுகள், வேகமாக சிந்திக்கும் இரகசிய எணர்ணங்கள். அதைத் தடை செய்யும் எணர்ணங்கள் அதன் மீ அதிகாரம் திணிக்க ஞானவான்களால் மாத்திரமே முடியும். அத்தகைய ஞானவானர்கள், அறிஞர்கள் அசையாது கொள்கையில் ஸ்திரமுள்ளவர்களாக இருக்க வேண்டும். இறை வெளிச்சத்தில் வழிகாட்டப் பெறுபவர் பாதுகாப்புப் பெறுகின்றார். செவிப்புலனால் பாதை தவறுபவர்களுமுணர்டு. அறிவை மயக்குவது குடிபோதை. நினைவை மயக்குவது குடிபோதை. மனதில் தோன்றுகின்ற எணர்ணங்களை செவிப்புலனால் கிடைத்தவை கலைத்துவிடும். மனிதன் அர்த்தமில்லாத எணர்ணங்களுக்கு, அடிமையாகி விடுகின்றான்; தன் கணிணியமான நடைத் தையைக் கைகழுவிவிடுகின்றான். ஞானிகள், செவிப்புல விளைவுகளில் தப்பிக் கொள்பவர்களுமுணர்டு. அவர்களைப் போல் நாமும் தப்பி நடக்கலாம் என்று கூறுபவர்களுமுணர்டு. காமத்துப் பாடல்ளைவிட ஆபத்துப் பாடல்களையும் ஆய்ந்தோம். காமப்பாடல்களின் கவரல் - சறுக்கி விழும் சந்தர்ப்பம். இது இறைவனுக்கு வழிபடாத செயல். வேறு
Page 51 பாடல்களை வேறு விதமாக விளங்கிக் கொண்டால் இறை நம்பிக்கைக்கு இடையூறு தரும். ஒரு பாடலைக் கேட்கும் மானுடன் அவனது ரசனையின் போக்கு, பொருள் புலனாகுவதற்கு காரண மாவான். இரு ஞானிகள்! ஆனால் ரசிக்கும் பாடல் ஒன்று. இவருவருக்கும் அதில் இன்பம். ஆயினும் ஒருவர் இன்ப சுகத்தில் பலன் காணர்பார். மற்றவர் பலன் இழப்பார். இல்லையேல் இருவருமே இரசனையில் ஜெயம் கொள் வார்கள் என நினைத்தால். ஒருவர் விளங்கியது ஒன்று; மற்றவர் விளங்கியது வேறொன்று. பாடலின் பொருளை இருவரும் ரசித்தனர். மனோ பாவம் வேறாக இருப்பினும் - ஒன்றுக்கு ஒன்று முரண்பாடு காணிபதில்லை. “உத்பா குலாம்” என்பவர் பின்வரும் கருத்துடைய பாடலைக் கேட்டார்:- "குறையற்ற குணம் நயத்த கோனவன்! நாயனைக் காதலித்தோன் துண்பத்தில் துவள்கின்றான்;பாரேன்!” இப்பாடலைக் கேட்ட உத்பா அவர்கள்-பாடகனைப் பார்த்து “உணர்மையடா! உன் வார்த்தை உணர்மையடா!" என்றார். ஆனால். இப்பாடலைக் கேட்டுக் கொண்டிருந்த இன்னொருவர் எழுந்து “புலவன் சொன்னது பொய்யே” என்றார். "இருவர் சொல்வதும் சரியே!” என்று இன்னு மொரு அறிவாளி இடைமறித்துச் சொன்னார். காதல் இன்பத்தில் எழில் கொஞ்சுபவர்- துன்பப் படுவதாக ஏற்றுக் கொள்வாரா? இரண்டாவது இரசனை யாளனின் நிலை இதுவாகும். முதல் ரசனையாளன், பொருளை தனதாக்க முடியாமல், ஆசை வைத்ததை அடைய முடியாமல் தூரத்தே நிற்கும் காதலர் விரும்பும் பொருளில் விலக்கப்பட்டதால் வீணே விரக்தியுற்றார். அது 2-600i 60LD. ஒரு கதையுணர்டு. அது, அபுல்காசிம் இப்னு மர்வான் பற்றியது. இவர் அபூஸயீத் அல்கர்ராஜ் என்ற பெரியாரோடு நலன் பேணும் நண்பன். ஆனால். அல் கர்ராஜ் என்ற பெரியார் எந்தப் பாட்டையும் கேட்பதில்லை. எந்த இசை வாசிப்பு இடங்களுக்கும் செல்வதுமில்லை. ஆயினும் அவர் ஒரு தடவை ஒரு கூட்டத்தில் சமுகம் கொடுத்தார். அங்கு ஒருவர் பாடினார்; அப்பாடலின் கருத்து இப்படித்தான் இருந்தது:- واقف في الماء عسطشا ن ولکن لیسل یستقی “தணிணீரின் நடுவே நின்று தாகத்தால் தவிக் கின்றேனே. தணிணிரைப் பருக “பெமிஷன்” தடையாக ஆனதேனோ?” கூட்டத்தில் குதூகலக் கொந்தளிப்பு அனைவரும் எழுந்து நின்று விட்டனர். பாடல் ஆனந் தத்தை ஏற்படுத்தி விட்டது. ரசிப்பும் கலைந்தது; பரபரப்பும் ஓய்ந்தது. பாடகர் கேட்டார் "எல்லோரும் எண் பாட்டில் ஏன் பரபரப்பு அடைந்தீர்கள்?" ரசனையாளர்கள் இப்படிப் பதில் சொன்னார்கள்: "நாங்கள் மெய்ந்நிலை காணத் துடிப்பவர்கள். தகுதிகூட எம்மிடம் உண்டு. ஆனால். தடைதான் விடுவதாக இல்லை. நீபாடிய நோக்கம் என்ன? நினைத்தநற்கருத்து என்ன?” பாடகன் சொன்னாண் : "ஆத்மீகத் துறையில்
Page 52 உச்சம் மெய்ந்நிலை. இவனோ இடைநிலை அற்புதம் கூட புரியலாம். ஆனால் அவன் தூசிக்குக் கூட தகுதியில்லை.” எனப்பாடகண் பகர்ந்தான். அற்புதம் தான் மெய்ந்நிலை என்பதல்ல. அற்புதம் காட்டும் அனுபவம் வந்தாலும் அவனும் மெய்ந்நிலைக்கு தூரத்திலேயே இருக்கின்றான் (கராமத் என்பது மெய்ஞ் ஞானிகளின் அற்புதம்!) பாடகனின் கருத்து ஒன்று. ரசிகனின் கருத்து இன்னுமொன்று. யாவராயினும் தேடும் பொருளுக்கு தூரத்தில் இருக்கின்றனர். தேடும் பொருளும் தூரத் திலேயே இருக்கின்றது! பத்தாயிரம் மாணவர்களை மகிழ்வித்து புத்துயிரூட்டும் ரப்பான் இசை இந்திய நாட்டின் - மலையாளம் - 45ஈந்தபுரம் குல்லரியது தகாபதுலஸ் "ஸ்ன்ேனசீர்யா வளாகம் 10000 மாணவர்களை உள்ளடக்கியது. அதன் தலைவர் ஆக்கர் முஸ்லியார் இம்மதரலாவின் விழாவின் போது ரப்பான் தட்டி மலையாள இசையில் மாணவர்கள் பெரும் அசத்தல் செய்துள்ளனர். CD களாக வெளிவந்து இருக்கின்றது. கேரளத்தின் பேரறிஞர் அல்லாமா அபூபக்கர் முஸலியார் இவ்விசையைசரிகண்டுள்ளார் இறை ஞானம் பெற தடைப்பட்டவன் ஆவல் கொள்கின்றான். மெய்ந்நிலையை அடைந்தோன் உயர் நிலைக்கு எத்தனிக்கின்றான். இரு அர்த்தங்களையும் விளங்கிக் கொண்டதில் ஒரு மாற்றமுமில்லை. ஆனால் தேடுகின்றதிர்சியானநிலை வித்தியாசத்துக்கு வித்திடும். இஸ்லாத்தில் இசையும் இரசனையும்! இரண்டாம் அமைப்பு பாடலை ரசிக்க ஒரு முறையுணர்டு, ரசனையாளன் பாடலின் கருத்தை உள்ளத்தோடு உரசிப் பார்க்காமல் இறைதொடர்பை மையமாக வைத்து ரசிப்பதாகும். இந்த ரசிகன் நுணர்ணியமாக நோக்கினால் இவனது அறிவு மடத்தனமாகத் தோன்றும். அல்குர்ஆன் இப்படிக் கூறுகின்றது. "அவர்கள் அல்லாஹற்வின் பெருமையை அறிய வேண்டிய அளவிற்கு அறியவில்லை” (அல்குர்ஆன்:6-91) இந்த இறைவசனத்தின் படி இறைவனை மனிதனால் முற்று முழுதாக அறிந்து கொள்ள முடியாது. முழுமையாக அறியாதவன் பூரண அச்சமுடையவனாகான். இறை காதலிலும், ஐக்கியத்திலும் கூட குறைபாடு ஏற்படும். இறைக்காதல் லேசானது அல்ல. அது மிகத் தூய்மை யானது. இவனோ ஆசையையும், இச்சையையும் தவிர்க்க முடியாமல் தடுமாறுகின்றான். இறையருளை வழங்க மானுட ஆத்மாவினர் குறைகள் சரியாக்கப்படும். அங்கேயே அவ்வருள் வழங்கப் படுகின்றது. இத்தகைய மானுடனர் தனக்கு பாடல் பொருந்துமா எனப் பார்க்கின்றான். ரசனை குறைந்தாலும், யதார்த்தத்தைப் புரிகின்றான்.
Page 53 நாயகம் (ஸல்) அவர்கள் “நாயனே! உனது அருட் கொடைகளை எணர்ணிப் பார்த்து எந்த அளவு உன்னை நீ புகழ்கிறாயோ அந்த அளவு என்னால் புகழ சக்தியில்லை” என்றும் "நிச்சயமாக இறைவனிடம் தினம் ஒன்றிற்கு 70 தடவை மன்னிப்புக் கோருகின்றேன்” என்றும் கூறினார்கள். அணர்ணல் நபி (ஸல்) அவர்கள் மெதுமெதுவாக நிலைகளைத் தாணர்டிக் கொணர்டிருந்தார்கள். அது பார தூரமான நிலை. அதற்கான மெதுவான நகர்வு குறித்து அணர்ணல் நபி (ஸல்) மன்னிப்புக் கேட்டுக் கொணர்டனர். ஏனெனில் அது ஒரு எல்லை கடந்தநிலைமையாகும். மூன்றாவது அமைப்பு மெய்ந்நிலையின் ஆரம்ப நிலைகளைக் கணிடு திருப்திப்பட்டு விட்டு, பின்னால் ஏற்படுகின்ற நிலைகளில் முடியாதவை - அறிவியலில் அகப்படாதவை - இரகசியமாக இருப்பவை - இவைகளை “இவை ஏமாற்றம்; பொய்!” என்று ஒதுங்கிக் கொள்ளுதல்! இதுகூட அல்லாஹற்வால் கூறப் பட்டதாக நினைத்தால், விதியையும் இறுதி நாள் பற்றிய நம்பிக்கையையும் வலுவிழக்கச் செய்துவிடும். ஈற்றில் நிராகரிப்பில் கொண்டுபோய்நிறுத்திவிடும்! நான்காவது அமைப்பு தன்னைப் பற்றி கவலையில்லாத மனிதன்! அவன் யார் ஆத்மீகத்திலும், ரசனையிலும் முன்னேறியவன்! இறை சிந்தனை மட்டுமே அவனுக்கு. இறைவனுடன் வைத்துள்ள ஆத்மீக யதார்த்தத்திலும் கவனம் செலுத்த மாட்டான். கடலில் இறங்குகின்றான் ஒருவன். முத்துக் குளிப்பதே அவனது முழுநோக்கம். தன்னைச் சூழவுள் ளதும் தெரியாத நிலை! ஒரே நோக்கு - ஒரே புலன் - முத்து LD GSGSLD யூசுப் (அலை) அவர்கள் ஓர் உலக அழகன். அவர்களின் அழகில் தங்களை மறந்த பெணிகள் தங்கள் கரங்களைத் தாங்களே வெட்டிக் கொணர்டனர். ஞான வான்களின்நிலையும் இத்தகையதுதான்! குடிகாரனுக்கு நடந்தது நினைவிருப்பதில்லை. இந் நிலையை எய்திய விபரமும் தெரியாது. இது போன்றே மெய்ந்நிலைக்கு வருபவனுக்கு அந்நிலைக்கு எப்படி வந்தான் என்பது தெரிவதில்லை. மெய்யறிவு, முன்னால் தோன்றுவதைக் கூட கணக்கிடாமல் ஆக்கி விடுகின்றது. அதனால் பொருளை ஒதுக்குகின்றனர். இத்தகைய நிலை இறைவனுக்கும், படைப்புக்கு மிடையே தொடர்புடையதாகத் தோன்றுகிறது. தோன்றும்; மறையும். அதற்கு மேலாக அதிகரித்தால் மனிதனால் நின்றுபிடிக்க முடியாது. இறை ஒளியினால் ஒரு பரபரப்பு நிலை. பரபரப்பு அதிகரித்தால. ஆத்மாவுக்கே ஆபத்தாகும். அபுல் ஹரஜூஸைன் அந்நூரி (ரஹற்) அவர்களின் வாழ்க்கைச் சம்பவம் ஒன்று இதை நன்கு புலப்படுத்து கின்றது. “எந்த இடம் மனித மனம், இறங்குதற்கு இல்லாத பயத்துடன் நடுக்குமாமோ அவ்விடத்தில் உன் உறவுக் காதலாலே அப்போது இயைந்து இறங்குகிறேன்.”
Page 54 இப்பாடலைக் கேட்டு எழுந்தார். முகமெல்லாம் பரபரப்பு பாடினார்; உடலிலும் பரபரப்பு! ஒரு காட்டிற்கு ஓடினார். மூங்கில் மரக்காடு அவை தறிக்கப்பட்ட தடிகள்! வாளை நினைவுறுத்தும் மூங்கில். விடிய விடியப் பாடினார்; ஓடினார். பாவம் அவரின் காலிலும், தொடையிலும் காயம். கம்புகள் குத்து குத்தெனக் குத்திவிட்டன. குருதியும் கூடுதலாக ஓடியது. இந்நிகழ்வின் பின் அவர் மரணித்து விட்டார். (அல்லாஹற் அவருக்கு அருள்பாலிப்பானாக!) ஒரு பாடலைக் கேட்டு ரசித்த சித்திகின் மெய்ஞ் ஞானியின் உணர்மை நிலையாகும். இறை தொடர்பாளர் களின் நல்லநிலை இதுதான். வேறு பாடல்களுக்கு விருப்பம் தெரிவிக்கின்ற மன நிலை அடுத்த கட்டமாகத்தான் அமையும். பாடலை கேட்டு ரசிப்பது இதற்கும் அடுத்த கட்டமாகும். பாடலை ரசிப்பதில் வெளி உடம்புக்கு நல்ல சம்பந்தம் இருக்கிறது. இது மனநிலை ரசனையே தவிர குழு ரசனையாகக் கொள்ள முடியாது. தன்னைத் தாணர்டி நிற்கும் மனநிலையே இதன் புலப்பாடாகும். இசையில் இப்படியும் ஒரு ரசனை இரண்டாம் தலம்! மெய்ந்நிலை ஏற்படுவதற்கு இசையும் ஒரு காரணம். பாடலைக் கேட்டு, அறிந்து, ரசித்து, ஒப்பிட்டுப் பார்த்த பின்னர், மெய்ந்நிலை தோன்றுகின்றது. இது முதலாவது ரசனை. மெய்ந்நிலை ஏற்படுவது தொடர்பாக பல விவாதங்கள் உணர்டு. மெய்ந்நிலை மூலம் பக்தி நிலையும், ரசனை நிலையும் ஏற்படும். ரசனை நிலையும், ஆத்மாவில் செவிப்புலனின் தாக்கமும் ஆய்வுசெய்யப்படுகின்றது. ஞானிகளில் ஒருவர் "துன்னுரனுல் மிஸ்ரீ” என்பவர். அன்னார் மெய்ந்நிலை பற்றி இப்படிக் கூறுகின்றார்:- "அது ஒரு தத்துவத்தின் வருகை மனதில் பரபரப்பை உணர்டாக்கும். அப்பரபரப்பு யதார்த்தத்தை நோக்கி நகர்த்தும். உணர்மையான ஆத்மீகத் தேடலுடன் செவிமடுப்பவனி மெய்ந்நிலையை அடைகின்றான். சும்மா கேட்டு விட்டுப் போபவன் பயனடையான்.” இன்னும் ஒரு அறிஞரின் கருத்து இது. அபுல் ஹஅஸைன் அத்தர்ராஜ் என்ற பெரியார் தான் செவியேற்று, ரசித்து மெய் நிலையை அனுபவித்த புதுமைகளை விணர்டார்கள். “செவியேற்றல் சீராக ரசிப்பதன் மூலம் எதை எய்தப் பெறுகின்றாரோ அதுவே மெய் ந்நிலையாகும்.” இன்னும் கூறுகின்றார். "அழகே உருவான மைதானம், அதில் என்னை சுழலச் செய்கிறது. உள்ளார்ந்து துலங்கும் “ஹஜ்” யதார்த்தம் எண்னை உணரச் செய்கிறது. நான் தூய இடத்தில் துலங்குகின்றேன்.” என்றார்கள். இன்னும் ஒருவரின் கருத்து. "இசையைக் கேட்பதால் வெளிரங்கமாக வெளிப்படுவது பித்னா குழப் பந்தான். ஆனால். உள்ளர்த்தம் ஒரு எச்சரிக்கை. யதார்த்தம் தெரிந்தவனுக்கு இசை அனுமதிதான். இதை எண்ணாதவன் சீரழிந்த ஆசைகளில் சிக்கி தன்னையே தரங்குறைத்துக்கொள்கின்றான்.” சில அறிஞர்கள் சொன்னார்கள். "ஆத்மீக வாதிகளுக்கு இசை கேட்பதென்பது, ஆத்மாவுக்கான காலை உணவாகும். அதைக் கேட்பதும் ரசிப்பதும்
Page 55 எல்லா வேலைகளையும் விட நுணுக்கமானதாகும்.” இன்னுமொரு அறிஞர் கூறுகின்றார்: “உமர் இப்னு உஸ்மான் அல்மக்கி கூறுகையில், “மெய்ந்நிலைக்கான வியாக்கியானம் அதன் பூரணத்தன்மையைப் போதிக்காது. அதுதான் அல்லாஹற் - முஃமினீன், மூக்கினின் ஆகிய - நேசர்களுடன் கொணர்டுள்ள இரகசியமாகும்.” “மெய்யடைவு இறைவனை திரை விலக்கிப் பார்ப்ப தாகும். புலப்படாத ஒன்றை நோக்கிய பார்வை. புலப்படா ததுடன் உரை தெரியாத ஒன்றுடன் தொடர்பாடுதல்” என அபூஸயீத் பின் அரபி கூறினார். ஈராக்கில் ரப்பானுடன் கலீதா ஈராக் நாட்டில், பக்தாத் நகரத்தில் கலீததுல் புர்தர் வடிரிப் பாடப்படும். அங்கு குழுமியுள்ளவர்கள் தப் தகராத் தட்டிப்பாடுவார்கள். அதே போல் ஈராக்கில் றிபாஇய்யா தரிக்காவில் பாடல்கள் அனைத்தையும் தகராத் தட்டி மிக மகிழ்ச்சியாகப் பாடுவார்கள். றிாஇய்யா தரிக்காதிக்ர் மஜ்லிஸ்கெளில் இறை வயிப்புப் பாடல்கள் இடையிடையே ஒலிக்கும். அவ்வேளை களிலும் தகராத்தட்டியே பாடப்படும். விசேஷமாக றிபா இய்யா தரிக்கா திக்ர்கள் தகரா தட்டலுடன் சம்பந்தப் Aபட்டிருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. இறை நேசர்களின் முதன்மை நிலை மெய்ந்நிலை யாகும். கணிணுக்குத் தெரியாத ஒன்றில் கணிடிப்பான நம்பிக்கை அதனால் மெய்ந்நிலை பிறக்கும். மெய்ந் நிலையைப் பெறின், உள்ளம் ஒளிவு பெறும்; ஒளிக்கிற்றால் சந்தேகங்கள் அனைத்தும் காணாமல் போய்விடும். இறை பக்தியாகும் இஸ்லாமிய இசை ரசனை நிலை என்பது மெய்ந்நிலையில் இருந்து பெறப்படுகிறது. ரசனை நிலை தடுக்கப்பட்டால். வெறும் புலனிலும், ஆபாசத்திலும் கவனம் திரும்பும். “ஆபாச எண்ணம் துடைக்கப்படுகின்ற போது மனித உள்ளம் தூய்மையடையும். இறைவனுடைய தொடர்பாட லுக்கு முன் அமைப்பு தெரிந்ததும் அவ்வழி செல்வான். இந்நிலையில் உள்ளத்தாலும் கேட்பாண். காதினால் மட்டும் கேட்பதில்லை. இரகசியங்கள் அவனுக்கு வெளியாகும். தொலைவில் இருந்த ஒன்றை பக்கத்தில் காணர்பான். இது ஒரு மெய்ந்நிலை. காரணம் அவனது குறையை அவனே அறிந்தான்.” எனக் கூறினார்கள். இன்னும் மெய்ந்நிலை பற்றி அறிஞர்கள் என்ன கூறுகின்றார்கள் எனப்பார்ப்போம். மனிதனின் உள்ளத்தில் உயர்வான ஒன்று உணர்டு. அதைக் கூற வார்த்தைகள் வருவதில்லை. அதுவே மனித ஆத்மா. நாதங்களே நவிலும் மெய்ந்நிலையை சுகித்து, ரசனை நிலையை அடைந்ததும். அடடா! ஆத்மாவுக்கு எத்துணை மகிழ்ச்சி! வெளியே இருந்து பாடல்கள் சுமந்து வரும் பாவங்கள். ஆத்மாவின் செயல்கள் அதனுடன் சஞ்ச ரிக்கும். எந்த வேலையைச் செய்யவும் இயலாமல் போகும்.
Page 56 “ஒருவன் இசை கேட்டதும் செயல்பட ஆரம்பிக் கின்றான். மளுங்கிக் கிடந்த சிந்தனை ஓட்டம் மளமள வென சிந்தனையைத் தூணர்டுகிறது. சோம்பிச் சுருண்டு சும்மா கிடந்தவன் சுறுசுறுப்படைகின்றான். புத்துக்கம் பெறுகின்றான். அவனுக்கு புரியாமல் இருந்த ஒன்று புலப்படுகின்றது. எந்த வேலையிலும் புதுத்தெம்பு! புத்து ணர்ச்சி! அவன் நற்பயனடைகின்றான்” என ஒரு ஞானவான் கூறுகின்றார். இன்னும் ஒரு ஞானவான் இப்படிக் கூறுகின்றார்:- “மனித எணர்ணம் ஈடுபடும் துறையில் அதன் செயல் பாடும் உணர்டு. இது போல் இசையும் பாடலும் கேட்கும் போது மனிதன் ஆத்ம உலகிற்கு செல்கின்றான். உள்ளம் இதற்கு உறுதுணை வழங்குகிறது” வாத்தியங்களைக் கேட்கும் போதுதலைஆடுவதும், கைத்தாளம் போடுவதும் எதற்கு எனக் கேட்கப்பட்ட போது. அவர் தந்த பதில் "தூய்மையான காதலன் அதிகம் பேசியோ, அவளை அதிகம் பாராட்டியோ, முத்தமழை பொழிந்தோதன் பக்கம் ஈர்க்கத் தேவையில்லை. இவன் முகத்தில் தோன்றுகின்ற புனிசிரிப்பு, மன நோக்கின் தூய்மை, காதலியைக் காணர்பதில் உள்ள ஏக்கம். கணி புருவங்களின் நெருடல், மூடித் திறக்கும் கணி இமையின் தோற்றம், ஆகியவை மூலம் - காதலியின் மனசுடன் கதைத்து அவளைத் தனதாக்குகின்றான். ஆனால் காமம் கொப்பளிக்கும் காதலன் வெளிரங்க மான தனி உணர்ச்சியை அடைவதற்காக, ஏக்கங்களில் இன்பமுடிவு காண வார்த்தைகளை அள்ளிக் கொட்டுவான். இதயக் குமுறலுக்கு இனிய பாடல் இதமளிக்கும். பிரச்சினைகள் உள்ளத்தை ஊடறுக்கின்ற போது உள்ளத்தின் உதய வெளிச்சம்மங்கிப் போகும். இசை கேட்டு ஆத்ம சுகம் வரும் போது ஆத்மாவில் அலாதியான ஒளி வெளிச்சம் பளிச்சிடும் நேரம் மனம் ஆத்மா மெய்ந்நிலைப் பெருக்கத்தைத் தரும்.” எனக் கூறினார். இசை ரசனை, ரசித்தலின் பிரதிபலனாகக் கிடைக்கும் மெய்ஞ்ஞான நிலையில் இக்கருத்துக்கள் நிறைய உணர்டு. எல்லாவற்றையும் இங்கு குறிப்பிட அவசிய மில்லை. ஆயினும். இசையின் பிரதிபலனாக மெய்ந்நிலை தரும் கருத்துக்களைக் கவனிப்போம். இசை நல்லதாக இருந்து இரசனை கொள்வதில் மெய்ந்நிலை ஏற்படுகின்றது. இது உணர்மையும் யதார்த்த முமாகும். இத்தகைய மானுடனின் இசை அனுபவிப்பில் நல்ல இன்பம் கிடைக்கும். மெய்ந்நிலை இதை இரணர்டாக வகுக்கலாம். முதலாவது வகை புத்தம் புதிய வெளிப்பாடாகும். திடீர் திடீரென மாறக் கூடிய - அறிவை எடுத்துக் கொள்ளாத - மனநிலை. ஆயினும் அம்மனநிலையில் ஏக்கம், பயம், துக்கம், பரபரப்பு, மகிழ்ச்சிவிரக்தி, எல்லாம் இருக்கும். இசையை கேட்பதும் ரசிப்பதும் இம்மனநிலைகளை வளர்த்து ஸ்திரப்படுத்தும். இத்தகைய மாறுதல்கள் ஒரு
Page 57 செயல் வடிவம் பெறவில்லையானால் அது மகிழ்வேயல்ல. பக்குவநிலை, மெய்ந்நிலையை வைத்து விட்டு இசை கேட்பவனின் உள்ளத்தை அசைவுகளைக் கொணர்டு தரம் காணலாம். இசையை செவியேற்று ரசிக்கும் வேகத்தில் உணர்ச்சி இன்பம் நம்மில் உணரப்படும். வெளிப்புற உணர்வுகளுக்கும் அதே வேகம் எடுக்கும். உடலில் தோன்றும் இன்ப உணர்வு உறுப்புக்களின் கட்டுக் கோப்புக்கமைய கூடும், குறையும். ஆகையால். மெய்ந் நிலைக்கான இசை, வெளி அங்கத்திலும் அசைவுகளைத் தோற்றும். இசை இவர்களுடன் இணைந்தும் சிலருக்கு இரசனை உணர்வு இருக்காது. அது உறுப்புக்களின் ஒரு வகை அடக்குமுறை. சில வேளைகளில் இசை கேட்டும் இன்ப உணர்ச்சி இருக்காது. உறுப்புக்கள் பலனற்றும் இருக்கும். உறுப் புக்கள் உசும்பாது. இரண்டாவது வகை நல்ல மனசுக்கு நல்ல இசை. அது உளத் தூய்மைக்கு வழி உளத்தூய்மை புதிய வெளிப்பாடுகளின் தோற்றம்; ஒரு காரணி இசையால் கேட்பவனின் உள்ளத்தில் பரபரப்பு முன்னர் அறியாதவைகளும் தெரிய வரும். இது ஒரு சிறப்பு வலிமை. ஒட்டகம் இசை கேட்பதற்கு முன்னால் சுமக்க முடியாத சுமையை இசை கேட்ட பின்னர் சுமந்து செல்லும் சக்தி; வேகம். இது போல். புதுமை நிகழ்வும் இறை இரகசியங்களும் அவனது தேடலில் மனசு செயல்படுகின்றது. எல்லாவற்றிற்கும் மனசின் பரிசுத்தத் தன்மையே காரணமாகின்றது. புது விடயங்கள் புலனாகின்றன. பக்தாத் நாட்டில் ஒருவர். முகம்மத் இப்னு மஸ்ரூக் அவர் பெயர். அவரின் வாழ்வில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சி இதன் உணர்மையை விளக்கப் போதுமானது. அவர் "இளமையில் ஒருநாள் இப்படிப்பாடினேன்.” என்கின்றார். “தூர்ஸினாமலை மீது திராட்சைத் தோப்பு. துள்ளியமாயதைநான் காணும் போதும் வெறும்தணர்ணிர் குடிப்பவனை எணர்ணும் போதும் விசித்திரமாய் ஆச்சரியம் கொள்கின்றேன். ஒருவன் எண் பாட்டிற்கு எதிர்ப்பாடல் ஒன்றைப் பாடினான்.” رفي جسسهلسنم مساء ما تجرعه خلق فأبقى له في الجوف إمعاء “நரகினில் கிணறொன்று உணர்டு-நீர் நடுத்தொணிடையால் குடித்திட மிணர்டு உரத்திடும் தட்டினால் வயிற்றின் உள்குடல் கிழித்திடும்பாரீர்!” இப்பாடல் எண் சிந்தனையைக் கவர்ந்து இழுத்தது. நான் சென்ற பிழையான பாதையை, செய்த அநியா யங்களையும் எண்ணினேன்; வருந்தினேன்; திருந்தினேன்;
Page 58 பாவத்தை விட்டேன்; பக்தி கொணர்டேன்; படைத்தவனின் பணிசெய்ய முயற்சிக்கின்றேன்.” எனக் கூறுகின்றார். நரகின் கொடுர வேதனையை சொல், நயம் சுட்டு வதாக, இசை கொட்டுவதாக அமைந்த பாடல் கேட்ட மனிதனின் உள்ளத்தில் பெரியதொரு தாக்கத்தை உருவாக்கியிருப்பதை அதுவும் உணர்மை விளங்கும் வரை, அப்பாடல் எப்படி பணி செய்கிறது என்பதை நோக்குவோம். துய்மையான குரலை தூய்மையாக இரசிக்கும் போது ஆத்மநிலைக்கு உள்ளம் ஆட்கொள்கிறது. அமரர்களுக்கு தோற்றம் உணர்டு. இறைத் தூதர்களுடன் இனிமையான தொடர்புள்ளவர்கள். நபிகள் நாயகம் (ஸல்) வானவர் ஜிப்ரயீல் (அலை) அவர்களை இரு முறை சுயஉருவில் சந்தித்தனர். அந்த உருவத்தைக் கணிட போது, அடிவானம் இருணர்டது என நாயகம் (ஸல்) கூறி னார்கள். இதுபற்றிஅல்குர்ஆன் இப்படிக் கூறுகின்றது. ஜிப்ரயீல் எனினும் பராக்கிரமசாலியே இதனை அவருக்கு கற்றுக் கொடுத்திருக்கிறார். இவர் மிக்க (ஆத்ம) சக்தியுடையவர் (தன் இயற்கை உருவத்தில் நமது நபியின் முன்) அவர் தோன்றினார். அவர் உயர்ந்த (வானத்தின்) கடைக்கோடியிலிருந்து.” (அல்குர்ஆன்:53-5-6-7-8-) இஸ்லாமிய இசை - ஏக்கத்தின் மருந்து இதயத்தில் பரிசுத்தம் தோன்றும். அப்போது இரகசியமான எணர்ணங்கள் தோன்றும். இதைக் காண இதயம் அவாக்கொள்ளும். இதயத் துய்மைக்கு இறை நபி தரும் விளக்கம்:- “இறை விசுவாசம் மிக்கவர்களிடம் பிறரது உள்ளங்களை ஊடுருவிப் பார்க்கும் தத்துவம் இருக்கிறது. ஆகையால் எச்சரிக்கையாக இருங்கள்! அவர்கள் இறை ஒளியின் உதவியால் பார்க்கின்றனர்” என எச்சரித்தார்கள். மேலும் மனதை "ரவுண்டப் பணினும்” ஷைத்தானி பற்றி மாநபி(ஸல்) கூறினார்கள் "ஆதமுடைய மக்களின் மனதை ஷைத்தான் வட்ட மிடுகின்றான். அவன் வட்டமிடாமல் இருந்தால் அவர்கள் புனிதமான கவனத்தைக் காணர்பார்கள்.” என்றனர். தீய எணர்ணம் நிறைந்த மனித உள்ளத்தை ஷைத்தானி வலம் வருவானர். அதிலே ஷைத்தான் குடியிருப்பானி. இந்நிகழ்வு இறைமறையில் இப்படி வருகிறது. "அவர்கள் கலப்பற்ற (பரிசுத்த) மனதை உடைய உன் (நல்) அடியார்களைத் தவிர. (அவர்களை வழிகெடுக்க என்னால் முடியாது என்று ஷைத்தான் கூறினான்”) "கலப்பற்ற எண் அடியார்களிடம் நிச்சயமாக உனக்கு யாதொரு செல்வாக்கும் இராது. வழிகேட்டில் உண்னைப் பின்பற்றியவர்களைத் தவிர.” என்று அல்லாஹற் கூறு கின்றான்.
Page 59 இதயத்துாய்மை மெய்யறிவின் நிலைகளுக்குச் சாதகமாகவும் ஆத்மீக உயர் நிலைகளுக்கு சாதகமாகவும் தோன்றுகின்றது. உள்ளத்தில் தோன்றும் அதிசய நிலைகளை நோக்குவோம். சுகம், துக்கம், பயம் போன்ற மனோ நிலைகள் அர்த்தமுள்ள பாடல்களைக் கேட்பதால் ஏற்படு கின்றன. கம்பி பதித்த வாத்தியங்கள் எழுப்பும் இசை - பொருள் புரியாது போனாலும் கவரும் தன்மையுடையது. உள்ளத்தை ஈர்த்துவிடுகின்றது அது. உள்ளத்தை எதுவரை தொடுகின்றது என்பதைச் சொல்லத் தெரியவில்லை. அந்தப் பாடல் பதிவு ஏக்க உணர்வுகளில் வெளிப் படும். எதனால் ஏங்குகின்றானி அதுதான் தெரியாது. இதுவும் கூட ஒரு வினோதம். ஷாஹினி போன்ற வாத்தியங்கள் வாசிக்கப்படும் போது. ஏங்கித் தவிப்ப வனுக்கும் அவனது ஏக்கத்தின் தேடல் தெரிவதில்லை. ஆயினும் விளங்கப்படுத்த முடியாத ஒரு பொரு ளுக்கான ஏக்கம் எனக் கூறலாம். இது ஒரு சாதாரண மனநிலை. தத்துவம் கணிட ரசனைக்கு மட்டும் என்பதல்ல; அவாமிய மனநிலை. இதில் ஒரு வினோதம் உணர்டு. மனிதனின் உணர்ச்சி வேகத்தின் அமைப்பில் இரண்டு றுகுனர்கள் அடிப்படை அம்சங்கள் உண்டு. அவை மறைந்துநிற்கின்றன. ஒன்று “ஸிபதுல் முஸ்தாக்” தானி நிரும்பும் பொருளினி உணர்வு, அதை அடைவதற்கு ஏற்கும் மனநிலை. ஏக்க மனநிலை மனிதனிடம் உணர்டு. அது அவனை இதமடையச் செய்கிறது. மனிதன் ஏக்கத்துக்கான தியை வளர்க்கின்றது. பெணிகளே கணிணில் படாது வாழ்கின்ற ஒரு இளையவன். அவன் வாலிபம் அடைகின்ற போது சேர்க்கை உணர்வு அவனை அட்டகாசம் செய்யும், ஆணி - பெணி உறவு அவனுக்குத் தெரியாது. இனந்தெரியாத ஏக்கம் இவனிடம். மனித ஆத்மாவிற்கும் சுவர்க்கம், சுகம் இதனிடையே ஒரு தொடர்பு உணர்டு. கவனத்து சுகத்தை மனிதனால் சொல்ல முடியவில்லை. பெயராலும், வர்ணனையாலும் தெரிந்து வைத்துள்ளான். இசையை ரசிக்கும் மனிதன். அவனிடம் ஏற்படும் ஏக்கம். இதை பின்னகர்த்தும் மடமை. போதாமைக்கு எல்லையற்ற உலக ஈடுபாடு. இதனால் இசை உணர்வு மறைக்கடிக்கப்படுகின்றது. தன்னைப் பற்றி சிந்திக்காதவன், ஏங்கும் பொருளை எப்படிச் சிந்திப்பான்? இறை அறிவைப் பெற தன்னிடம் உள்ள அமைவை புரிவதில்லை. விளங்காத ஒரு பொருளுக்கு ஏங்குவது மனக்குழப்பத்தை ஏற்படுத்தும். மூச்சு விடதவிக்கும் ஒருவன் போலவே ஏக்கம் பிடித்தவனும் தவிக்கின்றான். இவை ஆத்மாவின் ஒரு அமைப்பு: ஆத்மீக தத்துவம் விளங்காதவன் அதனோடு கூடியவற்றையும் விளங்கமாட்டான். மெய்ந்நிலையைத் தோற்றுவது இரு நிலமை களாகும். வெளிப்படையானதும், அது அற்றதுமான நிலைகளாகும்.
Page 60 தன்னிடம் மெய்ந்நிலை இருப்பதாக நினைப்பாண். மெய்ந்நிலையை இன்னும் இரணர்டு பிரிவுகளாக வகுக் கலாம். ஒன்று: மனிதனது உள்ளத்தை ஈர்த்தெடுப்பது. மற்றது:தாமாக உருவாக்காமல் வருந்தி உணர்டு பணிணுவது. முயற்சியில் உருவாகும் மெய்ந்நிலைகளில் சிக்கல்களும் தோன்றுவதுணர்டு. தன்னிடம் மெய்ந்நிலை இருப்பதாக நினைப்பான்; ஆனால் இருக்காது. இது பிறரை ஏமாற்றும் கைங்கரியம். மெய்ந்நிலை அடைவதற்கு அவாக் கொள்வதும், ஆய்வதும் புகழுக்குரியதே. இது குறித்து நபிகள் நாயகம் (ஸல்) கூறினார்கள். "அல்குர்ஆனை ஓதக்கேட்டு கணிணிர் வடிக்காத வனும் கணிணிரை வரவழைக்க வேணர்டும். துயரப்பட வேண்டும்.” எண்பதாக! எந்தச் செயலில் நன்மையிருக் கின்றதோ அதனை முனைந்து செய்ய வேணடும். அப்போது அச்செயல் பழக்கத்துக்கு வந்து விடும். அருள்மறை அல்குர்ஆனை கஷ்டப்பட்டு மனனம் செய்து கொள்கின்றனர். அறிவு, சிந்தனை இருப்பதற்கான முனைந்து பாடமாக்காமல் இருக்க முடிவதில்லை. பாட மாக்கியது நாப்பழக்கமாக மாறும். தொழுகையில் கவனம் அல்லாமல் தொழும் ஒருவன். அவனது நாவு ஒதிக் கொணர்டேயிருக்கும். அத்தியாயம் முடியும் போது தொழுகையில் கவனம் வந்து விடும். ஆனால் ஒதியபோது கவனம் போதாமை குறித்து உணருகின்றான். இப்படித்தான் ஒரு எழுத்தாளன். ஒரு எழுத்தாளன் ஆரம்ப நிலையில் படாதபாடு பட்டு எழுதுகின்றான். கைகள் எழுதிச் செல்கின்றன. அதற்கு எழுதும் பழக்கம் வந்து விடுகின்றது. இவனுடைய சிந்தனைப் போக்கு எங்கிருந்த போதும், தான் எண்ணியதை எழுதுகின்றான். சமய விடங்களும் இப்படித்தான். முயற்சியின்றி முழுமையான பழக்கமின்றிஒன்றையும் சாதிக்க முடியாது. பயிற்சி சிறந்ததாக அமையும் போது முயற்சியும், பழக்கமும் தானே வந்துவிடும். பழக்கங்கள் வழக்கங் களாகத் துவங்கும். அறிஞர்களின் கூற்றின்படி "அல்ஆதது” என்கின்ற பழக்கம் எண்பது மனிதனின் இயல்பு என்ற "தமீஅத்தின்” ஐந்தாம் கட்டமாகும். ஆரம்ப நாட்களில் அடையாத அனுபவங்களுக்காகத் தளர்ந்து போகக் கூடாது. முன்னணி முயற்சி வேண்டும். அம்முயற்சியின் பிரதிபலிப்பாக இசையைக் கேட்டு இரசிக்கும்தன்மையை ஏற்படுத்திக்கொள்ளலாம். ஒரு மனிதன். அவன் இதுவரை அன்பு வைக்காத வருடன் அன்பு வைக்க முயற்சிக்கின்றான். அந்த அண்பை தன்னிடம் முதலில் கூறிக் கொள்கின்றான். அதைப் பற்றி சிந்தித்தான். அவரின் ஒழுக்கத்தையும், பணியையும் தன்னிடமே கூறுகின்றான். இறுதியில் அம்மனிதன் மேல் பாசம் படர்கிறது. அதுநிஜமாகிவிட்டது. அப்பாசத்தை விட அவனால் முடிவதில்லை. இது போன்றுதான். இறைவனி மேல் கொள்கின்ற பாசம்; காதல். இறைவனை அடைய ஏக்கம் இருக்க வேண்டும்; இறைவ னின் கோபத்தைப் பயப்பட வேண்டும். இந்நிலை இல்லாத இறை நேசன் இதற்கு முயற்சிக்க வேண்டும்; முழுமையாக இறை நேசக் குணத்தாருடன் குணம்கொள்ள வேண்டும்.
Page 61 இறை காதலர்கள் ஆத்மீக நிலையில் பல்வேறு கட்டங்களில் இருப்பர். அவர்களின் நிலைப்பாட்டில் அவதானம் தேவை. ஆண்மீகவாதிகளின் ஆற்றலை சிலாகித்துப் பேச வேண்டும்; அத்தகைய நிலையை அடைய அவாக்கொள்ள வேண்டும்; அவர்களின் தத்துவத்தின் தாற்பரியங்களுக்கு காது கொடுக்க வேண்டும். அல்லாஹற்வைப் பயந்து, அவன் மேல் காதல் கொள்ளும் இறைக்காதலர்களுடன் பழகுதல் இவனின் நற்குணத்துக்கு வழி. இறைநேசத்துக்கும் மெய்நிலைக்கும் வழி. அத்தகைய நிலைபற்றி நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் வாக்கும் பிரார்த்தனையும் இதுதான். மக்காவில் ரப்பானுடன் கலீதா புனித மக்காவில் ஹரம் வடிரீயின் பக்கத்தில் றுஸைபா என்ற ஊரில் அஸ்ஷேஹற் அப்பாஸ் அவர்களின் வாசஸ்தலம் உண்டு. அங்கே கஸிதாக்கள் ரப்பான் தட்டி பல்வேறு நாட்டவர்களால் பாடப்படுகின்றன. ஆசிக்குல் றஸ9ல் அஸ்ஷேஹற் அப்பாஸ் அவர்கள் எழுந்து நின்று அப்பாடல்களுக்கு உத்வேகம் ஊட்டுவார்கள். - இது எனது நேரடிரிப்போட் “யா அல்லாஹற் உனது நேசத்தைக் கொடு. உனது நேகர்களின் நேசத்தைக் கொடு. உண் நேசத்துக்கு என்னை இட்டுச் சென்றவர்களினி நேசத்தைக் கொடு.” என அல்லாஹ்விடம் கேட்கின்றார்கள். ஆகவே அல்லாஹற்வின் பாசத்துக்கும் நேசத்திற்கும் நபியவர்கள் வணக்கம் செய்து வழிபட்டார்கள். இறைமறை இசையில் உயிர் விரும் முஸ்லிம்கள் இறைமறையின் இனிமையும், இசையின் இனிமையும்! அல்குர்ஆனை ஒதக் கேட்டு மெய்ந்நிலை எய்து வதற்கு சந்தர்ப்பத்தை இழந்தவர்கள் ஆத்மீகப் பாடல் களைக் கேட்டு மெய்ந்நிலைக்கு வந்து விடுகின்றனர். ஆனால் அல்குர்ஆனை ஓதக் கேட்டல்லவா மெய்ந்நிலை பிறக்க வேண்டும் என கேள்விஎழுகின்றது. பொதுவாக. மெய்ந்நிலை என்பது ஒரு யாதார்த்ததத்துவம். அது இறைக் காதலால் சித்திக்கும். இறைக் காதலில் ஏற்படும் ஏக்கம் அல்குர்ஆனின் ஓதல் கேட்டு அசத்தப்படுகின்றான். மறை வேதம் கேட்டும் மெய்ந்நிலை பெறாதவன் உலகப் பொருட்களில் உச்ச கட்ட உவப்பாளன் ஆவான். இவற் றிற்கு சிகரம் வைத்தால் போல் அல்குர்ஆன் கூறுகின்றது. அல்லாஹற்வின் திரு நாமத்தை நினைவு கூர்வதால் (உணர்மை விசுவாசிகளின்) இருதயங்கள் நிச்சயமாக திருப்தி அடையும் என்பதை (நபியே! நீர்) அறிந்து கொள்ளும். (அல்குர்ஆன் 13.28) மேலும் அல்குர்ஆனில். “எவர்கள் தங்கள் இறைவனுக்குப் பயப்படுகின்றார்களோ (அவர்கள் இவ்வசனங்களைக் கேட்ட மாத்திரத்தில், அவர்களுடைய உரோமம் சிலிர்த்து விடுகின்றது.
Page 62 பின்னர் அவர்களுடைய தேகங்களும் இருதயங்களும் அல்லாஹற்வுடைய எணர்ணத்தில் இளகுகின்றன. (அல்குர்ஆன் 39:23) மனித ஆத்மாவால் கேட்டு தேடப்படும் ஒன்றே மெய்ந்நிலை ஆகும். இது பற்றி இன்னுமொரு இடத்தில் இறைமறை கூறுகின்றது. இசை ஆய்வுக் கட்டுரைகள் எழுதிய இஸ்வாமியர்கள் (கிபி 900 மாம் ஆண்டு) இசை பற்றிய ஆய்வுக்கட்டுரைகள் இஸ்லாமி யர்களால் 900மாம் ஆண்டிலேயே எழுதப்பட்டன. இவர்களுள் சிரிய தத்துவ ஞானியான பராயி மிகப் புகழ் பெற்றவர். 950ல் இவர் மரணமடைந்தார். எகிப்து நாட்டைப் பொருத்த வரை இப்னு ஹைதம் என்ற எழுத்தாளர் முன்னோர்களின் படைப்புக்கள். கலைபற்றிதிறனாய்வு நூல்களை எழுதினார். ஸ்பானிய தத்துவஞானி இப்னு பாஜா (ஆலம் பேஸ்) புதிய இசைக் கோட்பாடுகளை முன்வைத்தார். 138 வரை தொடர்ந்து எழுதினார். இவரின் தத்துவம் ஆபிரிக்க வடக்கு.கடவோரமுஸ்லிம் நாடுகளையும் சென்றடைந்தது. “மெய்யான விசுவாசிகள் யாரென்றால் அல்லாஹ9 வுடைய திருநாமம் கூறப்பெற்றால் அவர்களுடைய இருதயங்கள் பயந்துநடுங்கிவிடும்" (அல்குர்ஆன் 82) "யாதொரு மலையின் மீதும் நாம் இந்தக் குர்ஆனை இறக்கி வைத்தால் அது அல்லாஹற்வின் பயத்தால் நடுங்கி, வெடித்து, பிளந்து போவதாக நிச்சயமாக (நபியே) நீர் காணபீர்” (அல்குர்ஆன் 5921) தக்வா என்ற இறையச்சம், கணிணியம், ஒழுக்கம் ஊடாக மெய்ந்நிலையைத் தோற்றுவிக்கும். இதில் எச்ச ரிக்கைகளும்,நல்ல தோற்றப்பாடுகளும் தோன்றும். நாயகம் (ஸல்)நவின்றார்கள். “உங்களுடைய குரலால் திருமறையை அழகுற ஒதுங்கள்!” என்றனர். அபூமுஸல் அஸ்அரி என்ற ஸஹாபிக்கு நாயகம் (ஸல்) கூறினார்கள் "அபூமுஸல் அஸ்அரியே! உங்கள் குரலிலே தாவூத் நபியின் கூட்டத்தினரின் யாழ் புனர் ஜெனிமம் எடுக்கின்றது” என்றனர். அல்குர்ஆனை ராகமான குரலில் ஒதக் கேட்டு மெய்ந்நிலையை அடைந்த உத்தமர்கள் இருக்கின்றனர். நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் "துறா ஹஅத்தும், அதைப் போன்ற அத்தியாயங்களும் ஒதியதன் மூலம் எனது தலைமுடி நரைத்து விட்டது” என்றனர். நரை முடி கடுமை யான துக்கத்தினாலும், பயத்தினாலும் ஏற்படும். மெய்ந் நிலைக்கும் துக்கம், பயம் போன்ற உணர்வுகளுக்கும் நெருக்கமான தொடர்பு இருக்கின்றது. அல்குர்ஆனின் அத்தியாயம் அந்நிஸா. இதனை இப்னு மஸ்ஊத் (ரலி) நாயகம் (ஸல்) அவர்களுக்கு ஓதிக்காணிபித்தார். அதில் ஓர் இடத்தில்.
Page 63 "நபியே. ஒவ்வொரு சமுதாயத்திலிருந்தும் (அவர் களுடைய நபியாகிய) சாட்சியை நாம் கொணர்டு வரும் போது (உம்மை நிராகரித்த) இவர்கள் யாவருக்கும் (விரோதமான) சாட்சியாக உம்மை நாம் கொணர்டு வரும் போது இவர் களுடைய நிலை எவ்வாறிருக்கும்? (அல்குர்ஆன் 4:41) இந்த இடத்தை ஒதும் போது நாயகம் (ஸல்) "போதும்” என்றனர். கணிணிருந்து கணிணிர் தாரை தாரையாக வழிந்தது. அல்குர்ஆனில் இன்னுமோரிடத்தில். நிச்சயமாக நம்மிடத்தில் (அவர்களுக்கு) விலங்கு களும் இருக்கின்றன. நரகமும் இருக்கின்றது. விக்கிக் கொள்ளக் கூடிய ஆகாரமும் (அவர்களுக்காக) இருக்கிறது. துன்புறுத்தும் வேதனையும் இருக்கிறது. (அல்குர்ஆன் 73:12:13) எனும் வசனத்தை நபிகளார் (ஸல்) ஒதும் போது, அல்லது இன்னொருவரால் ஒதக் கேட்கும் போது. "பஸ் இக” மயக்கமடைந்து விட்டார்கள் என்று வரலாறு வரைகின்றது. அல்லாஹற்வின் கருணையைப் பற்றி தெரிவிக்கும் வசனங்களை ஒதும் போதெல்லாம் அந்த இடத்தில் நிறுத்தி இறைவனிடம் பிரார்த்தித்து மனமகிழ்வுடன் நன்றி செலுத்தி ஒதுவார்கள். மனமகிழ்வும் கூட மெய்ஞ்ஞானத்தின் ஒரு பகுதிதான். மெய்ந்நிலை கணிட மக்களை அல்லாஹற் தனது அருள்மறையில் பாராட்டுகின்றான். இறை தூதர் மீது அருளப் பெற்றவையை செவியுற்றால் உணர்மையை அவர்கள் உணர்வதின் காரணமாக அவர்களின் கணிகள் (தாரை தாரையாக) நீர் வடிப்பதைக் காணிபீர். (அல்குர்ஆன் 3:83) பானையில் இட்ட அரிசி பதமாக தணிணிருடன் பொங்கி எழுவது போல தொழுகின்ற வேளைகளில் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களது மனசும் பொங்கும்; கொதிக்கும். அணினல் நபிகளினி அசுஹாபிகளான தோழர்களும் அவர்கள் சார்ந்தவர்களும் அருள்மறையிலிருந்தே மெய்ந் நிலைக்கு பெரு விளக்கம் தந்துள்ளார்கள். அருள் மறையை ஒதும்போது. பலர் மயக்கமுற்றார்கள்; சிலர் அழுதார்கள்; சிலர் உயிரையும் துறந்திருக்கின்றனர். ரக்கா எனுமிடத்தில் ஓர் இமாம் ஜூரரா பின் அவ்பா என்பவர் தொழுகை நடாத்தும் போது, பினர் வரும் அல்குர்ஆன் வசனத்தை ஒதினார். “எக்காளம் ஊதப்படும் போது. ” என்பதே (74:08) இவ்வசனத்தை உச்சரிக்கும் போது. தொழுவிக்கும் மிஃராபின் உட்பகுதியிலேயே விழுந்து உயிர்நீத்துவிட்டார். உம் இறைவனின் வேதனை (அவர்களுக்கு) வந்தே தீரும். எவராலும் அதனைத் தடுக்க முடியாது. (அல் குர்ஆன் 32-7-8) இந்த அத்தியாயத்தை உமர் (ரலி) ஓதக் கேட்டு, மனச்சஞ்சலப்பட்டு மயக்கமுற்று கீழே வீழ்ந் தார்கள். ஒருமாதகாலம் சுகயினமுற்று ஒய்வெடுத்தார்கள். இன்னுமொரு அல்குர்ஆன் அத்தியாயம்! "அதுவே அவர்கள் பேச சக்தி பெறாத ஒரு நாள் அன்றி புகழ் கூறவும் அவர்களுக்கு அனுமதி கொடுக்கப்பட மாட்டாது.(அல்குர்ஆன்:77-35)
Page 64 இந்த வசனத்தை செவியுற்ற இமாம் ஷாபி (ரஹற்) அவர்கள் மயக்கமுற்று விழுந்தார்கள். இவ்வாறு இறை மறையை ஒதக் கேட்டு மெய்ந்நிலை அடைந்த ஞான மேதைகள் பலர் உள்ளனர். அவர்களின் வரலாறு நெறிப்படுத்தப்பட்டுள்ளது. அபூபக்கர் ஷிப்லி என்ற பெரியார் ரமழான் மாதம் பள்ளி வாயலில் ஒரு இமாமின் பின்னர் தொழுது கொணர்டி ருந்தார். இமாம் அல்குர்ஆனி வசனத்தை ஒதும் போது. "நாம் விரும்பி இருந்தால் நம்முடைய செய்தியைப் பெற்றவரை (துரதரை) உங்களிடம் அனுப்பியிருப்போம்” என்பதாக, இவ்வசனத்தைக் கேட்ட அபூபக்கர் வழிப்லி ஆவேசத்தால் துடித்தார். கூச்சலிட்டார். மரணித்து விட்டதாக மற்றவர்கள் நினைத்தனர். முகபாவனை மாறிவிட்டது.தோள்புயங்கள் குலுங்கின. வாய் முணு முணுத்தது. "இந்த வசனத்தை தனது நேசர்களிடையே கூறுகின்றான்.” என வார்த்தை வாயிலிருந்து வருவதும் போவதுமாக இருந்தது. அல்ஜூனையித் (ரஹற்) கூறி னார்கள். ஒரு நாள் ஸிர்ரியுஸ் ஸிக்தி அவர்களின் வீட்டிற்குச் சென்றேன். ஒருவர் அங்கு மயக்கமுற்று வீழ்ந்து கிடந்தார். ஏன் வீழ்ந்து கிடக்கின்றார் என்பதை விசாரித்தேன். அல்குர்ஆனை ஓதக் கேட்டு மயக்கமுற்று விழுந்ததாகப் பதில் வந்தது. அப்படியா. அதே வசனத்தை திருப்பி ஒதுங்கள் என்றேன். அவர் ஓதினார். அவ்வளவுதான். மயக்கமுற்ற மனிதர் மயக்கம் தெளிந்தார். இவ்விடயம் ஸிர்ரியுஸ் ஸிக்தி அவர்களுக்கு ஆச்சரியமாக இருந்தது. ஆனால். நான் விடவில்லை. தெளிவாக அவருக்கு விளக்கம் கொடுத்தேன். நபி யாக்கூப் (அலை) பிறக்கும் போதே குருடராகப் பிறக்கவில்லை. இடையில் ஏற்பட்ட காரணத்தால் கணி பார்வையை இழந்தார். கணி பார்வையே இல்லாது பிறந் திருந்தால் மீணர்டும் பார்க்கும் சக்தியைப் பெற்றிருப் பார்களா? இது போலவே, இங்கு மயக்கமுற்றுக் கிடந்து எழும்பிய மனிதனின்நிலையும் என்றனர். எனது ஆரம்ப நிலைக்குத் திரும்பினாலும், அந்த நிலையில் தொடர்ந்து இருக்க முடியவில்லை என்றார். இதைக் கேட்ட அபூபக்கர் ஷிப்லி அவர்கள் “உங்களை இறைவன் பால் ஈர்க்கின்ற வசனத்தை செவியுற் றுள்ளிர்கள். அது இறைவன் உங்களுக்கு அருள் செய்வ தாகக் கொள்ளுங்கள்” என்றார். சிந்தனைக்கு வந்த ஓர் அல்குர்ஆன் அத்தியாயம். "திருப்தி அடைந்த ஆத்மாவே! நீ உன் இறைவன் பால், செல்” என்ற அத்தியாயத்தை ஒருவர் ஓதினார். இதனை ஒரு ஞானி செவியேற்றார். அவரை மீண்டும் மீண்டும் அந்த அத்தியாயத்தை ஒதும் படி வேண்டினார் அந்த ஞானி. “இறைவன் பால் செல்” என பல தடவை கூறியும் அது செல்லவில்லையே என ஆத்திரமடைந்த ஞானி கூச்சலிட்டார். மயக்கமுற்றார். கீழே விழுந்தார். அக் கணமே ஆவிபிரிந்தது. மரணத்தைத் தழுவிக்கொண்டார். அல்குர்ஆன் இப்படி ஒரு ஆய்வைச்சொல்கிறது. "தண் இறைவனின் கட்டளைக்குச் செவிசாய்ந்து அதற்கு விதிக்கப்பட்ட படி பிளந்து விடும் போது.” (அல்குர்ஆண் 84-01)
Page 65 இந்த அத்தியாயத்தை இப்ராஹீம் இப்னு அத்ஹம் (ரஹற்) ஒதக் கேட்டார். அவ்வளவுதான்! அவரது மூட்டுகள் வலித்தன. சாய்ந்து தரையில் வீழ்ந்தார். பரிசுத்தமான உள்ளத்தையுடைவர்களுக்கு அருள் மறை வசனங்கள் உணர்வுகளை உணர்டு பணிணி, மெய்ந் நிலையைத் தோற்றுவிக்கின்றன. மெய்ந்நிலை தோன்றாத வர்களுக்கு இன்னுமொரு மறைவசனம் நினைவூட்டு கின்றது. "கூப்பாட்டையும் கூச்சலையும் தவிர வேறெதையும் புரிந்துகொள்ள முடியாதவற்றை (கால் நடைகளை) அழைத்து சப்தமிடும் ஒருவரின் உதாரணத்தை ஒத்திருக் கின்றது” என்பதாக உள்ளம் ஒளிருகின்ற இறை உள்ளங் களுக்கு அறிவின் ஒரு சொல் பயன் காணச் செய்யும். அல்குர்ஆனை ஓதக் கேட்கின்ற மனிதன் மெய்ந்நிலைக்கு சென்றுவிடுகின்றான். s: மக்காவில் கலீதாவும். நலிதாவும் புனித மக்காவில் ஹரம்ஷரீபின் அருகேறுஸைபா என்ற ஊர் உண்டு. அங்கே ஒரு மதரஸா, அதன் உஸ்தாத் அல்ஹாஜ் அஸ்ஸெயித் மெளலானா மாலிக்குல் அலவிய்யி அவர்கள். அவர்களின் மஜ்லிஸில் பல்நாட்டுப் பாடகர்கள் கலிதா. நலிதா பாடல்களைப் பாடுகின்றனர். நபிகள் நாயகம் (ஸல்) மீது மனதை உருக்கும் பாடல்கள். - நேரடிரிப்போட் அல்குர்ஆனை ஓதாமல், இன்னுமொருவர் ஒதுவதைக் கேட்காமல், பாடல்களைக் கேட்டு மகிழும் மன இயல்பு களுக்கு ஏழு வகையான காரணங்களை முனர்வைக் கின்றனர். இஸ்லாமிய இசைக்குள் இறைமறை புகுமா? ஏழு வகையான மன நிலைகள் முதலாவது அமைப்பு அல்குர்ஆனை கேட்கும் ஒருவனின் மனநிலை ஒரு புறமிருக்கும். அத்தியாயத்தின் போக்கு இன்னுமொரு புறமிருக்கும். ஒதுபவனி வசனத்தின் பொருள் புரிந்து மனோபாவத்துடன் ஒன்றுபடுத்திப்பார்ப்பதில்லை. ஒருவன் துக்கம், துயரம், ஏக்கத்துடன் இருக் கின்றான். அவனிடம் சென்று, “உங்கள் மனைவி(கள் இறந்து அவர்)களுக்குச் சந்ததி ஏதும் இல்லாவிட்டால் அவர்கள் விட்டுச் சென்றதில் உங்களுக்கு பாதி உணர்டு. (அல் குர்ஆன் 4-12) என்ற “பறாஇழ்” சம்பந்தமான பாகப்பிரிவினை அத்தியாயத்தை மடக்கி, மடக்கி ஓதினாலும் அவன் இருக்கும் தழ்நிலைக் கேற்ற மனோ நிலைக்கு ஒத்துப் போகுமா? எனினும் பாடல்களை எழுதுபவர்கள், கவிஞர்கள் மனிதனது செயல்திறனர், உணர்வுகளை ஊக்கப்படுத்தும் நோக்கிலேயே எழுதுகின்றனர். இரசிகர்கள் தங்கள் மனநிலைக்குத் தக்கவாறு பாடலின் ஆற்றலையும், அம்சத்தையும் திணிக்க முற்படாமையால் இலகுவாக உணர்ந்து விடுகின்றார்கள்.
Page 66 சொத்துரிமைச் சட்டம், விவாகரத்துச் சட்டம் என்பனவற்றை வைத்தா கவிஞன் கவி எழுதுகின்றான்? எனினும். இவ்வேளை மதிநுட்பம், திறனாய்வும், உள்ளச்சமும், வணக்க வழிபாடும் உள்ள மனிதனுக்கு இதே பாகப்பிரிவினை வசனம் சில சமயம் வித்தியாசமான உணர்வுகளை உள்ளத்தில் தோற்றுவிக்கும். இத்தகைய அத்தியாயங்களைக் கேட்கும் போது தனது மரணத்தைப் பற்றிய எணர்ணம் வந்து உலக விடயங்களை மரணத்திற்கு முன்னதாகவே செயல்படுத்த விரும்புவானர். இப்படி நிகழ்வது மிக அபூர்வமான விடயமாகும். இரண்டாவது அமைப்பு அல்குர்ஆனின் மனன சக்தி நிறையப் பேருக்கு உணர்டு. செவியும், மனமும் அதனைக் கேட்டதும் பழக்கமாவிட்டன. புதிய கருத்துக்கள் மனதில் பதிவாகி விடுகின்றன. இரணர்டாம் தடவை அதைக் கேட்கும் போது ஏற்கனவே உள்ள மனப்பதிவு ஏற்படுவதில்லை. மூன்றாவது தடவை கேட்கும் போது அதனால் மனதில் பெரிய தாக்கம் ஏற்படுவதில்லை. மெய்ந்நிலை எய்தப் பெற்றவர்கள் ஒரு வசனத்தை நாள் முழுதும், வாரம் முழுதும் ஒதியும் மெய்ஞ்ஞான நிலையை எய்தமுடியாது. கருத்து ஒன்று; வசனம் வேறு. அப்படி இருந்தாலும் அதை ஒதக் கேட்டு, உருப்படியாக உச்சரித்தாலும் செயலின் அனுபவம் அவனுக்கு அப்பார்) பட்டதாகவே இருக்கும். இஃது போல் ஒரு இசை ரசிகன் பாட்டில் முன்பு கேட்ட கருத்தை வேறு பாட்டில் கேட்கச் கிடைத்தாலும் ராகமும், தாளமும் மாறுபட்டிருந்தால் அப்பாடல அவனினர் சிந்தனையைக் கிளறி விட்டு, ஆத்மாவை ஆட்கொண்டு விடுகின்றது. ஆயினும். அருள்மறையை ஒருவர் ஒதுகிறார். ஒவ்வொரு கட்டத்திலும் புதிது, புதிதாக ஒதமுடியுமா? குர்ஆன் பூரணம் பெற்றது. அதனைக் கூட்டக் குறைக்க, மாற்றம் செய்ய முடியாது. அது பலரது மனதில், மனப்பாட மிடப்பட்டுள்ளது. உலகப் புதுமையில் அழகும், கவரும் தண்மையும், இன்பமும் இணைந்தே காணப்படுகின்றன. புதுமையைக் காண விழையும் போது உறுதியும், உத்வேகமும், அதிகம். பழக்கப்பட்ட எதிலும் வேகம் குறைவாகவே இருக்கும். இதனால்தான். கஃபாவை மக்கள் அடிக்கடி சுற்றுவதை உமர் (ரலி) தடுத்தார்கள். மக்கள் கஃபாவை வலம் வருவது, அதுவும் அடிக்கடி வலம் வருவது, சடங்காக - சம்பிரதாயமாக மாறிவிடக் கூடாது எண்பது அவர்களின் நோக்கம். ஹஜ்ஜூ யாத்திரைக்காக வரும் ஒருவன் அத் தலத்தைக் கணிடதும் அழுகின்றான். அவன் புதியவன் என்பதால்! அவன் மக்காவில் தங்கி பலநாட்கள் பழகியதன் பின்னர் கஃபாவை கணிடதும் முதலில் ஏற்பட்ட அழுகை, அனுபவம் திரும்பவும் தோன்றுவதில்லை. பாடகன் ஒருவன் சந்தர்ப்பத்திற்கு ஏற்ற விதமாக பாட்டை சரி செய்கின்றான். அல்குர்ஆனைப் பொறுத்த வரை சந்தர்ப்பத்திற்கு ஏற்றால் போல் சரிசெய்ய முடியாது.
Page 67 மூன்றாவது அமைப்பு மொழி நயத்துடன் இலக்கியமும் அமைகின்ற போது அப்பாடலுக்கு நல்ல பலன் கிடைக்கின்றது. அது ஆத்மாவைக் கூடத் தொடும். இசைக் கலைஞனுக்கு ராகத்தில் நல்ல அனுபவம் இருக்கும். இராகமோ, சுருதியோ குறைந்தால் அவனால் தாங்கிக் கொள்ள முடிவதில்லை. இதனால் மன உளைவு, மனக்கவலை ஏற்படுகின்றது. இசை, ராகம் எல்லாம் இனிதே அமைந்தால் இரசிகனுக்கு இதயம் இதமாக இருக்கின்றது. நான்காவது அமைப்பு இராகம் ஒன்று பாடகர்கள் பலர் ஒவ்வொருவரின் ஆளுமைக் கேற்ப ராகம், சுருதி, ஏற்றம், இறக்கம் மாறாத வணிணம் பாடுகின்றனர். இசை அமைப்பாளர்கள் பாட்டினர் வரிகளைக் கூட்டுகின்றார்கள்; குறைக்கின்றார்கள். பாடலில் கூட்டுதல், குறைத்தல், மாற்றுதல் போன்ற இசை அமைப்புகளை அல்குர்ஆனுடன் ஒன்றுபடுத்திப்பார்க்க முடியுமா? நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கு அல்குர்ஆன் எந்த அமைப்பில் இறங்கியதோ அதே அமைப்பின்படி மாறுபடாமல் ஓத வேண்டியவர்களாக இருக்கின்றோம். ஐந்தாவது அமைப்பு அந்தப் பாட்டுக்கு தாளம் துணை வேணடும். பக்கவாத்தியங்கள் சுருதி கூட்டி இயக்கம் தருகின்றது. வாத்தியங்கள் இல்லாமல் ஒரு பாடல் பாடப்படுகின்றது. அப்பாடலுக்கும், வாத்தியங்கள் இசைத்துப் பாடும் பாடலுக்குமிடையே நிறைய வித்தியாசங்கள் உணர்டு. இது தெரிந்த விடயம். பக்கவாத்தியம் என்பது அனுமதிக்கப்பட்ட சிறிய குச்சிகள், ரப்பானி போன்ற - கொட்டக்கூடிய - வாத்தியங் களாகும். ஆயினும். அல்குர்ஆனை ஓத பக்கவாத்தி யங்கள் தேவையில்லை. அத்தகைய வாத்தியங்களில் இருந்து பாதுகாப்பதும் கடமை இசையை பொழுதுபோக்காக மக்கள் ஆக்கிக் கொண்டனர். அல்குர்ஆன் அப்படி விளையாட்டோ வீணர் பொழுதுபோக்கோ அல்ல. அப்படிக் கொள்ளவும் கூடாது. (தூய இறையோனின் தூய மறை, உடல் சுத்தம் உளச் சுத்தத்துடன ஓத வேணர்டியது!) மரியாதைக்குரிய இடங்களில் மக்கள் கூடும் மணிடபங்களில் அல்குர்ஆனை அழகுற ஓதலாம். திருமணத்தினர் போது "தப்" கொட்டி, தட்டி, பகிரங்கப்படுத்த வேணடும் என்பது ஏந்தல் நபி (ஸல்) அவர்களின் இனிய கருத்து. இதற்காக நிகாஹற்நடைபெறும் வேளையில். அல்குர்ஆன் ஓதப்படும் சூழலில் "தப்” தட்டுவது கொட்டுவது தடுக்கப்பட்டுள்ளது. (இங்கு ரப்பான் கொட்டி தட்டுதலையேதப் எனக் கூறப்படுகின்றது.) ஆறாவது அமைப்பு இசை மீட்டப்படும் இடம் பற்றியது. பாடகர்கள் இரசிகர்களைக் கவர்ந்து அவர்களின் மனநிலைக்கு ஏற்றால் போல் பாடுவதில்லை. பாடல் என்றால் சூப்பர். ஆனால் ரசிகர்களுக்கு Bபோர் - அலட்டியாக இருக்கும்.
Page 68 "பாடலை மாற்று. வேறு பாட்டுப் பாடு!" என்றெல்லாம் கோரிக்கை ஆரவாரம்! எல்லோருக்கும் ஒரே வகையான இசை பிடிக்காது. மெய்ந்நிலையை அடைய ஒருவரை “குர்ஆனை ஓது" என்கின்றனர். அவரும் ஓதுவார். ஆனால். அங்குள்ள வர்களின் மனசு வேறு எங்கோ இருக்கும். அவர்களுக்கு அந்த அத்தியாயம் பிடித்தம் போதாமல் இருக்கும். அதற்காக. அந்த அத்தியாயத்தை ஒத வேண்டாம் என தடுக்க யாருக்கும் உரிமையில்லை. அல்குர்ஆன் மனித சமூகத்தின் வழிகாட்டி. பக்தியுள்ளவன் உணர்வுபூர்வமாக செவியேற்பானர். உவந்து கேட்காதவனர் மாமறைக்கு மதிப்பளிக்காத குற்றவாளியாவான். அல்குர்ஆன் அத்தியாயங்கள் எந்த அடிப்படையில் இறங்கினவோ அத்தகைய கருத்தே வலுப்பெறும். இஷடப் படியான கருத்துக்களுக்கு எந்த இடமும் கிடையாது. பாட்டில் ஒரு அர்த்தம் இருக்கும். ரசிகனிடம் இன்னுமொரு அர்த்தம் இருக்கும். பாட்டை எழுதியவனே எணர்ணி இராத படியும் அமையும். (“எழுதியவன் ஏட்டைக் கெடுத்தான்; பாடியவன் பாட்டைக் கெடுத்தானி” என்பது முதுமொழி!) ஆனால். அல்குர்ஆன் இதுபோன்றதேயில்லை. ஏழாவது அமைப்பு பாட்டுப் பாடவா? அதற்கு நான் நல்ல பாடம் சொல்லவா என அபூ நஸ்ரு அஸ்ஸர்ராஜ் அத்துரளி என்ற பெரியார் பல காரணங்களை முனர் வைக்கினர்றார். அல்குர்ஆன் அல்லாஹற்வின் பேச்சு! அவனது தனித்துவமான தன்மைகளுள் ஒன்று! அதில் மனிதனால் தேடமுடியாத தத்துவங்கள் உணர்டு! அல்குர்ஆண் படைக்கப்படவில்லை! படைக்கப் பட்ட மானுடன் அதன் முழுமையையும் அறிய முடியாது. அதன் உள்ளடக்கம், பொருளின் போக்கு ஆகியவற்றை கொஞ்சம் அறிந்து வெளியானால் மனிதனுக்கு நடுக்கம் ஏற்படும்; பதறிப் போய் விடுவான். பாடலைப் பொறுத்தவரை அப்படியல்ல. இடம், சூழலுக்கு ஏற்றவாறு பாடப்படும். அது அந்த வேளைக்கு மட்டும்தான் மகிழ்ச்சியைத் தரும். மனிதனிடம் எத்தனை தேவை, கடப்பாடு, அவா இருக்கிறது? இவை அத்தனையையும் பாடலினால் சம்பூரணப்படுத்த (plgu IT61. வேளா வேளைக்கு மனிதனுக்குத் தோன்றும் எணர்ணப்பாடுகளுக்கும், ஆசைப்பாடுகளுக்கும் பாடல் ஒரு அமைவாக, நிறைவாக இருக்க முடியும். ஆயினும். படைக்கப்பட்டவன் மனிதன்! இசை இன்னுமொரு படைப்பு படைப்புடன் படைப்பு இசையுடன் மனிதன்! இறுகக் கட்டி இனிமையாகப் பேச முடியும். இசையின் மூலம் இன்பத்தை அனுபவிப்பதோடு, துக்கத்தையும் கூட அனுபவிக்கலாம். அல்குர்ஆனின் "ஆயாக்கள்” அத்தியாயங்களுக்குள் திடீரென பிரவேசித்து அதன் முழுமையை - அதன் எதிர்பார்ப்பை - எய்தமுடியாது. இதுவே அபூநஸ்ரு அஸ்ஸர்ராஜ் அத்துாஸியின் வாதிடும் தன்மையினர். துரதிடும் கருவூலமாகும்.
Page 69 இஸ்லாமிய இசை பற்றிய ஒழுக்க ஞானம் இசை பற்றிய ஒழுக்க விதிகள் ஐந்தாகும். இசையை ரசிப்பதின் வெளிப்பாடுகள், தொடர்புகள் உள் - வெளி சார்ந்த மெய்ந்நிலைக்கு பொருத்தமானவை எவை என புரிந்துணர்வு பெறுவது புத்திசாலித்தனமான தாகும். மெய்ந்நிலையில் புகழுக்குரியதையும், பொருத்தம் காணாததையும் புடம் போட்டுப் பார்ப்பது அவசியமான தாகும். 'அல்குர்ஆன் பாடல் அல்ல” - யூசுப் இஸ்லாம் உரை! 1202.1985ம் ஆண்டு கொழும்பு வெள்ளவத்தை இராமக் கிருஷ்ண மிஷன் மண்டபத்தில் யூசுப் இஸ்லாம் அவர்கள் உரையாற்றினார்கள். அதில் ஒன்று! நீங்கள் அழகான குரல் உடையவர். அந்தக் குரலால் குர்ஆனை இசைத்துக்காட்டுங்கள் என்றனர் உங்கள் கருத்தைத் திருத்திக் கொள்ளுங்கள் அல்குர்ஆன் பாடப்படுவதற்குரிய ஒன்றல்ல. 'ஸரிங் பண்ணிக் காட்டி ஓத விழைவது அறிவீனம். அல்குர்ஆன் ஓதப்படுவதற்கான ‘ரிசைட்டிங்" என்று கூறவேண்டும் என்று சொல்லிவிட்டு தஜ்வித் முறைப்படி அல்குர்ஆனை யூசுப் இஸ்லாம் அழகாக ஓதிக் காட்டினார் ஆச்சரி யத்துடன் அந்த சபையினர் செவிசாய்த்தார்கள். ஒன்று : காலம், இடம், சூழல என்பவற்றைக் கவனித்தல் ஜூனையித் என்ற பெரியார் கூறினார். சிறந்த இசையைக் கேட்பதற்கு மூன்று விடயங்கள் தேவை. அம்மூன்றும் அரங்கொன்றில் இடம்பெறவில்லை யானால். அவ்விசையைக் கேட்கக் கூடாது. அது காலம், இடம், துழல் என்பவயாகும் என்றனர். அன்னார் கூறியதின் அர்த்தம் இசையை கேட்க வேணர்டிய நேரத்தில் மாத்திரமே இசையைக் கேட்க வேண்டும். சாப்பிடும் நேரம், அது. சாப்பாட்டிற்கு மட்டுமே. சாப்பாட்டை விட்டு விட்டு இசை கேட்கக் கூடாது. ஒரு விடயத்தில் மூளையை முடக்கிக் கொணர்டிருக்கும் போதும் இறை வணக்கத்தில் ஈடுபாடு கொள்ளும் நேரத்திலும், அது அத்தனையையும் உதறித் தள்ளிவிட்டு இசையில் மூழ்குவது எந்த வகையிலும் அறிவு ரீதியாகப் பொருந்தாது. தன்னுடைய மனநிலை பிறிது ஒன்றில் பிணைந்தபடி இசையைக் கேட்கும் எணர்ணப்பாடு இல்லாத போது அதைக் கவனித்தே கருமமாற்ற வேணர்டும். இல்லையெனில் காலத்தை கணிக்காத செயலாக முடியும். இடம் : இசை அரங்கத்தில் கலந்துகொள்ளும் பழக்கமுடையோர் மனதை இசை ஈர்த்தாலும், இல்லா விட்டாலும் அரங்கம் செல்வதைத் தவிர்க்க வேண்டும். அது கால விரயமாகும்.
Page 70 சூழல் பக்கத்து நண்பர்கள் மூலம் இசை அரங்கில் இசை கேட்பது சற்று தடைப்படும் சாத்தியம் உணர்டு. இசை கேட்பது சிலருக்கு வெறுப்பைத் தரும். சிலருக்கு வெளி வாரியான பக்தியைத் தோற்றுவிக்கும். இன்னும் சிலர் யதார்த்த உணர்வற்று காணப்படுவார்கள். அதே போல். போலி ஞானிகள் இசையைக் கேட்டுவிட்டு மெய்ஞ்ஞானி போல நடிப்பார்கள். இவர்களின் பக்கத்தில் இருந்தாலும் இசையை சரியாகக் கேட்கவும் முடியாது. ரசிக்கவும் முடியாது. காலம், இடம், சூழல் மூன்றும் அமையாத இசை அரங்குகள் சாதகமாக அமையவில்லையானால். அந்த இசையைக் கேட்பது தவிர்க்கப்பட வேண்டிய ஒன்றாகும். 'அல் அதபுத்தானி" ஒழுக்கத்துடன் உடன்படும் விதி கட்டம் இரண்டு N இசை கேட்பதை அங்கு உள்ளவர்களின் நலன் கருதி கைவிடுவதாகும். சீடர்களின் உள்ளக் கிடக்கையைப் பாதிக்கும் என கருதும் குருவானவர் - அவர்கள் முன்பதாக இசை கேட்பதைத் தவிர்த்தல் தரமானது. அப்படி இசை கேட்பதை விடமுடியாத - விடாச் சூழல் ஏற்பட்டால். சீடர்களின் சிந்தனைப் போக்கை வேறு பக்கம் திருப்ப குரு நடவடிக்கை எடுக்க வேணடும். குரு - சீடருடன் இருந்து இசை கேட்பதால் - சீடர்களின் மனசுக்கு மூன்றுமுறையில் பாதிப்பை ஏற்படுத்துகின்றது. ஒன்று :-இறைவனின் பாதையில் அடிமட்டத்தில் இருக்கும் சீடர்கள் முதல் பகுதியைச் சேர்ந்தவர்கள். வெளிரங்கமான சடங்குக்காரர்கள் பெரிய அளவான அறிவு. ஆற்றல் அற்றவர்கள். இவர்களுக்கு இசை கேட்கும் ஆற்றல் இருப்பதில்லை. இவர்களை இசை கேட்க வைப்பது, தெரியாத விடயத்தில் திசைதிருப்பியதாக மாறும். இச்சையை உணருகின்ற ஆற்றல் இல்லாத இவர்கள் விளையாட்டுக்கோ, பொழுதுபோக்குக்கோ இசையைக் கேட்கமாட்டார்கள். இவர்களுக்கு இசை எதற்கு? வேறு ஏதாவது காரியம் பொருந்தும். அதில் ஈடுபடுவது சிறப்பானது. இரண்டு :- இசையை கேட்டு, ரசிக்கும் இயல்புடைய சீடர்கள் - இத்தகையவர்களின் மனநிலை உலக விடயங் களில், உச்சகட்ட இச்சையில் உந்தப்பட்டு உடலை நாடுவதும், காம உணர்வுகளில் களைகட்டி நிற்பதும் இயல்பாகிவிடும். தீய செயல்களில் இறங்கும் மனநிலை தடுத்துக் கொள்ளக் கூடிய தன்னடக்கம் இல்லை. இந்நிலையில். அவன் பாடல் கேட்கத் தொடங்கினால். வீணர் காமம். கேளிக்கைக்கு அவனை அழைத்துச் செல்லும். மெய்ந்நிலையின் வழி அவ்வளவுதான்! மூடப்பட்டு விடும் இத்தண்மையிலுள்ள சீடர்களை இசை கேட்பதை தடுக்க குரு பாடுபட வேண்டும். மூன்று:-ஒரு சீடன் ஆசைகள் அனைத்தும் நறுக் கப்பட்ட நிலைப்பாட்டில் ஒழுக்கம் தவறாதநிலையில் திசை மாறாத நிலையில். உன்னிப்பான உத்தரவாதம் பெறும் போது. இறைவனினர் தனர் மைகளையும் அவனது "அஸ்மாக்களான” பெயர்களையும், இயல்புகளையும்
Page 71 இன்னது என எண்ணி உணர முடியாத நிலை. இசை கேட்கும் அவனால் இறைவனின் அனுமதிக்கப்பட்ட, அனுமதிக்கப்படாத பேச்சு எவை என்ற ஆற்றல் இருக்காது. அதனால அனுமதிக்கப்படாததை அரவணைத்துக் கொள்வான். அனுமதிக்கப்பட்டதை அருகே அணைக்கவும் தவறிவிடுவான். இவன் இசை கேட்பதில் என்ன நன்மை இருக்கிறது? அதைவிட, இறை நம்பிக்கை அற்று பாவத்திற்கு பங்காளியாகிவிடுவான் என்ற பயமே அதிகரிக் கின்றது; பல்கிப் பெருகுகின்றது. ஸஹற்ல் என்ற பெரியார் கூறுகின்றார். "அருள் மறைக்கும் அணிணல் நபிக்கும் ஒத்து வராத எந்த மெய்ந் நிலையும் மிகவும் தவறானதாகும் என்பதாக இத்தகைய உணர்வு அற்றவன் இசையைக் கேட்பது நல்ல விடயமாக அமையாது. உலகாயுத உணர்வுகளில் ஊத்தையைத் தனதாக்கிக் கொண்டவர்களும், வெறும் காமக் களிப்பில் தன் உணர்ச்சிகளை கிளர்ந்தெழச் செய்து ஆசை உணர்வு களுக்குள் ஆழம் காண ஆசைப்படுபவர்களும் இசையைக் கேட்பது முற்றிலும் தவறானதாகும். இத்தகைய உணர்வு களுக்கு தன்னை வயப்படுத்திக் கொண்டவர்கள் மார்க்க விடயங்களிலிருந்து விடுபடுவார்கள்; தூய்மையான உள்ளப் பாங்கிலிருந்து தூரப் போவார்கள். இக்கால கட்டத்தில் நேரான பாதை, ஒழுக் கத்துடன், கூடிய இறை பாதை எல்லாம் மூடப்பட்டுவிடும். இத்தகையவனர் இசையைக் கேட்பது இறை பாதை யிலிருந்து இவனை இறக்கி விடும் தலமாகத் தடம் பதிக்கின்றது. சமயத்திலிருந்து சறுகிப் போகாமலிருக்க உறுதி யற்ற உள்ளமுடையவர்களும், மிகப் பலவீனமானவர்களும் கணிடிப்பாக இசை கேட்காது காக்கப்பட வேணர்டிவர்களே! ஜாக்கிரதை! ஜூனையித் என்ற பெரியார் கூறுகின்றார். "நான் கனவு கணி டேனர். அதில் ஷைத்தானைக் கணர் டேனர். அவனிடம் "இறை நேசர்களிடம் நீ எப்பொழுதாவது முழுமையாக அவர்களை முடக்கியது உணர்டா?” என்றேனர். "ஆம்" என ஷைத்தான் இரண்டு சந்தரப்பத்தை எடுத்துரைத்தான். ஒன்று : இசை கேட்கும் நேரம், மற்றது : மார்க்க விடயங்களில் மல்லுக்கட்டி தர்க்கம் பணினும் போதும் அங்கு மெல்ல ஊடுருவுவேன் என்றான். இக்கருத்தை ஜூனையித் முன்வைத்ததும் - இதைக் கேட்டுக் கொணர்டிருந்த ஞானி ஒருவர் - ஜூனையித் அவர்களைப் பார்த்து நான் ஷைத்தானைக் கணிடிருந்தால் "இசை கேட்கும் போது இறைவனிடமிருந்தே கேட்கின் றேன். மார்க்க விடயத்தில் விவாதிக்கும்போது இறைவனின் செயல்பாட்டிலேயே ஈடுபடுகின்றேனர். மடையனே! ஷைத்தானே! இத்துணை வலிமைகள் கூடிய ஒருவர் மேல் உன்னால் எப்படி ஊடறுத்து ஆதிக்கம் செலுத்தமுடியும் என கேட்டிருப்பேனி என்றார். அப்போது ஜூனையித் என்ற பெரியார் “ஸத்தக்த” உரைத்தது எல்லாம் உணர்மை” என்றார். ஒழுக்கச் செயலின் விதி அல்அதபுத் தாலித் கட்டம் 03 இசைத் துறையில் பாடகன் பாடுவான். இதனை ரசிகன் கவனமாகக் கேட்க வேண்டும். மெய்ந்நிலை அடைப
Page 72 வர்களின் ரசனையைப் பார்க்க வேணர்டும். அங்க அசைவுகளை நகர்த்தும் விதத்தை பார்க்க முற்பட்டு, கவனத்தைக் கலைத்து விடக் கூடாது. தன் முழுக் கவனத்தையும் அப்படியே ஒப்புவித்து இறை அருளால் ஏற்படும் எணர்ண உணர்வுகளை ஏந்தக் கூடிய நிலையில் இதயத்தை இழி நிலைகளிலிருந்து காத்துக் கொள்ள வேணர்டும். மற்ற இரசிகர்களின் மனம் புணர்படாதபடி அங்க அசைவுகளை அடக்கி அமைதியுடன் அமர்ந்திருக்க வேணர்டும். கொட்டாவி விட்டு, இருமி இரைச்சலை ஏற்படுத்தாது அமைதியுடன் அமரவேண்டும். சிந்தனையின் போது சிரசை வைத்துக் கொள்வது போன்று - மனதை எங்கோ கைவிட்டவன் தலையை கீழே போடுவது போன்று இசையைக் கேட்க வேண்டும். கை தட்டி, எழும்பி ஆட நினைப்பதும், மற்றவர்கள் பெரிய ரசிகன் என்று எண்ணுகிற அளவுக்கு புகழ் சேர்க்க நினைப்பதும் தவிர்க்கப்பட வேண்டும். இரு பாடல்களுக்கிடையில் ஒரு சிறிய இடைவேளை கிடைக்கும். அதற்கிடையில், அவசியமில்லாத அனுபவப் பேச்சுகளிலிருந்து ஒதுங்கியிருக்க வேணடும். மன மகிழ்ச்சியுடன் மெய்ந்நிலையைக் கண்டுகொண்டு தனக்கே தெரியாத அளவுக்கு இச்செயல்கள் வெளியாகி விட்டால் மண்ணிக்கப்பட வேண்டியதே! ஆயினும். சுய உணர்வு ஏற்படும் போது. இசை ரசிகன் அமைதிபெற வேண்டும். நீண்ட நேரம் மெய்ந்நிலையில் நீடிக்கவில்லை என மற்றவர்கள் சொல்லி விடுவார்கள் எனர்று "ஹயா” வெட்கத்துடன் - மெய்ந்நிலை நீடித்ததாக, மெய்ஞ்ஞானி போல் நடிக்கவும் கூடாது. அடுத்தவர்களைத் திருப்திப் படுத்த ட்ராமா போடவும் கூடாது. இஸ்லாமிய இசை ரசிகனின் ஒழுக்கம்! ஜூனைத் என்ற பெரியாருடன் ஓர் இளைஞன் நல்ல நட்புடன் பழகினான். அவ்விளைஞன் எங்கெல்லாம் இறைவனின் பெயர் உச்சரிக்கப்படுகின்றதோ அவ்விடத்தில் அழுவான். ஆர்ப்பரிப்பான். இந்த இளைஞனைப் பார்த்து பெரியார் ஜூனைத் கூறினார்கள்; எனினுடனர் நட்பு வைப்பதாயின் இப்படி கடுமையாகக் கதறி அழக்கூடாது என்றனர். அதன்பின் அவ்விளைஞன் இறைபெயரைக் கேட்டாலும் மயிர்கணிகளில் வியர்வை சொட்டினாலும் ஆ! என்று அழமாட்டானர். உணர்ச்சிகளை உள்வாங்கிக் கொள்வான். இந்த உணர்வு அடக்கத்தில் ஊன்றிவிட்ட மதீனாவில் இரவில் மனாகிப் பாடல் மழை புனித மதீனாவில் நபிகள் நாயகம் (ஸல்) ஸயாரா பக்கத்தில் ஜன்னதுல் பகீயின் மிக அருகே இருந்தவாறு ஈரானியர்கள் இரவு வேளையில் பாத்திமா நாயகி (ரலி) , ஹலன் (ரலி) போன்றோரின் துயரங்களை மனாகிப் பாடல்களாகப் படித்து அழுவார்கள். லட்சக் கணக்கான வர்கள் பங்கேற்பார்கள்.அனைவரும் ஈரானியர்களே.
Page 73 அவன் - மெய் உணர்வு ஏற்பட்ட போது தனக்குள்ளேயே அடங்கி தடுத்துக் கொணர்ட போது. விக்கினான். விழி பிதுங்கினான். அவன் இதயம் வெடித்தது. அக்கணமே அவனது உயிர் பிரிந்துவிட்டது. முந்தைய நபி மூஸா (அலை) பற்றிய ஒரு வரலாற்றுச் சம்பவம்! “இஸ்ராயீலின் கூட்டத்தினருக்கு பழைய கதைகளைச் சொல்லிக் காட்டுவதுணர்டு. கதையை நன்றாகக் காது கொடுத்துக் கேட்டுக் கொணர்டிருந்த ஒருவன் திடீரென எழுந்து உடைகளைக் கிழிக்க ஆரம் பித்தான். அப்போது மூஸா (அலை) அவர்களுக்கு இறை வசனம் இறங்கியது. அது இப்படி இறங்கியது. மூஸாவே நீர் கூறுவீராக! எனக்கு உங்களுடைய மனதை அர்ப்பணியுங்கள் உங்களுடைய உடைகளை அல்ல” என்பதாக! "மக்கள் கூட்டம் ஒன்று சேரும் ஒரு மகிழ்ச்சியான இடம். அங்கு பாடல் பாட ஒருவன் இணைந்து விட்டான். அப்போது வீணர் கதைகளில் நேரத்தைக் கழிக்காமல் அப்பாடலில் கவனம் செலுத்துவது நல்லதென நான் அறிவுரை கூறுவேன்” என அபுல் காஸிம் அந் நஸ்ராபாதி என்பவர் எடுத்துரைத்தார். இதற்கு இன்னு மொரு அறிஞர், அபூஉமர் என்பார் இப்படிக் கதைவிட்டு கருத்தை உருக்கினார். "ரசிக்கலாம்; கவிதையைக் கேட்கலாம். ஆனால். கேட்பது போல் நடிப்பது (தன்னிடம் இல்லாத மனப்பாங்கை இருப்பதாக எடுப்பாகக் காட்டுதல்) முப்பது வருடங்களுக்கு வெளிச்சம் போட்டு பேசுவதைவிட கீழ்த்தரமான செயல் என்றார். இசை கேட்டு இரசிக்கும் மனிதன் சிறந்தவனா? இசையைக் கேட்டு எடுப்பே இல்லாதவன் சிறந்தவனா? இக்கேள்வி எங்கும் எவருக்கும் ஏற்படுகின்ற ஒன்றே! வேளா வேளைக்கு கேட்கும் பாடல்களில் உணர்ச்சிகளை அப்படியே வெளிக் கொணரும் அமைப்பு (உணர்ச்சிகளை உற்சாகப்படுத்தும் சக்தி) குறைந்த அளவிலும் இருக்கும். அது பாடல்களின் குறைபாடே தவிர ரசிகர்களின் குறைபாடாகக் கொள்ள முடியாது. வேறு சந்தர்ப்பங்களில் இசை உச்ச கட்டம் அடையும் அளவுக்கு மெய்ந்நிலையும் ஓங்கியிருக்கும். உணர்ச்சியின் உச்சகட்ட அளவுக்கு அங்க அமைப்புக்களில் அடக்கம் வருமானால் அவனது மெய்ந் நிலை வெளிச்சத்துக்கு வராமலே இருந்து விடும். இன்னு மொரு அமைப்பாக இறை நேசர்களின் மனசு பக்குவ மடைந்து காணப்படும். எத்தகைய மன நிலையிலும் இறை உச்சகட்ட மெய்ந்நிலையில் சொக்கிப் போய் இருப்பார்கள். இவர்களுக்கு இசை என்ன ஆட்டம் போட்டாலும் அவ்வளவு எளிதில் அவர்களது மனதில் உச்சகட்ட இசைத்தாக்கத்தை உணர்டுபணிண முடியாது. காரணம் அவர்களது மனசு மெய்ந்நிலையில் கட்டுணர்டு இருக் கின்றது. அது முழுமையான நிலை. இதே வேளை பன்முகப்பட்ட உணர்வு நிலைகளில் ஒரு மனிதனுடைய மெய்ஞ்ஞான நிலை தொடராது. தொடர்ச்சியாக மெய்ந் நிலையில் நிலைப்பவனி இறை தத்துவத்தில் தன்னை அமிழ்த்தி, அதிலேயே லயித்துப் போய்விடுவான். இத்தகையவனின் மனோபாவம் உறுதியாக இருக்கும். புதிய மாற்றங்கள் மனதில் புகுந்து மாற்றிவிடாது. அபூபக்கர் ஸித்தீக் (ரலி)யின் அறிவுரை அற்புதமாக அமைந்து இருக்கினர்றது. "உங்களைப் போனர்றே நாங்களும் இருந்தோம். பின்னர் எங்கள் மனசு வலிமை பெற்றுவிட்டது” என்றனர்.
Page 74 அல்குர்ஆனின் கருத்துக்களை அடிக்கடி கேட்டுக் கொணர்டிருப்பதால். மனம் எந்த நிலைப்பாட்டில் இருந்தாலும் மெய்ந்நிலையைத் தக்கவைத்துக் கொள்ள போதிய திட்டத்தைப் பெற்றுக்கொள்கின்றது. நேரத்துக்கு நேரம் ரசனை லயிப்பின் உணர்வைப் பெற அலகுர்ஆன் புதிதாக இறங்கிக் கொண்டிருக்க வில்லை. ஆரம்பத்திலிருந்தே அணிணல் நபி (ஸல்) அவர்களுக்கு அருள்மறை இறங்கிவிட்டது. அந்த மறையைக் கேட்கும் போதெல்லாம் மெய்ந்நிலையை சுகித்ததனாலேயே மேற்கணிடவாறு கூறலானார்கள். மெய்ந்நிலை, உடல் அசைவுகளை உற்சாகப்படுத்தி நிற்கிறது. மறுபுறத்தில் பகுத்தறிவின் பலமும், மன அடக்கத்தின் பலமும் அதனை தடுத்துநிற்கின்றது. இருபுற பலப்பரீட்சையில் ஒன்று வெற்றி பெறும். வெளிவாரியான பலம் வேகமாகவும், தன்னடக்கம் பலவீன மானதாகவும் இருந்தால் அதற்கு ஏற்றவாறு மெய்ந்நிலை முழுமை பெறும். அல்லது குறைபாடாக அமையும். எனவே இசையில் பூரண ரசனை கொண்டு, ஆவேசமாக பூமியில் சாய்வான். அசைவில்லாத அமைதி இவர் ஒரு மெய்ஞ்ஞானியைவிட பெரியளவு மெய்ஞ்ஞானத்தை சுகித்ததாக எணர்ணக் கூடாது. இன்னுமொரு புறம் அமைதியாக இருப்பானி. பரபரப்புடன் துடிப்பவனை விட முழுமையான பேரின்பத்தை அடைந்தவனாகத்திகழ்கின்றான். பெரியார் ஜூனையித் என்பவரினர் ஞானவழிப் பாதையின் ஆரம்பக் கட்டம். இசையை ரசிப்பார். மிகவும் ஆவேசமாகத் தன்னை அசைப்பார். ஆயினும். காலப் போக்கில் அத்தகைய நிலைமாற்றமடைந்து விட்டது. இதனைக் கணிட மக்கள் கூட்டம் ஜூனையித் அவர்களை பலவாறு விமர்சிக்க ஆரம்பித்தார்கள். அந்தக் கட்டத்தில் பதில் இறுப்பதற்காக - விளக்கம் கொடுப்ப தற்காக அல்குர்ஆன் வசனங்களை ஒதிக் காட்டுவார்கள். அவ்வசனம் “நீர் காணும் மலைகள் - அவை வெகு உறுதியாக இருப்பதாக எணர்ணிக் கொணர்டிருக்கின்றீர். (எனினும் அந்த நாளில்) அவை மேகத்தைப் போல (ஆகாயத்தில்) பறந்தோடும் ஒவ்வொரு பொருளையும் (படைத்து) உறுதியாக ஒழுங்குபடுத்திய அல்லாஹற்வுடைய கலைத்திறனால் (அவ்வாறு நடைபெறும்) நிச்சயமாக அவன் நீங்கள் செய்து கொணர்டிருக்கும் யாவையும் நன்கு அறிந்தவனாகவே இருக்கின்றான்” (அல்குர்ஆன் 27-88) மெய்ந்நிலை தோன்றுகின்ற போது மெய் உலகில் ‘மல கூத்தில்" சஞ்சரித்தாலும் உடலினர் உறுப்புகள் தன்னடக்கத்தால் மிக அமைதியாகத் தொழிற்படும். ஒரு சம்பவம் :- நான் பஸராவில் இருக்கும் போது அறுபது வருட காலம் ஸஹற்ல் இப்னு அப்துல்லாஹற் என்பவர்களுடன் பழகியிருக்கின்றேன். அல்லாஹற்வினர் அருள் நாமத்தின் அழைப்பொலி கேட்டோ, அல்குர்ஆன் வசனங்களைக் கேட்டோ அவரின் உடல் உறுப்புக்கள் உசும்பவில்லை. ஆயினும். அவருடைய இறுதி மரணத்தருவாயில். "இன்றைய தினம் உங்களிடமிருந்தோ அல்லது (உங்களைப் போல அல்லாஹர் வை) நிராகரித்தவ ரிடமிருந்தோ (உங்களுக்குக் கிடைக்க வேணர்டிய வேதனைக்குப் பதிலாக) யாதொரு பரிகாரத்தையும் பெற்றுக் கொள்ளப்பட மாட்டாது. நீங்கள் செல்லும் இடம் நரகம்தான். அதுதான் உங்களுக்குத் துணை! அது தங்குமிடங்களில் மகாக்கெட்டது. (அல்குர்ஆன் 57-15)
Page 75 இந்த வசனத்தையும், ஏனைய சில வசனங்களையும் ஒதிய போது அவர் உடல் நடுங்கி கீழே சரிந்தார். அவர் பழைய நிலைக்குத் திரும்பிய போது. “உடலில் நடுக்கமும், உறுப்புக்களில் அசைவும், எப்போதும் உங்களுக்கு ஏற்படவில்லையே. இப்போது அப்படி ஏற்படுவதற்குக் காரணம் எனின?” எனறு கேள்விக் கணையைத் தொடுத்தேனர். அதற்கு அன்னார் “நணர்பரே! நாம் பலகீனமடைந்து விட்டோம்” என்றார். அருள் மறை அல்குர்ஆனில் இன்னுமொரு இடத்தில் “அந்த நாளில் உணர்மையான ஆட்சி ரஹற்மான் ஒருவனுக்கே இருக்கும் (அது) நிராகரிப்போருக்கு மிகக் கடினமான நாளாகவும் இருக்கும்” (அல்குர்ஆன் 25-26) இந்த வசனத்தை செவிமடுத்த போது ஸ்ஃல் இப்னு அப்துல்லாஹற் பரபரப்படைந்தார். பக்கத்திலிருந்த நண்பர் இப்னு ஸாலிம் பரபரப்புற்ற காரணத்தை வினவினார். “நான் பலகீனமடைந்து விட்டேன்” என்ற அதே பதிலையே சொன்னார்.அருகே அமர்ந்திருந்தவர்கள் விட்டபாடில்லை; தொட்டனர்; தொடுத்தனர். “பலகீனத்தின் நிலை இது வென்றால் மனப் பலம் என்பது என்ன?” என்றனர். அதற்கு அவர்கள் "தன் பலம் கூடியும் நின்று பிடிக்க முடியாத மெய்ந்நிலை அதைத் தாங்கி வர சக்தியும் பலமும் கிடையாது என்ற பாங்காகும். எவ்வளவு பலமுள்ளதாக உஷாரான நிலையில் இருந்த போதும் வெளிவாரியான மாற்றங்களைத் தோற்றுவிக்க முடியாது என்றனர். இதனை “அபுல் ஹஸன் முகம்மத் இப்னு அவற்மத்” பிரஸ்தாபித்தார். அவர் பேச்சின் தொடரில். மெய்ந்நிலையின் போது மனித உறுப்புக்களைக் கட்டுப்படுத்தக் காரணம் “தொழுகைக்கு முன்னரும், பின்னரும் ஒரே மாதிரியான - ஒரே நிலைப்பாடான மன நிலையே எனக்கு உணர்டு என ஸ்ஃல் கூறினார். எப்போதும், எல்லா நிலையிலும் இறைவனுடன் ஐக்கியப்பட்டு தொடர்புடையவராகவே ஸ்ஃல் காணப் பட்டார்கள். இறை நிலைப்பாட்டை அச்சப்பட மிகவும் பேணினார்கள். அந்தநிலையைத் தக்க வைத்துக்கொள்ள மிகவும் முயன்றார்கள். ஆகையால். இசையைக் கேட்பதற்கு முன்பும், இசையைக் கேட்ட பினர் பும் ஒரே வகையான மனநிலையைப் பெற்றிருந்தார்கள். அவரின் மெய்ந்நிலை மாறவில்லை. இசையைக் கேட்டுத்தானி மெய்ந்நிலை ஏற்பட்டது பகிரங்கமான இசை முயற்சி பதன்மூன்றாம் நூற்றாண்டில் மெளலானா ஜலாலுத்தீன் ரூமிஅவர்கள் மெளலவியா என்ற இயகத்தைத் தோற்றுவித்து இசை வளர்ச்சிக்குப் பாடுபட்டார்கள். பிந்தக் கோரஸின் கோட்பாடுகளை மையமாகக் கொண்ட ஒரு வகையான இசையை ஆராய்ந்தனர். இவர்களின் முரிதீன்கள் இசை வாசித்து ஞானியாகி முக்தி நிலை 6ിuസ്ത്രണ്.
Page 76 எண்பதல்ல. இசையைக் கேட்பதால் மெய்யறிவு பெருக் கெடுத்தது என்பதுமல்ல. மெய்ந்நிலையில் தொடர்பை தொடர்ந்து சுகித்துக் கொணர்டே இருந்தார்கள். இசைக்குள் சஞ்சரிக்கும் இஸ்லாமிய ஞானவான்கள்! மிம்ஷாதுத் தீனவரி என்பவர் ஒரு கூட்டத்தினரைக் கணர் டார். அங்கே ஒரு பாடகனும் இருந்தான். மிம்ஷாதைக் கணிடதும் பாட்டுநின்றுவிட்டது. அனைவரும் அமைதியாக இருந்தனர். இதனை அவதானித்த மிம்ஷாத் சபையோரைப் பார்த்து, ஏன் இந்த அமைதிநிலை? என்றார். மெளனம் வேணர்டாம் இசையைத் தொடருங்கள் என்ற துடன் இவ்வையத்திலுள்ள எல்லா இசைக் கருவிகளையும் எண் முன்னே இசைமீட்டினாலும் எனது தியானநிலை கலையாது. எனக்குள் ஆட்சி செய்யும் உணர்ச்சிகளும் கூட உங்களுக்கு வெளித்தோன்ற மாட்டாது என்றார். "மெய்ந்நிலையில் குறைபாடு இருப்பினும், ஆத்ம ஞானம் அதிகமாக இருக்குமானால் அதில் குறை ஏற்பட வழியில்லை. ஆத்ம அறிவியல் சிறப்பு, மெய்ந்நிலையை விட நிறைவானது” என அல்ஜூனையித் என்ற பெரியார் கூறினார்கள். “மெய்ந்நிலையில் தனது இதயத்தைத் தாரை வார்த்த வர்கள் இசை நிகழ்விற்குப் போக வேண்டுமா? இசையில் ஆர்வம் கொண்டு அவர்கள் செல்வது ஏன்?” எனக் கேட்க இடமுணர்டு. எப்பொழுதும் தன்னிடம் மெய்ந்நிலை நீடிக்கும் என எணர்ணியவர்கள் இறைஞானிகள் இசை ரசிப்பதை விட்டு விட்டார்கள். தத்துவத்தின் தராதரத்திற்கு வராத பல நணர்பர்களை மனமகிழ்வதற்காக, அவர்களுக்கு உறு துணையாக இருக்க வேணடும் என பதற்காக - எப்போதாவது ஒரு தடவை இசையைக் கேட்கின்றார்கள். மெய்யடைந்த மனதுடன் அல்ல. மெய்நிலைப்பாட்டின் முழுமையான தத்துவம் மற்ற வர்களுக்கு தெளிவாக வேண்டுமென்றும், ஆத்மீகத்தின் முழுமையை மக்களுக்குத் தெளிவுபடுத்த - அது வெறும் ஆர்ப்பரிப்பு அல்ல என்பதை உணர்த்தும் நோக்குடன் - இசைநிகழ்வுகளுக்கு வருகின்றனர். 13ம் நூற்றாண்டில் முஸ்லிம்கள் கண்டுபிடித்த இசையின் சுரவரிசைத்திட்டம் 10ம் நூற்றாண்டு முதல் 13ம் நூற்றாண்டு வரை அரபிகளின் இசை குறியீட்டு முறையை பதிவு செய்யவில்லை. இசைத் திருட்டை அஞ்சி கைவிட்டனர். ஆயினும் 13ம் நூற்றாண்டில் ஷபீபுத்தீன் அல்உர்மலி என்பவர் தமது சகாவான ஷர்புத்தீனுக்கு கடிதம் மூலமாக இசையின் சுரவரிசைத் திட்டத்துக்கு வழிசமைத்தார். இதன்மூலம். அராபிய, துருக்கிய இசையின் சுரவரிசைத் திட்டத்தையும் புதிய வடிவங்களான 'மகாம் நிலை என்ற சொல்லை அறிமுகம் செய்யும் நிவையையும் அறிமுகம் செய்தார். அரபு இசையின் பாரம்பரியம் இன்று வரை சுரம், சத்தம் மாற்றம் இருப்பினும் கலை, இசை வடிவம் பேணப்படுகின்றது.
Page 77 உலக விவகாரங்களில் அதிகமாகத் தன்னை ஈடுப டுத்திக் கொள்வதை தவிர்க்கக் கூடிய மெய்ந்நிலை பூரணத் துவம் பெற்றவர்களை அனைவரும் பின்பற்றி நடக்க முடியாது. ஆனால் அவர்களின் ஆத்மீக சீடர்கள் அவர்களின் அங்கத் துடிப்புக்களை அடக்கிவிடும் விதம் குறித்து அறிந்திருக்க வேண்டும். இப்படியான செய்கைக்காக பல துபிகள், ஞான வான்கள் இசை அமர்வுகளுக்குச் செல்வார்கள். இறை அன்பில் லயித்துப் போய்விட்ட மெய்ந்நிலை கணிட ஞானவான்கள் சாதாரண மக்களுடன் சகவாசம் வைத்து சகஜமாகப் பழகினாலும். அவர்களின் உடல் மட்டுமே இவர்களுடன் ஒன்றிக்கிறது. உள்ளமும், உணர்வு களும் வெகு தூரத்திலிருக்கின்றன. இசை அமர்வுகளுக்கு வராதவர்களைப் பார்த்து - சிலர் இசை மன்றங்களுக்கு வருவதில்லை. இசை சரியில்லை என்று தானே அவர்கள் போவதில்லை. இது இவர்கள் எடுத்துக் கொணர்ட காரணம் உணர்மை அப்படி யல்ல.மெய்ந்நிலையில் அவர்கள் லயித்துப் போயிருப்பதால் இசை கேட்க வேணர்டும் என்ற அவசியம் இருப்பதில்லை. இன்னும் சிலர் “ஸஅஹற்த்” துறவறம் பூணர்டவர்கள்! இவர்களுக்கு ஆத்மார்த்த அனுபவங்கள் அகல விரிவதில்லை. பாட்டுப் பிடிக்காது. ஆட்டமும் பிடிக்காது. அப்படியொரு நிலை தேவையில்லாத ஒன்றில் ஏன் ஆவல் கொள்ள வேணர்டும் என அவர்கள் நினைப்பதுணர்டு. சிலர் சீரான நணர்பர்கள் வாய்க்காததால இசை கேட்கப் போவதில்லை. ஒரு ஞானவானிடம் "ஏன் இப்போது இசை நிகழ் வுக்கு போவதில்லை?” என்ற போது. “பாட்டை எவர்களி மிருந்து கேட்கலாம் - யாருடன் இருந்து கேட்கலாம் என்பத னால்தானி என்றார். இசை ஒழுக்கத்தின் நான்காம் விதி இசை நிகழ்வில் ரசனை கொள்கின்ற ஒருவருக்கு சந்தோஷத்தில உச்ச கட்டத்தாலும், துயரத்தினர் தூணர்டுதலாலும் அழுகை வந்துவிடும். கணர்கள் கலங்கி கணிணிர் வந்துவிடும். அழகை வரும் போது அடக்கிக் கொள்ள வேண்டும். மற்றவர்களுக்கு நடிப்பதற்கு அல்ல உயர்ந்த மெய் நிலையைக் கணிடவர்களுக்கு அழுவதும், ஆடுவதும் ஆகுமாக்கப் பட்டதேயாகும். அழுகையை ஆட்கொள்ளுதல் துக்கத்தைத் துரணர்டி நிற்கின்றது. சனி மார்க்கம் அனுமதித்த சந்தோஷத்தால துT ன ட ப படும எந த அ ங் க அ ைச வுகளும அனுமதிக்கப்பட்டதே! ஆடல், பாடல் என்பது மார்க்க முரணானதாக இருப்பின் மஸ்ஜித் ஒன்றில் மாநபி (ஸல்) அவர்களுடன் இருக்கும் போது அபீஸினியர்கள் ஆடிப்பாட, அண்ணல் நபி (ஸல்) மனைவி ஆயிஷா நாயகி ரசித்திருக்கமாட்டார்கள். நல்ல செய்திகளைக் கேட்டு நபித்தோழர்களே சந்தோஷத்தால் குதித்தார்கள். என்பது ஆயிஷா நாயகி அவர்களின் அன்பான வார்த்தைகள் மூலம் தெளிவாகின்றது. ஹம்ஸா (ரலி) அவர்களின் மகளைப் பற்றி வரலாறு ஒன்று உணர்டு அது என்ன வென்றால். "நான் அவளை வளர்ப்பேன்” “நான் தானி அவளை வளர்க்க வேணர்டும்”
Page 78 என்று ஜஃபர் (ரலி) ஸைத் (ரலி)இப்னு ஹாரிதா (ரலி) ஆகியோர் தமக்குள் சணர்டையிட்டுக் கொணர்டனர். இவர்கள் இருவரும் அலியிப்னு அபீதாலிப் (ரலி) யின் சகோதரர்கள். இருவரின் அண்புச் சணர்டை முற்றிய போது. நாயகம் (ஸல்) அவர்கள் அலி (ரலி) அவர்களைப் பார்த்து நீர் நம்மைச் சேர்ந்தவர் நாம் உம்மைச் சேர்ந்தவர் என்றார்கள். சந்தோஷத்தில் துள்ளினார்கள் அலி (ரலி) உடனே சகோதரர் ஜஃபரை நோக்கி. “எனர்னைப் போன்றே உனது உள்ளும் புறமும் இருக்கின்றது” என்றார்கள். இதனை செவியினால் உள்வாங்கினாரோ தெரிய வில்லை. உடனே சந்தோஷத்தால் துள்ளினார். அவ்வளவு தானி ஜஃபர் தன் சகோதரர் ஸைதைப்பார்த்து “சுதந்திரமான எனது சுத்தமான சகோதரன் நீ” என்றனர். சந்தோஷம் ஊற்றெடுக்க ஸ்ைதும் துள்ளினார். அவருடன் ஜஃபரும் துள்ளினார். இந்த வேளையில்தான் நாயகம் (ஸல்) தீர்ப்பை முடித்தார்கள். “குழந்தை ஜஃபரிடம்தான் வளர வேண்டும். ஜஃபரின் மனைவி குழந்தையினி சிறிய தாயாவார். அப்பெணி, தாயைப் போன்றவர்களே!” என நபி (ஸல்) தீர்ப்பை முடித்தார்கள். (துள்ளி சந்தோஷத்தை வெளிப் படுத்த முடியும்.) நாயகம் (ஸல்) அவர்கள் அன்பு மனைவி ஆயிஷா நாயகியிடம்அபீஸினியர் துள்ளி மல்யுத்தம் ஆடுவதைப் பார்க்க விரும்புகின்றீர்களா? எனக் கேட்டார்கள். துள்ளி ஆடுவது என்பது மகிழ்ச்சியின் உணர்வாகும். ஆடல், அசைவு என்பதற்கு மார்க்கம் தந்த சந்தர்ப்ப விதிகள் ஆட்டத்திற்கும் இடம் தரும்; ஆடலை தூணர்டி நிற்கும். மகிழ்ச்சியும், மட்டில்லாக் களிப்பும் - சிறந்ததாயின் ஆடுவதும் நலமானதே! ஆட்டம் மகிழ்ச்சியை விருத்தியடையச் செய்து சான்றுபகர்கின்றது. இந்த இரணர்டில் ஒன்று ஆகுமாக்கப்படுமானால் மற்ற ஒன்றும் மறுக்கப்படாமல் ஆகுமாக்கப்படும் ஒன்று தடுக்கப்பட்டால் மற்றொன்றும் தடுக்கப்படும். வழிகாட்ட வேணர்டிய நல்லவர்களும், வல்ல வர்களும் ஆட்டத்தில் இறங்கினால் அது அசிங்கம்! அது அவர்களது அந்தஸ்த்தைப் பாதகமாக்கும். விளையாட்டின் ஊக்குவிப்பில் ஆட்டம் பிறக்கிறது. சிலரைக் கண்டு பின்பற்றுகின்ற மக்கள் - அவரின் செயலை வைத்தே மதிப்பிடுவார்கள். அவர் ஒரு விளையாட்டாளராகவே தென்படுவார். மக்கள் அவரை மதிக்க மாட்டார்கள் மாத்திரமல்ல. அவரைக் குறைத்து மதிப்பிடுவார்கள். அவரைப் பின்பற்றவே மாட்டார்கள் (யாரும் இருக்கும் இடத்தில் இருந்து கொணர்டால் எல்லாம் செளக்கியமே)
Page 79 எல்லை கடந்த இசை ரசனை! உடையை கிழிக்கும் உணர்வுகள் உணர்ச்சி பொங்கும் இசையை ரசித்தல். உச்ச கட்டத்தில் உடைகளை கிழித்துக் கொள்ளுதல், சுயமான சக்திக்கு மீறிய செயல் இல்லையெனில் இதற்கு அனுமதியே கிடையாது. ஒரு ஞானி மெய் நிலையில் லயித்துப் போய் விட்டான். தனது மெய் நிலையின் நிலைப்பாடு புரியாமல் உடையைக் கிழித்துக்கொள்பவர்களும் உணர்டு. சிலரால் மெய் நிலைப் போக்கைக் கட்டுப்படுத்த முடியாது. நினைவும் , உணர்வும் வேகப்படும். உடைகளைக் கிழிக்க ஞாபகம் வரும். கட்டுப்படுத்த வேண்டும் என்றுதான் ஞானி கருது கின்றான். ஆயினும். அவ்வுணர்வைக் கட்டுப்படுத்த முடியாமல் அப்படி ஆகிவிடுகின்றது. விறுவிறென்று கிழிக்கும் உடைகள்! விசையாக ஆடுகின்ற உடம்பு அப்போது ஒருமனஅமைதி தோன்றும், அத்துடன் மூச்சும் போய்விடுகின்றது. ஒரு நோயாளி அவனுக்கு அளவிட முடியாத வேதனை 1 அதனால அணுக் கமி , மு ன கி கமீ இதனால்தான் இவனது வேதனை குறைகின்றது. நோய் விட்டுப் போன ஒரு அமைதி மனரம்யம்! இவ்வாறே மெய்நிலையை சுகிக்கும் ஞானவானி ஆடையை கிழித்துக் கொள்வதன் மூலம் அவனுக்கு ஒரு அலாதியான அமைதி! நோயாளியின் முனங்களை நோயாளி அறிவான்! அதை அடக்கி விட அவள் எடுக்கும் பிரயத்தனம் நடப்பத்தில்லை. முக்கலும் முனங்கலும் முன்னெடுக்கும். சாதாரண மனிதனால் தான் நினைத்து செய்கின்ற ஒன்றை முற்றுப் பெற வைக்க முடியாமல் போய்விடுகின்றது. மூச்சு விடுவதற்கு மனிதனுக்கென்று ஒரு விருப்பம் இருக்கின்றது. விருப்பம் இருப்பதற்காக மூச்சை அவன் நிறுத்தினால் அவன் உள்ளேயிருந்து அவனது பலத்தை பின்தள்ளும். மூச்சுமெல்ல மெல்ல வரும். இசை ரசிகன் கூச்சல் போடுவான். ஆடையைக் கிழிப்பாண். இதுவெல்லாம் அத்து மீறிய செயல். மார்க்கம் இதனை விலக்கிவிட்டதாக வருணிக்க முடியாது. ஸSர்ரியுஸ் ஸிக்தி எனும் பெரியாரிடம் மெய் நிலை பற்றி கதைத்த போது. "மெய் நிலை வாளால் வெட்டி னாலும் விளங்காதநிலை” என்றார்கள். சும்மா பாட்டை கேட்கின்ற ஒருவருக்கு மெய் நிலையின் போது ஏதேனும் விளங்குமா? என ஆச்சரியமாக ஸிர்ரியுஸ் ஸிக்தி அவர்களிடம் வாதாடினார்கள். மெய்நிலையில் ஒன்றும் புரியாது “ஸிர்ரியுஸ் ஸிக்தியின்” அதிரடி முடிவும் முடிவான முடிவுமாக இருந்தது. ஞானிகள் உடைகளைக் கிழிப்பதைக் கணிடு மக்கள் வினாக்களை விடுத்தனர். “மெய் நிலையிலிருந்து திரும்பியதும் சுயநினைவு தொழில்படுகின்றது. அப்போதும் கூட புதிய துணிகளைக் கிழித்து ஏழைகளுக்குப் பங்கீடு செய்கின்றனர். இதன் அர்த்தம் என்ன?
Page 80 ஒட்டுப் போட்டுத் தைப்பதற்கு முடியாத துணர்டு, துணர்டான துணி! அதை தொழும் முஸல்லாவாக மாற்றி பாவிக்க முடியுமாயின் கிழித்தல் அனுமதிக்கப்படும். நல்ல நோக்கு இதில் உணர்டு ஆகையால் துணி அநியாயம் என்ற சொல்லுக்கு இடமில்லை! இதனை ஞாபகத்தில் வைத்துக்கொள்ளுங்கள். ஒரு சேட்டைத் தைக்க வேண்டும். அதற்காக சிறு. சிறு துணர்டுகளாக அத்துணியை வெட்டி பின்னர் ஒன்றி ணைக்கின்றோம். ஏழைகளுக்கு வழங்கப்படட துணி வேறு ஒன்றுக்கு உபயோகப்படுத்தாமல் உடையாக உபயோகப் படுத்த வேணர்டும் என்பதே குறிக்கோளாகும். துணர்டு துணர்டாக வெட்டப்படும் துணிகள் பொது நன்மைக்காக முடிவு செய்து பொதுமக்களுக்குப் பகிர்ந் தளிப்பதுமார்க்கத்தில் அனுமதிக்கப்பட்ட ஒன்றாகும். ஒவ்வொரு ஆட்சியாளனும் நீண்ட அவனது ஆடை களைப் பங்கீடு செய்வது முக்கியமானதாகும். அதனை நூறுதுணர்டுகளாகப் பிரித்து நூறு ஏழைகளுக்குக் கொடுக்க முடியும். ஆயினும் துணி டுகளை ஒனர் று சேர்த்து உடையாக்குவது உசிதமாகும். அதற்புகு அமைவாக அப்புடைவைத்துணர்டுகள் காணப்பட வேண்டும். இசையைக் கேட்டு ரசிக்கின்ற ஒருவருக்கு மெய் நிலை தோன்றி உடைகளைக் கிழிக்கின்றார். அந்ட அமைப்பில் பயனில்லை எனில் அதற்கு அனுமதிவழங்கவும் முடியாது பயனில்லாத வேலையை ஒரு வீணர் செயலாகவும் துணிக்குத் தொட்ட துயரமாகவும் கருதுவோம். மெய் நிலை கிட்டாத ஒருவண் சும்மா துணிகளைக் கிழிக்கின்றார் என்றால் அது குற்றச் செயலாகவே கொள்ள வேணர்டும். ஒழுக்கச் செயலின் ஐந்தாவது விதியமைப்பு இசை நிகழ்வு நடக்கின்றது. அதில் ஒருவர் எழுந்து நிற்கின்றார். அவர் மெய்நிலை அடைந்தவர். அவர் பிறரைத் திருப்திப்படுத்தவோ, முகஸ்துதிக்காகவோ எழுந்தவரல்ல! இவரைக் கணிடு மற்றவர்களும் எழுந்து நிற்பது ஒழுக்கப்பணி பாகும். மெய்நிலையில் ஏற்படும் வெளிரங்கமான பரபரப்பும், கூக்குரலிட்டுக் கத்துதல் போன்ற ஏதுமில்லாது, எழுந்து நின்றால், ஏனையவர்கள் எழுந்து நிற்பது ஒழுக்கப்பணி பாகும். ஒன்றுபட்டு உறவுகளை வெளிக்காட்டுவதும் ஒழுக்கம்தான். மெய்நிலையில் தோய்ந்த ஒரு ஞானியின் தலைப் பாகை கீழே விழும்போது இதர ஞானிகளும் தங்கள் தலைப்பாகை கீழே வைப்பர். இதுபோல். ஒரு ஞானி ஆடையை உச்ச மெய்நிலையில் கழட்டுகின்றபோது ஏனைய ஞானிகளும் தங்களின் சில அணிகலன்களை கழட்டுவர். இது கணிணியப்படுத்தும் காரியம்! முற்றிலும் சபையில் இப்படி ஒருவருக்கொருவர் ஒத்துழைத்து நடந்து கொள்வது நட்பின் இலக்கணம்! சகோதரத்துவ சமத்துவம்! சபையில் ஒருவருக்கொருவர் ஒத்துழைக்காத போது நற்பணி பில்லா நடத்தையும், நாகரீகக் குறை பாட்டையும் வெளிப்படுத்தும். நபிகள் நாயகம் (ஸல்) கூறினார்கள் : ஒவ்வொரு சமூகத்துக்கும் ஒரு தனிமையான பழக்கம் உணர்டு. மனிதர்களின் பழக்க வழக்கங்களுக்கு எற்றால் போல் பழகுங்கள்” என்றனர்.
Page 81 பிறருக்கு உதவுதல், தோழமை கொள்ளல், மற்ற வர்களை மதித்தல், மற்றவர்களின் மனதை சாந்தப் படுத்துதல், போன்றவற்றை செய்வது நலமான தாகும். தலைப்பாகையும், ஆடையையும் கழட்டும் விடயத்தில் நபிகள் (ஸல) அவர்களினர் நன பர்கள் இப்படிச் செய்தார்களா என ஒரு கேள்வி ஆயினும். இஸ்லாமியர் களுக்கு ஏற்றது என இனங்காணப்பட்டதெல்லாம், ஒப்புக் கொள்ளப்பட்ட தெல்லாம் இறைத் தூதரினர் இனிய தோழர்களின் நடை முறையை மட்டும் நமோனாவைக் கொணர்டா பின்பற்றினோம்? அப்படியல்ல! காலாகாலமாக பின்பற்றியதை ஒதுக்கிவிட்டு புதிதாக ஒன்றை கணிடுபிடித்ததாக நினைப்பதைத் தவிர்க்க வேண்டும். அத்தகைய அமைப்புக்கள் முன்மாதிரிகள் உல்லாளம் தர்பாரில் உணர்ச்சியூட்டும் ரப்பான் கீதம்! இந்திய நாட்டில் மலையாள மாநிலத்தில் உல்லா ளம் ஹஸ்ரத் ஸையித்துல் மதனி அவர்களின் அடக்கஸ்தலம் அங்கு சிறப்பு நிகழ்வுகளை மலையாள மொழிப் பாடலில் ரப்பான் தட்டி மாணவர்கள் பாடல் இசைப்பது மக்கள் அங்கே வாழ்கின்ற சின்னக் குஞ்சுத் தங்ங்ஸ் போன்ற உலமாக்கள் இதனை நன்கு வரும்பி இரசித்தருக் கிறார்கள். இல்லை எண்பதற்காக நல்ல காரியங்களை நிறுத்துங்கள் எனச் சொல்லக்கூடாது. ஒருபெரியார் சபையில் வந்து விட்டால் அங்கே அமர்ந்திருப்பவர்கள் கணிணியத்துக்காக சில நாடுகளில் எழுந்து நிற்கின்றார்கள். இவ்வழக்கம் அரேபியர்களிடம் இருப்பதாகத் தெரியவில்லை. நபிகளார் (ஸல்) முன்னிலையில், நண்பர்களான ஸஹாபாக்கள் இந்த விவகாரத்தில் எல்லா முஸ்லிம் களுக்கும் எந்தவிதமான தடைகளும் சுமத்தப்படாததால் இப்பழக்கத்தை மேற்கொள்ளும் எல்லா நாடுகளிலும், அப்பழக்கத்தைத் தொடர்ந்து செய்வதில் தவறில்லையென நினைக்கின்றோம். இந்தச் செயல்பாட்டின் மூல நோக்கம் வந்திருக்கும் பெரியவரை கெளரவப்படுத்தி, அனைவரும் மனமகிழ்ச் சியை வெளிப்படுத்துவதுதான். பலரா நாட்டுப் பாடகியின் பகிரங்க முடிவு பஸ்ரா நாட்டின் பாடகியும், நாட்டியக் காரியுமான வடிவானா என்ற பெண் நீண்ட காலம் பாடி, ஒரு உலமாவின் அறிவூட்டலினால் விழிப்புப் பெற்று தனது நாட்டியத்தையும், தீய பாடல்களையும் நிறுத்தனார். அதன்பின் 40 ஆண்டு பலராவில் வாழ்ந்து உயிர் நீத்தார். இது தக்வாவின் உச்சகட்டமாகும்.
Page 82 மனமகிழ்ச்சிக்காக ஒரு சமூகம் செய்யும் பணிக்கு ஒத்துழைப்பு வழங்குவது போன்றுதான் ஏனைய ஒத்துழைப் புக்களும் இஸ்லாத்தில் தடுக்கப்படவில்லை! ஒத்துழைப்பு வழங்குவதுநல்லது தவறில்லை! இசைக்கும் ஆடலுக்கும் இஸ்லாம் வழிவகுத்ததா? ஒருவர் ஆடுகின்றார் ஆனால். அவர் மெய்நிலை குறைந்தவர். அவரைப் பின்பற்ற முடியாது. இதுவே ஒழுக்கமாகும். அவரைத் தவிர அனைவரின் அகநிலையும் பாதிக்கப்படும் என்பதே இத்தடையின் காரணமாகும். இன்னும் ஒருவர் ஆடுகின்றார். இசையின் கவர்ச்சியோ, மெய்நிலையோ ஏற்படவில்லை. இவ்வாடல் பாதகமானதாக இல்லை. மெய்நிலையை சுவாசிக்காத ஒருவன . மெய் நிலை எய்தப் பெற்ற வருட ன ஆடமுற்பட்டால் அவன்பட வேண்டிய வில்லங்கத்தை சபையே அறியும். இந்த ஆட்டத்தைப் பார்க்கும் சபையினர் மெய் நிலை ஆட்டம் எது, வலிந்து முயற்சித்து ஆடுபவருடைய ஆட்டம் எது எனக் கண்டு கொள்வார்கள். அவர்களின் ஆத்ம இதயம் அதற்கு உரைகல்லாக அமையும். “மெய்நிலையின் சரியான அசைவு எது?” என்று ஒரு ஞானியிடம் கேட்ட போது, "சபையினர் உகந்து பார மெடுக்கும் ஆட்டமே மெய்நிலைக்கு சாட்சி!” என்றார். அங்க அசைவும் ஆடல் கலையும் ஆடல் என்றாலே அது தப்பு என்று ஓடுகின்றார்கள். அதற்கு என்ன காரணம்? ஆடல் பொய் சொல்வது போன்றதா? மார்க்கத்திற்கு பாதகமானதா? மார்க்க வழி நடப்பவனி ஆடலைக் கணிடிக்கின்றான். அதை ரசிக்க மாட்டான். அதற்காக ஆட்டம் வெறுக்கப்படுகின்றதா எனத் தொடர்கிறது. فأعلم: أن الجد لا يزيد على جد رسول الله يعة، وقد رأى الحبشة يزنون في المسجد وما பொய், பாவங்கள், விரோதமான செயல்கள் - இவை களை நாயகம் (ஸல்) அவர்களை விடத் தடுத்தவர்கள் யார்?பள்ளிவாயலில் அபீஸினியர்கள் ஆடுவதை, அக மகிழ்வதை அணர்ணல் நபி (ஸல்) அவதானித்தார்கள். ஆடியவர்கள் நபிகள் (ஸல்) குறை சொல்லவில்லை! காரணம் அது பெருநாள் தினம் களிப்பு களை கட்டி யிருந்தது. ஆட்டம் ஆடியவர்களும் சளைத்தவர்கள் அல்ல தகுதிவாய்ந்த ஹபளமிகள்தான். ஆட்டத்தை, விளையாட்டு, வீணர் களியாட்டம் என்று பலர் வெறுக்கினர்றார்கள். இது உணர்மை! ஆயினும். விளையாட்டும், ஆட்டமும் எலி லோருக்கும் இல்லாது விட்டாலும் அபீஸினிய சாமானிய மக்களுக்கு
Page 83 தடுக்கப்படவில்லை. இதேவேளை சமுதாயத்தில் நல்லொ ழுக்கக் காரர்கள் ஆடுவதுமில்லை! அது அவர்களுக்கு ஒழுக்கமுமில்லை! என்பதை ஏற்றுக்கொள்கிறோம். நல்லவர்கள், வல்லவர்கள் நாட்டியமாடவில்லை. அவர்கள் நாட்டியத்தை விரும்பவுமில்லை. என்பதற்காக ஆட்டத்தை மார்க்கம் தடுத்து நிறுத்துகின்றது என்று எடுத்துக் கொள்ள முடியாது. ஒரு உவமையை இங்கே நோக்குவோம். ஒரு வசதி குறைந்தவனிடம் ஒருவன் உதவியை வழிபார்த்தான். அந்த ஏழ்மையானவன் ரொட்டித் துணர்டை வழங்கினான். இது புகழ்கூறும் செயல், அரசனிடம் துணர்டில்லாமல் இரண்டு ரொட்டித்துணர்டுகளை வழங்கினான். இது புகழ் சொல்லும் காரியமா? சாட வேண்டிய ஒரு செயலாகும். அரசனின் உலோபித்தனத்திற்கும், இரக்கமில்லாத இதயத்திற்கும் எடுத்துக் காட்டாகும். அரசனின் தீய செயல் பட்டியலில் இதுவும் இடம்பிடிக்கும். வரும் காலம் அரசனை வாழ்த்தாது. சாடும். ஆயினும். அரசனுடைய அந்தஸ்த்தில் வைத்து பார்க்கின்ற போது அரசனி, ஏழ்மையில் முடங்கியவனுக்கு இரணிடு ரொட்டிதானி கொடுப்பதா? கொடுக்காமலே இருப்பது போன்ற செயலாகும். JUS இவ்வாறு ஒரே சட்டத்தின் கீழ் அனுமதிக்கப்பட்ட விடயத்தை போன்றதுதான் ஆட்டமாடுவதும் சாதாரண மக்களுக்கு அனுமதிக்கப்பட்ட செயல், ஷரீயத்தில் ஊறித்திளைத்த பக்தர்களுக்குக் கூடாத செயலாகக் கொள்ளப்படுகின்றது. வெறும் பக்தர்களின் பார்வையில் அவ்வளவு பெரிதானது அல்ல. இந்த முடிவும் கூட - வெவ்வேறான நிலைப்பாட்டுடையவர்களை ஒன்றுபடுத்திப் பேசும் போதுதான்! ஆயினும். அச்செயலை தனிமையாக நோக்குவோமேயானால். அது மார்க்கத்தில் விலக்கப் பட்டது அல்ல! அல்லாஹஉதஆலா மிக அறிந்தவன் எண்று தீர்ப்புக் கூறுவோம். இதுவரை கூறியவைகளில் இருந்து இசையைக் கேட்கக் கூடாது, மகிழக் கூடாது என்பது போல் சில சமயங்களில் இசையை கேட்க முடியும். சில வேளை வெறுக் கப்படுகினறது. இனினும் சில வேளை விரும்பப்படுகிறது. இளைய தலைமுறையினர் உலக ஆசைகளில் மூழ்கி இருப்பவர்களுக்கு இசையும், பாடலும் இன்னும் இணைகின்றபோதுநல்ல குணங்கள் நழுவிப் போய்விடும். இத்தகைய இதமில்லாத இதயத்தவர்களுக்கு இசை தடுக்கப்பட்டதே. ஒருவன் பொழுது போக்குக்காக மட்டும் பாடுவதும், இசையைக் கேட்பதும் சிறப்பல்ல! ஏனெனில் அது அவனது பழக்கத்தை வலுவூணர்டி விளையாட்டிலும் வீணர் கேளிக்கை களிலும் சேர்த்துவிடும். நாதத்தைக் கேட்கலாம்.
Page 84 நலமுற்றிருக்கலாம். இசைகளைத் துரணர்டாத சந்தர்ப்பங் களில் இசையைக் கேட்க அதனை யதார்த்தமாக அனுப விக்க வாய்ப்புக்கள் வழங்கப்பட்டிருக்கின்றது. وأما المستحب نهر لمن غلب عليه حب الله نعار و خل السلع مننه y الصفات المحمودة واحمد لله وحذه وصلى الله عر محمذ وال درص سحسه وسنم இறைக் காதலில் மூழ்கிய ஒருவருக்கு இசையும், பாடலும் இனிமையான, புனிதமான உணர்வுகளை உஷார் படுத்துகின்றதோ அத்தகைய இறைநேசச் செல்வர்களுக்கு இசையைக் கேட்பது என்றும் நல்லதே! எல்லாப் புகழும் இறைவனுக்கே அணினல் நபி (ஸல்) அவர்கள் மீதும் - அவர்தம் தோழர்கள் மீதும் அருள் மாரி பொழியட் Glf (முற்றும்) குறிப்பு : இதுவரை நீங்கள் வாசித்த அனைத்து விடயங்களும் ஹஜ்ஜதுல் இஸ்லாம் இமாம் கஸ்ஸாலி (றஹற்) அவர்களின் சொந்தக் கருத்துக்களாகும். தலைப்புக் களில் சில மாற்றங்கள் செய்து இதனைத் மொழிபெயர்த் துள்ளேன். கட்டுரைக்கான அனைத்துக் கருத்துக்களுக்கும் தத்துவங்களுக்கும் இமாம் கஸ்ஸாலி (றஹற்) அவர்களே பொறுப்பாவர். இஸ்லாமியர்களின் இசைக் கண்டுபிடிப்புக்களும் இசைக் கலைஞர்கள் பற்றிய ஆய்வும் உலக இசை அரங்கைக் கலக்கிய கட்ஸ்டீவன் யூசுப் இஸ்லாம் 1948 ம் ஆண்டு ஜூலை 21ம் திகதி கிறிஸ்தவக் குடும்ப மொன்றில் கட்ஸ்டீவனர் பிறந்தார். சினின வயதிலேயே பாடும் திறமையைப் பெற்றார். 13து வயதில் சங்கீதத்தில் நல்ல ஆர்வம் உடையவராகக் காணப்பட்டார். இவரின் தந்தை, மகனின் ஆர்வத்திற்கேற்ப ஒரு கிட்டாரை வாங்கிக் கொடுத்தார். நிறையப் பாடல்களை எழுதினார். 18வது வயதில இவரது முதலாவது இசைத்தட்டு வெளிவந்தது. ஐரோப்பிய நாடுகளில் இவரின் புகழ் ஓங்க ஆரம்பித்தது. 21வது வயதில் உலகப் புகழ் பாடகன் என்ற பாராட் டைப் பெற்றார். சங்கீதத்தைத் தொழிலாகக் கொணர்டார். உலகில் பொப்பாடலின் சக்கரவர்த்தியாகத் திகழ்ந்தார். அதிகமாகக்குடித்தார். கணக்கிலடங்காது புகைத்தார். அதனால் காசநோயில் பீடிக்கப்பட்டார். ஆஸ்பத்திரியில் தஞ்சம் புகுந்தார். அங்கு இரகசியப்பாதை” எனும் நூலைப் படித்தார். அது அவரது ஆத்மாவுக்கு ஈடேற்றமாக இருந்தது. இசை அவருக்கு ஒத்துப் போகவில்லை. இஸ்லாத்தின்பால் ஈர்க்கப்பட்டார். 1977ம் ஆண்டு புனித கலிமாவை மொழிந்து இஸ்லாத்தை ஏற்றார். இசைக் கருவிகளை இரண்டு லட்சம் பெறுமதியான ஆங்கில நாண
Page 85 யத்துக்கு விற்றார். சைப்பிரஸைச் சேர்ந்த தந்தைக்கும், சுவீடனைச் சேர்ந்த தாய்க்கும் இஸ்லாத்தை "தஃவா” செய்தார். வாழ்க்கையில் மூன்று பெணி பிள்ளைகள், இசைக்காகப் பயணம் செய்த நாடுகளான தென்ன மெரிக்கா, பிரேஸில், கனடா, வடஅமெரிக்கா, போன்ற வற்றைவிட புனித மக்காப்பயணமே அவரின் ஆத்ம திருப்தி யாக அமைந்தது. இசைக் கருவிகளை விற்ற பணத்தின் மூலம் தரும்நிதியொன்றை ஆரம்பித்தார். இன்று லணர்டன் மாநகரில் இஸ்லாமிய அழைப்பாளனாகச் செயல் படுகின்றார். இசைக் கருவிகள் இல்லாமல் இஸ்லாமிய பாடல்களைப்பாடுகின்றார். குறிப்பு: யூசுப் இஸ்லாம், இசை பற்றி ஆய்ந்திருக் கலாம்; ஆனால். இஸ்லாமிய இசை பற்றி ஆய்ந் தாரோ தெரியவில்லை. இந்திய இசை தோற்றுவாயும் இஸ்லாமிய இசை கலைஞர்களும் இந்திய இசை வரலாற்றை ஆராய முற்படு வோமானால். 13ம் நூற்றாண்டுகளின் பின்னர் முஸ்லிம் களின் வருகை இந்திய நாடு எங்கும் பரவ ஆரம்பித்தது. மனித வாழ்க்கையுடன் தொடர்பு பட்ட இசை ஆர்வம் இந்திய முஸ்லிம்களிடையே கணிசமாகக் காணப்பட்டது. அரபு நாட்டு இசையும், பாரசீகர்களின் இசையும், வட இந்தியப் பகுதிகளில் சில இசை மாற்றங்களுக்கு காலாக அமைந்தது. பாரசீகத் தொடர்புகளால இந்துஸ்தானிய இசைக்கும், கர்நாடக இசைக்குமிடையே இடைவெளியொன்றைக் காண முடிந்தது. 18ம் நூற்றாணர்டில் பல இசைக் கருவிகள் வட இந்தியாவில் அறிமுகமானது. அவற்றுள் தப்பா, தும்ரி, தரானா, நாதரா போன்ற வகைகள் மேற்கோள் காட்டக் கூடியதாகும். வட இந்தியாவில் இசை வளர்ச்சிக்கு மிகவும் உந்து சக்தியாக இருந்தவர் "அமீர் குஸ்ரு” என்பவராவார். இவர் புதுப்புது வாத்தியங்கள், தாளங்கள் ராகங்களை மக்கள் முன்வைக்க ஆரம்பித்தார். இந்துஸ்தானி இசை கி.பி 14ஆம் 15ம் நூற்றாண்டுகளில் நல்ல செல்வாக்கைப் பெற்றதோடு மன ன ர களின அரங்குகளில . கலைஞர் களர் கெளரவிக்கப்பட்டு கச்சேரிகளும் செய்திருக்கின்றனர். அக்பர் மன்னரின் அரசவையில் "தான்சேனி” என்ற கவிஞர் நல ல பாடகனாகத் திகழ்ந்ததோடு, பல ராகங்களைக் கணிடுபிடித்தார். ரபாப் வாத்தியத்தில் மிகவும் தலை சிறந்தவராகக் காணப்பட்டார். குவாலியர் எனுமிடத்தில் இந்துக் குடும்பத்தில் பிறந்த இவர் அக்பர் மன்னரின் ஆட்சியில் புனித இஸ்லாத்தை ஏற்றுக் கொணர்டார். இவருக்கு "மியான்” என்ற பட்டம் அக்பர் மனினரினால் துடப்பட்டது. இந்துஸ்தானிய இசைக்கு முஸ்லிம்களே முன்னின்று உழைத்தனர். அவர்களுள் சுஹஅர்தாஸ் - கபீர்தாஸ் -மீராபாய் போன்றோர் இசை உலகில் இன்னும் பேசப்படுகின்றனர்.
Page 86 அமிர்தம்தரும் கவாலி இசை கவாலி இசை வடிவம் இந்தியாவின் பழமை வாய்ந்த ஓர் இசைவடிவமாக விளங்ககுகின்றது. சுன்னி முஸ்லிம் களால் ஒருவாக்கப்பட்ட இவ்விசை கிட்டத்தட்ட 700 வருடங்களுக்கு முற்பட்ட தகவல்களைக் கொண்டது. பாரசீகத்தில் ஈரான், ஆப்கானிஸ்தான் பகுதிகளில் இதன் செல்வாக்கு ஓங்கிவந்திருப்பதைக் காணுகின்றோம். கவ்வாலி இசை சாதாரண பாடலமைப்பை விட்டு வேறுபட்டுக் காணப்படுகின்றது. சாதாரண பாடல் ஒன்றுக்கு 15-20 நிமிடம் தேவைப்பட்டால் இதற்கு அதைவிடக் கூடிய நேரம் எடுக்கும். உதாரணமாக பாடகர் அளிஸ்மியான் கெளவால் 616oiu6hujTIT6ú urt Lüull - utt-G8ov) Hasharke RazYeh Poochhunga என்பதாகும். இப்பாடலை பாடிமுடிக்க எடுத்துக் கொண்ட நேரம் 15நிமிடங்களாகும். பாடகர் “நுஸ்ரத் பட்டாஹற் அலிகான்” ஒரு சிறந்த கவாலிப் பாடகராவார். இவர் பஞ்சாப் மானிலம், பைசலாபாத் நகரில் பிறந்தவர். டைம்ஸ் பத்திரிகை 2006ம் ஆண்டு இவரை இனங்கண்டு ஆசிய நாட்டின் அசத்தல் கலைஞர்களுக்குள் ஒருவராகப் பாரம் எடுத்துக் கொண்டது. பாராட்டியது. "நுஸ்ரத் பட்டாஹற் அலிகான்” இந்த கவாலி இசையில் பெயர் போனமைக்குக் காரணம் அவரின் குடும்பம், பரம்பரை பரம்பரையாக 600 வருடமாக இந்த இசையை பாதுகாத்து வந்துள்ளனர். இந்த இசையை உலக நாடுகளுக்கு அறிமுகப் படுத்த அலிக்கான் எடுத்த முயற்சி கொஞ்சமல்ல - புதிய கணனி யுக்திகளைக் கையாண்டு கனடிய இசைக் கலைஞர்களுடன் கை கோர்த்து 1995ம் ஆண்டு "டெட்மேன் வோக்கிங்” என்ற இசைத் தொகுப்பை வெளியிட்டார். கவாலிப்பாடல்களில் 125 இசைத் தொகுப்புக்களை வெளியிட்டு உலகில் கிண்னஸ் சாதனை புரிந்துள்ளார். இஸ்லாமியர்களின் வாத்தியங்கள் மன்னர் அக்பர் அவர்களுடைய காலத்தில் பல வாத்தியங்களும், இசைகளும் கணிடுபிடிக்கப்பட்டு அரங்கேற்றப்பட்டது. நமது செவிகளில் பெயர்போன வாத்தியம் (Dhol) டோல் ஆகும். 15ம் நூற்றாண்டில் இந்தக் கருவி உருவாக்கப்பட்டு அக்பர் மன்னருடைய அரசவையில் அரங்கேற்றப்பட்டது. (Tabla) தபேலா வாத்தியம் 13ம் நூற்றாணர்டில் இக்கருவி உருவாக்கப்பட்டுள்ளது. "பக்காவாஜ்” என்ற மிருதங்கம் போன்ற வடிவமைப்பிலான கருவியை இரண்டாகப் பிரித்து தபேலாவை உருவாக்கியவர் கவிஞர் பாடகர் அமீர் குஸ்ரு என்பவராவார். 18ம் ஆண்டின் தோற்றத்தில் தபேலாவை முதன் முதலில் வாசித்தவர் டில்லியைச் சேர்ந்த உஸ்தாத்"சுத்ஹர் கான்” என வரலாறு கூறுகின்றது. அதன்பின்னர் பெயர் போன டபேலா வாத்தியக் காரராகத் திகழ்ந்தவர் இந்தியத் திருமகன் கலைஞர் ஸாக்கிர்ஹஜூஸைன் அவர்களே! கவாலி இசைபற்றி இன்னும் ஆராய்வோமானால். பாகிஸ்தான். வடஇந்தியா போன்ற பகுதிகளில் கவாலியின் தோற்றப்பாடு சொல்லொணர்ணாக் கவர்ச்சியை ஏற்படுத்
Page 87 7o தியது. கவாலி பாடல் அமைப்பு நான்கு விதிகளைக் கொணர்டது. "அல்லாஹற்வின் பெயர் கூறி, புகழ் கூறி ஆரம்பம் செய்யும் அமைப்பு நபிகள் (ஸல்) அவர்கள் மீது ஸலவாத்துச் சொல்லுதல், இறை ஞானவான்களை விழித்தல் இப்படி அமைக்கப்பட்டதே கவாலிப் பாடல் களாகும். “கஸல்” என்ற இசைவடிவம் இறைஞானிகளின் இறைக் காதலை வெளிப்படுத்தும் களமாக அமைந் துள்ளது. ஸியாக்கள் என்ற பிரிவினர் இமாம் அலி (ரலி) யின் புகழையும் கர்பலா போர்க்களத்தில் உயிர்நீத்த ஹஜூஸைன் (ரலி)யையும் ஸஆஹதாக்களையும் நினைவுபடுத்தி மர்ஸியா ஒதுவதாகும். இவ்விசைவடிவம் இத்தகைய நினைவுகளில் சபை ஓங்கிநிற்கும். கிதாபுல் அகாணி எழுதியவர் அல் இஸ்பஹானி இது ஒரு பெரும் இசைக் களஞ்சியம் இதனை ஏனைய மொழிகளில் மொழிபெயர்ப்புச் செய்து 12 1/2x18 1/2 செமீ வடிவில் நூல் வடிவம் செய்தால் 20000 பக்கங்கள் குறைவில்லாமல் பதிப்பிக்க வேண்டிய நூலாகும். இந்நூல் இந்தியாவில் பழமைவாய்ந்த மதரஸாக்களிலும் எகிப்து பல்கலைக்கழகம் துருக்கிஸ்தான்பூல் இஸ்லாமிய நூலகத்திலும் பார்வையிட முடியும். தகவல் பேராசிரியர் அல்லாமா உவைஸ் இவ்வத்தில் வைத்து, பேராசிரியர் அப்துல் வஹாப் சாஹிப் கவாலி இசை அமைப்பில் நுஸ்ரத், பதனி அலிகானர், சப்ரி, அபிதாபர்வின் சகோதரர்கள், ஷாஹற்ரம், நஸ்ரி, வடலி சகோதரர்கள், ரிஸ்வான், முஸாம் ஆகியோரது கவாலி இசை பங்களிப்பு இன றும் மக்கள் மததரியில பேசப்படுகின்றது. “கஸல்” பாரசீக கவிதை வடிவத்திலிருந்து உருவாகியது. ஆயினும் வட இந்திய உருதுக் கவிதைகளில் *கஸலினி ” செலவாக்கு உள்வாங்கப்பட்ட போது கவிஞர்களான மிர்சாகாலிப், மிர்தா குமிர் செளதா போன்றோரின் கவிதைகள் “கஸலின்” செல்வாக்கைக் காட்டிக் கொணர்டேநின்றது. இக் கஸல இசையை - இசைக்கும் இசைக் கலைஞர்களாக உஸ்தாத் அமானத் அலிகான், மஹதி ஹஸனி, பரிதாகானம், இக்பால் பானு, குலாம் அலி ஆகியோரைக் குறிப்பிடலாம். இஸ்லாமிய ஞானவான்களில் ஒருவர் அஜ்மீர் ஹாஜா முஹற்யதீன் ஜிஸ்தி (ரஹற்) அவர்கள் அவர்களின் வழிந்தோன்றலே ஹாஜா நிஜாமுத்தினர் அவர்கள். இவர்களின் பரம்பரைதான் இசை மேதை “இனாயத்காண்” அவர்கள். இவர்கள் அனைவரின் தரீக்கா ஹாஜாஜி தோற்றிய ஜிஸ்திய்யாதரிக்காவாகும். 1982 முதல் 1927 இனாயத்கான் இசை உலகில் புகழ் பெற்றுத் திகழ்ந்தார். கிழக்குலகையும், மேற்குலகையும் இசையால் ஒன்றுபடச் செய்தவர். ஐரோப்பிய நாடுகளுக்கு இசைப்பயணம் செய்தவர். 1910 களில் அமெரிக்கா, இங்கிலாந்து, பிரான்ஸ், ரஷ்யா, போன்ற நாடுகளுக்குப் பயணம் செய்தார்.
Page 88 அந்நாட்டுப் பல்கலைக்கழகங்களில் இந்திய இசைகுறித்து சொற்பொழிவுகளையும்நிகழ்த்தியுள்ளார். சூபியிசம் மெஞ்ஞானம் சம்பந்தமான ஆய்வு நூல்களையும் எழுதினார். 1920களில் சூபித்துவ தலைமை யகம் ஒன்றை ஜெனிவாவில் உருவாக்கினார். இது பாரிசுக்கு அணிமையில் அவரின் வாரிசான “விலாயத் இனாயத்கானால்” வழிநடத்தப்பட்டு வந்தது. இசை நூல்கள் இந்தியாவில் அபூர்வமாக எழுதப் பட்டது. இந்திய தஞ்சை மாவட்டம் பணிடிதர் ஆபிரகாம் என்பவர் “கருனாமித சாகரம்” என்ற நூலை தோற்று வித்தார். இஸ்லாமியர்களின் இசை நூல் இப்படியொரு நுால முஸ்லிம்கள் மத்தியில் அவசியம் தேவை இருப்பதால்."குலாம் காதிறு நாவலர்” என்ற ஒரு இசை நூலை புலவர் காதிறு நாவலர் தோற்றுவித்தார். இது முழுக்க முழுக்க இசையின் நுணுக்கங்களைக் காட்டக் கூடியதாக இருந்தது. இத்தகைய இசை நூல்களைப் பயின்ற இசை மேதைகள்தான் - புதுக்கோட்டை அரசவைப் புலவன் சோட்டுமியான் தலைமுறை வாரிசுகளான கெளஸ்மியான், தாவூதுமியான், போன்றவர்களுடன் இசை உலகத்தில் இனினும் பிரகாசித்து பெயர் போனவர்கள்தானி , ரீ.என்.காதர் பாட்ஷா, நாதஸ்வர வித்துவானி ஷேஹற் சின்னமெளலானா, இசைமணி எம்.எம்.யூசுப், இசைமுரசு நாகூர் ஈ.எம்.ஹனிபா. ஹஜூஸைன் பாகதவர், ஏ.ஆர். ஷேஹற் முகம்மத், பீ.கே. ஹபீபுல்லாஹற், காரைக்கால் தாவூத், எஸ். ஹஜூஸைன் தீனி, சாகுல் ஹமீத் ஆகியோருடன் இன்னும் இசை உலகில் நினைவு கூறப்படுபவர்கள் ஜனாப் அபுல்பறகாத், ஆள்வை உஸ்மான், ராஜா முகம்மத், புதுக் கோட்டை ஈ.எம். பாஷா ஆகியோரைக் குறிப்பிடலாம். 15000 மேடைகளைச் சந்தித்த பக்திப் பாடகன் நாகூர் ஈ.எம். ஹனிபா (இந்தியா) இசை முரசு அல்ஹாஜ்நாகூர் இஸ்மாயீல் முகம்மத் ஹனிபா ( E.M. ஹனிபா) அவர்கள் 1925ம் ஆண்டு டிசம்பர் 25ம் திகதி பிறந்தார். இந்தியா இராமநாதபுரம் நகரிலுள்ள வெளிப்பட்டி னத்தில் தாயார் மரியம் பீவிக்கும், தந்தை முகம்மது இஸ்மாயீலுக்கும் பிறந்த இவர் சின்ன வயது முதல் தாயா ருடன் நாகூருக்கு வந்து விட்டார். இவருக்கு ஒரு சகோதர னும், ஒரு சகோதரியும் இருந்தனர். நாகூர் ஈ.எம் ஹனிபா ஹாஜியானி ரோஷன் பேகம் அவர்களை மணந்தார். அவருக்கு 02மகனர்கள் 04மகள்கள் 10வயதாக இருக்கும் போதே தான்படித்த செட்டியார் பள்ளியில் பிரார்த்தனைப் பாடல் பாடும் வாய்ப்பைப் பெற்றார். இவரது கம்பீரமான குரல் இவருக்கு நாகூர் கெளநியா பைத்து சபையால் முதல் பாடகருக்கான முன்னேற்றம் தந்தது. புலவர் ஆப்தீனும் இவரது புலமைக்கு ஏற்ப பாட்டெழுதினார். முஸ்லிம் வீடுகளில் நடைபெறும் மாப்பிள்ளை அழைப்பு ஊர்வலங்களில் வட்டப்பறை "தப்பு” தட்டிப் பாடுதல் போன்றவற்றில் ஈடுபட்டார். இதனால் நல்ல செல்வாக்குக் கிடைத்தது. நாகை, நாகூர், காரைக் கால்,
Page 89 திருவாரூர், சீர்காழி, தோழாதுார், ஆகிய இடங்களில் இருந்தெல்லாம் அழைப்பு வந்து குவித்தது. 1941ம் ஆண்டு முதன் முதலாக பக்கவாத்தியங் களுடன் திருமண விழாவில் மேடைக் கச்சேரிபணிணி உலக சாதனை படைத்துள்ளார். ஐந்து பக்க வாத்தியக்காரருடன் கச்சேரி செய்வார். ஹார்மோனியமும், தபேளாவும் இருந்தால் போதும் கணிர் என்று பாடுவார். இவரைப் போன்று எத்தனை பேர் பாட நினைத்தாலும் இவரின் உச்சஸ்தாயியை எட்ட முடிய வில்லை ஹனிபாஹனிபாதான். அல்ஹாஜ் ஈ.எம். ஹனிபா அவர்கள் திரையுலகத்திற்கும் பாடலகள் பாடினார். அவற்றுள் சில திரைப்படங்கள் :- சொர்க்கவாசல், எங்கே சொர்க்கம், அம்மையப்பன், நாம், வாழப்பிறந்தவள், குலெ பகாவளி, பாவமன்னிப்பு, செம்பருத்தி, ராமன் அப்துல் லாஹர், தர்மசிலனர், படிக் கிறவய சிலே, வள்ளல , என்றென்றும் காதல், காமாரசர் ஆகியவைகளாகும். அன்னாரின் சேவையைப் பாராட்டி பல விருதுகளும் பதக்கங்களும் கிடைத்தது. 1990 ல் தமிழ்நாடு அரசு “கலை மாமணி” - 2001 ல் மதுரை காமராஜர் பல்கலைக்கழகம் "தமிழ்செம்மல்" 2002ல் முரசொலி அறக்கட்டளையின் "கலைஞர் விருது” - 2002 கட்டார், தோஹா தமிழ்சங்கம் "எழில் இசை வேந்தர்” 1985ல் அவரது 60வது பிறந்த தினம் இலங்கை முஸ்லிம் சமய பணிபாட்டு அமைச்சர் அஸ்வர் வெள்ளித்தட்டும் கணிடியில் ஏ.எம்.ஏ அஸ்ரீஸ் தங்கப்பதக்கம் (ஆறாம் ஜார்ஜ் மன்னர்பதக்கம்) அளித்தார். 1949ல் கொழும்பு ஸாஹிராக் கல்லூரியில் ஏ.எம்.ஏ. அளிஸ் தங்கப் பதக்கம் வழங்கினார். அத்துடன் இசை முரசு, இசைச்செல்வர். இசை மாமணி, இசைக் களஞ்சியம், அருள் இசை அரசு ஆகிய பட்டங்களையும், ஏராளமான தங்கப்பதக்கங்களையும் பெற்றார். ஈ.எம். ஹனிபா பாடகர் மாத்திரமல்ல 1971 முதல் 1976வரை மேல் சபை உறுப்பினராகவும், 12 ஆண்டுகள் நாகூர் தர்ஹா ஆலோசனை உறுப்பினராகவும், தமிழ்நாடு வக்புசபை உறுப்பினராகவும் திகழ்ந்தார். சேவை யாற்றினார். அவருக்கு பாட்டெழுதிய அனைவரையும் பாராட்டிக் கொள்கின்றார். இவருடைய மனைவி 01-07-2002 அன்று இறையடி சேர்ந்து விட்டார்கள். அன்னாரின் பாடலை உயிரூட்ட அருமை மகன் நெளஸாத் அலி தலைப்பட்டுள்ளார். அவரே பாட்டெழுதி அவரே இசை அமைத்துப் பாடுகின்றார். தனது தந்தை இலங்யிைல் முதல் கச்சேரி செய்ததனால் தானும் இலங்கையில் பாடவேண்டுமென அவாக்கொணர்டுள்ளார். இலங்கை இசைத் துறையில் இஸ்லாமியர்களின் பதிவு இலங்கை சுதந்திரக் காற்றை சுகிப்பதற்கு முன்பி ருந்தே பார்ஸிநாடகக் குழுக்கள் பம்பாயிலிருந்து இலங்கை நோக்கிவரலானார்கள். அக்கால கட்டத்தில் லைலாமஜ்னு, குலேபகாவலி, இராமாயணம், இந்தர்ஸ்பா, அலாவுத்தீனும் அற்புத விளக்கும், அலிபாபா போன்ற நாட்டிய நாடகங்கள் நாலா பக்கமும் மேடையேறின. இந்த நாடகங்களை ஜனரஞ்ஜகப் படுத்துவதற்கு உந்து சக்தியாக அமைந்தது. அதில்
Page 90 எழுதப்பட்டு, இசையமைக்கப்பட்ட பாடல்கள் தான் இந்த நாடகக் கோஷ்டியோடு நடை பயின்று நாடுகடந்து வந்த இசையமைப்பாளர்களும், பாடகர்களும் முஸ்லிம்களே! இந்த இசையமைப்பாளர்கள் மூலம் கவாலி, கஸல், பஜன், தும்ரி, கியால், ஹிந்துஸ்தானி போன்ற ராகங்கள் வெளித் தோன்றியது. இப்பாடல்களில் சிங்கள மொழி சகோதரர்கள் பெரிதும் ஈர்க்கப்பட்டார்கள். அதனால் சிங்கள மொழிப் பாடல்களில் ஹிந்துஸ்தானி போன்றவற்றின் சாயல்கள் புகுத்தப்பட்டன. இத்தகைய இசையூக்கத்தில் முஸ்லிம் இசையமைப்பாளர்கள் முன்னின்று உழைத்தார்கள். 1903ம் ஆணர்டு இலங்கையில் “கிரமபோன்” பாவனைக்கு வந்த போது இலங்கை இசையமைப்பாளர்கள் கிரம போனில் காலூணர்டியதுடன் வீடுகளிலும் கிரம போன் வாங்கிவைத்துக்கொணர்டனர். இந்திய இசையமைப்பாளர்களான அப்துல்லத்தீப். ஜனாப் நவால்கான், பெயாரிஸாஹிப் , அப்துலஸ்த்தார் போன்றவர்கள் சிங்கள நாடகங்களுக்கு வாத்தியம் இசைத் தார்கள். உதாரணமாகச் சொல்லப் போனால். சிங்கள நாடகத்தின் பிரபல எழுத்தாளர் திரு ஜோண்டிசில்வா உருவாக்கிய “சிரிசங்கபோ” “தளதமயந்தி” ”சிறி விக்ரமராஜ சிங்க” போன்ற நாடகங்களுக்கு மேல் கூறிய இசை அமைப்பாளர்களே இசை வழங்கியுள்ளனர். இதனால் சிங்கள மக்கள் மத்தியில் சீரான இடத்தைப் பிடித்தனர். லத்தீப் பாய் பாடலின் மூலம் பல்லின மக்களையும் கவர்ந்தார். 1940 களில் சிங்களப் பாடல்கள் இசைத்தட்டில் வெளிவர ஆரம்பித்தது. இக்கால கட்டத்தில பாடல்களை இயற்றுபவர்களாக - சிங்கள சகோதரர்களும், பாடல் களைப் பாடுபவர்களாக முஸ்லிம் சகோதரர்களும் திகழ்ந் தார்கள். அப்படிப் பாடிய முஸ்லிம் பாடகர்களே லத்தீப்பாய், இப்றாஹீம் மாஸ்டர், முஹிதீன் பேக் ஆகியோராவார்கள். 1947ல் இலங்கையில் சிங்கள சினிமா களை கட்டியது. அதன் வளர்ச்சிக்கு முஸ்லிம்களே இசையமைத் துள்ளனர். "அசோகமாலா" என்ற படத்திற்கு ஜனாப் ஹவுஸ்மாஸ்டர் இசையமைத்தார். அக்கால கட்டத்தில் ஜனாப் ஹவுஸ்மாஸ்டரின் இசைக் குழு பிரபல யம் பெற்றிருந்தது. இன்றைய சிங்கள மக்களின் இசை இதயமாகக் கவர்ந்து விட்ட இசைமேதை திரு. அமரதேவ அவர்கள் ஹவுஸ் மாஸ்டரின் இசைக் குழுவில் வயலின் வாசிக்கும் வாத்தியக் கலைஞராகப் பணியாற்றினார். இக்குழுவில் விஷேட பாடகராக அல்ஹாஜ் முகைதீன் பேக் பங்கேற்றார். இன்னுமொரு உதாரணம் தரமுடியும் "தைவ யோகய” என்ற சிங்களத் திரைப்படத்திற்கு முழுமையாக இசை வழங்கியவர் முஸ்லிம் சகோதரர் "ஸஜாத் ஹரஜூஸைன்” அவர்களே இலங்கையில் முதல் வீடியோ படத்தைத் தயாரித்தவர் ஏ.ஆர். ஸெய்னுலாப்தீனி ஆவார். “ஆகாயப்பந்தல்” இவரது VDO படத்தின் பெயராகும். ஸெய்னுலாப்தீன் ஒரு இஸ்லாமிய கீதப் பாடகர் என்பதும் குறிப்பிடத்தக்கது. 1974ம் ஆண்டு இஸ்லாமிய கீதப் பாடகர்களுக்கு இசைப் பயிற்சி வழங்கப்பட்டது, மாலை நேர வகுப்புக்கள்
Page 91 78 வேறு! இப்பாசறையில் வளர்ந்த முஸ்லிம் கலைஞர்கள் வானொலி முஸ்லிம்சேவையிலும் பல்வேறு நிகழ்வுகளில் இசை அமைப்பாளர்களாகப் பங்கேற்றனர். இசை அமைப்பாளர் ஏ.ஜே. கரீம் (இலங்கை) திக்குவல்ல என்ற ஊருக்கு பெயர் எடுத்துக் கொடுத்தவர்கள் பலர். அவர்களில் இசைத் துறையில் சாதனை பாடைத்தவர் கலாதரிஏ. ஜே. கரீம் அவர்கள். 1928 மே 16ம் திகதி பிறந்த இவர் சிறிய வயது முதல் இசைப்பிரியர். இவருடைய தந்தை ஒரு இசையமைப்பாளர். 35 ஆண்டுகள் பொலிஸ் வாத்தியக் கோஷ்டியில் கிளாரினட் வாசிக்கும் கலைஞராக பிரபலம் அடைந்தவர். தந்தை வழி மகன் என அதே பொலிஸ் வாத்தியக் குழுவில் ஏ.ஜே. கரீம் கால்பதித்தார். இரணர்டாம் உலகப் போர் முடிந்த போது, இரண்டரை ஆண்டுகள் இசைப்பணி யாற்றினார். இத்துடன் இன்னும் பண்ணினார். சாஸ்திரிய சங்கீத விற்பன்னர்களான எச்.டபிள்யூ ரூபசிங்க (புரபசர்) மாஸ்டர் ஹவுஸ், டீ. ரணசிங்க, எடீமாஸ்டர், டொன் மானிஸ், பட்டியாராச்சி, சி. மஹாராசா, சாதிரிஸ்மாஸ்டர், ஜோசப் பெரேரா போன்றவர்களுக்கும் ஏ.ஜே. கரீம் கிளாரினட் வாசித்தார். இலங்கை கர்நாடக இசைக் கலைஞர்களுக்கு கலாதரி கரீமினர் தேவை மிகவும் வேணர்டியிருந்தது. கர்நாடக இசைக் கலைஞர்களான கே.கே. அந்தணி, செல்வி, செல்வி லீலாராஜா, ஆர்.முத்துசாமி, டி.எஸ். மணிபாகதவர் ஆகியோரது இசைக் கச்சேரிகளில் கலாதுரி கரீம் பங்கேற்றார். 1947ம் ஆண்டு வானொலி கலைஞர் தேர்வில் சித்தியடைந்து பிரபலமிக்க சிங் களப் பாடலான “அடுகுலேகியலா அஸரனயா மெடலனினே மெ லோகே வஸலயா” என்ற பாடலை பதிவுசெய்தார். இலங்கை சிங்களப் பட வரலாற்றில் கரீமின் இசை இன்றும் வரலாற்றுத் தடயமாக அமைந்துள்ளது. 1951ல் இலங்கை வானொலி பணிப்பாளர் நாயகம் திரு கிளபர்ட் டொட் அவர்கள் கலாதுரி கரீமின் திறமையைக் கணிடு வானொலி வர்த்தக சேவைக்கு வாத்தியக் கோஷ்டி ஒன்றை உருவாக்குவதற்கு கலாதுரி கரீமைப் பணித்தார். அன்று முதல் ஒப்பந்த அடிப்படையில் இசைக் குழவை உருவாக்கிப் பணியாற்றினார். ۔ 1951ணி பிற்பட்ட காலப்பிரிவில் மிகச் சிறந்த பாடகர்களைக் கொணர்டுவர வேகமாகச் செயல்பட்டு வெற்றியும் கணிடார். அவர்கள் தான் சுஜாதா அத்த நாயக்க, எச்.ஆர். ஜோதிபால, ஸ்டென்லி உமர், திரு ரொக்சாமி, எனி.அண்டணி, திரு பேமசிறி கேமதாஸ் போன்றோரைக் குறிப்பிடலாம். இலங்கை வானொலி முஸ்லிம் நிகழ்ச்சியில் இஸ்லாமிய கீதங்களுக்கான இசைக் கலைஞராக நீண்டகாலம் பணியாற்றினார். ஏ.ஜே. கரீமின் பங்களிப்பு இலங்கை தொலைக்காட்சி வரலாற்றில் மிக முக்கிய இடத்தை வகித்தது. 1952ல் இலங்கைக்கு விஜயம் செய்த இந்தியப் பாடகர் முகம்மத் ராபி, நாகூர் ஈ.எம். ஹனிபா, பீ.கே. ஹபீபுல்லாஹற், காரைக்கால் தாவூத், எஜ. ஹஅஸைன்தீன் ஆகியோரது இலங்கை விஜயத்தின் போது நடைபெற்ற இசைநிகழ்வுகளில் கலாதுரிகரீம் கிளாரினட் வாசித்தார்.
Page 92 1980 முதல் கம்உதாவ கிராமோதயக் கொணர்டாட் டங்களிலும் பங்கேற்று இசை மீட்டினார். 1986ல் முன்னாள் ஜனாதிபதி மேதகு திரு . ஆர். பிரேமதாஸ அவர்களால் "ஒசிஐசி” விருது வழங்கி கரீம் அவர்கள் கெளரவிக்கப் பட்டார்கள். மேலும் 1991ல கலாதரி தேசிய விருதினை முன்னாள் ஜனாதிபதி திரு ஆர். பிரேமதாஸ் வழங்கி கெளரவித்தார். முஸ்லிம் மத விவகார அமைச்சும் இவரை கெளரவித்தது. 'இசைக்கோ’ நூர்தின் (இலங்கை) இலங்கை இஸ்லாமியர்களில் இசைத் துறையில் முயன்றவர்களில் இசைக்கோ டாக்டர் நூர்தீன் அவர் களைக் குறிப்பிடலாம். கடந்த அரை நூற்றாண்டுக்கு மேலாகப் பாடிவரும் இசைக் கோ நூர்தீன் அவர்கள், தான் வளர்ந்ததோடு மட்டுமல்லாது இளம் பாடர்களுக்கும் பாடுவதற்கும் களம் அமைத்தார். “தேன் துளிகள்” என்ற வானொலி தொடர் இசை நிகழ்ச்சி மூலம் எமது சமூகத்தால் பாட எழுந்த இளசுகளுக்கு பயிற்சியளித்து வானொலியில் சந்தர்ப்பம் வழங்கினார். 1948ம் ஆண்டு முதல் ஆற்றிவருகின்ற பணிகள் காற்றில் காதுகளில் பட்டபின் கலைந்துவிடாது இதனை ஆவணப்படுத்தும் நோக்குடன் மிகத்துடிதுடிப்பாக “வான் அலைகளில் தேன்துளிகள்” எனும் தலைப்பில் தனது பாடல்கள்ை அனைத்தையும் 2001 காலப்பகுதியில் நூலாக வெளியிட்டார். அத்துடன் நின்றுவிடாமல் நல்ல பாடல் களை (CD) ஒலிப் பேழை இறுவட்டுக்களாகவும் (VCD) ஒலி, ஒளி நாடாவாகவும் 2007 ல் வெளியிட்டு வைத்தார். இந்நிகழ்வு 2007ல் சென்னையில் நடைபெற்ற அனைத் துலக இஸ்லாமிய தமிழ் இலக்கிய 7வது மாநாட்டில் நடை பெற்றது. கடந்த 52 ஆண்டுகளாக 2000 க்கும் மேற்பட்ட இஸ்லாமிய பாடல்களை எழுதி, மெட்டமைத்து தான் பாடியும், பிறரிடமும் கொடுத்து பாடவைத்தார். 1949ல் பாடசாலை மீலாத் விழாவில் இசைக்கோ நூர்தின் சிறுவர் நூர்தீனாகச் சிறப்புடன் பாடினார். 1954ல் கொழும்பு ஸாஹிராக் கல்லூரியில் இசைக்குயிலாக நூர் தீன் பாடிய பாடல் இன்னும் நினைவு கூரப்படுகின்றது. பாட்டெழுதி, இசையமைத்து, பாடுகின்ற மூன்று கலையும் நிரம்பப் பெற்றவரே இசைக்கோ நூர்தீன் ஆவார். அவர் வெளியிட்ட (VCD) மூலம் 2007 உலக இஸ்லாமிய மாநாட்டில் சிறந்த பாராட்டைப்பெற்றார். இவர் இலங்கையில் மட்டுமல்ல தமிழகத்திலும், சிங்கப்பூரிலும் மலேசியாவிலும், பாடியிருக்கினர்றார். "இசைஒளி" என்ற பட்டத்தைத் தனதாக்கிக் கொணர்ட அன்னார் இன்று வானொலியிலும், தொலைக்காட்சியிலும் பங்களிப்பை நல்கிவருகின்றார். வாழ்வோரை வாழ்த்தும் திட்டத்தில் முன்னாள் முஸ்லிம் சமய கலாசார அமைச்சர் அல்ஹாஜ் ஏ.எச்.எம். அஸ்வரின் காலத்தில் "மூலிக் நூரி” என்ற பட்டமும், ஜப்பான் கலாசார பல்கலைக்கழகம் அன்னாருக்கு கெளரவ கலாநிதி பட்டமும் கெளரவ பேராசிரியர் பட்டமும் வழங்கியது.
Page 93 "இதயகீதம்” என்ற அன்னாரது (VCD) ஒரு திருப்பு முனையாக இந்தியாவிலும் இலங்கையிலும் களைகட்டியது அதில் முதல் பாடல் "இக மாந்தர்கள் துயர்போக்கும் யாரஹற்மானே” என்று அமைந்திருந்தது. இவரை கலைஞர்கள் பாராட்டுகின்றார்கள். இலங்கை முஸ்லிம் கலைஞர் முன்னணியை கலைவாதியுடன் சேர்ந்து நிறுவி பல சாதனைகள் படைத்துள்ளார். யாழ் நகர் அஹற்மத் லஹார்தின் (இலங்கை) 1933ல் யாழ்ப்பாணம் வண்ணார் பணிணையில் அஹற்மத் ஹஜூஸைன் சித்திராஹில் தம்பதியர்களுக்கு மூன்றாவது மகளாகப் பிறந்தார். இவருக்கு மூன்று சகோதரர்கள் உணர்டு. ஜனாப் ஸஹார்தீன் ஆரம்பக் கல்வியை கொழும்புஹிராக் கல்லூரியில் பயின்றார். 1950ல் ஜனாப் ஸஹார்தீனர் பொலிஸ் பேணிட் வாத்தியக் கோஷ்டியில் இணைந்தார். பொலிஸ் குழுவில் இவருக்கு நல்ல செல்வாக்கு இருந்தது. காரணம் கிளாரினட், செக்ஸ் போனர். டிரம்ஸ் - போன்ற வாத்தியங்களை வாசித்துள்ளார். 1964ல் பொலிஸ் துறையிலிருந்து ஓய்வு பெற்று சிலோன் சிம்பெஃன் ஒகெஸ்ட்ரா, சிலோனி ஸ்டுடண்ட், கொழும்பு பிலோமொனி ஒகெஸட்ரா ஆகிய இசைக் குழுவில் சேர்ந்து கிளாரினட், செக்ஸ்போன், டிரம்மூன் ஆகியவாத்தியங்களையும் இசைத்துள்ளார். 1954ல் இலங்கைக்கு விஜயம் செய்த இரணர்டாவது எலிஸபெத் மகாராணியாருக்கு வழங்கப்பட்ட வரவேற்பு வைபவத்தில் பொலிஸ் வாத்தியக் குழுவில் பின்னணி இசை வழங்கியவர் அஹற்மத் ஸஹார்தீன் அவர்கள். இவரின் இசையைப் பாராட்டி அப்போதைய பிரதமர் சேர் ஜோன் கொத்தலாவலவின் கையினால் பாராட்டு சான்றிதழ் வழங்கப்பட்டது. இப்பாராட்டின் மூலம் இவருக்கு இசைமுயற்சியில் உற்சாகம் ஏற்பட்டது. இவர் ஜனாபா மாஸ்குமாலா என்பவரைத்திருமணம் செய்து எட்டுப் பிள்ளைகளுக்குத் தந்தையானார். ஜனாப் ஸ்ஹார்தீனின் தந்தையும் காவல் துறையில் பணியாற்றி ишөuj. 1967ல் இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபன இசைக் குழுவில் கிளாரினட் கலைஞராக நியமனம் பெற்றார். 1981 முதல் கம்உதாவ கிராம எழுச்சி விழாக்களில் நாட்டின் நாலா பகுதிகளுக்கும் சென்று பின்னணி இசை வாசித்தார். 1994ம் ஆண்டு “இசைஒளி” என்ற பட்டம் வழங்கி கெளரவிக்கப்பட்டார். தகரா இசை - பக்கிர் பகுர்தின் பாவிா (இலங்கை) இஸ்லாமியர்களின் இசை ரசனையில் பக்கீர் பாவா பாடல்கள் மிகவும் பிரசித்தமானவை! முஸ்லிம்களின் கல்வி, கலாசார விஷேட வைபவங்கள் அனைத்திலும் பக்கீர் பாவாக்கள் அழைக்கப்பட்டு இன்னிசை வழங்கு வார்கள். இவர்களின் இன்னிசைக் கருவியாகத் திகழ்வது “ரப்பானி” வாத்தியமாகும். “ரப்பானை” தட்டுவதில் அதில்
Page 94 உள்ள சலங்கைகளை ஒரு இளுப்பு இளுப்பதில் பாவாக்கள் கைதேர்ந்தவர்கள். பாடும் போது மனமுருகிப் பாடுவார்கள். அபிநயம், அசைவு, ரப்பானி தட்டும் முறை அனைத்தும் முஸ்லிம் களை வெகுவாகக் கவரும். பாவாக்களை எளிதில் இனம்கணர்டு கொள்ளலாம். காரணம் அவர்கள் அணிகின்ற வெள்ளைசாரம், வெள்ளை சேட், பச்சைநிறத்தலைப்பா, கழுத்துநிறைய ஜெபமாலை, கையில் ரப்பானி, இன்னுமொரு கையில் கணிணுக்கு அஞ்சனமிடும் சுறுமா அடிக்கடி இல்,இல் என்ற சப்தம் இத்தனைக்கும் சொந்தக்காரர்கள் இசைமுரசு பாவாக் கள்தான். இஸ்லாமிய இலக்கியங்கள் மக்கள் முன் எடுத்துச் செல்லப்பட்டதற்கு மிகக் காரண கர்த்தாக்களாக இருந்தவர்கள் பாவாக்கள்தான். ஆழமான இஸ்லாமிய இலக்கியப் பாடலகளை மனனமிட்டு விளக்கம் சொல்வார்கள். தமிழ் மக்கள் - பெரியார் கிருபானந்தவாரியாரின் கீர்த்தனைகளையும், பிரசங்கங்களையும் விரும்பிக் கேட்பது போல - இஸ்லாமியர்களும் பாவாக்களால் கூறப்படும் சரிதைகளை மிகவும் மகிழ்ச்சியாகவும், உண்ணிப் பாகவும் கவனம் செலுத்துவார்கள். இப்போது பாவா ஒருவரின் இசை விளக்கத்தைப்படிப்போம். 1936ல் மன்னார் மாவட்டம் முசலிபகுதி. சிலாபத் துறையில் ஜனாப். யூசுப் முகைதீன் பக்கீர் ஜனாபா கொலுசும், பீவி, தம்பதிகளுக்கு மகனாகப் பிறந்தார். பாவா பகுறுத்தின் மன்னார் எருக்கலம்பிட்டி முஸ்லிம் மகாவித்தியாலயத்தில் ஆரம்பக் கல்வியைக் கற்றார். 1958ல் ஜனாபா பாத்திமா என்பவரைத் திருமணம் செய்தார். காலையில இருந்து மாலை வரை தெருத்தெருவாக, ஊர் ஊராக பக்கீர் பாடல்களைப் பாடி மக்களிடம் கிடைக்கும் வெகுமதிகளை தனது ஜீவனோ பாயத்துக்காகப் பயன்படுத்திக் கொணர்டார். அழகான கருத்துள்ள, அடுக்கு மொழியுள்ள பாடல்களை ரப்பானில் தட்டுகின்ற போது வழியெங்கும் சிறுவர்களும், மறைந்திருந்து பெணிகளும் அவதானிப் பார்கள். பகுறுத்தீன் பாவா அவர்களுக்கு 12 பிள்ளைகள் அன்புச் செல்வங்களை காலையில் அரவணைத்த பின்னர் கடைத் தெருவை நோக்கி நடைபயில வார். 12 பிள்ளைகளின் வாழ்க்கைச் செலவை இசைப் பிரியர்களிடம் இருந்து எதிர்பார்க்கும் அவர் இப்படி ஒருபாட்டைப்பாடுவார். “இறைவனிடம் கையேந்துங்கள் அவன் இல்லை யென்று சொல்லுவதில்லை” முழு பஸாருமே அதிர்ந்து நிற்கும் பாவா பகுர்தீன் இஸ்லாமியப் பாடல்கள், நற்கீர்த் தனைகள், பழமை வாய்ந்த ஆனந்தக் களிப்புக்கள், பாத்திமா நாயகியின் வரலாறு, நூறு மஸாலா, சீறாப் புராணம் போன்ற பாடல்களைப்பாடுவார். இலங்கை வானொலி, தொலைக்காட்சிகளில் தோன்றி பாடி ஒரு அசத்து அசத்தினார். கிழக்கு மாகாணம் அக்கரைப்பற்று பிரதேசத்தில் வாழ்விடத்தை ஆக்கி புகழுடன் வாழ்கின்றார். "நூறுல் களிதா” கவிதை ஒளி எனப் பட்டம் சூட்டப்பட்டு பாவா பகுறுத்தின் கெளரவிக்கப்பட்டார்.
Page 95 இசை ஒளி இஸ்மாயில் பாவா (இலங்கை) புத்தளத்தை வசிப்பிடமாகக் கொண்ட பரம்பரை பக்கீர் பாவாதான் ஜனாப் எம்.ஐ.எம். இஸ்மாயீல் பாவா அவர்கள். இவர் தமிழ்நாடு, இளையான் குடி சுல்தான் அலி சா, கலீபதுர் ரிபாயி பக்கீரின் பேரனாவார். இவர் பழைய டில்லிபக்கீர் சிக்கந்தர் அலிசா பரம்பரையின் வாரிசாவார். புத்தளப் பகுதியில் ரமழான் இரவுகளில் இஸ்மாயில் பாவாவின் ரப்பானி இசை ஒளி கேட்காத நாட்களே கிடையாது. அவரின் அற்புதமான குரல் மக்கள் மத்தியில் மிகவும் பிரபலத்தை ஏற்படுத்தியது. தெருத்தெருவாக ஊர் ஊராக ஆரம்பித்த இவருடைய இஸ்லாமிய இசைப்பயணம் இலங்கை வானொலியில் அவரைக் கொணர்டுநிறுத்தியது. 1962 முதல் இலங்கை வானொலி முஸ்லிம் சேவை யில் நுழைந்தார். பாவாவின் ரப்பான் இசையும் அவர் எழுப்பும் குரலும் ஒலிப்பதிவு ஸ்ரூடியோவை ஒரு குலுக்குக் குலுக்கியதாம். நிகழ்ச்சித் தயாரிப்பாளர்கள் பாவாவுக்கு ஒருநிகழ்ச்சியைத் தயார் செய்து கொடுத்தனர். “நூர் மஸாலா” இசைச்சித்திரம் பக்கீர் பைத் ஆகியன முஸ்லிம் நிகழ்ச்சியில் ஆரம்பமானது. 15 நிமிடங்கள் வீதம் 29 வராங்கள் நடைபெற்றது. மீண்டும் அவருக்கு வழங்கப்பட்ட சந்தர்ப்பத்தில் காட்டு பாவா சரித்திரம் திரு வெணிட அரசன் சரித்திரம். தாய் மகளுக்கு புத்திபுகட்டும் பீர்ஸா உம்மா சரித்திரம், பாத்திமாநாயகி தனி கணவருக்குச் செய்த வளமிய்யத்து நாமம் போன்றவற்றை ரப்பான்தட்டலுடன் முஸ்லிம்நிகழ்ச்சியில் வழங்கினார். ஏழு பிள்ளைகளின் தந்தையான இவர் முன்னாள் தகவல் ஒலிபரப்பு அமைச்சர் மர்ஹஅம் ஏ.எல். அப்துல் மஜீதினால் பொற்பதக்கம் வழங்கி கெளரவிக்கப்பட்டார். பாடகி ஜனாபா குர்ஷித் கெளஸ் (இலங்கை) இலங்கையில் இசைத் துறையில் கால்வைத்த முஸ்லிம்கள் பலர். அவர்களுள் முன்னோடியாகத் திகழ்ந்த ஒரு பெண்மணிதான். ஜனாபா லுமாகத் அவர்கள். இவர் மர்ஹகும் பேராசிரியர் முகம்மத் கெளஸ் அவர்களின் மனைவியாவார். இவர் 1950, 1951 களில் தனது கணவர் குர்ஷித் கெளஸஅடன் இணைந்து பாடத் தொடங்கினார். இவர் இலங்கை வானொலியில் தரமான பாடகியாக பிரசித்தம் பெற்றார். 1951 முதல் 1979 வரையுள்ள காலப்பகுதியில் ஜனாபா குர்ஸித் கெளஸ் இலங்கை வானொலியில் "ஏ" வகுப்பு பாடகியாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். அக்கால கட்டத்தில் உருதுமொழியில் எண்ணற்ற பாடல்களைப் பாடி நேயர் நெஞ்சங்களில் நீங்காத இடத்தைப்பிடித்தார். 1963 தொடக்கம் இவர் கொழும்பு பல்கலைக் கழகத்தினி யூனானி வைத்தியப் பிரிவில் (ராஜகிரிய) வெளிவாரி உருது விரிவுரையாளராகப் பணியாற்றினார். அப்போது உருது படிப்பது விரும்பத்தக்க ஒன்றாக இருந்தது. பாகிஸ்தானி தூதுவராலயத்திலும், கொழும்பு ஸாஹிராக் கல்லூரியிலும் சிறுவர், சிறுமியர்களுக்கு உருது வகுப் புக களையும் இசையுடன கூடிய உருது பாடல்களையும் கற்பித்தார். வளரும் பலரை பாடல் துறையில் ஊக்கப்படுத்தனார். 1992ம் ஆண்டு "ஸவ்துல் அணிதலீப்” இசைக் கோகிலம் என்ற கெளரவம் ஜனாபா லுமாகத் குத்துரஸ் அவர்களுக்கு வழங்கப்பட்டது.
Page 96 பத்து வயது முதல் பாடும் மிஸ்ருல் ஹனிமா (இலங்கை) கொழும்பு வெள்ளவத்தையைப் பிறப்பிடமாகக் கொணர்ட மிஸ்ருல் ஹனிமா - தெஹிவளை மத்திய கல்லூரியில் கல்வி பயின்றார். படிக்கும் காலத்திலேயே பாடும் திறனை வளர்த்துக் கொணர்டார். 10 வயது முதல் பாட ஆரம்பித்த இவர் பாடசாலை நிகழ்ச்சிகளிலும், தேசிய பாடல்களிலுமாக இலங்கை வானொலி யில் நல்ல சந்தர்ப்பம் கிடைத்தது. “இல்முல் இஸ்லாம்” “முஸ்லிம் காந்தா” போன்ற நிகழ்ச்சிகளை தலைமை தாங்கி நடாத்தினார். ஐந்து பிள்ளைகளின் தாயான ஜனாபா மிஸ்ருல்ஹனிமா ஒரு சிறந்த ஆசிரியை ஆவார். 1970 முதல் 1984 வரை கம்பளை ஸாஹிராக் கல்லூரியில் பங்காற்றிய ஹனிமா சிறந்த நாடகங்களையும் மேடையேற்றினார். அனார்கலி, ஸாஹிறாவின் வரலாறு, அம்மா போன்ற நாடகங்கள் ஹனிமாவுக்கு நல்ல ஜனரஞ்சகத்தைக் கொடுத்தது. பாடகன் பெளஸ9ல் அமிர் (இலங்கை) 1940ல் பிறந்த ஜனாப் பெளஸஅல் அமீர் அவர்கள் ஒரு சிறந்த பாடகர். கொழும்பு பாத்திமா கல்லூரியில் ஆரம்பக் கலவியைப் பெற்றார். வகுப்பில் சிறந்த பாடகராகவும், கலைஞராகவும் திகழ்ந்தார். தமிழில் அசையாத அன்பு வைத்திருந்தார். இவரது திறமைகளில் கணிவைத்திருந்த இவரது ஆசிரியைகளான சிவத்தமிழ் செல்வி, தங்கம்மா அப்பாக் குட்டி, திருமதி சோதி ஆகியோர் வானொலி நிகழ்ச்சிக்கு அழைத்துச் சென்றனர். காலம் கடந்தது ஹமீத் அல்ஹஜூஸைனியா பாடசா லைக்கு மாற்றம் பெற்றார். அங்கும் தமிழ் மணம் வீசும் ஆசிரியர்கள் அதிபர்கள், அல்ஹாஜ் எஸ். ஏ. எம். எம். அஷ்ரப், (அதிபர்) கவிஞர் எம்.ஸி.எம். சுபையிர் ஆகியோர் உற்சாகம் ஊட்டி வானொலி நிலையத்துடனர் இவரை இணைத்துவிட்டனர். 1960ல் பெளஸ9ல் அமீர் ஒரு வானொலிக் கலைஞ ராக உயர்ந்தார். தொடர்ந்து தமிழ் பிரிவில் மெல்லிசைப் பாடல்களைப் பாடினார். இலங்கை சினிமாவுக்கு திரைக்கதை பாடல்கள் எழுதினார். மர்ஹர9ம் சுபையிர் மக்கீனின் “பெணர்ணாக ஏன் பிறந்தேன்?” படத்தில் டப்பிங் டிரக்டராகப் பணியாற்றினார். ஆசிய நாட்டு முஸ்லிம் பெண்கள் ஆர்வமுடன்பாடும் தவைபாத்திறா கிழக்கு ஆசிய முஸ்லிம் பெண்கள் குறிப்பாக இந்தியா, இலங்கை சிங்கப்பூர் ஆகிய நாடுகளில் முஸ்லிம் பெண்கள் தலைப்பாதிஹா என்ற பாத்திமா நாயகி பற்றிய பாடல்களை மிகவும் ஆர்வமுடன் ஒன்று சேர்ந்து பாடுகின் றனர். இப்பாடல்களை பிள்ளை கிடைப்பதற்கு முன்பும் பிள்ளை கிடைத்து 40வது நாளிலும் பெண்கள் ஒன்றிணைந்து மகிழ்ந்து பாடுகின்றனர். குறிப்பு பெண்கள் மத்தியில் பெண்கள் பாடுவதில்
Page 97 1971ல் அரச கலாசார பேரவை நாடகப்பிரிவின் அங்கத்தவராகத் தெரிவானார். 1974ல் பேரவை நடாத்திய நாடக விழாவில் பங்குபற்ற (பேரவைப் பதவியைத் துறந்தார்) அவ்விழாவில் கலந்து கொணர்டு சிறந்த நடிகனி, சிறந்த இசையமைப்பாளர், சிறந்த மேடையமைப்பு, சிறந்த பிரதி ஆகிய நிகழ்வுகளில் முதலிடம் பெற்றார். அல்ஹாஜ் ஏ. ஆர். ஸெய்னுலாப்தின் தயாரித்த “ஆகாயப்பந்தல்” டெலி நாடகமே இவரது முதல் ரீ வி. பிரதியாகும். ஏழு வயது முதல்பாடும் டோனி ஹஸன் (இலங்கை ) 1950ல் கொழும்பில் மர்ஹஅம் டி.கே ஹஸன் ஜனாபா நோனாபிஸ்தாரிதம்பதிகளுக்கு டோனிமகனாகப் பிறந்தார். இவர் ஒரு இசைக் குடும்பத்தின் வாரிசாவார். 1974ல் ருக்ஸானா என்பவரை மணந்து இரணர்டு பிள்ளைகளைப் பெற்றார். ஏழு வயதில் பாடத் தொடங்கிய இவரை குடும்ப உறுப்பினர். மர்ஹகும் டீ. கே. ஹனிபா இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்திற்கு அழைத்துச் சென்று தான்பாடும் சிங்களப் பாடல்களில் கூட்டுச் சேர்ந்து பாட வைத்து அற்புதமாக அவரை அறிமுகப்படுத்தினார். டோனி ஹஸனின் தந்தை ஒரு சிறந்த பாடகன். தந்தை யுடன் ஒத்துழைத்து தாயும், தனது மகனும் பிரபல பாடக னாக வரவேண்டுமென விரும்பினார். கனவுகள் நிஜமானது. டோனி ஹஸன் மீலாத் மேடைகளில் பாடி அசத்துவார். முதல் திரைப்படப் பாடலை பாடுவதற்கு வாய்ப்பளித்த ஆர். முத்துசாமியை டோனிமறப்பதில்லையாம். அதிகமான சிங்களப் பாடல்களைப் பாடிய டோனி ஹஸன் 1966முதல் ஹிந்தி திரையுலகப் பாடல்களைப் பாடினார். விஷேடமாக ஹிந்தி இசை உலகப் பாடகர் முகம்மத் ராபியின் பாடல்களை டோனி அப்படியே பாடுவார். 50000 ஹிந்திப் பாடல்களைப் பாடிய முகம்மத் ராபியின் "முஹப்பத்” அன்பு டோனியின் உள்ளத்தில் குடி கொணர்டி ருந்தது. இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தில் “பீ” தரப்புப் பாடகராக இருந்து முஸ்லிம் சேவையில் இஸ்லாமிய கீதங்களைப் பாடுவதில் "ஏ" தரப்புப் பாடகராகத் தெரிவு செய்யப்பட்டார். முன்னாள் ஜனாதிபதி திரு ஆர். பிரேமதாஸ் அவர் களின் கம் உதாவ, மஹாபொல இசைநிகழ்வுகளில் கலந்து கொணர்டு கலக்கினார். இவருக்குக் கிடைத்த கெளரவம் “இசை ஒளி” என்பதாகும். வருடம்தோறும் அணினல் நபி (ஸல்) அவர்களது மீலாத் மேடைகளில் தோன்றி பாடுவார். வானொலியிலும் தொலைக்காட்சியிலும் இவருக்கு சந்தர்ப்பம் வழங்கப்படும். தாலாட்டும் தாய்” நூர்ஜஹான் மர்சூக் (இலங்கை) 1949ம் ஆண்டு கணிடியில் மர்ஹகும் கே. ஏ. அபூ உபைதா, றஹற்மாபீவி தம்பதியினருக்கு நூர்ஜஹானி மகளாகப் பிறந்தார். கணிடி உஸ்மானியா மகா வித்தி யாலயத்தில் க.பொ.த. சாதாரண தர வகுப்புடன் முடித்துக் கொணர்டார்.
Page 98 1967ல் கலையுலகில் அடி எடுத்து வைத்த இவர் வானொலியில பாடி பிரபலமானார். கடந்த 40 வருடங்களாக கலைத்துறையில் மிகப்பங்களிப்புச் செய்து வருகின்றார். நூர்ஜஹானி மர்துக் “வாடைக்காற்று" மாமியார் வீடு” ஆகிய சினிமாப்படங்களில் பின்னணிப் பாடகராகப் பாடினார். முன்னாள் ஜனாதிபதி ரணசிங்க பிரேமதாச அவர்கள் பிரதமராக இருந்த போது 1982ல் உதாகம நிகழ்ச்சியில்-நூர்ஜஹானைப்பாடவைத்து கெளரவித்தார். தமிழ் சகோதரர் திரு எஸ்.பீ.ஆர். கணபதிப்பிள்ளை என்பவரினர் நல் லாசியுடனர் உதாகம நிகழ்ச்சிக்குள் நுழைந்தார். 75க்கு மேற்பட்ட உதாகம நிகழ்ச்சியில் பாடி பாராட்டப்பட்டார். வானொலியில் இஸ்லாமிய கீதம், உரைச்சித்திரம், இசைச் சித்திரம், தமிழ் மெல்லிசை , தமிழ் முஸ்லிம் நாடகங்கள் மாதர் மஜ்லிஸ் என்றெல்லாம் நூர்ஜஹானின் குரல் ஒலித்தது. இலங்கை ரூபவாஹினிக் கூட்டுத்தாபன முஸ்லிம் நிகழ்ச்சியிலும் இவரது பாடல் ஒளிபரப்பாகும். தொலைக் காட்சிநாடகங்களிலும் அவ்வப்போது பங்கேற்பார். தென்மாகாணத்தில் - பிள்ளைப் பெற்று 40வதுநாள் பெயர் துடும் வைபவத்தில் பிள்ளையை தாலாட்டும்நிகழ்ச்சி நடைபெறும். இதற்காக நூர்ஜஹான் அழைக்கப்படுவார். தாலாட்டுப்பாடுவார். அனைத்துப் பெணர்களும் அவரை தழவிருந்து பாடலக்ளைக் கேட்டு மகிழ்வார்கள். 1994ம் ஆண்டு “இசைக் கோகிலம்” விருது பெற்று கெளரவிக்கப்பட்டார். 1971 ம்ஆண்டு அல்ஹாஜ் எம். எஸ். எம். மர்துக்கைத் திருமணம் செய்தார். புனிதமக்காப் பயணத்தை மேற்கொண்ட ஹாஜியானி நூர்ஜஹான் 2011 இல் துபாயிலும் பாராட்டப்பட்டார். இனிய குரல் ஏ.எச்.எம். முகைதீன் (இலங்கை) 1953ல் ரேடியோ சிலோனில் இசைத் துறையில் பயிற்சி பெற்று பாடியவர் ஏ.எச்.எம். முகைதீன் அவர்கள் வானொலி உஃவதுல் இஸ்லாம், சிங்கள முஸ்லிம் நிகழ்ச்சி களிலும் சிறப்பாகப் பாடியுள்ளார். இலங்கை ரூபவாஹினிக் கூட்டுத்தாபனம் நடாத்திய வளர்பிறை நிகழ்ச்சியிலும் பாடினார். எம்.கே ரொக்சாமி முதல், முகம்மத் சாலி, லத்தீப், கே.எம். ஸ்வாஹர், பீர் முகம்மத் ஆகியோரினர் இசை மூலம் பாடலகளைத் தொடர்ந்தார். இசையின் தாக்கமும் இஸ்லாமியர்களின் தேடலும் 1972ம் ஆண்டு பேராதானைப் பல்கலைக்கழகத்தில் அழகியல் பாடநெறி அரங்கேறியது. அடுத்து களனி பல்கலைக்கழகம் 1991ம் ஆண்டு நுணர்கலை பீடமாக, அதிலும் வளரச்சி கணிட வளாகமாக கலைத்துறையில் பட்டப் படிப்பு வரை வாய்ப்புக்களை ஏற்படுத்திய போதும்முஸ்லிம்கள் இசை சார்ந்த தேர்வில் பல்கலைக்கழக மட்டங்களில் மிகக் குறைவாகவே காணப்பட்டார்கள். இசைத்துறையில் பொப், பைலா, டிஸ்கோ, போன்ற அமைப்புக்கள் நுழைந்து மனிதர்களிடமிருந்த வரம்புக்குட் பட்ட இசை ஆர்வத்தினை ஆரோக்கியம் இழக்கச் செய்தது. ஆனாலும். இலங்கை சுதந்திரம் அடைந்த பின்னர் வரம்புக்குட்பட்ட உணர்வில் இலங்கை முஸ்லீம்கள் விழித் தார்கள்.
Page 99 1956ன் பின்னர் முஸ்லீம்களின் இசைப்பங்களிப்பு வானொலி துறைக்குள் உயர்ந்த தரத்துடன் உள்வாங்கப் பட்டது. இஸ்லாமியக் கவிஞர்கள் பாட்டெழுதி, இசை யமைத்துப்பாடலானாார்கள். 1903 ம் ஆண்டுகளுக்கு முன்னர் பம்பாயிலிருந்து வந்த நாடகக் குழுவில் அதிகமான முஸ்லீம்கள் கலந்து கொணர்டனர். அக்கால சூழலிலேயே இலங்கை முஸ்லீம் களுக்கு தும்ரி, கவாலி, கஸ்ல், பஜன், கியாஸ் போன்ற ஹிந்துஸ்தான் இசைகளில் ஆர்வம் மிகவும் தூண்டப் பட்டது. பம்பாய் முஸ்லீம்கள் இலங்கை முஸ்லிம் இசை அபிமானிகளுக்கு பயிற்சி வழங்கினார்கள். இசை ஒளி டி. எஃப். லத்திப் (இலங்கை) 1947ம் ஆண்டு ஜனாப் லத்தீப் அவர்களுக்கு இசையுலகில் பிரபலம் பெற வேண்டும் என்ற எணர்ணம் அதிகரித்தது. அப்போது. இலங்கை அரசின் பொலிஸ் கோஷ்டி பேணிடில் (வாத்தியக்குழுவில் ) சேர்ந்தார். மேற் கத்தேய இசையில் ஆர்வம் காட்டிய அவர் பொலிஸ் பேணிடில் கிளரினட் ( Clarinet ) வாசிக்கும் வாத்தியக் கலைஞராகத் திகழ்ந்தார். 1951ம் ஆண்டு முருகன் நவகல பிலிம்ஸ் நிறுவனம் தயாரித்த "பணி டாவின் பட்டணப் பிரவேசம்” எனும் முதலாவது சிங்களத் திரைப்படத்துக்கு ஜனாப் லத்தீப் கிளாரினட் பாவித்து, பாடியும் காட்டினார். இலங்கை வானொலியில் சிங்கள, தமிழ், முஸ்லிம் நிகழ்ச்சிகளில் வாத்தியக் கலைஞராக மக்கள் முன்பிரபலம் பெற்றார். இஸ்லாமிய கீதம் என்றதும் லத்தீபின் பெயரும் அங்கு வாசிக்கப்படும். கொலம்பியா இசைத் தட்டுக்கள் வெளிவர இவர் பின்னணி இசை வாசித்தார். 1954ம் ஆண்டு பிரபல சினிமாத் தயாரிப்பாளர் திரு சிரிசேன விமரவீர அவர்களது "பொடி புதா " என்ற சிங்களப் படத்துக்கு இசை அமைந்தார். இன்று வரை 50க்கு மேற்பட்ட சிங்கள, தமிழ் படங்களுக்கு இசையமைத்துள்ளார். சிங்கள மக்கள் மத்தியில் இவருக்கு நல்ல செல்வாக்கு இருந்தது. (, இதுபோல் தமிழ் படங்களுக்கும் இசை அமைத்தார். திரு வி. பீ கணேசனின் "புதியகாற்று” திரு சிவதாசனின் "வாடைக்காற்று” ஆகியவையாகும். இவர் இசையமைத்த பல சிங்களத் திரைப்படங்கள் தேசிய விருதுகளையும் பெற்றது. ஜனாப் டி. எஃப். லத்தீப் அவர்கள் இசையமைக்கப் பல முன்னோடி கலைஞர்கள் மொழி, சமய வேறுபாடுகளை மறந்து பாடியுள்ளார்கள். 1991ல் "மூஸிக் நூரி", "இசை ஒளி” எனும் பட்டம் தட்டி கெளரவிக்கப்பட்டார். ஹிந்துஸ்தான் இசையில் எம்.எச்.குத்துஸ் (இலங்கை) ஹிந்துஸ்தானி இசையில் முஸ்லீம்கள் முன்னேற் றம் கணர்டார்களா? என ஒரு கேள்வி முன்வைக்கப்படு மானால். அதற்குப்பதிலாக அமைபவர் இசை ஒளி எம்.எச் குத்துரஸ் அவர்கள்தான். 1930ம் ஆண்டு பிறந்த இவர் கம்பளை ஸாஹிரா, கொழும்பு ஸாஹிரா ஆகியவற்றில் கல்விபயின்றார். 1950ம் ஆண்டு இலங்கை வானொலியில் நடைபெற்ற இசைப் பரீட்சையில் வெற்றி பெற்று இசைக் கலைஞராக இடம்
Page 100 பிடித்துக் கொண்டார். 1953ல் வட இந்தியாவில் லக்னோ நகரில் பாத்கந்த் சங்கீத சர்வ கலாசாலையில் ஹிந்துஸ் தானி இசைத்துறையில் பட்டம் பெற்ற முதலாவது இலங்கை முஸ்லிம் எம்.எச்.குத்துரஸ்மரிக்கார் ஆவார். புத்தளம் கற்பிட்டி மணிணின் மைந்தரான இன்னார் இலங்கை முஸ்லிம்களின் இதயத்தில் நிரம்பியிருந்தார். 1959ம் ஆண்டு இலங்கை வானொலி முஸ்லிம் நிகழ்ச்சிக்கு ஒப்பந்த அடிப்படையில் பதவி ஏற்றார். அக்கால கட்டத்தில் சங்கீதம், நாடகம், விவரணச் சித்திரம் உட்பட பல நிகழ்ச்சிகளை வழங்கினார். 1961ல் இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தில் நிரந்தர உத்தியோகத்தராகவும், பகுதி நேரப் பொறுப்பாள ராகவும் பதவி உயர்வு பெற்றார். இவரது ஏற்பாடே “லைலாதுல் கத்ர்” மிஃராஜ் இரவு போன்ற நாட்களில் முஸ்லிம் சேவை கணிவிழித்து பழகிக் கொணர்டது. இன்றும் அதேநிகழ்வுதான். 1968ம் ஆண்டில் இலங்கை வானொலி-ஒலிபரப்புக் கூட்டுத்தாபனமாகிய போது முஸ்லிம் நிகழ்ச்சி பகுதியின் அமைப்பாளராகப் பதவியேற்றம் பெற்றார். 1982ல மலேசியாவில் புலமைப் பரிசில் பெற்றார். 1987ல் முஸ்லிம் சேவையில் பணிப்பாளராக பதவி யேற்றார். 1991ம் ஆண்டு "இசை ஒளி” எனும் பட்டம் சூடப்பட்டது. டோலக் வாத்தியகாரர் பிர்முகம்மத் (இலங்கை) டோலக் வாத்தியத்தால் இலங்கை முஸ்லிம்கள் பங்களிப்புச் செய்திருக்கின்றனர். 1934ல் பிறந்த எம்.எம். பீர்முகம்மத் நன்றாக டோலக் வாசிப்பவராகப் பிரசித்தம் பெற்றார். 1953ம் ஆண்டு இலங்கை வானொலியில் டோலக் வாத்தியக்காரராக புகழ் சேர்த்தார். முஸ்லிம் சேவையிலும் வர்த்தக சேவையிலும் டோலக் தட்டி ஒரு கலக்குக் கலக்கினார். அது மாத்திரமன்றி சிங்கள சினிமாக்களிலும், மேடை நாடகங்களிலும் டோலக் வாசித்து பிரபலம் பெற்றுள்ளார். 1955ம் ஆண்டில் முஸ்லிம் சேவையில் இஸ்லாமியப் பாடகராக (ஏ) பிரிவில் தேர்ந்தெடுக்கப்பட்டார். விஷேடமாக அவரின் பாடல்கள் அவரால் இயற்றப்பட்டது தான். 40 வருட காலங்களாக 1650 பாடல களுக்கு மேல எழுதியுள்ளார். அவை இன்றும் கனிர் என்று ஒலிக்கிறது. அவர் எழுதிய "அம்மா, அம்மா” என்ற பாடல் மிகவும் எடுப்பானதாகவும், பிரசித்தி பெற்றதாகவும் விளங்குகின்றது. வானொலியுடனர் தனது கலைப் பங்களிப்பை மட்டுப் படுத்தாமல் தொலைக்காட்சி வழியே யும் தொடர்ந்து கொணர்டிருந்தார். இலங்கை துறைமுக அதிகார சபையில் 35 ஆண்டு களுக்கு மேலாக பாதுகாப்புப் பிரிவில் கடமை புரிந்தார். இவருக்கு பன்னிரெண்டு பிள்ளைகள் 1991ம் ஆண்டு "இசை ஒளி” எனும் பெயர்சூடப்பட்டு பாராட்டப்பட்டார். கனிர் என்ற குரலில் காயல் ஷேக் முகம்மத் (இந்தியா) 1947ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 15ம் திகதி இந்தியத் திருநாடு சுதந்திரக் காற்றை சுவாசிக்கத் துடங்கிய அதே தினத்தில், காயல் பட்டணத்தில் இசைமேதை காயல் ஷேஹற்முகம்மத் பிறக்கின்றார்.
Page 101 அப்துல் ரஹற்மான், ஸைதுரான் பீவி தம்பதிகளின் மகனாகப் பிறந்த இவர் நாள் ஒரு வணிணம் பொழுது ஒருமேனியாக வளர்ச்சிகண்டார். பாடசாலையில் சேர்க்கப்பட்ட காலங்களில் நன்றா கப் பாடுவராக இருந்திருக்கின்றார். பின்னர் சினிமாவிலும், கச்சேரிகளிலும் பாட ஆரம்பித்தார். இந்தியாவில் நாகூர் ஈ.எம். ஹனிபாவின் இசைக் கச்சேரியை - காயல் ஷேஹற் பார்த்துக் கொணர்டிருந்தார். அது முதல் இஸ்லாமிய கீதங் கள் பாடவேணர்டுமென்ற எணர்ணம் தோன்றியது. இறைவனையும், இறைத்துாதரையும், நல்லவர் களையும் பாட வேணர்டும் என்ற எணர்ணம் ஏற்பட்டது. அதற் கேற்ப நாகூர் சலீம் போன்ற கவிஞர்களும் கைகொடுத்தனர். கர்நாடக இசையில் நல்ல பயிற்சியும் பெற்றார். இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம் அவரது பாடல்களை பாதுகாத்து விஷேட நாட்களில் ஒலிபரப்பியது. அதனால். இலங்கையிலும், இந்தியாவிலும் அதிகமான நேயர் நெஞ்சங்களை சம்பாதித்துக் கொண்டார். அதன் பெறுபேறாக 1979ம் ஆண்டு இலங்கையில் நடைபெற்ற 4வது உலக இஸ்லாமிய தமிழ் இலக்கிய மாநாட்டு நிகழ்ச்சிகளில் சிறப்பாக இறைவாழ்த்துப் பாடினார். "ஈச்சை மரத்து இன்பச் சோலையில் நபிநாதரே! என்ற பாடல் பணி டார நாயக்க சர்வதேச மாநாட்டு மணிடபத்தையே ஒரு குலுக்கு குலுக்கியது. 1992ம் ஆண்டு இலங்கைக்கு விஜயம் செய்த காயல் ஷேக் முகம்மத் கிழக்கு மாகாணத்தில் ஒரு கச்சேரியை நடாத்தினார். இலங்கை முஸ்லிம் காங்கிரஸ் முன்னாள் தலைவர் மர்ஹகும் அல்ஹாஜ் எம்.எச்.எம். அஷரப் ஷேஹற்முகம்மதை அமர்த்தி கட்சிப் பாடல்களை பாட வைத்து "புதிய வெளிச்சம்” எனும் தலைப்பில் பணிடார நாயக்க மாநாட்டு மணிடபத்தில் வெளியிட்டு வைக்கப் பட்டது. இன்றைய முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் அல்ஹாஜ் றவூப் ஹக்கீம் அவர்களும் இவரை வைத்து கட்சிப் பாடல் களைப் பாடினார். இலங்கைத் தொலைக் காட்சியிலும், வானொலி போன்று நிறைய சந்தர்ப்பம் வழங்கப்பட்டது. 2007ம் ஆண்டு ஏ.ஆர்.எம். ஜிப்ரி, ஸையித் ரஸ்மி மெளலானா போன்றோ ரின் "துரதுரைத்த மாமலரே” என்ற ஒலி, ஒளி பாடல் பேழை களுக்கு நல்ல பாடகர்களைக் கொடுத்து ஊக்கப்படுத்தி னார். தன்னைப் போன்று தனது மூத்தமகன் சமீமை பாடக னாக்கி இசையுலகுக்கு தனது பிரதிநிதியாகத் தோற்று வித்துள்ளார். காயல் பட்டிணம் அப்துல் காதிர் தபி மெளலானா மெளலவி அவர்களிடம் நல்லாசி பெற்று பல எகிப்தின் பாடகியும் இசை அரங்க நிகழ்வுகளும் எகிப்திய பிரபல பாடகிதான் உம்முகுல்தூம் என்பவர். இவர்ஆயிரக்கணக்கான பாடல்களை மேடையில் பாடிவருகின்றார். காதல் பாடல்களும் உண்டு. அவரின் பாடல்கள் சோகமாகவும், அழுகையாகவும் இருக்கும். அவரின் பாடலில் ஆத்மீக அந்தரங்கம் இருப்பதாகவும் சில அறிஞர்கள் கூறுகின்றனர். இவரின் பாடலுக்கு நல்ல கிராக்கிஉண்டு.அதேவேளை எதிர்ப்புமுண்டு.
Page 102 பாடல்களைப் பாடினார். மக்கள் மனதில் இஸ்லாமியப் பாடல்களைப் பாடி இதயத்தில் இடம் பிடித்திருந்தார். 2009 ஜூன் மாதம் 9ம் திகதி காலை 9.15 மணியளவில் இறையடி சேர்ந்தார். "நாளைக்கு நிலவு வரும் நாமிருக்க மாட்டோம் ” என்று பாடிய அணினார். அடுத்த நாள் நிலவுக்கு முன்னர் 10ம் திகதி காலை 10.00மணிக்கு உலக மக்களுக்கு வாழ்த்துக் கூறிமணர்ணறை சென்றார். அவரின் பாடல்கள் இதயங்களில். ஜனாபா ஞெய் குமாலா சவ்ஜா (இலங்கை) இலங்கை மலாய் சமூக மக்கள் சகலருடனும் ஒட்டி, உறவாடி வாழ்கின்றனர். மலாய் மொழியில் முதலாவது கெஸ்ட் ஒலி நாடாவைப் பாடி நின்றவர் ஜனாபா ஞெய் குமாலா சவ்ஜா ஆவார். 1942ல் தென்னிலங்கையிலுள்ள மாத்தறையில் ஜனாபா ஞெய் குமாலா பிறந்தார். அரசாங்க முதல்தர தொழில் நுட்ப அதிகாரியான ஜனாப் எம்.எம். பஹற்லாலுன் சவ்ஜா என்பவரை மணந்துகொணர்டார். வாழ்க்கை பூங்காவில் நான்கு பிள்ளைகளுக்குத் தாயானார். கொழும்பு வெள்ளவத்தை சைவமங்கையர் வித்தியாலயத்தில கல விபயின்ற குமாலா சவ்ஜா கலைத்துறையில் மிகவும் கெட்டித்தனமாகக் காணப் பட்டார். தனது கலைப்பயணத்தைத் தொடர்ந்த ஜனாபா குமாலா இலங்கை வானொலியில் "ஏ" தரப்பு பாடகியாக கடந்த கால நூற்றாண்டுக்கு மேலாக தனது பங்களிப்பை செய்து வருகின்றார். இவர் வானொலியில் பாடவரும் போதெல்லாம், மலாய் சமூகத்தினர் மலர்ந்த முகத்துடனர் ஜனாபா குமாலாவை நேசித்தனர். 1994ம் ஆண்டு ஜனாபா ஞ்ெய குமாலா சவ்ஜா அவர்களுக்கு “இசைகோகிலம்” என்ற சிறப்புப் பெயர் வழங்கிகெளரவிக்கப்பட்டார். பாடகர் அல்ஹாஜ் ஏ.எல்.எம். யூசுப் (இலங்கை) 1930 ம் ஆண்டு மாவனெல்லையில் அபூபக்கர் லெப்பை தம்பதிகளுக்கு மகனாகப் பிறந்தவர் ஜனாப் ஏ.எல்.எம். யூசுப் அவர்கள். கொழும்பு மருதானை ஸாஹிராக் கல்லூரியில் படிக்கின்ற போதே நன்றாகப் பாடக்கூடிய ஆற்றலைப் பெற்றிருந்தார். கதாப்பிரசங்கத்தில் இசை மீட்டுவதில் இவர் திறமை காட்டினார். அல்ஹாஜ் எஸ்.எம்.கமால்தீன், எம்.ஏ. முகம்மத் போன்றோரின் கதாப்பிரசங்க ஏற்பாடுகளில் யூசுபின் திறமை பெரும் எடுத்துக்காட்டாக இருந்தது. 1964 முதல் 1970 வரையான காலப்பகுதியில் மாவனெல்ல நகரசபை தலைவராகவும் - வட பிராந்திய போக்குவரத்து சபை பணிப்பாளராகவும் கடமையாற்றினார். இன்னும் பிரபல சட்டத்தரணியாகவும் பிரசித்த நொத்தாரி சாகவும் கடமையாற்றினார். 1986 - 1989 வரையிலான காலப்பகுதியில வெளிநாட்டு வேலையமைப்பினர் பணிப்பாளராகவும், 30 வருடங்களுக்கு மேலராக தேசிய வீடமைப்புத் திணைக்களத்தினதும் இலங்கை வீடமைப்பு வங்கியின் ஆலோசகராகவும், 1975 முதல் பதில் மாஜிஸ்திரேட்
Page 103 குழுவின் உறுப்பினராகவும், 1987ல் இலங்கை முஸ்லிம் வக்பு சபையின் உறுப்பினராகவம் பங்கேற்றார். 1953 ல் லக்னோ இசைக் கல்லூரி அதிபர் பேராசிரியர் திரு ரத்ன ஜனர்கரினால் - இஸ்லாமிய தோத்திரப் பாடல்களைப் பாடுவதில் "ஏ" தரத்துப் பாடகராக தெரிவு செய்யப்பட்டார். இவருக்கு “இசைஒளி” எனும் பெயர் தட்டி கெளரவிக் கப்பட்டார். பாடகர் கலாநிதி கரீம் ஏ. றஹிம் (இலங்கை) இஸ்லாமிய கீதம் பாடிய பல பாடகர்களுள் மறக்க முடியாத இடத்தில் இருப்பவர் பாடகர் வைத்திய கலாநிதி கரீம் ஏ. றஹிம் அவர்கள். 1916ல் புத்தளத்தில் எம்.எல்.எம். அப்துல் கரீம் சுலைஹா உம்மா தம்பதிகளுக்கு மகனாகப் பிறந்தார். புத்தளம் "சாந்தஎன்றுாஸ்” வித்தியாலயத்தில் ஆரம்பக் கல்வியை பெற்ற இவர், கொழும்பு சுதேச வைத்தியக் கல்லூரியில் கல்வி பயின்று சுதேச வைத்தியராகப் பட்டம் பெற்று தனியார் வைத்தியராகக் கடமையாற்றினார். பாடகர் கலாநிதி றஹீம் ஜனாபா பாத்திமா ஜனுரண் என்பவரைத்திருமணம் செய்தார். 1934-1937 வரை இலங்கை வானொலியில் நிலையப் பாடகராக இருந்து இஸ்லாமிய கீதங்களைப் பாடினார். இவரின் இசை ஞானத்திற்கேற்ப 1950ல் அழுத்கம ஆசிரியப் பயிற்சிக் கலாசாலையில சங்கத ஆசிரியராகப் பணியாற்றினார். இந்த இசை ஆசிரியத் தொழில் 1960 வரை நீடித்தது. 1945 முதல் 1950 வரை இலங்கை வானொலியில் கலைஞர் தேர்வுக் குழுவில் அங்கத்தவராகத் திகழ்ந்தார். 1972 - 1973 வரையான காலகட்டத்தில் கலைப் பேரவையின் தமிழ்த் தேசிய சங்கீத குழுவின் உறுப்பினராகத் திகழ்ந்தார். 1980 முதல் களனி பல்கலைக்கழகத்தின் அழகியற்கலை பேரவையினர் உறுப்பினராகப் பணியாற்றினார். 1994ம் ஆண்டு "இசை ஒளி” எனும் பட்டம் வழங்கி கெளரவிக் கபபடடrர. புஹாரி நானாவின் இசை முயற்சி (இலங்கை) கொழும்பில் 1902ல் எம்.எம். அலியார் பாத்தும்மா தம்பதியரின் மகனாகப் பிறந்தவரே ஜனாப் எம்.ஏ. புஹாரி அவர்கள். 1946ம் ஆண்டு ஸைதுரண் பீவி என்பவரை மணமுடித்தார். சின்ன வயது முதல் புஹாரிடோலக் தட்டும் பிரியராகக் காணப்பட்டார். புஹாரி அவர்களுக்கு இல்லறப் பயணத்தில் அவர் மனைவியாக ஸைத்தூண் அமைந்தார். இருவருக்கு மிடையே ஆறுபிள்ளைகள். டோலக் புஹாரி எல்லோராலும் புஹாரிநானா என்றே அழைக்கப்பட்டார். முன்னாள் பிரதமர் டட்லி சேனநாயக்க பிரதமராக இருந்த காலத்தில் - முன்னாள் ஜனாதிபதி ஆர். பிரேமதாஸ் வின் சுசரிதமணிடபத்தில் பாகிஸ்தானிலிருந்துஇலங்கை வந்திருந்த கவாலி வாலா ஹாஜி செய்யத் முஸ்தபா மியா பாட, புஹாரி நானா டோலக் வாசித்தார். மண்டபம் நிறைந்த ரசிகர்கள் கைதட்ட சுசரித மணிடபம் குலுங்கிநின்றதாம். முன்னாள் ஜனாதிபதி ஆர். பிரேமதாஸ் அவர்களுக்கு புஹாரி நானாவின் அடி பிடித்துவிட்டது.
Page 104 அப்போது ஜனாதிபதி கூறினாராம். புஹாரி காக்கா "தவ எகக் சிந்து” என்றுபுஹாரிநானா டோலக்கை ஒரு பிடிபிடித் தாராம் கைதட்டலும் கரகோசமும் வாண்முட்டியதாம். 1950 ல் இலங்கை ரேடியோ சிலோனில் பாடியதோடு டோலக் வாசிப்பவராகக் கலைப் பயணத்தைத் தொடர்ந்தார். இரணர்டாவது மகாயுத்தம் முடிவுற்று தமிழகம் சென்ற புஹாரி அவர்கள் நாகூர் தர்காவில் காரைக்கால் தாவூத் பாடபுஹாரிநானா டோலக் வாசித்தார். பிரபல சிங்களப்படமான "பிடிசர கெல்ல” என்ற படத்துக்குபுஹாரிநானா டோலக் வாசித்தார். ஜனாப்புஹாரி அவர்கள் “இசை ஒளி" எனும் பட்டம் வழங்கிகெளரவிக்கப்பட்டார். அமைதிதேடிதடியை எறிந்த யூசுப் இஸ்லாம் பிரேசில் நாட்டுக்கு விஜயம் செய்த கட்ஸ்டீவன் இஸ்லாத்தை ஏற்பதற்கு முன்னர் மனஉளைவுடன் கடல் ஒரம் சுற்றினார். அவரின் கையில் ஜேர்மனில் வாங்கிய ஒரு கைத்தடி நீயாவது எனக்கு அமைதி பெற்றுத் தருவாயா? என கடலில் எறிந்தார். போன கம்பு திரும்பி வரவில்லை! ஆறுதலுக்கு ஈமான் வந்தது. இசைத் துறையில் பாடிய இஸ்லாமியர்கள் மலாய் சமூக இசைவான் ரீ.எச். லந்த்ரா இலங்கை வாழ் முஸ்லீம்களில் மலாய் சமூகத்தினர் மிகவும் போற்றப்படுகின்ற அளவு சமூக அந்தஸ்த்துப் பெற்றுள்ளனர். அவர்கள் அணினல் நபி (ஸல்) அவர்கள் மீது களமீதா பாடல் பாடுவதென்றால் மிகவும் மனசு நெகிழ்ந்து பாடுவார்கள். இத்துறையில் கால் பதித்தவர் ஜனாப் ரீ.எச்.லந்த்ரா அவர்கள். 1932ம் ஆண்டு செப்டம்பர் இரண்டாம் திகதி பிறந்த இன்னார் சிறந்த பாடகராவார். கொழும்பு ஸாஹிராக் கல்லூரியில் ஆரம்பக் கல்வியையும், பின்னர் கொழும்பு தெமட்டக் கொட சென்ஜோன்ஸிலும் பயின்றார். 1964ல் ரேடியோ சிலோனி பாடகராகப் பதியப் பட்டார். ஒரே சமயத்தில் தமிழிலும், சிங்களத்திலும் பாடும் திறமையுடையவர். முஸ்லிம் நிகழ்ச்சியில் பாடுவதற்கு முஸ்லிம் பெணர்கள் இல்லாத காலகட்டத்தில் ஜனாபா ஜூவிதா சகோதரிகள் துணிந்து முன்வந்தனர். இதற்குக் காரணமாக இருந்தவர் லந்த்ரா அவர்களே. சிங்களத் திரைப்படங்களில் ஹாரூனி லந்த்ரா பின்னணிப் பாடல்கள் பாடினார். இசைக் கச்சேரி ஒன்றை நடாத்திவிட்டு வரும் வழியில் விபத்துக்குள்ளானார். கிட்டத்தட்ட 30 வருடங்கள் கழிந்திருக்கும். மீண்டும் இசைத்தார். இலங்கை மலாய் சமூகத்தினர் மத்தியில் இவருக்கு நல்ல செல்வாக்கு இருந்தது. 1991ம் ஆண்டு
Page 105 இவர் "இசை ஒளி” என்ற பட்டம் துடப்பட்டு கெளரவிக்கப் பட்டார். ஷேக் மியான் முஹம்மத் புஹாரியின் சாஸ்திரிய சங்கிதம் இசைத்துறையில் கஸல், கவாலி என்றால் அந்தக் காலங்களில் அதற்குநல்ல கிறாக்கி இருந்தது. கொழும்பு புதிய சோனகத்தெருவில் பிறந்து கொத்தொடுவ அங்கொடையில் வாழ்ந்தவரே ஜனாப் புஹாரி அவர்கள். புஹாரி அவர்களின் இசைகுரு மர்ஹஅம் பேராசிரியர் முகம்மது கெளஸ் அவர்கள். இவருக்கு ஹார்மோனியத்தை கற்றுக் கொடுத்தவர் பம்பாய் கலைஞர் திருமித வீரபுத்திரியவர்கள். அதேபோல் மாஸ்டர் அமரதாச, மகேஷ் சின்னையா போன்றோரிடம் தபேலாவைக் கற்றார். இவருடனர் இசைத்துறையில் இணைந்தவர்கள் மர்ஹஅம் முகம்மது ஸாலி, மூஸ்க் நூரி , எம். எம். பீர் முகம்மத் ஆகியோர். 1952ம் ஆண்டு சோனக இஸ்லாமியக் கலாசார நிலையத்தினால் நடாத்தப்பட்ட இசைப் போட்டியில் 60 கலைஞர்கள் பங்கேற்றனர். அனைவரிலும் புஹாரி அவர்களே முதலிடம் பெற்றார். இக்குழுவுக்கு டாக்டர் லயனல் எதிரிசிங்கதலைமைதாங்கினார். 40 வருடங்களாக விபத்தில் சுகயினமுற்று தனது கனிர் என்ற குரல்வளத்தை இழந்து தவித்தார். ஆனால். இலங்கை வானொலி அவரை விடவில்லை. குரல் வருகின்ற போது பாடுங்கள் அதுவரை இசை அமையுங்கள் என்றதனால் வானொலி முஸ்லிம் சேவைக்குத் தொணர்டாற் றினார். 1992ம் ஆண்டு "இசைஒளி" என்ற பட்டம் துடப்பட்டு கெளரவிக்கப்பட்டார். இவர் சில படங்களிலும் நடித்தார். அவை "ஹாரலக்ஸ்ஸ” "ஹிந்துக்காரயோ” “லாதலு” ஆகிய சிங்களப் படங்களிலும், "அவுட் காட்ஸ் ஒப் தி அய்லண்ட்” ஆகிய ஆங்கிலப் படத்தையும் குறிப்பிடலாம். இவருக்கு “முது இசைநாயகன்" என்ற பட்டமும் வழங்கப் பட்டு கெளரவிக்கப்பட்டார். கலாசூரி அல்ஹாஜ் மொஹிதின் பேக் (இலங்கை) இந்தியா சேலத்தில் இராணுவ சேவையில் ஈடுபட்ட பரம்பரையில் உதித்தவரே மொஹிதீன் பேக் அவர்கள். இளமையிலிருந்து பாட ஆரம்பித்த மொஹிதீன் பேக்தமிழ், சிங்களம், உருது, அரபிமொழிகளில் பாடினார். ஹார்மோனிய மேதைகளிடம் இசைப் பயிற்சி பெற்றார். 5000க்கும் அதிகமான பாடல்களைப் பாடினார். சிங்கள சினிமாத் துறையில் இரண்டாவது படத்துடன் இணைந்து கொணர்ட அவர் கடைசி வரை சிங்களப் பாடல்களில் அதிகம் குரல் கொடுத்தார். அவரின் பக்திப் பாடல்கள் ஓடியோ பீஸரகளை வேணர்டி சிங்கள மக்கள் அதிகாலையில் காதில் வாங்கிக் கொள்வார்கள். “புத்தம் சறனம் கச்சாமி” என்ற அவரின் சிங்கள பக்திப்பாடல் வெசாக், பொசனி நிகழ்ச்சிகளில் ஆரம்பமாகப் போடும்பாடலாக வளர்ச்சியடைந்துள்ளது. இஸ்லாமிய பாடல்களை வானொலி, தொலைக் காட்சியில் அலஹாஜ மொஹிதீனி பேக் பாடினார். முன்னாள் ஜனாதிபதி திரு ஆர்.பிரேமதாஸ் - அவரின்
Page 106 வீட்டுத்திட்டம் நடைபெறுகின்ற இடங்களிலெல்லாம் மொஹிதீன் பேக்அவர்களைப் பாட வைத்தார். உர்துப் பாடல்களையும், இஸ்லாமிய கீதங்களையும் பாடும் அல்ஹாஜ் மொஹிதீன் பேக் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் மீலாத் அரங்குகளில் மனமுருகிப் பாடுவார். பல்வேறு விருதுகள் பெற்ற அவர் ஜனாதிபதி விருதாக “கலாதுரி” விருதையும் பெற்றுக்கொணர்டார். 1991ம் ஆண்டு 4ம் திகதி இசைஞானி கலாதரி அல்ஹாஜ் மொஹிதீனி பேக் அவர்கள் இவ்வுலக வாழ்க்கையை முடித்து புனித மெளத்தை அரவணைத்துக் கொணர்டார். லட்சுமி பாய் கதிஜா உம்மா (இலங்கை) லட்சுமிபாய் கதீஜா உம்மா கலைத்துறையில் “லட்சுமிபாய்” என்ற பெயரில் உலா வருகின்றார். இவரது தாயார் ரஹஉமா பீவி இந்தியாவில தென காசி பொட்டல்புதூர் என்ற இடத்தைச் சேர்ந்தவர். இவரது தந்தை கொழுந்து மரைக்கார் அப்துர் ரஹீம் கணவர் கொழும்புகொள்ளுப்பிட்டியைச் சேர்ந்தவர். பாடசாலை செலவதால ஆர்வம் குன்றிக் காணப்பட்ட லட்சுமிபாய் - அரபு மதரஸா ஒன்றில் சேர்ந்து கொஞ்சக் காலம் கல்விபயின்றார். சின்ன வயது முதல் இவருக்கு நல்ல இசைஞானம் இருந்தது. தனது பக்கத்து வீட்டில் வசித்த திருமதி சந்தனவடிவேல் எனும் நாடக ஆசிரியை மூலம் கலை உலகிற்குக் கால்வைத்தார். 1978ம் ஆண்டு பிரதம அமைச்சர் அவர்களின் வேண்டுகோளுக்கிணங்க “தேச தேச கீர்த்தி ரதிமாகே மவிபூமிவே” எனும் பாடலைப் பாடினார். இலங்கை ரூபவாஹினி மூலம் இவருக்கு நல்ல அறிமுகம் கிடைத்தது. 1969ம் ஆண்டு இவர் தனது கலைத்துறையை மட்டுப் படுத்திக் கொணர்டார். லட்சுமிபாயின் சேவையைப் பாராட்டி 1984ம் ஆண்டு முன்னாள் மாணர்புமிகு ஜனாதிபதி கே. ஆர். ஜெயவர்தனா அவர்கள் “கலாதுரி” பட்டம் வழங்கி கெளரவித்தார். இவர் நோய்வாய்ப்பட்ட போது ஜனாதிபதி அவர்கள் நேரடியாக வந்து பார்வையிட்டு உதவினார். லட்சுமிபாயின் பாடல்கள் அடிக்கடி ரூபவாஹினியில் மீள் ஒளிபரப்புச் செய்யப்படும். அந்தகப் பாடகி ஜனாபா ஏ.எல். மிரா உம்மா (இலங்கை) கிழக்கு மாகாணம், அம்பாறை மாவட்டத்தில் இறக் காமம் என்ற ஊரில் பிறந்தவர்தான் ஜனாபா ஏ.எல்.மீரா உம்மா அவர்கள். பிறக்கின்ற போதே தனது இரு கணிகளின் பார்வையையும் இழந்துவிட்டார். கணி இழந்தாலும், தனது மனக்கணிணைத் திறந்து பாடலானார். கறுப்பு நிறக் கணிணாடி அணிந்த இந்த முஸ்லிம் பாடகி 1975ம் ஆண்டு இலங்கை வானொலியில் கால் எடுத்து வைத்தார். நாட்டார் பாடல்கள் பாடுவதில் இவர் சிறந்து காணப்பட்டார். கையில் ஒரு விசிறி வைத்திருக்கும் இவர் கை தட்டல்களை வைத்து மக்கள் வெள்ளத்தைப் புரிந்து கொள்வார். கொழும்பு இஸ்லாமிய மாநாடு முதல், அக்கரைப்பற்று அட்டாளைச் சேனை, கல்முனை, சம்மாந் துறையிலும் விழாக்களில் பாடியுள்ளார்.
Page 107 1991ம் ஆண்டு மீரா உம்மா (ஸவ்துல் அணிதலீப்) இசைக்குயில் என்ற பெயர் வழங்கிகெளரவிக்கப்பட்டார். இந்திய இசைக்கும் அமெரிக்க இசைக்கும் இடையிலான வேறுபாடு? அமெரிக்கர்களின் பாடல், அங்கத்தை அசைத்து ஆட்டும். இந்தியர்களின் இசையோ இதயத்தையே ஆடச்செய்யும். பதில் சொன்னவர். இசை அமைப்பாளர் நெளவடிாத் அலி இந்தி குறிப்பு: வரம்புமீறிய இசை,மறுமையில் எதையெல்லாம் முஸ்லிம்கள் பயன்படுத்திய இசைக்கருவிகள் சில இணையத் தேடல் மூலம் கிடைத்த படங்கள் சில இங்கு தரப் Սւ66ոarray: இலங்கை இசைத் துறையில் இஸ்லாமியக் கலைஞர்கள் இலங்கை முஸ்லிம்களின் இசை ஆர்வம் நீண்ட கால வரலாற்றுடன் தொடர்புடையதாகக் காணப்படுகின் றது. அந்த ஆ ர்வமிக்கவர்களை ஆராய்ந்து பார்ப்போம். 1946ம் ஆண்டு இலங்கை ரேடியோவில் இனிமை யாகப் பாடியவர். வழைத்தோட்டத்தைச் சேரந்த மர்ஹஅம் எம்.ஏ. ஹஸன் அலியார் என்பவர். இவருடன் சேர்ந்து பாட எஸ்.எம். ஹஅஸைன் என்பவரும் இணைந்து கொணர்டார். பாடகர் நெய்னார் முகம்மத் (கொழும்பு) நெய்னார் முகம்மத் என்று ஒரு பாடகர் இவர் சீறாப்புராணம், ஞானப்புகழ்ச்சி, ஞானமணிமாலை போன்ற பாடல்களில் மிகத் தேர்ந்தவர். இன்னார் சிலம்புப் புலவர், நெய்னார் முகம்மது (கங்கானி ) எனும் திருவாங்குபடலவர் பரம்பரையைச் சேர்ந்தவர். பாடகர் ஐ.எம். கெளத் (வாழைத் தோட்டம்) 1948 களில் மெல்லிய குரலில் பாடியவரே வாழைத்தோட்டத்து கெளத் அவர்கள். இவர் இந்துஸ்தான், ஹிந்தி மொழிப் பாடல்களின் மெட்டில் இஸ்லாமிய கீதங் களைப் பாடினார்.
Page 108 பாடகர் ஷைனுத்தின் பாஷா (பண்டாரவளை) 1949களில் மலையகத்துப் பாடகர். பணிடாரவளை ஸைனுத்தீன் பாஷா இவர் ஒரு திறமையான இஸ்லாமிய கீதப் பாடகர். ஒலிப்பதிவு வசதிகள் அற்ற காலத்தில் வானொலியில் அரைமணிநேரம் நேரடியாகப் பாடினார். ஹார்மோனிய வாசிப்பாளர் பீ.எம்.நியாஸ்தின் 1949 களில் இன்னுமொருவர் இசை அமைத்துப் பாடினார். பக்கீர்முகம்மத் நியாஸ்தீன். இவர் பங்காளி குடும்பத்தைச் சேர்ந்தவர். சினிமாப் பாடல் மெட்டுகளில் பாட்டெழுதிப் பாடுவார். இதில் இவர் கையாணர்ட இசை ஹார்மோனியம் ஆகும். புல்லாங்குழல், தபேலா, டோலக் போன ற இசைக கரு வரிகளையும் கையாளு ம வல்லமையுடைவர். அவரே வாசித்து அவரே பாடினார். இவருக்கு 1993ம்ஆண்டு “மூஸிக் நூரி” என்ற பட்டம் வழங் கப்பட்டது. பாடகர் மலாய் சாபின்லை மலாய் சமூக்தைச் சேர்ந்த சாபின்லை என்பவர் ஒரு நல்ல பாடகர். ஆனால் இவருக்கு தமிழ் மொழியில் போதிய அறிவு இருக்கவில்லை. ஆங்கிலத்தில் தமிழை எழுதிப் பாடினார். இவர்ஹார்மோனியம் வாசித்துப்பாடுவார். பாடகர் முகம்மத் ஸ்ைெஹர் முகம்மத் ஸஅஹைர் என்று ஒரு பாடகர் இவர் உர்து, கவ்வாலி போன்ற பாடல்களில் அசத்தல் மன்னராகத் திகழ்ந்துள்ளார். குளியாப்பிட்டி ஐ.எல்.எம். ஜமால்தின் இசைப் பயணத்தில் 50 ஆண்டுகளுக்கு மேலாக குளியாப்பிட்டி அறக்கியாலையைச் சேர்ந்த ஐ.எல்.எம். ஜமால்தீன் ஒரு பாடகர். வானொலி முஸ்லிம் சேவையில் பாடுவார். இசை, நாடகம், களிகம்பு போன்ற கலை அம்சங்களில் கவனம் செலுத்துவார். இவர் ஒரு ஆசிரியர் அதிபராக 30 ஆண்டுகள் அனுபவம் “பல்கலைக் குரிசில் முதுகலைமாமணி”, “கவிமணி” போன்ற பட்டங்களையும் பெற்றார். கலைஞர் அல்ஹாஜ் ஹாஜா முகைதின் இன்றும் இளமைத்தோற்றத்தில் நடமாடும் ஒரு இசைக் கலைஞர்தானி அல்ஹாஜ் ஹாஜா முகைதீன் நாடகம், சினிமாத்துறையில், பங்களிப்புச் செய்தவர். இசை இவரது பொழுதுபோக்கு தாளவாத்தியங்கள் பலதை இயக்கும் இவர் Bongo வாத்தியம் வாசிப்பார். 1943ம்ஆண்டில் பிறந்த இவர் கிழக்கு மாகாணத்தில் சில காலத்தைக் கழித்ததுடனர் , பாணந்துறையில் சொந்தங்களைக் கொண்டவர். இவரின் ஆற்றலுக்கேற்ப “பல்கலை நாயகன்" என்ற சிறப்புப்பட்டம் வழங்கப்பட்டது. பாடகி ஞெய பரிஸா ரம்ஸின் இலங்கையின் பிரபல பாடகர் டோனி ஹஸனின் மூத்த சகோதரி ஞெய் பரீஸா ரம்ஸின் ஒரு பாடகியாவார். 1965 முதல் 1978 வரை வானொலியில் ஏராளமான பாடல்களைப் பாடினார். தமிழ், சிங்களம், ஹிந்தி, மலாய் போன்ற மொழிகளில் பாடுவார். மேடை நாடகங்களிலும்
Page 109 பங்கேற்பார். இவரது கணவர் மொஹமத் றம்ஸின் பொங்கோ ஒரு தாள வாத்தியக் கலைஞராவார். நெய் பரீஸாவுக்கு "நடிப்பியல் நாயகி” என்ற பட்டம் வழங்கி கெளரவிக்கப்பட்டார். இசைத் தெரிவும் பாடகர்களும் 1949ம் ஆண்டு இசைத் தெரிவு நடைபெற்றது பல பாடகர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டார்கள். மலையகம் பதுளையை வசிப்பிடமாகக் கொணர்ட பணர்டாரவளை ஜே.பாஷா புத்தளத்தைச் சேர்ந்த குத்துாஸ்மரைக்கார், ஏ. எம். ஸாஹிப், எம்.ஏ.சாகுல் ஹமீத், எம்.எச்.எம். இக்பால், ஏ.எம்.நூர்தீன் ஆகியோராவார்கள். இசையமைப்பாளர் கே.எம். ஸ்வாஹர் 1931ம் ஆண்டு கொழும்பில் பிறந்தவரே கே.எம். ஸ்வாஹர் அவர்கள். இவர் கொழும்பு மருதானை ஸாஹிராக் கல்லூரியில் பயின்றார். 1950ம் ஆண்டு இலங்கை ரேடியோவில் இஸ்லாமிய பாடல்களுக்கு ஆர்மோனியம் வாசித்தார். இது பிரவேசம் இன்றுவரை நூற்றுக்கணக்கான இஸ்லாமிய கீதங்களுக்கு வானொலியிலும், தொலைக்காட்சியிலும் இசையமைத் துள்ளார். தமிழ் சேவையிலும், சிங்கள சேவையிலும் மெல்லிசை அமைத்துபுகழ்பெற்றார். இலங்கையின் முதல் தமிழ்படம் "தோட்டக்காரி” மீனவப் பெணி போன்ற படங்களுக்கும் இசையமைத்தார். அதேபோல் "ஆதரகமஹிம்” என்ற சிங்களப் படத்துக்கும். இசையமைத்தார். பொப் இசைப் பாடல்களுக்கும் இசை வழங்கினார். இசைத் துறையில் 58வருடம் அனுபவமுள்ள கே.எம். ஸவாஹர் அவர்களுக்கு 1998ம் ஆண்டு ஜனாதிபதி விருதும் 1993ம் ஆண்டு மூளிக்நூரி பட்டமும் 2005ல் கலாபூஷண விருதும், 2005ல் கனடாவில் இசைப் பேரொளி பட்டமும் 2009ல் "மெல்லிசைவித்தகர்” பட்டமும் வழங்கப்பட்டது. மூன்று யுவதிகளின் பாடல் பலம் 1952ம் ஆண்டு நடைபெற்ற இசைத்தேர்வில் எம்.யூ, அபூபக்கர், ஏ.எம்.ஏ. ஜப்பார், ஏ.எம். காதர், ஆகியோருடன் த்ரீஸ்டார்கள் என மூன்று யுவதிகள் ஹமீசா பரீத், பாத்திமா பரீத், ஸ9ஹர்வான் பரீத், ஏ.எல்.எம். யூசுப் போன்றவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டார்கள். இப்பெணிமணிகளின் பாடல்கள் ஜனங்களைக் கவர்ந்தன. ஹமீதா பரீத் ஹார்மோனியமும், ஸஅஹர்வான் பரீத்தப்லாவும் வாசிப்பார்கள். மாளிகாவத்தை கைறிய்யா இஸ்மாயில் 1944ல் கொழும்பு மாளிகாவத்தையில் பிறந்தவரே கைறிய்யா இஸ்மாயீல் ஆவார். இவர் ஒரு சிறந்த பாடகியாகத் திகழ்ந்தார். வானொலி, தொலைக்காட்சியில் அடிக்கடி பாடினார். தமிழ், சிங்களம், ஹிந்தி ஆகிய பல மொழிப் பாடல்களை 48 வருடங்களாகப் பாடிவருகின்றார். இவருக்கு “தேனிசைவானி” என்ற கெளரவப்பட்டம் வழக்கப்பட்டது.
Page 110 இசைத் தேர்வில் இனங்காணப்பட்ட பாடகர்கள் நாம் முன்னர் இவர்கள் பற்றி குறிப்புக்களை எழுதினாலும் சிலர் விடுபடுவதால் அதனைத் தொட்டுக் காட்டுகின்றோம். 1952ம் அணிடு நடைபெற்ற இசைத் தேர்வில் ஏ.ஜே.கரீம், ஹாரூனி லந்த்ரா, ஜூவிதா லாந்த்ரா, பர்மினா லந்திரா, நிஸாம் கரீம், சட்டத்தரணி ஏ.எல்.எம். பூசுப், விஸ்வா அப்துல் காதர், நஜிமா அப்துல் காதர், முகைதீன் பிச்சை, பானைப் பிச்சை, செல்ல மரிக்கார், ஏ.எம்.எம். முகைதீன், ஏ.எச்.எம். முகைதீன் போன்றோர் தெரிவாகினர். இவர்களுள் ஒ.ஷெரீப், ஏ.ஜே. கரீம், மஸாஹிறா இல்யாஸ் போன்றோர் முன்னணியினர். டோலக் பூஜூ இஸ்மாயீல் 1 950 | 5 ஆண டுகளில பிரபல டோலக வாத்தியக்காரராக இருந்தவர். பூஜூஇஸ்மாயீல் அவர்கள். இவர் கச்சேரிகள் நடாத்துவார். இவரின் மனைவி ஸ்கரிய்யா இஸ்மாயீல் பாடல் இசைத்தார். இவர்களின் அன்பு மகன் நெளஷாத் இஸ்மாயீல் “பேஸ்ட்ரம்” வாசிக் கிறார். இரு குரல் பாடகர் மாத்தளை சுஹைல் மாத்தளை மாவட்டம், உக்குவெல மாருக்கொனை யில் வசிக்கும் எஸ்.டீ.எம். சுஹைல் 43 வருடமாக கலைப் பணியில் ஈடுபட்டு வானொலி, தொலைக்காட்சியில் பாடி வருகின்றார். இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தான "பீ” பிரிவு பாடகராக திகழ்கின்றார். இவர் ஆணர், பெண இரு குரலிலும் பாடுவார். இந்தியத் திரைப்பட பின்னணிப் பாடகி எல்.ஆர். ஈஸ்வரியுடனர் சேர்ந்து பாடி பிரபலத்தைப் பெற்றுக் கொணர்டார். இவருக்கு “இருகுரல் இசைக்குயில்” என்ற பட்டம் வழங்கிகெளரவிக்கப்பட்டது. மொகைதின் பேக் மகள் முயீனா பேகம் பிரபல பாடகர் மொகைதீன் பேக் அவர்களின் மகளே ஜனாபா முயினா பேகம் அவர்கள். இவர் தனது சகோதரன் இஷாத் பேக்குடன் இணைந்து பாடிவருகின்றார். இலங்கை வானொலி முஸ்லிம் சேவை, இலங்கை தொலைக்காட்சி சேவையிலும் பாடி வருகின்றார். இவ ருக்கு “தேனிசைக் கோகிலம்” என்ற பட்டம் தட்டி கெளரவிக்கப்பட்டார். தப்ளா வாசிக்கும் ஸஹர்வான் ஸ்லாஹஇத்தின் 1939ம் ஆண்டு பிறந்தவரே ஸஹர்வான் ஸலா ஹஅத்தீன் இவர் ஒரு பாடகி, அளுத்கமை ஆசிரியைப் பயிற்சிக் கலாசாலையில் பயிற்றப்பட்ட ஆசிரியை முன்கூறியத்ரிஸ்டார் சகோதரி. இவர் "தப்லா" வாசிப்பார். 2002ம் ஆண்டு கலாபூஷண விருதும் 2009ம் ஆண்டு சிறிலங்கா கலைஞர் முன்னணியினால் "தீனிசைக் கோகிலம்” என்ற பட்டமும் வழங்கப்பட்டு கெளரவிக்கப் பட்டார்.
Page 111 இசை ரசனை தாகத்தில் இலங்கை முஸ்லிம்கள் கரிசனை! இஸ்லாமிய இசைக் கலைஞர்கள் இந்தியாவிலும், இலங்கையிலும் இசைத்துறையில் பெரும் பங்களிப்புச் செய்திருக்கின்றார்கள். அந்த வரிசையில் பலரை நாம் இனங்கணர் டோம். இன்னும் பலரைப் பற்றி ஆய்வு செய்வோம். 1952ம் ஆண்டுக்குப் பின்னர் இஸ்லாமிய கீதம் பாட பெரியதொரு பட்டாளமே முணர்டியத்து விண்ணப்பம் செய் தார்கள். அப்போதைய கலைஞர் எம்.ஐ.எம். நயீம் ஹார்மோனியம் வாசிப்பவராக இருந்தார். இசையமைப்பாளர் எம்.எச்.எம். ஷம்ஸ் திக்குவல்ல இலக்கியவாதி மர்ஹஅம் எம்.எச்.எம். ஷம்ஸ் ஒரு சிறந்த பாடகரும் வாத்தியக் கலைஞருமாவார். அவரின் இலக்கியப் பயணத்தில் இலங்கையில் நடைபெற்ற கொடூர யுத்தத்தில் ஆத்த பாடல் "வெணி புறாவே" என்பதாகும். இப்பாடல் தொலைக்காட்சியில் படிக்கும் போது அனைவரும் அவதானமாகப் பார்ப்பார்கள். வானொலியில் கவனமாகக் கேட்பார்கள். “வண்ணாத்திப்பூச்சிகள்” என்ற ஷம்ஸ் சேரின் ஒலி நாடா வித்தியாசமான இசையில், ஆங்கில இசைத் தேர்வுடன் போட்டி போடக் கூடியதாக அமைந்திருந்தது. அது போல் ஷைனுல் ஆப்தீன் (புல், புல் தாரா வித்துவான்) மாஸ்டர் அவர்களின் உர்து, கவ்வாலி, கஸல் போன்ற பாடல்களை ஷம்ஸ் அவர்கள் பாடினார்கள். இவர் மாபெரும் இலக்கியவாதியும் கூட. மெளலித் பாடலில் மஹற்தும் ஏ. காதர் கொழும்பில் மஹற்துரம் ஏ. காதர் குடுத்பத்தினர்கள் பாடல், கஸீதா பாடுவதற்கென்றே பிறந்தருக்கின்றனர். அவர்களின் குரல் வளம், கிறாஅத், கஸிதா மொழி ஆளுமை அனைத்தும் அற்புதமாக இனங்காணப்பட்டுள்ளது. பாராட் டையும் பெற்றுள்ளார்கள். இவர்களின் திறமை யறிந்து இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனமும் இலங்கை ரூபவாஹினிக் கூட்டுத்தாபனமும் நல்ல சந்தர்ப்பத்தை இவர்களுக்கு வழங்கியுள்ளது. 100 ஆண்டுகளின் முன்னர் இசைஞானிஆநஸ்ரு ஆயிரத்தி நூறாம் ஆண்டின் முன் இஸ்லாமிய தத்துவஞானி முஹம்மது ஆநஸ்ரு அல்பாராபி என்பவர் பண்டைய ட்ரான் ஸோக் ஸிபானாவில் அதாவது மத்திய ஆசியாவிலுள்ள இன்றையதுருக்கிக்குடியரசில் பிறந்தார். எழுத்தாளரும், கணித மேதையும், வானவியல் வல்லுனருமான இவர் இஸ்லாமியர்களின் பண்பாடு,கலை. அறிவியல் வளர்ச்சியில் மிகவும் பாடுபட்டவர் அறிஞர் களான அலசென்னா, ஆஸீனா ஆகியோருடன் 'உற்று நோக்கப்பட வேண்டியவர். இவர் இசைத்துறை ) வல்லுனராவார். இறுதியாக டமஸ்கஸில் இறப்
Page 112 இசைத் தேர்வும் இன்னும் சில கலைஞர்களும் 1965ம் ஆண்டு நடைபெற்ற இசைப் பரீட்சையில் பலர் சித்தி அடைந்தனர். அவர்களுள் கணிடி நிஸார், கே. எம். வன்ஸா, உர்து பாடகர் ஸஅஹார், பொப் இசைபுகழ் ராஸிக், சனுரன், முயீன் சபுர்தீன் எம்.ஜே. எம். அன்ஸார் ஆகியோரைக் குறிப்பிடலாம். கர்நாடக சங்கிதப் பாடகர் அப்துல் ஜப்பார் கர்நாடக இசையைக் கற்றுத் தேர்ந்தவர்கள் நம்மில் மிகக் குறைவு ஆயினும் அயராத முயற்சியால் வெற்றி கணிடவரே சாய்ந்த மருதைப் பிறப்பிடமாகக் கொணர்ட அப்துல் ஜப்பார்மாஸ்டர் அவர்கள். இவர் அணிணாமலைப் பல்கலைக்கழகத்தில் கர்நாடக சங்கீதத்தில் “இசைமணி” டிப்ளோமா சான்று பெற்றவர். இன்னும் அரசாங்க முஸ்லிம் பாடசாலைகளில் சங்கீத ஆசிரியராகவும் கடமையாற்றி ஓய்வுபெற்றார். இவர் இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தில் அதிகமாகப் பாடியுள்ளார். ரூபவாஹினியிலும் பாடி பேட்டிகளிலும் கலந்து கொணர்டுள்ளார். இசைப் பரீட்சையில் இஸ்லாமியர்கள் முண்டியடிப்பு முன்னைய காலங்களில் இசை என்றால் பயந்து நடுங்கிய இஸ்லாமியர்கள் காலம் போகப் போக வீறு கொண்டு வேகமாகப் போட்டி போட்டு வானொலியில் பாடத் தயாரானார்கள். அதற்கான இசைத் தேர்வுகளிலும் கலந்து கொணர்டார்கள். 1965ல் எம்.ரீ.எம். நயீம், பளில், ஜெலில் மூன்று மாஸ்டர்கள் தெரிவாகினர். 1994ம் ஆண்டு இசைப் பரீட்சை நடைபெற்றது. அதில் பலர் "பீ” தரத்தில் தெரிவானார்கள். அவர்களில் வானொலி அறிவிப்பாளர் அஹற்மத் எம். நஸிர், யாழ் ரொஸானா இப்திகார், ரூபவாஹினி முஸ்லிம் நிகழ்ச்சி பணிப்பாளர் எம்.கே.எம். யூனுஸ், தோப்பூர் எம்.எம்.கே. மரிக்கார், கொழும்பு எம்.ஐ.ஆப்தீன், ஏ.கே.எம். பஸின், எஸ்.எம். மக்கீன், புசல்லாவை எஸ். எல். ஆதம்பாவா றபீக், மாத்தளைக் கமால், வெல்லப்பிட்டி ஏ.கே.எம். நிஸாம், கொட்டரமுல்ல ஏ.எஸ்.எம், ஷிஹாம், மட்டக்களப்பு எம். ஸ்.ஏ. மாஹிர் மாவனல்ல ஏ.எஸ்.எம். ஜவாஹிட், கொழும்பு ஏ.ஸி.எம். பரீன் , எம்.ஐ.எம்.அமீர், ஹம்பாந்தோட்டை எஸ்.எஸ். ஷேஹற்நிஸார், அக்கரைப்பற்று எம்.ஐ.எம். அன்ஸார், உக்குவல்ல எஸ்.பீ.எம். ஸஅஹைல், கொழும்பு எம்.ஐ.எம். முதஸ்ஸிர், பாடகி மஸாஹிறா, இல்யாஸ் மகன் முபாறக் இல்யாஸ் நராமலை ரொஸான் ஜானி, கண்டி கலஹா எஸ்.ஏ.ஸி.எம். அஸ்வர், வீரபொக்குண ஐ.எல்.எம். இன்ஸார், பஹமுனை டோனி ஹனிபா, அல்ஹாஜ்
Page 113 22 மொஹிதீன் பேக் அவர்களின் பிள்ளைகளான உஸ்மானி பேக் இஷாக்பேக், முயீனா பேகம், மன்னார் ஜெளபர், சிங்களப் பாடல் புகழ் எம். பெளமி ரவூப், புத்தளம் ஏ.ஆர். நிஸார்றஹீம் ஆகியோராவார்கள். கொள்ளுப்பிட்டிப் பாடகர் முயீன் சபுர்தின் 1944ல் கொழும்பு கொள்ளுப்பிட்டியில் பிறந்து இஸ்லாமிய கீதம் பாடுவதில் நல்ல கெட்டித்தனம் உள்ளவர் தான். முயீன் சபுர்தீன் அவர்கள். 1960ம் ஆணர்டு முதல் மேடைகளில் ஹிந்திப் பாடல்கள் பாடி புகழ்பெற்றார். இவருக்கு இஸ்லாமிய கீதம் பாட ஆர்வம் ஏற்பட்டது. 1967ம் அணிடு இலங்கை வானொலி முஸ்லிம் சேவை நடாத்தய இசைப் பரிசோத னையில் சித்திபெற்றார். "உகுவதுல் இஸ்லாம்” என்ற நிகழ்ச்சியில் சிங்கள மொழி மூலமான பாடல்களையும் பாடினார். 1973ம் ஆண்டு இலங்கை நுணர்கலைப் பிரிவில் விசாரத ஜய சேகர அவர்களின் கீழ் சொல்லாட்சிப் பயிற்சிபெற்றார். இவருக்கு "தீனிசைநாயகர்” என்ற பட்டம் வழங்கிகெளரவிக்கப்பட்டார். ரூபவாஹினி முஸ்லிம் நிகழ்ச்சிப் பணிப்பாளர் யூனுஸ் மாவனல்லைப் பகுதியில் சிறுவயது முதலே நன்றாக பாடும் திறமை பெற்றவர்தான் முகம்மத் யூனுஸ் அவர்கள். இவருக்கு பாடும் திறமையுடனர், நடிப்பத் திறமையும், கலை, நடாத்தும். ஒழுங்கு செய்யும் தகமையும் உணர்டு. இவரின் பாடும் திறமையினால் இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தின் “பீ” பிரிவு பாடகராக தெரிவுசெய்யப்பட்டார். இலங்கை ரூபவாஹினிக் கூட்டுத்தாபனத்தின் தயா ரிப்பாளராக பதவி பெற்ற யூனுஸ் அவர்கள் 1994ம் ஆண்டு பதவி உயர்வு பெற்று இஸ்லாமிய நிகழ்ச்சிகளுக்கு தன்னை அர்ப்பணித்து வருகின்றார். இவருக்கு “கலை வளர் நாயகன்" என்ற சிறப்புப் பட்டம் வழங்கி கெளரவிக் கப்பட்டார். றோயல் மாணவன் பாடகர் பஹற்மி கொழும்பைச் சேர்ந்த ஏ.ஆர்.எம். பஹமி என்பவர் சிறந்த பாடகராகத் திகழ்ந்தார். வித்துவான் முகம்மத் சாலிஹ - வியாஸ் சாலிஹ ஆகியோரிடம் இசைப் பயிற்சியைப் பெற்றார். கொழும்பு றோயல் கல்லூரி மாணவரான இவர் வானொலி, தொலைக்காட்சியில் பாட ஆரம்பித்தார். பல்வேறு நாடுகளில் பராமரிப்பு உத்தியோகஸ்தராகக் கடமையாற்றிய பஹற்மி அவர்கள் பிரபல பாடகி திருமதி நிரோஹா விராஜினி அவர்களுடன் பாடி “சுதுமல்” என்ற ஒலிநாடாவை 1993ல வெளியிட்டார். இவருக்கு "இசையருவி” எனும்பட்டம் வழங்கிகெளரவிக்கப்பட்டார். ஹொரவப் பத்தானை அஹற்மத் எம்.நளிர் ஹொரவப் பத்தானையில் புகழ்பெற்ற பாடகர்தான் அஹற்மத் எம். நஸிர் அவர்கள் பாடசாலைக் காலம் முதல் போட்டி நிகழ்வுகளில் பங்கு பற்றிப் பாடினார். வானொலியில் “பீ”தரபாடகராக தெரிவுசெய்யப்பட்டார்.
Page 114 வானொலியிலும், தொலைக்காட்சியிலும் நிறையப் பாடியிருக்கின்றார். சிறந்த அறிவிப்பாளர். கிராமங்களை முஸ்லிம் சேவையில் அறிமுகப்படுத்திய ஒரு பெருமனக படைத்தவர். இலங்கையின் 30 ஆண்டு யுத்த நிறைவை முன்னிட்டு நடைபெற்ற ஜனாதிபதி பாராட்டுப் பாடலில் முக்கிய பங்கேற்றார். இவர் பாடசாலை அதிபரும் கூட. இவருக்கு “பல்கலை நாயகன்” என்ற சிறப்புப் பட்டம் வழங்கிகெளரவிக்கப்பட்டார். நாச்சிக் குடா பாடகர் எம்.எஸ். ஜகுபர் கிளிநொச்சி மாவட்டம் நாச்சிக் குடாவைப் பிறப்பிட மாகக் கொணர்ட பாடகர்தான் எம்.எஸ். ஜகுபர பட்டதாரி ஆசிரியர். இவர் 1991ம் ஆண்டு இலங்கை வானொலி முஸ்லிம் சேவையில் பாடகராகப் புகுந்தார். தொலைக் காட்சியிலும்நிறையப்பாடியுள்ளார். இவர் வானொலி முஸ்லிம் சேவையின் "ஏ" தரப் பாடகராவார். இவரின் திறமையைப் பாராட்டி "தீனிசை அருவி” எனும்பட்டம் வழங்கிகெளரவிக்கப்பட்டார். "ஏ" தரப் பாடகர்கள் இன்னும் இருக்கின்றார் இலங்கை வானொலியில் "ஏ" தரப் பிரிவில் பாடிய, தெரிவாகிய பாடகர்கள் இன்னும் எத்தனையோ பேர் இருக்கின்றனர். அவர்களில் கல்முனை ஏ. அலாவுதீன், மருதமுனை ஈழத்து ஹனிபா என்றழைக்கப்படும் எஸ்.எம். கமால்தீன், தம்பத்தெனிய எம்.ஏ. மஜீத், கல்முனை ஜனாபா ரூபிய்யா ஜெலில் ஆகியோரைக்குறிப்பிடலாம். மக்களை நெகிழவைக்கும் மாத்தளைக் கமால் மாத்தளைக் கமால் ஒரு நல்ல பாடகர். மாத்திர மல்ல தனது பிள்ளைகளையும் சேர்த்துக் கொணர்டே பாடுகின்றார். இவர் தனது பாடல்களுக்கு இசையமைத்து VC-D களாக வெளியிட்டுள்ளார். “இன்ஷா அல்லாஹற்” “ஓ சுனாமியே” போன்ற பல பதிவுகள் அவருக்குப் புகழ் தேடிக் கொடுத்தது. அவரின் பெருந்தன்மையாக தானாகவே சென்று அந்தVCD களை விற்பனை செய்கின்றார். கணிர் என்ற குரலில் பாடும் கலைக்கமால் கொழும்பில் பிறந்த கலைக்கமால் நன்றாகப் பாடக் கூடியவர். தனது கனிர் என்ற “பேஸ்” குரலில் பல இசையமைப்புகளில் பாடிவருகினறார். இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்திலும், ரூபவாஹினியிலும் அடிக்கடி பாடல் இசைப்பார். “கீத்ராத்” என்ற இஸ்லாமிய கதங்களை இருபதாவது தடவையாக கொழும்பு ஜெயவர்தன மணி டபத்தில் மேடையேற்றியுள்ளார். இவருக்கென ஒரு ரசிகர் கூட்டம் இருக்கின்றனர். இவர் வேகமாக முன்னேறி வருகின்றார். மருதமுனையில் இசையமைப்பாளர் எம்.எஸ். அப்துல்லாஹற் கல்முனை, நற்பிட்டி முனையில் பிறந்து மருத முனையில் வாழ்ந்த எம்.எஸ். அப்துல்லாஹற் என்பவர் ஒரு இசை யமைப்பாளராகத் திகழ்ந்தார். இவர் ஏகத்துவப் பாடல்கள் என்ற தலைப்பில் பாடல்களை இசையமைத்து O.D.0 , VDO மூலமும் வெளியிட்டார். இவர் ஆர்மோனியம் போன்ற வாத்தியங்களை வாசித்தார். இவர் அமைத்த
Page 115 “தரீகதுல் முப்லிஹின்” என்ற அமைப்புக்கும் அகில இலங்கை உலமா சபையினருக்கும் ஏற்பட்ட கொள்கை ரீதியான முரண்பாட்டால் - உலமா சபை இவரது சகல நூல்களையும்,படிக்கக், கேட்க கணிடிப்பாகத் தடை விதித்துள்ளது. இந்நடைமுறை அ.இ. உலமா சபையால் உன்னிப்பாக அவதானிக்கப்படுகின்றது. பாணந்துறையில் இசை வாசித்த ஜெமீல் மரிக்கார் பாணந்துறையில் ஹேனமுல்லை என்பது ஒரு முஸ்லிம் கிராமம் இங்கு வஹாப்தீனி மரைக்கார் அல்ஹாஜ் ஜெமீல் மரைக்கார் (இன்றைய TRAWALTATA) உரிமையாளர் அல்ஹாஜ் புவாத் ஹாஜியாரின் தந்தையாவார். இவர் ஒரு இசைப்பிரியர். யோசனையின் போதும், மகிழ்ச்சியின் போதும் ஆர் மோனியம் வாசித்துப் பாடுவார். இவர் தனது இசைக் குருவாக சங்கீத மேதை அல்ஹாஜ் முகைதீன் பேக் அவர்களை அடிக்கடி தொடர்புகொள்வார். அக்கரைப்பற்றைக் கலக்கும் மக்கத்தாரே மஜித் கிழக்கு மாகாணம் அக்கரைப்பற்றில் பிரபலம் வாய்ந்தவர் தானி “மக்கத்தாரே மஜித்” அவர்கள். இவர் நல்ல பாடகர். இசையமைப்பாளர். அட்டாளைச் சேனை ஆசிரியர் பயிற்சிக் கலாசாலையில் இசை ஆசிரியராகக் கடமையாற்றினார். எப்போதும் ரப்பானி தட்டிப் பாடுவதில் பயிற்சி பெற்றிருந்தார். இவர் காதிரிய்யா தரிக்கா ஒன்றிற்கு கலீபாவாகக் கடமை செய்கின்றார். காத்தான்குடியில் பூத்து நிற்கும் பாடகர்கள் காத்தான்குடியில் வில்லுப்பாட்டு நிகழ்ச்சி மூலமாக புகழ் பெற்ற அல்ஹாஜ் ஜோக் முஸ்தபா. கவிஞர் சாந்தி முகைதீன் களிகம்புநிகழ்ச்சியில் பாடும் அணர்ணாவிகளான அஹமது லெப்பை, சுலைமா லெப்பை, பாவலர் சாந்தி முகைதீன் ஆகியோர் பெயர் பெற்று நிற்கின்றனர். அவர் களுடனர் காத்தான்குடியில் நன்றாகப் பாடுவதில் இசை யமைப்பதிலும் ரீ.எல்.அஸிஸ் "அஸிஸ்மாமா” புகழ்பூத்து நிற்கின்றார். இன்னும் சிறந்த பாடகர் வரிசையில் அல்ஹாஜ் மெளலவி அப்துல்காதர் (பலாஹி) மெளலவி அல்ஹாஜ் அப்துல் கப்பார் (பலாஹி) போன்றோருடன் ஒடையூரைப் பிறப்பிடமாகவும் காத்தானி குடியை வசிப்பிடமாகவும் கொண்ட மெளலவி ஏ.சி.எம். பெளஸ் (பலாஹி) ஆகியோர் திறமையாகப் பாடி பரிசில்களையும் பட்டங்களையும் வாங்கியுள்ளர். காத்தான்குடியில் வி.பீ. அஸ்ரீஸ் என்பவர், இவர் நல்ல பாடகர் இவர் அரசியல் பிரபலமாவார். காத்தான் குடியில் கவாலி பாடியவர்தானி மெளலவி எம்.அளிஸ் அவர்கள் . இவர் ஹஜ்ஜிமுகம்மது ஆலிம் பரம்பரையைச் சேர்ந்தவர். லுணுகல - பசறை போன்ற பள்ளிகளில் இமாமாகக் கமையாற்றியுள்ளார். காத்தான்குடி கமர்தீனி ஒரு நல்ல பாடகர், வானொ லியில் புகழ் பெற்றவர். மலேசியா வரை சென்று பாடியுள்ளார். காத்தான்குடி நிஸாலா வானொலி பலரை உருவாக்கியுள்ளது.
Page 116 நிந்தவூர் றஸித் மெளலவியின் பாடல் திறமை மருதமுனையைப் பிறப்பிடமாகவும், நிந்தவூரை வசிப்பிடமாகவும் கொணர்ட அல்ஹாஜ் மெளலவி அப்துர் றளித் (ஷர்கி) அவர்கள் ஒரு சிறந்த பாடகன். "ஈழத்து ஷேஹற் முகம்மத்” என்ற பட்டம் பெற்றவர். அமீனா ஆசிரியையை மணமுடித்து நிந்தவூரில் வசிக்கின்றார். இன்றும் பாடுகின்றார். இவரின் ராகத்தில் பலர் கவரப்பட்டு மீணர்டும்பாடும்படி சொன்ன வரலாறு உணர்டு. கலாபூஷணம் பி.எல். நியாஸ்தின் மாஸ்டர் இவர் பழம்பெரும் பாடகர். தமிழ், உருது, சிங்களம் ஆகிய மொழிகளில் பாடி பிரசித்தி பெற்றவர். நூற்றுக் கணக்கான பாடல்களைப் பாடியுள்ள இவர், ஆர்மோனியம், தபேலா, மெண்டலின், டோலக், புல்லாங்குழல் போன்ற வாத்தியங்களை வாசித்துள்ளார். இலங்கை வானொலி ரூபவாகினி, TN போன்ற தொலைக்காட்சிகளில் பாடி சாதனை படைத்தவர். மூசிக் நூரி எனப் பெயர் பெற்ற இவர், *கோகில கரீதம்” எனும் இறுவட்டு ஒனர் றையும் வெளியிட்டிருக்கிறார். 1948 ஆம் ஆண்டில் மிகப் பிரபல மாகப் பேசப்பட்ட பாடகர் இவர், தென்மாகாணத்தில் இன்னும் சில பாடகர்கள் தெனி மாகாணத்தில நிறயை பாடுபவர்கள் இருக்கின் றார்கள். காலியில் லெப்பை அவர்களும், பலப்பிட்டியில் நுஃமானர், பாணந்துறையில் சாமசிறி தர்வேஷ், பனாப்பிட்டியில் மர்ஹகும் தாவூஸ், இவர்களுடன், களிகம்பு பக்கீர், பேருவளை புஹாரிதைக்காவில் வருடாந்த மனாக்கிப் நாட்களில் இரவு வேளை "பதம் படித்தல்” என்ற நிகழ்ச்சி மூலம் நிறையவே பாடக் கூடியவர்கள் இருக்கின்றார்கள். பீ. எச். அப்துல் ஹமிட் உலக அரங்கில் மிக விஷேடமாகப் பேசப்படும் சர்வதேச அறிவிப்பாளரே பீ. எச். அப்துல் ஹமீட் ஆவார். இலங்கை வானொலியில் தொடங்கி இன்று உலகம் சுற்றும் அறிவிப்பாளராகக் கடமை புரிகின்றார். பாட்டுக்குப் பாட்டு எனும் நிகழ்ச்சி மூலமும் இஸ்லாமிய கீதங்களைப் பாடுபவர்களுக்கு உந்து சக்தியாகவும் விளங்கிய இவர் பல்வேறு நாடுகளில் பல்வேறு இசை நிகழ“வுகளுக்கு தலைமை தாங்கி ஊக்குவித்து அறிவிப்பாளராகவும் கடமையாற்றுகின்றார். இவர் பெற்ற விருதுகள், பட்டங்கள் அனைத்தையும் பட்டியலிடப் போனால் ஒரு புத்தகமே தேவைப்படும். அவரின குரலும் அவரின சேவையும் இனறும் தொடர்கின்றது. இஸ்லாமியப் பாடல் திரட்டில் ஏ.ஆர்.எம். ஜிப்ரி இணைந்த துணை றஸ்மி மெளலானா வானொலி அறிவிப்பாளர் ஏ.ஆர்.எம். ஜிப்ரி நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர் றஸ்மி மெளலானா ஆகியோர் தயாரிப்பில் உருவான வெளியீடே “தூதுரைத்த மாமலரே” இஸ்லாமிய கீத C.Dயாகும். இந்த ஒலி - ஒளிப் பேளையில் 12 பாடல்கள் அடங்கியுள்ளன. தென்னிந்தியக் கவித்தாரகை கா.அப்துல்
Page 117 கபூர் அவர்களின் “நாயகமே” எனும் கவிதைத் தொகுப்பில் இருந்து பெறப்பட்டதாகும். இதில் 3 பாடலகளை தென்னிந்தியக் கவிஞர் கவிமணி அல்ஹாஜ் பீ.எம்.எம். தாஜ் இயற்றியுள்ளார்கள். இந்தப் பாடல்களை தீன் முரசு ஆழ்வை எம். ஐ. உஸ்மாண், இளைய இசை முரசு புதுக்கோட்டை, ஈ. எம். பாஷா ஆகியோர் தன்மையாகவும், குழுவாகவும் பாடியுள் ளார்கள். இத்தொகுப்பின் பிரதான பாடகரான ஆழ்வை எம்.ஏ. உஸ்மானி இலங்கை வானொலியில் பரீட்சய மானவரும். நன்றாகப் பொருளை அனுபவித்துப் பாடுபவ ராகவும் இருந்தார். இந்த ஒலி, ஒளிநாடா ஐக்கிய அரபு ராஜ்ஜியத்தில் துபாயில் இயங்கும் சங்கமம் தொலைக்காட்சி சேவையின் பணிப்பாளர் கலையனர்பன் றபீக் தலைமையில் நடை பெற்றது. இவ் வெளியீட்டில் ஏ.ஆர்.எம். ஜிப்ரி அவர்களும் றஸ்மி மெளலானாவும் கலந்து கொணர்டனர். அத்துடன் இவ்வெளியீட்டு அறிமுக விழாக்கள் ஒலுவில், கொழும்பு, ஜித்தா, சென்னை நகரங்களிலும் நடைபெற்றது. ஏ.ஆர்.எம். ஜிப்ரி அன்னவர்கள் நாடறிந்த அறிவிப் பாளரும், ஒரு விஞ்ஞான பட்டதாரி ஆசிரியரும், தற்போது பாணந்துறை ஜிலானர் மத்திய கல்லூரியின் அதிபருமாவார். இவர்களின் வெளியீடான ”தூதுரைத்த மாமலரே” என்ற பாடல்கள் இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபன முஸ்லிம் சேவையில் அடிக்கடி பாடப்படுகின்றது. றஸ்மி மெளலானாவும் பெயர் பெற்று திகழ்கின்றார். முயற்சியில் முன்னேற விழையும் அமீர்கான் கொழும்பு மருதானையைப் பிறப்பிடமாகக் கொண்ட ஏ.ஆர்.என். அமீர்கான் ஒரு சிறந்த பாடகரும் இசையமைப்பாளருமாவார். இவர் கொழும்பு மருதானை ஸாஹரிராக கல லுரரியில கல வி பயினர்றார். கலவி கற்கும் காலத்திலேயே தனது 9வது வயதில் பாடசாலை நிகழ்வுகளில் பங்கேற்றுப் பாடினார். தனது 12வது வயதில் ரூபவாஹினி உதயகிதம் நிகழ்ச்சியில் கலந்து கொணர்டு பாடினார். அப்பாடல் முதல் இடத்தை வகித்தது. பாராட்டுப் பெற்றது. இன்றும் இலங்கை ரூபவாஹினிக் கூட்டுத்தாபன முஸ்லிம் சேவையில் பாடல்களுக்கு இசையமைக்கின்றார். அவுஸ்திரேலியா, லணர்டன், துபாய், இந்தியா, ஆகிய நாடு களுக்குச் சென்று இசைநிகழ்ச்சிகளில் பங்கேற்றுள்ளார். இலங்கையிலுள்ள அப்ஸ்ராஸ், ஸிதாறா போன்ற இசைக் குழுக்களில் சேர்ந்து பங்காற்றியுள்ளார். இவரின் இசையமைப்பில் இந்திய இலங்கைப் பாடகர்கள் பாடி யுள்ளனர். அவர்களின் மர்ஹகும் காயல் ஷேஹற் முகம்மத், அபுல்பறக்காத் இலங்கையைச் சேர்ந்த டோனி ஹஸன், கலைக்கமல் , அல்ஹாஜ் முகைதீன் பெக், அவர் மகள் முயீனா பேகம், இஸ்ஹாக் பேக், டாக்டர் ஜெமீல், நிந்தவூர் முஸ்தபா, ஜி.எஸ். வபா றஸ்லானர், கலாபூஷணம் Dr நூர்தீன், கலாபூஷணம் அஸிஸ் , கலாபூஷணம் கம்பளை நிஸார், மக்கீன் மாஸ்டர் இன்னும் பலர் உள்ளனர். இவருக்கு 2009 ம் ஆண்டு சிறந்த கலைஞருக்கான விருது ஜப்பாண் தூதரகத்தினால் வழங்கப்பட்டது. இவர்
Page 118 கர்நாடக சங்கீதம், மேற்கத்தேய இசை, போன்றவற்றைக் கற்றதுடனர் 25க்கு மேற்பட்ட இசைக் கருவிகளையும் கையாளக் கற்றுள்ளார். இவருக்கு சக்தி ரீவியும் நல்ல சந்தர்ப்பத்தை வழங்கியுள்ளது. இரட்டை ஒஸ்கார் விருதுகளுடன் ஏ. ஆர். ரஹற்மான் “இசைப்புயல் ஏ.ஆர்.ரஹற்மான்” என்றால் இந்தியா மட்டுமென்ன முழு உலகிலும் அவரைத் தெரியாதவர்கள் இல்லை. ஒரு முறை பழம் பெரும் ஹிந்தி இசை மேதை நவ்ஷாத் அலி 1994ம் ஆண்டு 87வது வயதில் "இந்தியன் பேர்போமிங் ரைட் சொசைட்டி” விழாவுக்கு கலந்து கொள்ள சென்னைக்குச் சென்றார். அப்பொழுது இசைப் புயல் ஏ.ஆர். ரஹற்மானின் வீட்டுக்குச் சென்று அவரை வாழ்த்தினார். ரஹற்மான்! நீங்கள் இசையமைத்த முதலாவது திரைப்படம் “ரோஜா” வாகும். இது ஹிந்தியில் “ரோஸ்” என்று வெளிவந்தது. சின்ன சின்ன ஆசை. சிறகடிக்க ஆசை. எனும் பாடலுக்கு நீ போட்டிருக்கும் இசை என்னைக் கவர்ந்து விட்டது. ‘காதல் ரோஜாவே" என்ற பாடலில். இந்துஸ்தானியின் தோஸ் ராகத்தில் வரும் ஹம்மிங் அந்த இசை எண்னைக் கவர்ந்து விட்டது என்றார் நவ்ஷாத் அலி. தமிழ் மூலம் தமிழ் மக்களையும், ஹிந்தி மூலம் முழு இந்தியாவையும், கவர்ந்துள்ள நீ வருங்காலத்தில் முழு உலக ரசிகர்களையும் கவருவாய் என்றார். அத்துடனர் “நவ்ஷாத் அலி” ரஹற்மானின் தலையில் கையை வைத்து அல்லாஹற்வின் அருள் உனக்கு உணர்டு. உன் வெற்றியை எந்த சக்தியாலும் நிறுத்த முடியாது. இது நிச்சயம் உணர்மையும் கூட என்றார். 1994ம் ஆணர்டின் வாழ்த்துக்கள் வீணர் போக வில்லை. இந்திய அரசின் விருதை நான்கு தடவைகளும், தமிழக அரசினி விருதை ஐந்து தடவைகளும், பிலிம்பேர் விருதினை பதினொரு தடவையும், மொரிஷியஸ் நாட்டு விருது, மலேசிய நாட்டு விருது, விஷ்டான் போரட் கல்கலைக் கழக கெளரவ விருது, கோல்டனர் குலோப் விருது, லண்டனில் ஆஅஊகூஅ (பட்டா) விருது போன்றவற்றைப் பெற்றார். 2009ம் ஆண்டில் ஏ.ஆர். ரஹற்மானி அவர்களுக்கு “ஸ்லம்டக் மில்லியனர்ர்” படத்திற்கு இசை அமைத்த மைக்கும், சிறந்த பாடல் என்ற இரு பிரிவுகளில் அவருக்கு ஒஸ்கார் விருது இரணர்டைப் பெற்று உலக சாதனை படைத்தார். ஏ.ஆர. ரஹற்மானி அவர்கள் 01.02.2010 ல் அமெரிக்க லாஷ் ஏஜ சலஸ் நகரத்தில் நஷனல் அகடமி ஒப் ரெக்கோடிங் ஆர்ட்ஸ் சயின்சஸ் என்ற நிறுவனம் 1956முதல் வழங்கும் (கிராமி) விருதினைப் பெற்றுக்கொண்டார். கிராமி விருது 52வது தடவையாக ஏ.ஆர். ரஹர்மான் அவர்களுக்கு வழங்கப்பட்டது. W ஏ. ஆர். ரஹமானி அவர்கள் இசைப் பள்ளி ஒன்றையும் நடாத்து கின்றார். இவரின் குடும்பம் இசைக் குடும்பம். இவரின் சகோதரியும் ஒரு பாடகி. இவர் அஜ்மீர் ஹாஜா முஹற்யபித்தீனி ஜிஸ்தி அவர்களின் சிறந்த பக்த னாவார். அவர்களின் பாடகனும் கூட. இவரின் அவாவாக "திருக்குறளும்” உமறுப்புலவரின் "சீறாப் புராணமும்” இசை வடிவம் செய்ய எணர்ணியுள்ளார். எனபது குறிப்பிடத்தக்கது.
Page 119 உலகெங்கும் இசைப் புகழை மாந்தும் போதும் "அல்ஹம்து லில்லாஹற்” என்று இறைவனைப் புகழ்ந்து கொள்வார். உலகில் ஏ.ஆர். றஹற்மானுக்கு தோன்றிய ஐடியா அனைத்தும் புதிய கணினி வடிவமைப்பிலான மேற்கத்தேய இசைகளை முறியடிக்கக் கூடிய புதிய யுக்திகளாகும் என்றே சொல்லப்படுகின்றது. 06.01.1967ல் சென்னையில் பிறந்த ஏ.ஆர். ரஹற்மான் அவர்கள் பத்மா செஷாட் றி பல்லவன், மற்றும் மெட்றி இஞ்ஷ் டியர் காலேஜில் 11ம் வகுப்பு வரை பயின்று. கிளசிக்கல் மியூசிக்கை ஒக்ஸ்போட் பல்கலைக்கழகத்தில் நன்றாக பணிணிதனது டிகிரியை முடித்துக் கொணர்டார். கலாசார நிகழ்ச்சிகளில் முஸ்லிம்கள் களிகம்பு இசை நிகழ்த்தும் காட்சி இலங்கை முஸ்லிம்களின் கலை கலாசார இலக்கியப் பாரம்பர் அமைப்புகளில் களிகம்பு கோலாட்டம் மிக முக்கியமானது, இதில் தமிழர்களும்,முஸ்லீம்களும் ஈடுபாடு கொண்டுள்ளனர். நான்கு வகை கோவாட்டங்கள் இந்தியாவில் உண்டு பன்னல் கோலாட்டம், அபிந்தரை வந்தானை களியல் ஆகியன - வயிந்தானை களியல் ஆண்களின் ஆட்டம். இலங்கையில் கிழக்கு மாகாணத்திலும் வடக்கு, வடமேற்கு மற்றும் தென்மாகாணத்தின் U6) ശ്രമിക്സ്'() "സ്ത്ര0് സ്ഥ. കരuം 16U് ീപും മസ്ത வட்டமாக அடிப்பார்கள் இதில் இசை பறக்கும். இது கலை நிகழ்வானாலும் இசை நிகழ்வு கூடியது. இன்று எல்லா முஸ்லம் பகுதிகளிலும் கலாசார நிகழ்வாக கொள்கின்றார்கள். சுதந்திர (a தினம் அமைச்சர் விஜயம் போன்ற வைபவங்களில் முக்கிய இடம் வகிக்கின்றது. கலாசாரத்தை மேன்படுத்தும் கஸ்தா இசை இஸ்லாமிய கலாசார இயல்பூக்கங்களில் ஒன்றாகக் கருதப்படுவது கஸ்தாவாகும். களிதாக்கள் என்ற அரபு சொல்லின் மொழிபெயர்ப்பு:பாடல் என்பதுதான். இற்றைக்கு 1430 வருடங்களுக்கு முன்பே களிதாக் களின் செல்வாக்கு உலகில் பிரபலம் பெற்று விட்டது. நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் புனித மக்காவிலிருந்து, மதீனாவுக்கு ஹிஜ்ரத் சென்ற போது இளம் வயது பெணர்கள் எல்லாம் "தாலஅல் பத்ரு அலைனா” என்ற பாடலைப் பாடி மதீனாவில் மாநபி (ஸல்) அவர்களை வரவேற்றனர். பெணிகள் பெருமானார் (ஸல்) அவர்களைப் பாடி வரவேற்ற அந்தப் பாடல இன்றும் பிரசித்தி பெற்றதாகவே கணிக்கப்படுகின்றது. “ஹிஜ்ரத் அல் றஸஅல்” என்ற ஒரு திரைப்படத்தை நெறிப்படுத்திய பிரபல எழுத்தாளர் எகிப்திய பல்கலைக் கழகத் தொடர்புடனர். 1400 வருடங்களுக்கு முன்னர் இஸ்லாமியர்களின் இசைத் தோற்றத்தைப் பின்னோக்கிப் பார்த்தார். அன்றைய வடிவங்களையும் தத்திரங்களையும், ரப்பான் தட்டல்களையும் நன்றாக ஆய்வு செய்து அந்தப் பாடலை களிதாவை நெறிப் படுத்தினார். லிபியாவில் திரைப்படமாக்கப்பட்ட முஸ்தபா அசாதின் இந்த முயற்சி இன்றும் பேசப்படுகிறது. "தலஅல்பத்ரு அலைனா” என்ற இந்தக் களிதா இன்று பெணர்களால் அழகிய குரலில் பாடப்பட்டு மக்கா, மதீனா போன்ற நகரங்களில் ஒலி, ஒளி
Page 120 பரப்பப்பட்டு வருகின்றது. புனித ஹஜ்ஜூக் கடமைக்குச் செல்கின்ற அதிகமான ஹாஜிகள் இந்த ஒலி ஒளிப் பேழை களை வேணர்டி வருகின்றனர். அதிதிகளை அழைத்து வரும் போதெல்லாம் ரபான் தட்டி, கம்படித்து, களிகம்பு இசைத்து களிதாக்கள் முன் மொழியப்படுவது இன்று சர்வசாதாரணமாகிவிட்டது. உலகமே, ஒலியிலும் நாதத்திலும் இசையிலும் களித்துக் கொணர்டிருக்கினர்ற போது முஸ்லிம்கள் முற்றுமுழுதாக ஒதுங் கரி ஓரங் கட்டப் படாமல வரையறைக்குள் நின்று வல்லவனுக்கும், வள்ளல் நபிக்கும் வாழ்த்துத் தெரிவிக்கின்ற கஸ்தா இசைவடிவம் காலத்தால் மறக்க முடியாத ஒன்றாக அமைந்திருக்கின்றது. கஸ்தா, கலாசார விழாக்களிலும், சர்வ சமய விழாக்களிலும் நல்ல செல்வாக்கைத் தேடித் தந்திருக் கின்றது. ஆணிகளை களிதாக்கள் பாடத் தேர்ந்தெடுப்பது போன்று பெணிகளையும் தேர்ந்தெடுக் கினிறார்கள். இச்சந்தர்ப்பத்தில் வயது வந்த பெணிகளைத் தவிர்த்து சிறுவர்களைச் சேர்ப்பதே உகந்ததாகும். சினிமாத் துறையிலிருந்து முஸ்லிம் சிறார்களை முளையிலே கிள்ளும் முயற்சிதான் களிதா பாடலாகும். அத்தகைய கஸிதாக்கள் ஆடல்களாகவும், நடனங்களாகவும் மாறி கலாசாரத்தில் நெருடலை ஏற்படுத்தக் கூடாது. பாடசாலை மட்டத்திலான கலைவிழா, முஹர்ரம் விழா, முத்தமிழ் விழா, தமிழ் தின விழா, மீலாத் விழா, ஆங்கில தின விழா, போன்றவற்றில் மாணவ, மாணவிகள் நல்ல களிதாக்களை மேடையேற்றுகின்றார்கள். அந்தக் கஸிதாக்கள் சோபிக்கும் நோக்குடன் ரப்பானிகள் சலங்கை கள். உடுப்பு அலங்காரங்கள், பூச்செணர்டுகள் இவைகளைப் பயன்படுத்தி அக்கஸிதாக்களைப் பாடுகின்றார்கள். அணர்மைக் காலத்தில் இந்தியா, பாகிஸ்தானி போன்ற நாடுகளில் உர்து களிதாக்கள் நல்ல தாக்கத்தை ஏற்படுத்தி யுள்ளது. நூறு வாலா ஆயாஹே போன்றவையும், சிங்கப்பூரில் பாடப்பட்ட அந்நபி ஸல்லுஅலைஹற்! போன்ற பாடல்களும் மக்கள் உள்ளங்களில் மாறாத இடத்தை வகிக்கின்றது. கஸீதா துறை தினம் தினம் முன்னேற்றம் அடைந்து வருகின்றது. கஸிதாக்கள் இஸ்லாமியபாடல்கள் தொண்மையானது முஸ்லீம்களினர் கலை கலாசார பாரம்பரியத்துக்கு ஒரு புதிய சக்தியாக அமைந்திருப்பதைப் பார்க்கின்றோம். பாடசாலை மட்டத்தில் பெயர் போன களிதாக்கள் குழு முறைகளாக வெற்றி கணர்டு மாவட்ட ரீதியாகத் தெரிவு செய்யப் படுகின்ற சந்தர்ப்பங்கள் அதிகரித்துக் காணப்படுகின்றது. பொது வைபவங்களில் கலந்து கொள்ளும் கலைஞர்கள், சமயக் குறவர்கள், பொலிஸ், இராணுவத் தளபதிகள், அரசியல் வாதிகள் இஸ்லாமிய இசையுடன் கூடிய களிதாக்களில் கவரப்பட்டு மீணர்டும் அதனை மேடையேற்றும்படி வேணிடுவதையும் சில அன்னிய மதத்தவர்களின் வீடுகளில் கஸ்தாபீஸ்குகள் ஒளிநாடாவாக இடப்பட்டு தொலைக் காட்சியை அலங்கரித்துக் கொண டி ரு க கரின ற து . இ ன று தே சரிய தொலைக்காட்சிகளில் கூட “ஹபீபி யாறஸஅலல்லாஹற்” என்ற களிதாவை விளம்பரத்துக்காகப் போடப்பட்டால் எத்தனையோ பேர் மூக்கில் கையை வைத்துப் பார்த்துக்
Page 121 கொணர்டிருக்கின்றனர். இன்னும் பலர் அந்தக் களிதாவை முற்றுமுழுசாக ஒளிபரப்புச் செய்ய மாட்டார்களா, என்று ஏங்குகின்றார்கள். அந்த அளவு அதன் செல்வாக்கு மனதில் இடம்பிடித்துவிட்டது. "ஹபீபி, யாறஸ9லல்லாஹ, முகம்மத் இப்னு அப்தில்லாஹற் அலைக்க ஸலாம், அலைக்க ஸலாம், அலைக்க ஸலாம்” அணினல் நபி (ஸல்) அவர்கள் மீது அன்பு வைத்து, உங்கள்மீது சாந்தி உணர்டாவதாகுக எனப் பாடும் இந்தக் கஸ்தா அனைத்து சமயத்தவர்கள் மத்தியிலும் இனம்புரியாத ஒரு அமைதியை சாந்தத்தைத் தோற்றுவிக்கின்றது. “யா, மக்கா! யா, மக்கா! ” என்ற இன்னுமொரு கஸ்தா இன்று கஸ்தாத் துறையில் நல்ல செல்வாக்கை ஏற்படுத்தியிருக்கின்றது. சிறிய பிள்ளைகளும் கூட மிக விருப்பமாக இந்தக் களிதாவைப் பாடுகின்றனர். அந்த அளவு அதன் இசையும் அதன் ஆளுமையும் நல்ல பெறுமானங்களை விதைத்து இருக்கின்றது. அரபுலகின் அழகான குழந்தைகளைக் கொணர்டு பாடப்பட்ட இப்பாடல் மக்கத்துக்கு பக்கத்திலேயே போய் வருகின்ற ஒரு எணர்ணத்தைத் தோற்றுவிக்கின்றது. களிதாக்களின் வளர்ச்சியில் காலப் போக்கில் பாடப் பட்ட அரபுப்பாடல்கள், அரபுநாடுகளிலேயே ஒரு உற்சாகக் தையும், சிறந்த பொழுதுபோக்குகளையும் உருவாக்கின. அரபுக் களிதாக்கள் வரிசையில் மலேசியாவில் தற்போது ஒரு தனிமையான தாகம் ஏற்பட்டிருக்கின்றது. அரபு மதரஸாக்கள், பெணிகள் அரபுக் கல்லூரிகள் போன்ற) வற்றில் களிதாக்கள் நல்ல செல்வாக்கைப் பெற்றிருச் கின்றது. மலேசியா, இந்தோனேஷியா போன்ற நாடுகளில் பிரபலமான பாடகர்களை வைத்து இன்று களிதாக்களை அரங்கேற்றிவருகின்றார்கள். அரபு மொழி உச்சரிப்பில் மிக அழகாகத் தோன்று கின்ற சிறிய மாணவிகள் மலேசியாவில் நல்ல கஸ்தாக் களைநாளுக்குநாள் தந்த வணர்ணமே இருக்கின்றார்கள். இவை எல்லாவற்றையும் விட லெபனான், பலஸ் தினம் போன்ற நாடுகளில் கஸ்தாவின் வளர்ச்சிகளைகட்டி நிற்கின்றது. பலஸ்தீனத்தின் போர் அரங்கில் பாதிக்கப் பட்ட மக்களின் அவலங்களையும், லெபனானில் யுத்த பீதியில் வாடிய மக்களது அவலங்களையும் பாடசாலை மாணவர்களை வைத்துப் பாடப்படுகின்ற கஸீதாக்களும் ஒளிப்பேளையில் பின்புறப்படக் காட்சிகளும் யுத்த யதார்த் தத்தைக் காட்டுவதுடன் அரபுக் களிதாவில் பாடலில் ஒரு ஈர்ப்பையும் ஏற்படுத்தியள்ளது. கஸீதாக்கள் வெறும் ஆட லாகவும், பாடலாகவும் மாறாது சமூகத்தை சீர்திருத்தும் காரணியாக மாறட்டும். களிதாவின் தோற்றவாய் என்ன? இஸ்லாமிய கலாசார இயல்பூக்கங்களில் ஒன்றாகக் கருதப்படுவது கஸிதா ஆகும். கஸிதாக்கள் மிக நீள மானவை. அவற்றினர் பொருள் பாடல என்பதுதானர். கசீதாவின் ஆரம்பம் இஸ்லாத்துக்கு முற்பட்ட காலமுதலே தொடங்கிவிட்டது. கஸ்தா எழுதும் முறையானது அரபு, துருக்கி பார்சிமொழிகளில் தோற்றம் பெற்றது. கவிஞர்கள் தம் குலப் பெருமை பாடுவதிலும் எதிரிகளை வசை பாடுவதிலும் புரவலர்களிடம் பணம்
Page 122 பெறுவதற்கும் பாடல்களை இயற்றினர். மக்கத்தின் பக்கத் திலுள்ள உக்காஸ் என்ற இலக்கியச் சந்தையில் தான் கவிதைகள் அரங்கேறின. இம்ர- உல்- கைஸ், நாபிகா, தரபா, ஜூகைர் பின் அபி ஸல்மா, லமீத், தாபத் ஷர்ரான் போன்றோர் பண்டைக்க காலக் கவிஞர் ஆவார்கள். கி.பி. 750 களில் உமையாக்களின் ஆட்சி முடிவு பெற்ற போது களமீதாக்களுக்கு நல்ல பெறுமானம் ஏற் பட்டது அரரசியல், போர்த்திறமை, வீர தீரச் செயல்கள் இவற்றில் இடம்பெற்றன. வருணனைக் கவிதைகளட், ஆசிக் கவிதைகள், இரங்கற் கவிதைகள். எல்லாம் இவற்றுள் அடங்கின. உமையாக்கள் காலத்தில்தானி கசீதாக்களில் திருப்பு முனை ஏற்றபட்டது. காதல் பாடல்கள் புதிய வடிவில் இடம்பெற்றன. வாழ்வியல், ஆடம்பரம் போன்றவை உமர் பின் அபீ ரபீயாஎன்ற கவிஞரால் பாடப்பட்டன. ஜமீல் பின் அப்துல்லா என்ற கவிஞர் புதைனா என்ற பெண்ணின் காதல் பற்றிப* பாடினார். அப்பாசியக் காலத்தில* கஸிதாக்களின் கோட்பாடுகள் காலூன்ற ஆரம்பித்தன. இக்காலதிலேதான் கசீதாக்கள் சுருக்கி எழுதப்பட்ன. கமரிய்யா(மதுக் கோப்பைக் கவிதைகள்), சுஹஅத் துறவறம் பூணர்டு இறையனர்பில் திழைத்தல்) தரத்(வேட்டையாடுவதை வருணித்தல்), இமதாப் (அரசிடம் புகார் கூறல்) தோற்றம் பெற்றன. அப்பாசியர்களின் ஆட்சியின் கடைசிப் பகுதியில் முற்றிலும் வித்தியாசமான பைத் வடிவம் தோன்றலாயிற்று. இது கசல் முவஸ்ஸரா என்ற 4X5X6 பாடல்களைக் கொணர் கஸ்தாவாகும். இவ்வேளையில் தான் மஸ்னவிக் கவிதை, கள் நீண்ட கவிதைகளுக்கு முற்றுப்புள்ளிவைத்தன. அரபுச். கவிதைகளில் கைதேர்ந்த காட்டரபிகளும் ஒட்டகத்தில் பாலலவனத்தில் பயணம் செய்பவர்களும் என்றால் மிகை யாகாது. இதனாற்றான் ஒட்டகைப் பாடல்கள் அல்லது ஹிதாப் பாடல்கள் பாடி ஓய்வு நேரத்தில் ஒட்டகைகளுக்கு உற்சாகம் ஊட்டினர். எதிரகைளை ஏசித்தீர்க்கின்ற கவிதைகளுக்கு ரஜஸ் எண்பர். இத்தனையும் கசீதா உலரசின் புதிய மாற்றங்கள். 6ஆம் நூற்றாண்டில் ஒரே வகைச் சந்த அமைப்பில் உருவான கவிதைகள் பழைமைக் களிதாக்களாகும். இவற் றுக்கான தொகுப்பு முஅல்லகா என அழைக்கப்படு கின்றது. இது தங்க எழுத்துக்களால் அலங்கரிக்கப்பட்டு புனித கஃபாவில் தொங்கவிடப்பட்டது. கிபி. 6-7 நூற்றாண்டுக் காலத்தில் கஃபாவின் முன் சாதனை படைக்கப்பட்டது. களிதாக்களுக்கென்று யாப்பு இருக்கின்றது. அதனை அரூத் என்றழைப்பர். இதன் சகல அமைப்புக்களும் கிபி 790 இல் பிரபல அரபு மொழி ஆய்வாளர் கலீல் பின் அஹற்மதினால் சிறப்பாகத் தொகுத் தளிக்கப்பட்டன. பயகம்பர் நபி (ஸல்) விரும்பிய பல்வேறு தரமான பாடல்கள் ஜாபிர் இப்னு ஸமுரா அறிவிப்பதாவது: நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் சபையில் நூறு தடவைக்கு அதிகமாக இருந்திருக்கின்றேன். அங்கு ஸஹாபாக்கள் பாட்டு படிப்பதும் மெளட்டிய கால வரலாறுகளைப் பேசிக் கொள்வதுமுண்டு. நாயகம் (ஸல்) அவர்கள் - அவர்களைத் தடுக்காது மெளனமாயிருப்பர். சில வேளைகளில் அவர்களுடன் சேர்ந்து புன்னகையும் புரிவர். ஆதாரம் - திர்மிதி,
Page 123 அபூஹ?ரைரா (ரலி) அறிவிப்பதாவது: நாயகம் (ஸல்) கூறினார்கள். பாடகர்கள் கூறியவற்றில் உண்மை யானது. அல்லாஹற்வைத் தவிர உள்ளவையாவும் பொய்யே! எனும் லமீது என்ற கவிஞனின் பாடலாகும். உமய்யா இப்னு அபீஸல்தது எனும் கவியோ இஸ்லாத்தை நெருங்கி யிருந்தான். (ஆனால் இஸ்லாத்தைத் தழுவவில்லை. என்றனர். ) ஆதாரம் : - திர்மிதி ஆயிஷா நாயகி அறிவிப்பதாவது : நாயகம் (ஸல்) அவர்கள் ஹஸ்ஸான் எனும் கவிஞருக்காகப் பள்ளிவாயலில் ஒரு மேடை அமைத்துக் கொடுப்பர். அவர் அதில் ஏறி நின்று அண்ணலாரின் புகழைப் பாடுவார். அல்லது அன்னாரைப் பற்றி எதிரிகள் தொடுக்கும் ஆட்சேபங்களுக்கு மறுப்புக் கொடுப்பார். “ஹஸ்ஸான்” என் சார்பாக மறுப்புக் கொடுத்துக் கொண்டிருக்கும் வரை அல்லாஹற் அவருக்குப் பரிசுத்த ஆவி கொண்டு பக்க பலமளிக்கின்றான். 66 நாயகம் (ஸல்) கூறினார்கள். ஆதாரம: - திர்மிதி அம்ருப்னு ஸ்ரீக் (ரலி) அறிவிப்பதாவது : தமது தந்தை யிடமிருந்து அறிவிக்கின்றார். தந்தையார் தெரிவித்தார்கள். நான் ஒரு நாள் நபிகளாருக்குப் பின்னால் சென்று கொண்டிருந்தேன். அப்போது உமையா பின் ஸலித் என்பவரின் கவிதைகள் ஏதேனும் உமக்குத் தெரியுமா? என நாயகம (ஸல்) அவர்கள் என்னிடம் வினவினார். நான் தெரியுமென்றேன். கூறும் என்றனர். ஒரு அடி பாடினேன். இன்னும் பாடுக என்றனர். மேலும் ஒரு அடி பாடினேன். மீண்டும் பாடுக! என்றனர். ஒரு அடி பாடினேன். இவ்வாறு 100 UTL6)856ft untiq.(360T651. ஆதாரம் : ஸஹிஹற் முஸ்லிம் (எல்லாம் வல்ல அல்லாஹ்வின் பேரருள் கொண்டு அவன் திருநாமம் ஓதி ஆரம்பிக்கின்றேன். இதுவரை நீங்கள் "எகிப்து முதல் இலங்கை வரை " என்னும் நூலைப் படித்தீர்கள். அல்லது இதில் பாதிப்பகுதியையோ அல்லது தலைப்புக்களை மாத்திரமோ படித்து முடிவுக்கு வந்திருப்பீர்கள். அதனாற்றான் இதன் முத்தாய்ப்பாக தெளிவு ஒன்றைத் தர நான் நினைக்கின்றேன். எனது முகவுரையில் அனைத்தையும் கூறிவிட்ட போதிலும் இன்னும் தெளிவாக முடிவுரையொன்றைச் சொல்லி முடிப்பது ஏற்புடையது என நினைக்கின்றேன். இந்நூலின் ஆரம்பத்தில் ஹஜ்ஜதுல் இஸ்லாம் இமாம் கஸ்ஸாலி (றஹற்) அவர்களின் இஹற்யா உலூமித்தீன் எனும் நூலில் இசை சம்பந்தப்பட்ட பாடத்தை சில விளிப்புத் தலைப்புக்கள் இட்டு அப்படியே மொழிபெயர்த்துள்ளேன். இதில் குறிப்பிடப்படும் கருத்துக்கள் அனைத்தும் இமாம் அவர்களுடையவையே, என்னுடையவை அல்ல. இரண்டாம் கட்டமாக, இஸ்லாமியர்களின் இசைக் கண்டு பிடிப்புக்களும் இசைக்கலைஞர்கள் பற்றிய ஆய்வும் எனும் தலைப்பில் ஆரம்ப காலம் முதல் இஸ்லாமியர்கள் முயன்ற இசை முயற்சிகள், அவர்கள் பாவித்த வாத்தியக் கருவிகள், முஸ்லிம்கள் கண்டுபிடித்த வாத்தியங்கள், எகிப்து முதல் இலங்கை வரை பாடிக் கொண்டிருப்பவர்களின் பெயர்ப் பட்டியல், அவர்கள் பாவித்த வாத்தி யங்கள், அவர்களின் ஈடுபாடுகள், பொழுது போக்குகள் அனைத்தையும் ஒன்றுதிரட்டி உங்கள் முன் தந்துள்ளேன். அனேகமான இசைக் கலைஞர்கள் இஸ்லாம் தடை விதித்த வாத்திங்களை வாசித்துள்ளார்கள் (அனுமதிக்கப்பட்ட
Page 124 தையும் வாசித்துள்ளார்கள்.) பட்டம் பெற்றுள்ளார்கள் பரிசில்கள் பெற்றுள்ளார்கள். இஸ்லாமிய கீதம் என்ற பெயரிலும் பல ஏற்றுக் கொள்ள முடியாத வாத்தியங்கள் வாசிக்கப்பட்டுள்ளன. பல இஸ்லாமியப் பெண்மணிகள் இஸ்லாமிய கீதம் பாடியுள்ளார்கள் பாடுகின்றார்கள். ஆனாலும் பல பெண்மணிகள் வாத்தியங்களை தாங்களாக இசைத்துப் பாடுகின்றார்கள். இது " என்னைப் பொருத்தளவிலல்ல, இஸ்லாத்தைப் பொருத்தளவில் - தலை மூக்குத் தெரியாமல் போய்விட்ட நிலையையே குறிக்கின்றது! இன்னும் பல பாடகர்கள் இஸ்லாமிய கீதமும் பாடி போதாமைக்கு சினிமாப் பாடல்களையும் பாடியுள்ளார்கள். பலர் சினிமாவுக்கு வாத்தியம் வாசிக்கும் பணியில் கூடிய அக்கறை எடுத்துள்ளார்கள். களம் கிடைத்தது என்பதற்காக இஸ்லாமிய எல்லைக் கோட்டைத் தாண்டக் கூடாது. புதிதாக மோட்டார் சைக்கிள் பழகும் ஒருவன் யாருடைய பைசிக்கிளாயினும் எடுத்து ஒட முயற்சிப்பான். அப்படித்தான் பல இஸ்லாமிய இசைக் கலைஞர்கள் எங்கு சந்தர்ப்பம் கிடைத்தாலும் தமது திறமையைக் காட்ட முற்படுகிறார்கள். எல்லை தாண்டிச் சென்ற இசை வாசிப்புக்கள் அனைத்தும் தப்பு. தப்பு. தப்பு இன்று கீழ்த்தரயன் காட்சிகளுடைய சினிமாக்களுக்கு இசை வாசித்து, உலகின் உச்ச புகழ் தேடும் முஸ்லிம்களும் இருக்கின்றனர். இது ஹறாமியத்தின் - சைத்தானியத்தின் உச்ச கட்டமாகும். ஒதுக்குங்கள் ஒதுங்குங்கள் உங்கள் திறமையை இஸ்லாம் கூறும் வாத்தியங்களுடன் மட்டுப்படுத்தி, இஸ்லாமிய கீதங்களை ஒரு தஃவாப் பணியாகச் செய்யுங்கள் முடிவாக, இஸ்லாத்தில் இசை இருக்கிறது! இரசனை இருக்கிறது. ஆகுமாக்கப்பட்ட கருவிகளை வைத்து அகீதா பிறழாத பாடல்களைப் பாடுவது மட்டுமே செல்லுபடி யானதாகும். மற்றவை அனைத்தும் தள்ளுபடி செய்யப்பட வேண்டிவையே! கோயில் சிலையை மாற்று மதச் சிற்பியை விட, முஸ்லிம் சிற்பி வடிக்கின்றான் என்பதற்காக அவனுக்குப் பாராட்டுதலும் பரிசும் பொற்கிழியும் கொடுப்பது தடுக்கப்பட்டுள்ளது. இது போன்றே அரச இலத்தினியல் ஊடகங்களில் இஸ்லாமிய நிகழ்ச்சிகளின் போது எம்மவர்கள் தடுக்கப்பட்ட வாத்தியங்களை வாசித்துள்ளமை ஒரு ஷரீஆ மீறலாகும் இது மாத்திரம் அன்றி இஸ்லாம் சம்பந்தமான அரசாங்க அமைச்சு வாழுங் காலத் திலேயே வாழ்த்தும் நிகழ்ச்சிகளின் ஊடாக இஸ்லாமிய எல்லை மீறிய வாத்தியக்காரர்களுக்கும் பாடகர்களுக்கும் அரபியில் பட்டம் சூட்டி மேலிடத்தில் கலைஞர்களை வைத்தது. இதை யுங்கூட தவறாகத்தான் கருத வேண்டியுள்ளது. ஷரீஆக் கட்டுப் பாடுகளுக்குள் பாடியோரையும் வாத்தியம் இசைத் தோரையும் மேற்படி அரச இராஜாங்க அமைச்சு பாராட்டியது பாராட் டுக்குரியது (நமது சமூகக் கலைஞர்கள் என்றும் பாராட் டப்பட வேண்டியவர்களே!) இன்னும் சில பாடகர்கள் பெளத்த சமய ஆராதனைப் பாடல்களை அகீதா கேள்விக் குறியாகின்ற அளவுக்கு இரசித்துப் படித்துள்ளார்கள். இதுகூடத் தவறுதான்! எனவே, இசைக் கலைஞர் களை அப்படியே ஒரங்கட்டி ஒதுக்காமல், இசையின் உண்மையையும் யதார்த்தத்தையும் சொல்லி விளங்கப்படுத்தி, அவர்களையும் பிரார்த் தனைகளுடன் பூரண முஃமின்களாக மாற்றிக் கொள்ள பாடுபட வேண்டும் தஃவாச் செய்ய வேண்டும். தொழுகை ஒர் இபாதத், அதை முடிக்கும் போது இஸ்திஃபார் செய்யப் பணிக்கப்பட்டுள்ளோம். அந்தத் தொழுகை நிறைவேற வேண்டுமென இப்படி துஆச் செய்கின்றோம். அதாவது: அல்லாஹும்ம தகப்பல் ஸலாத்தனா - வகியாமனா - வருகூஅனா - வசுஜூதனா (நாயனே! எனது தொழுகையை அதன் நிலையை அதன் ருகூவை, அதன் ஸ"ஜூதை ஏற்றுக் கொள் வாயாக!) அது போல் உயர் கடமை ஹஜ்ஜை நிறைவேற்றும் பொழுது அல்லாஹும்மஜ்அல் ஹஜ்ஜன் மப்ரூரா - வஸயியன் மஷ்கூரா - வதன்பன் மஹபூரா - வஅமலன் ஸாலிஹன் மக்பூலா 667 துஆ கேட்கின்றோம். "யா அல்லாஹ்! ஒப்புக்
Page 125 கொள்ளப்பட்ட ஹஜ்ஜாக்குவாயாக! நன்றியுள்ள சயியாக்கு வாயாக! பாவத்தை மன்னிப்பாயாக! ஸாலிகான நல்லமல்களை கபூல் செய்வாயாக!” எனும் மேற்படி துஆவில் உயர்ந்த ஹஜ்ஜுடைய அமலிலும் அது ஒப்புக் கொள்ளப்பட வேண்டு மெனப் பிரார்த்திக்கிறோம். அது மட்டுமா! ஒரு சபையிலிருந்து கலைகின்ற போது துஆ கப்பாரதுல் மஜ்லிஸ் - சபையின் குற்றப் பரிகார துஆ "சுபுஹான கல்லாஹரம்ம வபிஹம்திக்க." என்று ஒதுகின்றோம். அப்படியானால் இஸ்லாமியப் ஏகத்துவப் பாடல்களைப் பாடு பவர்கள், ஆகுமான வாத்தியங்களை வாசித்தவர்கள், முடிவில், அதனை அல்லாஹற் ஏற்றுக் கொள்ள வேண்டுமென துஆச் செய்வதும் இஸ்திஃபார் செய்வதும் நல்ல காரியம் தான்ே தடுக்கப்பட்ட வாத்தியங்களை வாசித்தவர்கள், வாசிப் பவர்கள் பாவத்தை உணர்ந்து அல்லாஹற்விடம் தெளபா (பாவ மன்னிப்புக்) கேட்பது மிக மிகக் கடமையாகும். இதனால் ஒன்றும் குறைவதில்லை; உள்ளப் பரிசுத்தம் ஏற்படும். யா அல்லாஹ்! தடுக்கப்பட்ட வாத்தியங்களை வாசித்தவர்கள் மரணித்திருப்பின் அவர்களது பாவங்களை மன்னித்தருள்வாயாக! ஆமீன்! ஒஸ்கார் விருது வரை உயர்ந்துவிட்டாலும், இஸ்லாமியப் பாடல்களை வாசித்து - இஸ்லாம் அனுமதித்த வாத்தியங்களை இசைத்து - ஆயிரம் ஆயிரம் பணிகளை இஸ்லாமிய ஏகத்துவத் துக்காகச் செய்ய வேண்டியுள்ளது. அனைத்துப் பாடல்களும் தக்வா - இறையச்சத்தை ஊட்ட வேண்டும். இந்நூலை எழுதி உங்களுக்கு தெளிவான உண்மையைத் தர விழைந்த இம்முயற்சியை ஏக நாயன் ஏற்றருள்வானாக! அடியேனுக்காக துஆச் செய்யும்படி தங்களிடம் பணிவாக வேண்டுகின்றேன். வஸ்ஸலாம்! இஸ்லாம் அனுமதித்துள்ள இசை ஒரு பக்கம் திறந்து ஒரு பக்கம் மூடிய தட்டுதாளம் ரப்பாண்களாகும். கம்பி ஓடிய நேரம்பு) வாத்தியங்கள் வாசிப்பது இஸ்லாத்தில் தடுக்கப்பட்டுள்ளது. பெணிகள் பாடலாம் - கமராக்கள் தவிர்த்து, பெணிகள் மத்தியிலே! ஆணர்கள் இஸ்லாமிய கீதம், கஸிதாக்கள் என்பவற்றை அனுமதிக்கப்பட்டதட்டுதாளங்களோடு பாடலாம். குடி, விபசாரம், பெணிகள் வருணிப்பு ஆகியவற்றை பாடலிலும் தவிர்த்துக்கொள்வது கட்டாயம் கட்டாயம் கட்டாயம்! வில்லுப்பாட்டு நிகழ்ச்சிகளில் முஸ்லீம்கள் வில்லுப்பாட்டு நிகழ்ச்சிகளில் ஆரம்பகாலத்தில் கோயில் நிகழ்வுகளில் மிக முக்கியமாக இடம் பெறும். பின்னர் தமிழர்களுடன் தோழமையாக முஸ்லீம்களும் வில்லுப்பாட்டு நிகழ்ச்சிகளைச் செய்ய ஆரம்பத்தனர். வல்லுப்பாட்டு நிகழ்ச்சிகளில் அதிகமான வாத்தியங்கள் பாவிக்கப்படுவதில்லை. ஆயினும் சிறுவாத்தியங்கள் பாவனையில் உண்டு. இலங்கையைப் பொறுத்தவரைகிழக்கு மாகாணத்தில் வில்லுப்பாட்டுக்கு பேர் போன இயக்கம் காத்தான்குடி இலக்கிய மன்றமாகும். பூகழ் பூத்த நிகழ்ச்சிகளை நடாத்தியுள்ளனர். இன்று இலங்கையில் முஸ்லிம் பாடசாலை களிலும் ஆசிரியர் கலாசாலைகள், பல்கலைக் கழகங்களிலும் வில்லுப்பாட்டு இசை நரிகழ்ச்சரிகளை முஸ்லரிம் மாணவர்கள் வரும் பரிச் செய்கின்றார்கள். பரிசில்களையும் வென்றுள்ளார்கள்
Page 126 கையடக்கத் தொலைபேசிக்கு காத்திரமான இசை இன்றைய உலகல் கையடக்கத் தொலைபேசி இல்லாமல் இயங்குபவர்களைக் காண்பதற்குக் கவழிடமாக இருக்கின்றது. பெரியவர் முதல் சிறியவர் வரை கையடக்கத் தொலைபேசிப் பாவனையில் புதியதொரு சரித்திரத்தையே படைத்திருக்கிறார்கள். தொலைபேசி நிறுவனங்கள் இசையை இதனூடாக அறிமுகப்படுத்துகின்றன. இந்நிலையில் சிலர் இசை கேட்பது ஹராம்" என்ற வாதத்தின் கீழ் அல்குர்ஆன் வசனங்களையும் கலீதாக்களையும் அழைப்பு மணியாகப் போட்டுக் கொள்கின்றார்கள். மலசல கூடங்களில்கூட இந்த அழைப்பு மணி வருவதால் அல்குர் ஆனுக்கும் கஸிதாவுக்கும் மதிப்பு மழுங்கடிக்கப்படுகின்றது. ஆகையால்ரிங். ரிங்.என்ற இசையை மாத்திரம் வைத்துவிட்டு குர்ஆன் ஓதுவதையோ கலீதாவையோ அழைப்பு மணியாகப் .86ut, 6ഖത്ത്വോഴ്സുസ്ക് ബൽൈര് உசாத்துணை நூல்கள் இஹற்யா உலுமுத்தின் (இமாம்களில்ஸாலி. ரஹற்) புஹாரி வரிப் முஸ்லிம் ஷரீப் திருக்குர்ஆன் தமிழ் மொழிபெயர்ப்பு அல் முன்ஜித் (அரபி அகராதி) அல் மெளரிதுல் கரீப் (ஆங்கிலம், அரபி அகராதி) முக்தாருல் லிஹாஃ (அரபிஅகராதி) காமுல் (அரபி தமிழ் அகராதி) நர்கிஸ் (மாத இதழ்) சாயிபு மரைக்காரின் ஆய்வுச் சோலை ůsobis (மாத சஞ்சிகை) யூசுப் இஸ்லாம் (அல்ஹாஜ் அகமட் முனவ்வர்) இசை உலகம் (மாத சஞ்சிகை) முஸ்லிம் (மாத இதழ்) பசுங்கதிர் (ஹிஜ்ரிநாற்றாண்டுமலர்) வாழ்வோரை வாழ்த்துவோம்(முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் இராஜாங்க அமைச்சு) முரீலங்கா முஸ்லிம் கலைஞர் முன்னணி மலர் இசைக் கோ நூர்தின் குறிப்புக்கள் THE LAwful, AND THE TROHIBITED IN SLAM